HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்

 

 

   திரு.சி.பிரசன்னம் திரு.ஜெயக்குமார்;

   எந்த ஒரு விஷயத்தையும் பார்ப்பது, கேட்பது,கேள்விப்படுவது என்பதற்கும் அப்பால் எழுத்தில் படைக்கப்படும் போது அதற்கு ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது இயல்பு. அது `மீடியா பவர்.

   தனலட்சுமி சீனிவாசன் குழுமத் தலைவரும் நிறுவனருமான திரு.அ.சீனிவாசன் அவர்கள் பற்றிப் பல விஷயங்களும் கேள்விப்பட்டு பிரமித்திருக்கிறோம். எங்கள் ஊர் நம்புகுறிச்சியுடன் அவருக்குள்ள தொடர்புபற்றி அவர் தெரிவித்ததாக எங்கள் தம்பி மோகன் தாஸ் மூலம் அறிந்து மகிழ்ச்சிடைந்திருக்கிறோம்.

   எந்த ஒரு காரியத்தில் இறங்குவதென்றாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்படுவதில்லை. ஒன்றில் இறங்கும் முன்பு அதற்கு ஏற்ற நபர்களைக் கொண்டு தீர விசாரிக்கிறார். ஒரு முயற்சி அல்லது தொழில் தொடங்குகிறார். என்றால் அதன் லாப நஷ்டங்களைப் பற்றி மட்டுமே யோசிக்காமல்-

   அதனால் அந்தப் பகுதியில் எவ்வளவு பேர்கள் பலனடைவார்கள், எவ்வளவு பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தர இயலும் எத்தனை குடும்பங்கள் முன்னேறும் என்று சிந்திப்பது இவரது சிறப்பு. இந்த ப்ரோபகாரச் சிந்தனை அரிதான ஒன்று.

   எங்களுக்குத் தெரியாது வேலையில்லாமல் கஷ்டப்படும் பலருக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வேலை கொடுத்திருக்கிறார். வசதியில்லா மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைகளும் வழங்கி வருகிறார்.

   எதையும் எதிர்பார்க்காமல் சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு சுற்றுப்புறப் பகுதிகளுக்கு இவர் செய்து வரும் சேவை போற்றதலுக்குரியது.

   நாளிதழுக்கு ஆயுசு ஒரு நாள்; வார இதழுக்கு ஒரு வாரம், மாத இதழுக்கு ஒரு மாதம் மட்டுமே ஆனால் புத்தகத்திற்கு நீண்ட ஆயிள் என்பார்கள்.

   ஒரு மாபெரும் மனிதரின் வளர்ச்சிப் பாதையை எங்கள் தம்பி எழுத்தாளர் என்.சி.மோகன் தாஸ் புத்தகமாக்குவது எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.

   சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் இன்னும், இன்னும் வேணும் என்கிற ஆசை அடங்காது, இவருக்கோ எவ்வளவு வாரி வழங்கினாலும், எவ்வளவோ உதவிகள் செய்தாலும், இன்னும்...இன்னும் செய்யணும் என்கிற அடங்காத பேரராசை! இவரும்-இவரது பேராசையும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்!

   பாடலூர் திரு.எஸ். மதியழகன், (மாவட்டக் கவுன்சிலர்)

  இந்திய வரைபடத்தில் கூட யாரும் திரும்பிப் பார்க்காமல் இருந்த பெரம்பலூரை, பெரம்பலூர் மாவட்டத்தை இந்தியாகவே திரும்பிப் பார்க்க வைத்தவர் திரு.அ.சீனிவாசன் அவர்கள்.

   மிகச் சிறந்த கிராமத்தில் பிறந்து, நல்ல உணவு, நல்ல உடை , கல்வி இதற்குக்கூட வசதியில்லாமல் வளர்ந்த ஒருவர், இன்று அருகில் உள்ள மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களாக இருந்தாலும், வியாபார நிறுவனங்களாக இருந்தாலும்,ஏன் வங்கிக் கிளைகளாக இருந்தாலும் கூட அதைத் துவக்கி வைக்க அவர்தான் வரவேண்டும் என்பது அனைவரின் முதல் விருப்பம்.

   திரு.அ.சீனிவாசன் அவர்கள் நினைத்திருந்தால் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் துவக்கிய கல்வி நிறுவனங்களை, சர்க்கரை ஆலையை, மருத்துவமனியை வேறெந்த நகரத்திலாவது ஆரம்பித்துக் கோடிகளைக் குவித்திருக்கலாம். ஆனால் தனக்குக் கிடைக்காத குறைந்த செலவில் தரமான கல்வி, மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு போன்றவை தன் பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு செயல்படுகின்றார்.

   கடந்த இருபது ஆண்டுகளாக அவரின் ஓய்வில்லா உழைப்பு, கடினமுயற்சி, இவைதான் இத்துணை உயர்விற்கும் காரணம் என்று சொன்னால் அதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரி மனிதர்.

  அவருடைய எளிமையும், பணிவும் பல பெரியவர்களிடம் பார்க்க முடியாதவை. நேர்மையிலும், துணிவிலும், எளிமையிலும், திறமையிலும், பெருந்தலைவர் காமராஜரைச் சிறந்தவர் என்று சொல்வார்கள்.அவரைப் பார்த்துப் பழகும் வாய்ப்பும் வயதும் எனக்கில்லை.ஆனால் இந்தப் பெரம்பலூர் மாவட்டத்துக் காமராஜரை பார்த்துப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்பதே எனக்குப் பெருமை, மகிழ்ச்சி எல்லாமே!

    திரு.ஆர்.ஆர்.ரவி (ஹோட்டல் வசந்தம் குழுமம்)  

 

   திக்கெட்டும் திகழட்டும் புகழோடு சிறக்கட்டும்

   தனலட்சுமி சீனிவாசன் திருநாமப் பெயரோடு!

 

உழைப்பிலே நீராடி

வாழ்க்கையில் போராடி

முயற்சியில் விளையாடி

வளர்ச்சியில் முடிதேடி

தித்திக்கும் கரும்புக்கு ஆலை அமைத்து

கற்பிக்கும் கல்விக்குச் சாலை அமைத்து

எண்ணற்ற உழைப்போர்க்கு வாழ்க்கை கொடுத்து

நல்மக்கள் கற்றம்தனைச் சேர்த்து அணைத்து

வந்த நிலை மறவாமல்

என்றும் நிலை மாறாமல்

பண்பு நிலை தவறாமல்

அன்பு நிலை குறையாமல்

சுயசரிதம் காணும் வித்தகர்க்கு

வைரத்தில் வரி எடுத்து வாழ்த்துகின்றேன்

தங்கத்தில் அதைத் தொடுத்துச் சூட்டுகின்றேன்!

         திரு.எச். ஷேக் தாவூத் ***

பலரது வாழ்க்கை

சட்டமில்லாத படம்!

சிலரது வாழ்க்கை

பிறருக்குப் பாடம்! ஆம்

அய்யா சீனிவாசனின்

வாழ்க்கை ஏற்றமிகு பாடம்!

தடம்பதித்துச் செல்வதைவிட

வாழ்ந்தால் தடயம் விட்டுச்

செல்லும் குணம் இவருக்கு!

தனக்குக் கிடைக்காத கல்வி!

யாவரும் பெற்றிட வேண்டும்

எனும் நல்மனம் இவருக்கு

பள்ளிப் படிப்பைப் பாதியில்

விட்டாலும்! இவர்தம்

வாழ்க்கையில் தொட்டது.

இமயத்தின் உச்சம்!

இன்றும் சாதனைகள்

தொடர்கிறது மிச்சம்!

தனிமனித வளர்ச்சியே

சமுதாய வளர்ச்சிஎன

ஊராரைச் சேர்த்து

வளர்க்கும் செறிந்த சிந்தனை

வளர்ந்திடும் இளைய

தலைமுறைக்கு ஐந்தாம் வேதம்!

திட்டமிடல், அர்ப்பணிப்பு,

கூட்டு உழைப்பு,செயல்வேகம்,

விந்தை தரும் சிந்தை என

மானுடவியல் பல்கலையாய்

தனமும், கல்வியும் தருபவர்

சீர்மிகு சீனிவாச ரெட்டியார்

போக்குவரத்து, நிதி, கல்வி, சர்க்கரை ஆலை,

மருத்துவமனை எனத் தொடரும் இவரது சகாப்தம்,

சாதனை வரலாறாய் வெளிவருவதில்

பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அய்யாவின் சாதனைகள் பெருகிட

இறைவனை வேண்டுகிறேன்.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 |

 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23

More Profiles