HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

இசை

நோய்க்கு மருந்து . . . .

சாதகப் பறவையாக நினைத்து பாத்ரூம்

முனகல் . . . .

அருவியின் ஓசை . . . .

மழைத்துளியின் சலங்கை சத்தம் . . . .

கருக்களில் விழும் மத்தள ஓசை  . . . .

வாரிக் கொடுக்கும்

வெள்ளத்தின் சலசலப்பு . . . .

வயோதிகளின் இருமல் நெசவாளியின்

நெசவு சத்தம் . . . .

தையல்காரனின் மிதியடி சத்தம் . . . .

குற்றால அருவிகள் குதிக்கும் சத்தம் . . . .

குரங்குகள் கொஞ்சிக் குலாவும் சத்தம் . . . .

அலையின் கரைச் சத்தம்

சுனாமியின் இரங்கல் சத்தம் . . . .

உயிர்மூச்சின் உறக்கச் சத்தம் . . . .

புல்லாங்குழலுக்குள் காற்றின் சத்தம்

மை இருட்டில் பூச்சிகளின் சத்தம்

விடியலில் பறவையின் சத்தம் . . . .

வாழ்க்கை

பிரச்சனைகளின் பிரதேசம் . . . .

முடிவே இல்லா துவக்கம் . . . .

இன்பத் துன்பத்தின் எஜமான் . . . .

கடிவாளம் போடப்பட்டக் குதிரை

உருக்கமானத் தொடர்கதை

உன்னதமானப் பொக்கிஷம்

நம்பிக்கையின் ஆதாரம்

பேராசை பிடித்தவனின் அங்கலாய்ப்பு

கடவுள் பாத்திரம் அளித்திட்டப் பிச்சை

நடிக்கும் நாடகத்தின் தலையங்கம் . . . .

போராடத் துணிந்தவனின் எதிர்பார்ப்பு . . . .

முயல்பவனுக்கு! குறி விழிப்பவனுக்கு?

குறி

சந்ததிகளின் கூடாரம் . . . .

கைசேர்ந்து உலா வரும் ஜோடிகள் . . . .

விட்டுக் கொடுக்கும் விடுகதைகள். . . .

சிறுகதையொன்று நாவலாவது . . . .

இது ஒரு இலக்கியம் பிரதிபலிக்கும்

கண்ணாடி!

சாலைகள்

பயணத்தை வழி நடத்தும் சாலைகள்

வழிகாட்டி எல்லைக் கோட்டிற்குள்

வளைந்து வளைந்துப் போகின்றன

வாழ்க்கையென்றால் நெளிவுச் சுளிவு

வேண்டும். இது . . . .

சாலைகளுக்கு மிக பொருத்தம்

முடிவில்லா சாலைகள் பயணத்தின்

துவக்கம் . . . .

சுமைதாங்காமல் முகம் சுளித்து இவை

என்றுமே திரும்பி படுத்துக் கொள்வதில்லை!

 

ஒருநாளில் எத்தனையோ சுமைகள்

மற்றவர்களின் கனவிற்காகத்

தன்னையே தேய்த்துக்கொள்ளும்

தியாகிகள் இவைகள்!

சாலைகள் ஓரம் மரங்கள் ஓடுகின்றன

அது கண்ணின் தாக்கம்

பிரதிபலன் பார்க்காத மனிதநேயம்

இந்தச் சாலைகளிடம் தான்

காணப்படுகிறது.

சாலைகள் இல்லையெனில்

மனித உறவுகளின் துவக்கம்

நின்றுப் போயிருக்கும் . . . .

பயணம் செய்யும் சாலைகளே

உருவங்களை ஊர்ஜிதப்படுத்தும்! . . . .

முயற்சி

குழந்தையின் நடைவண்டி பயணம்

வயோதிகளின் மூன்றாம்கால்

எழுத்தாளனின் பேனா

ஊனத்தின் வெளிநடப்பு கொடி தவழும்

கொம்பு

பயணம் செய்யும் வாகனம்

முகத்தடியில் மாட்டிய மாடுகள்

வைக்கோல் கன்றுகுட்டியின் பால் கறப்பு

முளைப்பாலில் மழலையின் போராட்டம்

முன் வைக்கும் கால் . . . .

விரலுக்கு இடையே பேனா . . . .

பசி போக்கும் வறுமை . . . .

தாகமே உணவாகும் கொடுமை . . . .

புளித்தமாவின் புதிய வருகை . . . .

கலப்படம் காட்டும் கன்றாவிப் பொட்டலம்

பலநாள் மீனை பதப்படுத்தும்

ஐஸ்கட்டிகள்!

செல்போனில் ஒரு S.M.S.

  கன்றாவிப் படத்தை பார்த்து விட்டு

கெட்டுப் போனாள்

வேலைக்காரி தன் எஜமானிடம்!

  திருந்துங்கடா டேய்

திரும்பி வருவதற்கு காலம் இனி இல்லையென

சாகும் போதாவது! . . . .

  கூடாரங்களை அகற்றிவிட்டதால்

எங்கள் வீட்டு கரப்பான் பூச்சிகள்

அகதிகளாகி விட்டது . . . .

  வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர்

உலக நாயகன்

ஒன்றே முக்கால் அடி குறள் பேட்

130 சிக்சர்கள்!

130 ரன் குவிப்பு!

இன்னும் முறியடிக்கப்படாதச் சாதனை!

  தண்ணீர் பற்றாக்குறைக்கு

உங்கள் கண்ணீர்த் துளிகளை

சேமித்து வையுங்கள்

உப்பு கரிக்கிறதா பரவாயில்லை

ப்யூரிபிகேஷன் செய்து கொள்ளலாம்.

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles