HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

புரோக்கர்கள்

ஆயிரம் காலத்துப் பயிர்களை அன்றே

அறுவடை செய்தவர்கள் . . . .

பொய் புளுகும் குடுகுடுப்புக்காரர்கள் . . .

சிக்கலில் மாட்டிவிடும் சித்தர்கள் . . . .

விற்பனைக்கு கூவிகூவி விற்பவர்கள்

உத்திரவாதம் இல்லாத காலாவதி

நோட்டுகள்

நம்பவைத்து வம்பில் தள்ளுபவர்கள்

ஜாலாக்கு பேச்சில் . . . .

ஜோலா மாட்டுபவர்கள் . . . .

பகட்டுச் சிரிப்பில் பங்குக் கேட்பவர்கள்

இரண்டு பக்கத்திற்கும் ஓசை கொடுக்கும்

மத்தளங்கள் . . . .

இவர்கள் பேச்சில் ஆராயாமல்

விழுந்தால் ஆபத்துதான்! . . . .

வீடு

எல்லோருக்கும் கட்டாயம் தேவை!

குழந்தைகளின் விளையாட்டு இடம் . . .

சூளையில் சுட்டுப்பட்டச் செங்கல்லின்

தியாகம் . . . .

மண் ஏற்று நிற்கும் சுமைகள் . . . .

மண் மாதாவின் மீது காலூன்றிய

கட்டிடங்கள். . . .

அழகாக அடுக்கி வைக்கப்பட்டப் பெட்டிகள்

உழைப்பாளியின் முயற்சி, முதலீட்டு

தயாரிப்பாளர்க்கு மகிழ்ச்சி

தூக்கானாங் குருவியின் கண்டுபிடிப்பு . . .

ஆதிகால மனிதரின் சுரங்கப்பாதை . . .

சிலந்தி வலையின் சிங்காரம் . . .

படிக்கட்டுகள் . . .

தனக்கென உலகை அமைத்துக்

கொள்வது!

உறவுக் கிளைகளுக்கு கிடைத் நிழல் சந்ததிகளின் பள்ளியறை!

மரணம்

நீண்டத் தூக்கம் . . . .

சலனமற்ற மௌனம் . . . .

பிறப்பின் அந்திமக் காலம்

ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் ஒன்று

மனிதனை மிரட்டிப் பார்க்கும் முகம் . . .

தெரியாத மிருகம் . . . .

ஒட்டு மொத்த ஒப்பாரியின் ஓலம்

இயற்கை கற்றுத் தரும் பாடம் . . . .

இயங்க மறுக்கும் இதயத்தின்

வேலைநிறுத்தம்! . . . .

பிறப்பின் பரிசு; கடவுளின் தண்டனை

நீதியின் மறுபரிசீலனை!

மனசாட்சிக்குக் கிடைக்கும் தீர்ப்பு

எதிர்பார்ப்பின் முகவரி . . .

முடிந்துப்போனதற்கும்

முற்றுப்புள்ளி வைப்பது . . .

நம்பிக்கை இல்லாதவனின் தாலாட்டு

முடிந்த வாழ்வின் இறுதியாத்திரை

நித்திரைக்குக் கிடைக்கும் இறுதிச் சீட்டு

நிம்மதியின் பெருமூச்சு!

கனவு

உறக்கத்தின் கதாநாயகன்

நடக்காத ஒன்றையும் நடத்திக் காட்டுவது

நாளையின் ஏக்கம் . . . .

சாதிப்பவனுக்கு அதிகாலை பலன்

சறுக்குபவனுக்குப் பகற்பொகுதின் பலன்

நிஜமாகத் துடிக்கும் எண்ணங்கள்

நியாயமான ஆசை . . . .

நிம்மதியின் கரை . . . .

ஏழைகளின் சொந்தம் . . . .

எழுத்தாளர்களின் வருணணை . . . .

சோம்பேறிகளின் கூடாரம் . . . .

சொகுசுவாசிகளின் ஆடம்பரம் . . . .

மௌனம்

அமாவாசை இருட்டு ஆழ்கடலின் தவம்

சிலைகளின் மர்மம் சிற்பங்களின் புதிர்

ஏடுகளின் எழுத்துக்கள் எழுதிவைத்த

உயில்கள்

கவனிப்பாரற்றுக் கிடந்த ரூபாய் நோட்டுகள்

பதுக்கி வைத்த பொருள்கள்

வாசலில் வைத்த செருப்புகள்

ஊற்றி வைத்த நீர்

வடித்து வைத்தச் சாதம்

இளைப்பாறிக் கொள்ளும் நிழல்

கவலை தோய்ந்த முகங்கள்

வறுமையின் தாண்டவம்

புயலுக்குப்பின் . . . .

தவறு நிகழ்ந்த பின் . . . .

தோல்வியின் தழுவல் . . . .

வாசலுக்கு வெளியே மூதாட்டியின் தோற்றம்

வரவு இல்லாத போது . . . .

உறவு வராதபோது . . . .

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles