HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

காதல்

கண்களின் அறிமுகம் . . .

மனங்களின் தேர்தல் . . .

ஜோடிகளுக்கு கிடைத்த வாக்குச்சீட்டு

செல்போன் நண்பர்களின் தூது . . .

கரப்பான்பூச்சி

கரப்பான்பூச்சி கண்ணீர் விடுகிறது . . . .

அடைப்புக் களைந்ததே என்று . . . .

அந்தரத்தில் மௌனம் சாதிக்கிறது

தலைக்கீழாய் நின்று . . . .

அதற்கு வசந்தம் இன்னொரு அடைப்பு . . . .

கிடைக்கும் வரை - . . .

அது வெற்றிடங்களில் குடியேற . . . .

விரும்பவில்லை

குழந்தை

நிர்வாணப் போர்

இரவில் சுதந்திரம் கிடைத்தது

பத்து மாதம் கழித்து . . . .

குடியுரிமை கிடைத்தது . . . .

யாரோ செய்த தவறுக்காக

இவர்கள் ஏன் இன்னும்

சிறையில் இருக்கிறார்கள்?

ஆண்பாலோ பெண்பாலோ

மூன்றாம் பால்

மார்புப் பாலுக்காக அழுவது

பத்துமாத சுமைக்கு தாய்க்குக்

கிடைத்த மகிழ்ச்சி

அன்புப் பரிசு

கவலையைப் போக்க வந்த மருந்து

கண் சிமிட்டும் நட்சத்திரம்

தரையில் தவழ்ந்து வரும் நிலா

தத்திப் பேசும் பச்சைக்கிளி

பல் முளைத்தால் கடிக்கும் கட்டெறும்பு

அடம்பிடிக்கும் அந்தரத்துக் காற்றாடி

அழுதே தீர்க்கும் இசையருவி

துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டி

பரிசம் பட்டால் பஞ்சு மெத்தை

தீட்டுப் பார்க்காத சுண்டு விரல்

ஒட்டிக்கொள்ளும் பட்டாம்பூச்சி

நம்பிக்கை நட்சத்திரம்

வெயிட்டிங் லிஸ்ட்

  வாரிசுகள் பத்து மாதம்

  அறுவடை பயிர்கள் ஆறுமாதம்

  இரவு பகல் வரும் வரை

  தேர்வுகள் முடிவு தெரியும்வரை

  காதல் கல்யாணம் வரை

  வேலை அலுவலகத்தில்

  பெயர் பதிவில் இருக்கும் வரை

  இமை மூடும் வரை கனவு

  இதயம் திறக்கும் வரை போராட்டம்

  அமைதி காணும்வரை நீரோட்டம்

  நாட்காட்டி கிழிக்கும் வரை . . .

  பருவம் இளமை வரை . . .

  வாலிபம் முதுமை வரை . . .

  நடை பயணத்திற்கு பயணப்பாதைக்கு

  பாதை வாழ்க்கைக்கு,

  வாழ்க்கை விருப்பத்திற்கு

  முடிவு அடுத்த தலைமுறைக்கு . . .

மரங்கள்

பேருந்து ஓடும் போதெல்லாம் . . .

இவர்களும் ஓடுகிறார்கள்

இவர்களும் கானல் நீரோ

உறவுகளைப் போல . . .

இவர்களைப் பார்த்து ஓவியன்

கற்றுக்கொண்டான்

பயனுள்ள மரங்கள் வரைவதற்கு . . .

வரைந்த ஓவியனின் இறுதி யாத்திரைக்கு

இது பயன்படுகிறது . . .

நெருப்பு யாகமூட்ட ஏழையின் அடுப்பில்

பசிக்காக எரிகிறது. . .

விறகுவெட்டியின் கொடுவாளுக்கு

அசைந்துக் கொடுக்கிறது. . . .

வெட்டட்டும் என்று, பயன்பட வேண்டும் . . .

என்றே இதுவும் பாத்திரமானது.

இவைகள் அநாதைகள் அல்ல; . . . .

முகவரி தெரியாத உடல்களும் அல்ல

நாற்றம் அடிக்கும் உடல்களுக்கு

தீபமேற்றும் தூண்டுகோல் இவர்கள்

உள்ளத்தில் நிற்பவர்கள் இல்லத்தைக்

காப்பவர்கள் . . . .

வாசலில் நின்று வரவேற்பவர்கள்!

சுண்டெலி

முழு முதற் கடவுளின் வாகனம் . . .

எங்கள் வீட்டு அடுக்களையை

விளையாட்டு மைதானமாக்கி ஓடி

உலாவுகிறது. . . .

தையல்காரன் வேலை வேண்டும்

என்று பிரார்த்தனை செய்ததை

நினைவில் வைத்து கடிக்கிறது

புதுச்சட்டையை . . .

பிள்ளையாருக்கு குட்டிகரணம் போடுகிறதோ

இல்லையோ ஆண்டாண்டுக்குக் குட்டிகள்

பல போடுகிறது;

விலைவாசியில் நிலவரம் தெரியாமாலேயே!

அரிசி பருப்புக்கு இதன் பேரை ரேஷனில்

சேர்க்க முடியுமா?

அழையாத விருந்தாளியைப் போல வரும்

இந்த ஜோடிகள் அமர்க்களம்

படுத்துகிறார்கள்.

இவர்கள் குடும்பத்தில் சண்டை

சச்சரவுகள் இல்லை . . .

விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள்

என்பது இவர்களுக்கு விதிவிலக்கு!

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles