HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
Home  >  Profiles - Cine Artists  >  MGR

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர்.

 

நாகி ரெட்டி, வாசனுக்கு நன்றி

சுவரிருந்தால் தான் சித்திரம் வரையலாம். என்னதான் பணம் இருப்பினும், உழைப்பவர்கள் ? திறமை மிக்கவர்கள் இருப்பினும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டாமா? படமெடுப்பவர்களுக்கு ஸ்டுடியோ வசதி மிகமிக முக்கியமானது.

விஜயா ? வாகினி ஸ்டுடியோக்களின் அதிபர் திரு. நாகிரெட்டி அவர்கள் ?நாடோடி மன்ன?னுக்குத் தந்த உதவி பாராட்டுக்குரியதாகும். ஸ்டுடியோ அதிபர்களால் மட்டும்தான் ஒரு வகைப்படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ?நாடோடி மன்னன்? தோற்றுவிப்பதற்குக் காரணம், திரு.நாகி ரெட்டி அவர்கள்தான். விசேஷ பலன் எதையும் எதிர்பாராமல் ? பெற்றுக் கொள்ளாமல் உதவி செய்து ஒத்துழைத்த திரு.நாகி ரெட்டி அவர்களுக்கு ?நாடோடி மன்னன்?? தந்த வெற்றி மகத்தானது. ?நாடோடி மன்னன்? பட அதிபர்களுக்கு மகிழ்ச்சியையும், துணிவையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அதற்குத் திரு. நாகிரெட்டி அவர்களின் அரிய ஒத்துழைப்பு காரணமாகும். அவருடைய ஸ்டுடியோவான வாகினியில் தயாரிக்கப்பட்ட நாடோடி மன்னனில் இருப்பதாக மக்களால் கூறப்படும் சிறப்புகட்கு காட்சி சோடனை முதல்... விளக்கு அமைப்புகள் வரை முழுவதற்குமாகத் திரு. நாகிரெட்டி அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார். நாடோடி மன்னனில் உள்ள அம்சங்களைப் பாராட்டும்போது அவற்றுள் பெரும்பாலானவைகட்குத் தரப்படும் பாராட்டு முழுவதையும் திரு.நாகிரெட்டி அவர்கள் தட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்.

படமெடுக்கும் சொந்த ஸ்டுடியோக்காரர்கள், வேறு படமெடுக்கும் உரிமையாளர்களுக்கு /தொழிலாளர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்ற வாதத்தைத் தூளாக்கி வெற்றிவாகை சூட்டிக் கொண்டுவிட்டார்.

படத்தின் கடைசிப்பகுதியில் கட்டிடங்கள் தண்ணீரில் அமிழ்வது, கயிற்றுப்பாலம் அறுதல், ஆட்கள் மேலேயிருந்து நீர் வீழ்ச்சியில் விழுதல் போன்ற காட்சிகளைப் படமாக்க ஜெமினி அதிபர் திரு.வாசன் அவர்கள் தந்த காமிரா (ஒளிப்பதிவு இயந்திரம்) மிகவும் பயன்பட்டது. அவர் இதை முதன் முதலாக வெளியே அனுப்பியதாகக் கூறப்பட்டது. அப்படியே இல்லா திருப்பினும் கூட, குறிப்பிட்ட ஒரு முக்கியமான காட்சி படம் எடுக்கப்படுகிறது என அறிந்ததும்... அனுப்பி வைத்த அவருடைய நல்லெண்ணத்திற்கு நாடோடி மன்னனில் காண்பிக்கப்பட்ட காட்சி எடுத்துக்காட்டாகும். அவரது நல்லெணத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றி இது என்று யாரும் துணிந்து கூறமுடியும்.

வெளிப்புறக் காட்சிகளைப்படமாக்க, காமிரா கொடுத்தவர்கள் அருணா பிலிம்ஸார். இவர்களுடைய உதவியாளர்கள் கல்லிலும் முள்ளிலும் நீர்வீழ்ச்சியின் அருகிலும் உயர்ந்த மலை முகட்டிலும் அடித்தளத்திலும் இவ்வாறு படமெடுக்க உதவினர். ?நாடோடி மன்னனில்? வெளிப்புறக்காட்சி பாராட்டப்படும் முறையிலே இருக்கிறதென்றால் அதிலே பெரும் பகுதிப் பாராட்டைத் தங்களுடையதாக்கிக் கொள்ள உரிமை பெற்றிருக்கும் அருணா பிலிம்ஸாருக்கு இதைவிட வெற்றி வேறு வேண்டுமா?.
 

Back To Index