HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

முன்னேறு!முன்னேற்று!!

சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்

   

   சீனிவாசன் அவரது 6 முதல் 18 வயது வரை மிகவும் கஷ்டப்பட்டார். அதன்பிறகு அவருக்கு வளர்ச்சிப்படிகள்தான். ஏணி! ஏற்றம்!.

   கடைகள் ஒவ்வொன்றாய் வளர்ந்து வந்தன. அந்தச் சமயம் பணத்தைப் பெருக்க `பைனான்ஸ் ஆரம்பித்தார். அதில் பணப்புழக்கம் அதிகம்!

   எவ்வளவுதான் உழைத்தாலும், முயற்சிகள் எடுத்துக் கொண்டாலும் நேரம் நன்றாக இருந்தால்தான் எல்லாம் சரியாய் அமையும் என்பார்கள். சீனிவாசனுக்கு அந்த நேரமும் ராசியும் மனைவி தனலட்சுமி மூலம் கிடைத்தது. (1967).

    தனலட்சுமி பெரம்பலூரிலுள்ள துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அவரை மணமுடித்த பின்பு சீனிவாசனின் சுமை குறைந்தது. கணவருக்கு அவர் தெம்பாய் ஊக்கமயிருந்து பிசினஸ் பொறுப்புகளையும் பகிர்ந்து கொண்டார்.

   ஆலோசனைகள் வழங்கி, கணவரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி விவேகத்தைக் கடைப்பிடிக்க உதவியாயிருந்தார்.

    அந்த நேரம் அவர்கள் `தென்னகம் தேநீர் நிலையம் என ஹோட்டல் ஒன்று ஆரம்பித்தனர். சீனிவாசன் பெரிதாய்ப் படிக்காவிட்டாலும் படிக்கமுடியாவிட்டாலும் கூட அவருக்குத் தமிழ்ப் பற்று அதிகம், ஊர்ப்பற்று, சமூகப்பற்று அதிகம். நம் ஊர் நம் மாவட்டம்  -நம் மாநிலம் நம் நாடு என்கிற பரந்த சிந்தனையும் தேசிய பற்றும் அவருக்குள் ஊறியிருந்தன. அதன் விளைவே ஹோட்டலுக்குத் தமிழ்ப்பெயர் சூட்ட வைத்தது.

    அந்த நாட்களில் உணவு விடுதிகளுக்கு எத்தனையோ `பவன்கள் இருந்தன. வாடிக்கையாளர்களைக் கவர பழகின  -பரிச்சயப்பட்ட பெயர்கள் எப்போதும் தேவை. புதிதாய் ஹோட்டல் ஆரம்பிப்பவர்கள்கூட ஏற்கனவே பிரபலமாயிருக்கும் ஹோட்டல் பெயர்களைச் சூட்டி ஆரம்பிப்பதுண்டு.

   ஆனால், ஏற்கனவே பல ஆண்டுகள் சொந்த முயற்சியில் டீக்கடை வெற்றிகரமாய் நடத்தின சீனிவாசன் கடைக்குப் புதிதாய் புதுமையாய் அதே சமயம் தமிழில் பெயர் வேண்டும் என்று சூட்டியது எல்லோரையும் கவர்ந்தது.

   என்னதான் உழைத்து நேர்மையாய் முன்னேறினாலும் ஊர்க்காரர்களுக்கு, குறிப்பாய் அந்தந்தப் பகுதிகளில் இருப்பவர்களுக்குப் பொறாமை ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

   இவருக்கும் பல வகைகளில் ஏற்கனவே `பணக்காரர்களாய் செல்வந்தர்களாய் இருந்தவர்கள் மூலம் பலவிதப் பிரச்சனைகள் எழும்பின. அவற்றையெல்லாம் சீனிவாசன் சுமூகமாய் நேரிட்டு வந்தார். அந்தப் பக்குவம் அவருக்கு அப்போதே வந்திருந்தது.

   எதிர்ப்பவர்களை இவர் வெறுப்பதில்லை. அவர்களுக்குத் தெரிந்தது. அவ்ளோதான் அவர்களின் தரப்பில் அவர்களின் கண்ணோட்டத்தில் அது சரியாய் இருக்கலாம். எந்தக் காரியத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும்.

   நம் பக்கம் ஒன்று என்றால் மறுபக்கம் எதிராளியைக் கவரக்கூடும். அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவர்களை அழைத்துப் பேசி அரவணைத்துப் போவது இவரது பழக்கம்.

                              (9)

   வாழ்க்கையில் எப்போதுமே திருப்புமுனைகள் அவசியம். அவை இல்லாவிட்டால் சுவாரஸ்யமில்லாமல் போய்விடும். தடைகள் வரவேண்டும். அவற்றை மீறி கடந்து செல்ல வேண்டும். வெல்ல வேண்டும்.

  இல்லாவிட்டால் செக்குமாடு போல ஒரே இடத்தில் உழன்று கொண்டிருப்போம். மாற்றுவழி வேறு மார்க்கம் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. இங்கு எதுவும் யாரும் நிரந்தரமல்ல. கால ஓட்டம் சூழ்நிலை-சந்தர்ப்பத்திற்கு ஏற்பத் தொழில் மாற்ற வேண்டும்  -நாமும் மாறணும்.

   ஒன்று ஒத்து வரவில்லையென்றால் அதைவிட்டு விலகணும். வேறு பாதை யோசிக்கணும். அதற்காக ஆரம்பித்து ஆரம்பித்து விட்டுவிட்டுப் போகலாம் என அர்த்தமில்லை. எந்த ஒரு காரியமும் நிரந்தரமாக வெற்றி பெற கால அவகாசம் தேவைப்படும். திடீர் வெற்றியும் திடீர் லாபமும் நிரந்தரமில்ல.

  எவ்வளவு வேகமாய் லாபம் வருகிறதோ அவ்வளவு வேகமாய் நஷ்டத்திற்கும் வீழ்ச்சிக்கும்கூட வாய்ப்புண்டு. ஆகையால் தொட்ட காரியத்தை வெற்றி பெறச் செய்ய என்னென்ன வழிகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் முயலவேண்டும். எல்லாம் செய்து பார்த்தும் சரிவரவில்லையென்றால் தூக்கி எறிந்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விட வேண்டும்.

   ஐயோ இதில் இவ்ளோ முதலீடு போட்டுவிட்டோமே.... கடை வாடகை ஆட்கள் கூலி தொழிலை விட்டால் அக்கம் பக்கம் கேலி பேசுவார்களே என்று அதிலேயே உழலுபவர்கள் அதிகம். `முதலாளி `மோகம் அந்தத் தாகம் தாக்கம் வரட்டுக் கெளரவம் வரட்டுப் புகழின் காரணமாய் நஷ்டத்தையே வெளிக்காட்டாமல் மறைந்து- மறைத்து ஒரு நிலைமையில் அது பெரிதாகி தாங்க முடியாமல் போவதுண்டு. இந்தப் போலித்தனம் வறட்டுக் கெளரவம் பலரின் தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமைவதுண்டு.

   சமுதாயத்தையும்அக்கம் பக்கத்தினரையும் பார்த்து நிச்சயம் நாம் பயப்பட வேண்டும் அது தவறான வழியில் போகும் போது மட்டும்! நேர்வழியில் சுய உழைப்பில் செயல்படும்போது எதற்காக பிறருக்காகப் பயப்படணும்?.

   வாழ்க்கை நமது நமக்காக நாம் வாழணும். பிறரைப் பார்த்து பிறருக்காக எனக் கிளம்பினால் நிம்மதி போகும். ஒரு தொழில் ஆரம்பிக்கிறோம். அதற்கு முதலீடு செய்வது நாம். நம் பணம்! நம் முயற்சி! நம் உழைப்பு! இதில் அடுத்தவர்களுக்கு என்ன பங்கு? என்ன பொறுப்பு அவர்களுக்கு....?

   லாபமோ நஷ்டமோ நம் உடமை, பாதிக்கப்போது நம்மை மட்டும்! இதில் பிறர் தலையீடு கூடாது. பொருட்படுத்தக் கூடாது. வாழ்ந்தால் புகழ்வார்கள். வீழ்ந்தால் ஏசுவார்கள். அவற்றைத் தவிர்க்க முடியாது. அதற்காக அவர்களுக்காக நாம் இயங்க முடியாது.

   எந்த ஒரு துறையிலும் சின்ன தவறு அல்லது சின்ன சறுக்கல் சிக்கல் காணும் போது அவற்றைச் சரி பண்ணுவது எளிது. சரி பண்ணிவிட வேண்டும். இல்லையென்றால் அது பெரிதாகி நம்மையே மிரட்டும். விழுங்கிவிடும்.

   சீனிவாசனுக்கும் அந்த மாதிரி சறுக்கல்கள் சோதனைகள் அவ்வப்போது வந்ததுண்டு. வருவதுண்டு.

   எமர்ஜென்ஸி நேரம் ஏகப்பட்ட கெடுபிடி. பைனான்ஸ் வட்டிக் கடை கூடாது என்றனர். பைனாஸ் கடைகளை இவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். உடன் அவர் தளர்ந்துவிடவில்லை.

   ஓரளவிற்கு வளர்ந்தாயிற்று கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என வட்டம் பெரிதாகி வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்ட பின்பு அவற்றிலிருந்து கீழே இறங்க முடியாது. சில செலவுகள் சொகுசுக்குப் பழகிவிட்டால் அதிலிருந்து நாம் மீள முடியாமல் போவதுண்டு.

   வசதி வருமானத்தை வைத்து நம் தேவைகளை அதிகப்படுத்திக் கொள்கிறோம். செளகர்யங்களைப் பெருக்கிக் கொள்கிறோம். திடீரென அவற்றைச் சுருக்கிக் கொள்வது இயலாது.

   அவற்றை நிலைநிறுத்த செலவுகளைச் சமாளிக்க வேறுவழி தேட வேண்டும். சீனிவாசனும், பைனான்ஸ் போனால் போகட்டும் என்று சீட்டுக் கம்பெனி நடத்த ஆரம்பித்தார்.

   சீனிவாசன் தனலட்சுமி தம்பதிக்கு அடுத்தடுத்து மூன்று பெண்கள் பிறந்தனர். பெண்ணாகப் பிறக்கப் பிறக்க சம்பாத்தியத்தின் தேவை அதிகமாயிற்று. எந்தெந்தத் தொழிலுக்கு பெரம்பலூரில் வாய்ப்புகள் உண்டோ அவற்றிலெல்லாம் கூட்டாக முதலீடு செய்தார்.

   பஸ், சரக்குப் போக்குவரத்து, மதுக்கடை, ஹோட்டல், லாட்ஜ் ரிக் எனப் பலவற்றிலும் இறங்கினார். ஓட்டம்! உயரணும் என்கிற வெறி! அந்த உயர்வு எப்படி எதுவரை எந்த அளவு வரை என்கிற குறிக்கோளில்லா ஓட்டம்!

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 |

 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23

More Profiles