HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

ஊசி

நிர்வாணமாய் கிடந்தது

ஏன் என்று கேட்டேன் குத்தியது

எனக்கு வலித்தது.

மழை

மேகத்தை மண்ணில் ஓடவைப்பது

வெள்ளமாய்; . . . .

சிறு துளி பெருவெள்ளம் இதன் சேமிப்பு

அர்த்தமானது; . . . .

சில நேரங்களில் ஆபத்தானது . . . .

இது தூவிக்கொண்டே இருந்தால் . . .

இயற்கைகள் போய்கொண்டே இருக்கும்; . . .

கடலிடம் கடன் வாங்கினாலும்

திருப்பி கொடுத்து விடுகிறது

வட்டியும், முதலுமாய் . . . . .

ஏளனம்

வெறும் பக்கங்களாய் வந்தோம் விதி

எழுத்துகளைப் போட்டது;

மற்றவர் வாசிக்கும்போது நாங்களும்

புத்தகம் ஆனோம்

சரித்திர மாகத்தான் விளங்கினோம்.

ஏளனம் என்ற தலைப்போடு

வெயில்

கொடுமைக்கார ஆட்சி!    வெளிச்ச விழுதுகள்    பகலில் மட்டும் தொங்கிக்கொண்டே    இருக்கும்

தாழ்த்தப்பட்டவனின் காலணிகள் பேதம்

பார்க்காதப் பாரத்தில் . . . .

தலைக்கு மேலே குடைகள்

மொத்தத்தில் தப்பித்தோம் பிழைத்தோம்

என்றுதான் நாட்கள் ஓடும். . . .

காற்றுக்குக்கூட மூச்சுக்காற்று . . . .

நின்று விடும் புழுக்கத்தால்

உழைக்காதச் சோம்பேறிக்கும்

பூ பூக்கும் வியர்வையால் . . . .

விசிறிகளுக்குக்கூட வேலை வந்து விடும்

தையல்காரன் கத்திரி வெட்டி விடும்

சித்திரை மாதம் கத்திரி சுட்டு விடும்

அப்பா

தலைவன் . . . .

வீட்டின் வாசல் . . . .

குடும்பத்தின் முகவரி . . . .

கௌரவம் . . . .

கத்தி

கத்தி இது பேசுவதல்ல வீசுவது

இது வெறுப்பதல்ல; அறுப்பது!

மரத்திடம் மோதாமல் மனிதரிடம் மோதுவது

ரவுடிகளின் பேனாக்கள் . . . .

அறுவடைக்கு பயன்பட்ட அறுவா . . . .

இன்று கொலைக்குப் பயன்படும்

கொடுவாளாக மாறிப்போனது . . .

ஆம் இரும்பிற்கு இதயம் இல்லை

பூ

பறித்து விடுவார்கள் என்று தெரியாமலே

இதழ்களில் நறுமணத்தை வீசுகிறது.

அழகூட்டும் இவர்களுக்கும்

ஆபத்து இருக்கிறது.

இவர்களும் கடைவீதிக்கு வந்து

விட்டார்களா?

மாலையாவார்கள் மரணத்திற்கு

அழகுசேர்க்க!

முகம்

அழகான முகமூடி

கண்ணாடியே ரசித்துப் பார்ப்பது

இறைவன் படைத்த மாடன் கம்ப்யூட்டர்

தெளிந்த நீர்க்கூட கவர்ந்திழுப்பது

கண்

இரண்டு மாட விளக்கு; களவுக்கு

வழிகாட்டி;

தூண்டிவிடுவது;

ஆழத்தில் கிடக்கும் மனதைக் களவு

போக வைப்பது

கூட்டிக் கொடுப்பது; காட்டிக் கொடுப்பது

காதலை பதிவுச் செய்வது!

கண்ணீர்

தூசி விழுந்தால் மட்டுமே வலிக்காக

அழுவது . . . .

துன்பம் நேரும்போதெல்லாம் தானாக

அழுவது . . . .

இயற்கை துடைக்கும் இந்த நீர்

பொதுவானது . . . .

சூடுச்சுரணை இதற்கும் இருக்கிறது

சுவைத்தால் உப்பு இருக்கிறதே!

பசி

வயிற்றுக்குக் கிடைத்த அக்னி! பரீட்சை

ஏற்றத் தாழ்வு இல்லாத பொதுப்

பிரச்சனை

தெம்பூட்டுவது; வம்பூட்டுவது

வேலைக்கு முதல் காரணம்

மனித இயற்கையின் முதல் தேடல்

ஏழைக்குத் தீராதது, பணக்காரனுக்கு

வராதது

கம்யூனிசியம் இங்கு தான்

        ஜெயிக்கிறது.

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles