HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

கதவுகள்

திறக்கும்போது வாவென்று அழைக்கும்

வாசலுக்குக் கிடைத்த இமைகள்

இவர்களைப் பூட்டி வைத்து அழகுப்

பார்ப்பதில்தான் ஆனந்தம்

இல்லந்தோறும் பாதுகாக்கும்

காவலர்கள்

இவர்களை தட்டி விழிக்கச் செய்தால்

தான் எஜமானர்களின் தரிசனம்

கிடைக்கும்.

இயேசுநாதரைப் போல ஆனியில்

அகப்பட்டு, அருவாளின் கைப்பட்டு

ஆச்சாரியின் பலிக்கு ஆட்பட்டப்பிறகு தான்

வாசலுக்குக் கொலுவாய் நிற்கிறார்கள்.

இவர்களுக்கும் ஒப்பனைப் பிடிக்கிறது.

அதனால்தான் ஆண்டுக்கு ஒருமுறை

நிறம் மாறுகிறார்கள்

படைத்த இறைவனின் கருவுலத்திற்கும்

நாங்கள் தான் பாதுகாப்பு

என்று மார்பு நிமிர்த்தி நிற்கின்றார்கள்.

ஈகோ

தான் என்ற அகந்தை

மலையைப் போல அசைக்க முடியாத

எண்ணம்

ஆணவம் ஆட்சி செய்வது;

அதிகாரம் தனக்கே சொந்தமென

நினைப்பது

விட்டுக் கொடுக்கும் மனமில்லாதது முடியும்

என் நினைத்து முடிவுக்காக காத்திருப்பது;

முகத்தில் நவரசம் காட்டுவது . . .

தவறு என்று தெரிந்தும் தொடர்வது . . .

உயர்ந்ததாய் நினைத்து தாழ்ந்துப் போவது

கௌரவம் பார்ப்பது . . .

நடப்பது மண்ணில் என்பதை மறந்த

விண்ணில் பறப்பது . . .

அலட்சியப் பார்வை பார்ப்பது ஏளனம்

ஏகோபித்திருப்பது . . . .

வெறுங்கையில் போட்ட முழங்கள்

டேப்பில்லாமலே டூப்புக்காக அளந்தது

முழத்தை அளக்க முதலில் வெறுங்கை

தேவை வெறுங்கை தேவை. . . .

வெறுங்கை அறுவடை செய்தால்தான்

நிலத்தில் நெற்பயிர் சிரிக்கும் . . . .

வெறுங்கை சேறில் நுழைந்தால்தான்

நாற்று செழிக்கும் . . . .

வெறுங்கை அசைந்து கொடுத்தால்தான்

இலக்கியம் அரங்கேறும் . . . .

அடிக்க நாம் தூக்கும் போது உதவும்

முதல் ஆயுதமே வெறுங்கைதான் . . . .

ஐந்து விரல்களின் வெறுங்கைதான்

கட்சியின் சின்னமானது . . . .

தானம் கொடுக்க கர்ணனுக்கு முதலில்

தேவைப்பட்டது வெறுங்கைதான் . . . .

குசேலனின் அவலை வாங்கியது

கண்ணனின் வெறுங்கை . . . .

முழுமுதற் காரணம் வெறுங்கை . . . .

கோலமிட, ஒப்பனை செய்ய கட்டியணைக்க

கண்ணீரைத் துடைக்க, பூத்தொடுக்க

போர்த்தொடுக்க, தாங்கிப்பிடிக்க,

உணவு உட்கொள்ள,

     மொத்தத்தில் போதுமடா சாமியென

கும்பிடுப் போட!

பதவி

உண்மை உழைப்பிற்குக் கிடைத்தது

திறமை பளிச்சிடும் நாள்

புதியதொரு முகவரி வாசலுக்கு வெளியே

பணியை ஆதரித்ததால் கிடைத்த வெகுமதி

லாட்டரிச் சீட்டில் கிடைக்காதது

லட்சியத்திற்காகக் கிடைத்தது.

முகவரிக்கு கிடைத்த வெற்றி பயணம்

வருடங்கள் தாலாட்டியதால்

கிடைத்த பாராட்டு . . .

பருவங்களைக் காட்டும் பணிகள்

விருப்பத்தோடு ஏறியதால்

எவரெஸ்டின் உச்சி தெரிந்தது. . . .

சலிப்பில்லாதச் சாதனை பயணம் முனகல் இல்லாத தாய்மையின்

உழைப்பு

உழைப்பிற்குக் கிடைத்த உயர்வு

இரவில் சந்திரனுக்குக் கிடைத்தது . . .

பகலில் சூரியனுக்குக் கிடைத்தது! . . .

பணம்

ஏழைக்குக் கிடைக்காத அதிர்ஷ்டம்

பணக்கார வீட்டு காகிதக் குப்பைகள்

நாள் கழிப்பின் சூதாட்டம்!

ஒருநாள் பொழுதிற்கு அச்சாணிக்கொம்பு

காந்தியின் சிரிப்பை விலை கொடுத்து

பார்க்கச் செய்வது

அச்சு வெல்லம் தேர்தல் திருவிழாவுக்குத்

தேவைப்படுவது

சாதித்துக் கொள்ள இவர்களை பலியிடலாம்

மனித இயற்கையின் உலகம்!

பதுக்கி வைக்கும் பாவ மூட்டைகள்

ஏழைக்குக் கிட்டாத கனி!

பணக்கார வீட்டு பழத்தோட்டம்

பேராசையின் தூண்டுகோல்

உழைப்பாளரின் தினக்கூலி

சம்பளக்காரரின் மாதாந்திரச் சீட்டு

ஆயுளைக் கூட்டி வைக்கும் அஸ்திரம்

அதிர்ஷ்ட மாளிகை!

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles