HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்

  அவரது சாதனைகளின் நிரந்தர அடையாளாமாகத் திகழும் அவரது குடும்ப உறுப்பினர்கள் திரு.நீல்ராஜ், திரு.கதிரவன், திரு,ராஜபூபதி, திரு.மணி, ஆகியோரையும் இதன் மூலம் மிகவும் பாராட்டுகிறேன்.

    டாக்டர் ஜி.கண்ணுசாமி

     பெரம்பலூரில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி கல்வித் தந்தையாகத் திகழும் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.அ.சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எனது அன்பு நண்பரும், எழுத்தாளருமான திரு.என்.சி.மோகன்தாஸ் எழுதி மணிமேகலைப் பிரசுரம் வாயிலாக வெளிவருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

   தனலட்சுமி சீனிவாசன் நிறுவனர் உழைப்பால் உயர்ந்தவர். கல்வி நிறுவனங்களை ஆரம்பித்த பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் உயர் கல்வி கற்காதோர் இல்லாத இல்லங்கள் இல்லை எனலாம். வேலை இல்லாத நிலையை மாற்றி எல்லோருக்கும் வேலை கிடைத்திட வித்திட்டவர் திரு.அ.சீனிவாசன்.

   மாபெரும் அளவில் உலகளாவிய தொலைநோக்குச் சிந்தனைகளுடன் பெரம்பலூர்ப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேலிட திரு.அ.சீனிவாசன் ஆற்றிவரும், தனிமனித மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் அளவிடற்கரியவை.

    நற்பணிகளுக்கு நன்கொடைகளை வாரி வழங்கும் சீர்மிகு கொடையாளர் இவர். இப்பகுதியில் யாரைக்கேட்டாலும் ஏதாவது ஒருவகையில் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களுடன் தொடர்பு கொண்டவராக இந்நிற்வனம் பெயர்பெற்று, திருச்சி, சென்னை நகரங்களில் தமது கிளைகளைப் பரப்பி வந்துள்ளது.

   விவசாயிகள் மேம்பாட்டிற்குச் சர்க்கரை ஆலை, சிறுசேமிப்பிற்கு சிட்பாண்ட்ஸ், கட்டடங்கள் உருவாவதற்கு உதவிடும் காண்கிரீட்  பிளாண்ட் ஆகியவை இந்நிறுவனத்தின் சாதனைப் பயணத்தில் கூடுதல் மைல்கற்களாகும். எளியவர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பன்னாட்டுத் தரத்தில்  உருவாகிவரும் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, என்ஜினியரிங் கல்லூரி ஒருங்கிணைந்த வளாகம், நட்சத்திர விடுதி எனப் பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அற்புதப் பங்காற்றி வரும் `தனலட்சுமி’ சீனிவாசன் அவர்களின் குடும்பம் நமது பண்பாடு, நாகரிகத்தைக் கட்டிக்காக்கும் கூட்டுக் குடும்பமாகத் திகழ்ந்து தனிக்குடித்தனத்தையே அதிகம் விரும்பும் நாகரிக உலகில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

   சீரிய நற்கனவுகளை நனவாக்கி வீறு நடைபோடும் கல்வி நிறுவனங்களைத் தந்து தரமாக வாழ்ந்து வரும் திரு.அ.சீனிவாசன் பல்லாண்டுகள் வாழ்ந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கும், இந்திய மண்ணிற்கும் மேலும் பல பெருமைகளைத் தேடித்தந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

   டாக்டர் ஆர்.பால்ராஜ் (நிரஞ்சன் மருத்துவமனை)

   சாதனைக்கும், நட்புக்கும் பரோபகாரத்திற்கும் பெயர் பெற்றுள்ள பெரியவர் திரு.அ.சீனிவாசன் அவர்கள் பற்றிய நூல், எழுத்தாள நண்பர் திரு.என்.சி மோகன்தாஸ் கைவண்ணத்தில் வெளிவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

   திரு.அ.சீனிவாசன் அவர்களுடன் எனக்கு நீண்டகாலப் பழக்கம், நட்பு உண்டு. பெரம்பலூரின் மேன்மைக்குப் பெரிதும் உதவியிருக்கிற தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் புதிய மருத்துவமனை ஆக்கத்திற்கு ஆலோசனைகள் வழங்க முடிந்ததற்கு  மகிழ்ச்சியடைகிறேன்.

  திரு.அ.சீனிவாசனின் அனுபவம் –உழைப்பு-விடாமுயற்சி-பெருந்தன்மை –மனிதாபிமானம் போன்ற அருங்குணங்கள் இளைஞர்களுக்கு நிச்சயம் வழிகாட்டியாக, ஊக்கமாய் அமையும் என்பது உறுதி, இப்புத்தமும், திரு.அ.சீனிவாசன் அவர்களின் சாதனைகளும் தொடர வாழ்த்துகிறேன்.

    திரு.ஏ.எம்.சாதிக் பாட்சா

 நிர்வாக இயக்குநர், கீரின் ஹவுஸ் புரொமோட்டர்ஸ், சென்னை;

  தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவனங்களின் தலைவர் திரு.மிகு அ.சீனிவாசன் அவர்களின் தொண்டுள்ளம், சாதனைகள் மற்றும் நற்பெருமைகள் ஆகியவற்றை வெளிக் கொணர்ந்து இருக்கும் இம்மலரில் எனக்கும் வாழ்த்துரை வழங்கக் கிடைத்த வாய்ப்பை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.

  எனக்கு தனலட்சுமி  கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியவர் திருமிகு.அ.சீனிவாசன் ஐயா அவர்களுக்கும் நீண்ட நாள் பழக்கம் உண்டு. நான் வீட்டுமனைகளாக விற்பதற்கு இருந்த இடத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கும் கல்லூரிக்குத் தேவைப்பட்டதால் வாங்கிய விலைக்கு அவருக்குக் கொடுத்தோம். இந்த மிகச் சிறிய உதவியை அவர் சந்தித்த பெரியோர்களிடம் பல முறை எடுத்துக் கூறி எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். இன்று வரை அந்த நற்செயலை மறவாமல் பல மடங்குகளாக எங்களை கவுரவப்படுத்தி வருகிறார்.

   நான் அவரிடம் ஒருமுறை சென்னையில் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கக் கூறியபோது அதன் லாப நோக்கை மனதில் கொள்ளாமல், நம்பெரம்பலூர் மாவட்ட முன்னேற்றமே, என் நோக்கம் என்று கூறி அனைத்துக் கல்வி நிறுவனங்கள், சர்க்கரை ஆலை மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை நமது மாவட்ட்த்திலேயே ஆரம்பித்து ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கல்வி அறிவூட்டியும் நமது மாவட்ட முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுனையாக இருந்து வருகின்றார்.

   கல்வி வளம் பெருகக் கல்விச் சாலைகளையும், உடல் நலம் பேணும் மருத்துவக் கல்லூரியையும், தொழில் வளம் பெருகச் சர்க்கரை ஆலையையும் உருவாக்கிப் பெரம்பலூர் மக்கள் பயனடையும் வகையில் சேவைகள் பல செய்து வரும் பெரியவர் சீனிவாசன் அவர்கள் உள்ளூரில் பழுத்த மரம், ஊரணியில் நிறைந்த நீர், பார் போற்றும் வள்ளல், பாமரரின் தோழர், இவரும் இவரின் குடும்பத்தின் உறுப்பினர்களும்  உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞான பெற்று வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்தி மனம் மகிழும் என்றும் உங்கள் நண்பன்தான் இந்த சாதிக் பாட்ஷா என்று அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.

  இவருடைய அயராத உழைப்பினால் இன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கே இவர் உருவாக்கிய கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றன. இவருடைய இந்த அரிய தொண்டு மென்மேலும் வளர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மேலும் துணைபுரிய எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன்.

     இலக்கியவீதி இனியவன்;

   திரு.என்.சி.மோகன்தாசுக்கு அறிமுகம் தேவையில்லை. நாடறிந்த எழுத்தாளர். அலுவல் நிமித்தம் அயலகம் பறந்தாலும் பத்திரிகைத் தொடர்பில் பற்றுள்ளவர். `இலக்கிய வீதி’யின் யோசனையை ஏற்று `குவைத்’தில் உள்ள முன்னோடி இந்தியர்களைப் பற்றித் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியவர்; எழுதுபவர், `Frontliners’  மூலம் உலகப் புகழ் பெற்றிருப்பவர். `எழுத்து’வழி வரும் ஊதியம் முழுவதையும் ஏழைகளுக்கு வழங்குவதையே வாழ்வின் கடமையாகக் கொண்டிருப்பவர்.

   நல்லவர்களையே நாளும் தேடுபவர். நாட்டுக்கு உதவுகிறவர்களை உலகுக்கு அடையாளம் காட்டுவதையே இலட்சியமாய்க் கொண்டிருப்பவர். அந்த வகையில் பெரம்பலூப்பகுதியில் உலா வரும் ஓர் உன்னத மனிதரின் `தரிசன’த்திற்கு இப்போது வழிவகுத்திருக்கிறார்.

  `கல்வி’, `மருத்துவம்’ ,`தொழில்’ என ஏராளமான துறைகளில் தொண்டுகள் செய்து துலங்குகிற பெருந்தகை திரு.அ.சீனிவாசன் அவர்கள் ஓர் ஒப்பற்ற மாமனிதர். `தனலட்சுமி சீனிவாசன்’ குழும் நிறுவனங்கள் மூலம், அவர் செய்து வரும் சேவைகள் அளப்பரியவை. அந்த மனிதநேய மாண்பாளரைப் பற்றிய வாழ்வியல் நூல் தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஒரு வரம் என்றால் மிகையல்ல. இதைத் திறம்படப் படைத்திருக்கிற எழுத்தாளர் திரு.என்.சி.மோகன் தாசை இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 |

 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23

More Profiles