HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
Home  >  Profiles - Cine Artists  >  MGR

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர்.

 

பாடல்களின் முக்கியத்துவம்

அடுத்து பாடல்கள்... இவை எப்போதும் பாத்திரங்களின் உண்மையான உணர்ச்சிகளை வெளியிடுவனவாக இருக்க வேண்டும்.
 


சமீப காலமாகச் சில படங்களில் நான் அனுபவித்த அனுபவங்களை நினைவு கூறுவதும் அவற்றுள் ஒன்றையாவது இங்கு வெளியிடுவதும் தேவை என்றெண்ணுகிறேன்.
ஒரு நாள் - ஒரு பட உரிமையாளர் சொன்னார்...அடுத்த ஷூட்டிங்.... காதல் காட்சி ஒன்று எடுக்கப்பட வேண்டும். கதாநாயகியும் தாங்களும் (என்னை குறிப்பிட்டது)
சேர்ந்து நடிக்கும் கட்டம் படத்தில் உடனடியாக இருந்து தீர வேண்டியதாக இருக்கிறது. ஆகையால் காதல் காட்சிக்கு தேவையான ஐடியா கொடுங்கள் என்று சொன்னார்; இல்லை, வற்புறுத்தினார். கதைஇன்னமும் முடிவாகவில்லை. எந்தக் காட்சிக்குப் பிறகு காதல் காட்சி வருகிறதென்று நிர்ணயிக்கப்படவில்லை...மேலும் கதைப்போக்கில் காதலர்கள் சந்திக்கும் கட்டம் எந்த நிலையில் இருக்கும் என்று இப்போதே எப்படிச் சொல்லுவது?... என்று கேட்டேன்...

பரவாயில்லை....காதலனும் காதலியும் சந்திக்கும்போது அன்பாகத்தானே பேசுவார்கள்.அப்படி ஒரு காட்சி எடுத்துவிட்டால் என்ன? என்று கேட்டார். ஒரு வேளை காதல் காட்சியில் பாடும் பாட்டின் கருத்துக்கள் கதையின் போக்குக்கு, காதல் காட்சிக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதாக இருந்தால் என்ன செய்வது? என்று கேட்டேன். தயவு செய்து ஷூட்டிங்குக்கு வாருங்கள். நான் பாட்டு போடச் சொல்லியிருக்கிறேன். பாட்டை டேப்பில் பதிவு செய்து அனுப்புகிறேன். மெட்டு நன்றாக இருக்கிறதா, எல்லாத் தரப்பு மக்களும் விரும்பும் வகையில் இருக்கிறதா, என்று சொல்லுங்கள் என்று வேண்டினார். முடிவில் பாட்டும் வந்தது. கண்ணே....அழகே....இப்படி எல்லாம் வழக்கமான வர்ணிப்பாகவே இருந்தது.

இப்படிப்பட்ட நிலைமை நாடோடி மன்னனில் ஏற்படவே இல்லை.

படத்தின் துவக்கத்தில் பாடப்படும் பாடல் எங்களது நாடக மன்றத்தின் ?அட்வகேட் அமரன்? நாடகத் துவக்கத்தில் பாடப்படும் பாடல். ந.மா.முத்துக்கூத்தன் இயற்றியது. நான் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியில் அவரும் ஒரு அங்கத்தினராக இருப்பதால் எனது கொள்கைக்கும் அவரது கொள்கைக்கும் வேறுபாடு தோன்றவே இடமில்லாமல் போய்விட்டது. அவர் இயற்றிய இன்னொரு பாடல் ?சம்மதமா? என்பது. இதில் கூட வேடிக்கையாக, ஆனால் கருத்தாழத்தோடு, ஆணும் பெண்ணும் ஒருவர்க்கொருவர் இணைந்து சமமாக இருக்க வேண்டியவர்கள் என்பது மட்டுமல்லாமல்,மீறிப் பசி வந்தாலும் பறவை போலப் பகிர்ந்தே உண்ணலாம் என்ற உன்னதப் பொதுக் கருத்தையும் எடுத்துக் கூறுகிறார். இது காலத்துக்கோ, மக்களினத்துக்கோ ஒவ்வாதது என்று சொல்ல முடியுமா?....

அடுத்ததாக நான்கு மொழியில் உள்ள பாடல்கள்.

ஒவ்வொன்றும் அந்தந்த மொழியில் திறமை மிக்க கவிஞர்களைக் கொண்டு இயற்றப்பட்டது. எனது கருத்தை அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் மறுப்பு சொல்லாததுடன் ஆதரவோடும் மகிழ்ச்சியோடும் இயற்றித் தந்தார்கள். சில வார்த்தைகளை மட்டும் கதையின் காட்சிக்கேற்ப மாற்றச் சொன்னேன்.

ஆனால் மலையாள மொழியில் திரு.பாஸ்கரன் அவர்கள் இயற்றிய போது என்னால் திருத்தப்படவேண்டிய அவசியமே நேரவில்லை என்பது மட்டுமல்ல ; நான் எதிர்பாராத அளவிற்கு நவநவமான கருத்துக்களையும் அழகுபட வெளிப்படுத்தினார். கவிஞர் சுரதா அவர்களும் எனது அரசியல் கொள்கையைச் சேர்ந்தவர்.அவருடைய கொள்கையை அவரது தாய் மொழியில் முடியும்.

நான்கு மொழிகளில் தாய் மொழியான தமிழ் மொழிப்பாடலை நண்பர் கவிஞர் சுரதா அவர்கள் இயற்றினார்கள். இந்த பாடலைக் கேட்ட எவரும் பாடலையோ அதில் கையாளப் பட்டிருக்கும் கற்பனைத் திறனையோ போற்றாதவர் இல்லை. பாடலின் முடிவில்முத்தாய்ப்பு வைப்பது போல் 'என்றும் இனிதான திராவிடப் பூங்காவில் மலர்ந்த வேந்தே நீ வருகவே' என்று அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் உள்ள கருத்துக்களையும் இதுவரை யாரும் குறை கூறவோ மறுத்துக் கூறவோ இல்லை என்பது ஒன்றே போதும், அது சரியானபடி அமைக்கப்பட்டது என்பதற்கு. திராவிடத்தின் ஒற்றுமையும் மொழியின் இணைப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதற்கு அடையாளமாக இதையும் சேர்த்துக் கொள்ளலாமல்லவா?
?என்றும் இனிதான திராவிடம்? - சொல்லச் சொல்லத் தெவிட்டாததும் பெருமை கொள்ளத்தக்கதும் தன்னையறியாது பூரித்துப் போகும் நிலைமை ஏற்படுத்துவதுமான சக்தியாக அல்லவா அது அமைந்திருக்கிறது.

அவர் இயற்றிய இன்னொரு பாடல் ?கண்ணில் வந்து? என்பது, இதிலும் சொல்லியிருக்கும் கருத்தும் கவி நயமும் பலரால் பாராட்டப்பட்டிருக்கின்றன. கண்ணே முத்தே....கரும்பே...என்று சொல்வதற்கு மாறக, ?இன்பக் காவியக் கலையே?....போன்ற வார்த்தைகளையும், ?நீலவானம் இல்லாத ஊரே இல்லை,
உலகினில் மழையின்றிஏதும் இல்லை? என்பன போன்ற கருத்துச் செறிவு படைத்த சொற்களையும் இணைத்து இயற்றிய அவரது பாடல்களைப் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும். நகைச்சுவைக் காட்சிக்காக அமைக்கப்பட்ட பாடல் ?தடுக்காதே? என்ற பாடல்....இதைத் திரு. ஆத்மநாதன் அவர்கள் இயற்றினார். இவரும் நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் நாட்டிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை ஏற்காதவர் ; முற்போக்குக் கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றுபவர். உழைக்காமல் வாழ விரும்புகிறவர்களுக்குச் சரியான சூடு கொடுத்திருக்கிறார் இந்தப் பாடலின் மூலமாக. ?சோறு கண்ட இடம் சொர்க்கமா? என்ற ஒரு வரியே போதுமே, இவருடைய கண்டனக்குரலின் வலிமையை விளக்க .
இன்னொரு பாட்டு... ?பாடுபட்டா தன்னாலே?
சோம் பேறிகளுக்கும், விதிப்படி நடக்கும் என்று சொல்லி எந்த முயற்சியும் செய்யாதிருக்கும் நெஞ்சுரமற்றவர்களுக்கும் சாட்டை அடிபோல் தாக்கும் நல்லுரையாகும் இந்தப் பாடல். நகைச்சுவைப் பாடலிலும் கூட நல்ல கருத்தைத் தந்த இதைப் போன்ற பாடல்களை யார் குறை கூறுவார்கள்?.

நண்பர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் நல்ல முற்போக்கு எண்ணங் கொண்டவர். எனது கொள்கைக்கும் அவருடைய கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. நான் உழைப்பாளிகளை பற்றியும் பாட்டாளியைப் பற்றியும் என்ன எண்ணம் கொண்டிருக்கிறேனோ அதையே தான் அவரும் கொண்டிருக்கிறார். அதனால் தான் நான் அமைத்த பாத்திரத்தின் தரத்திற்கும் கொண்டவர்களில் பெருமையும் மகிழ்ச்சியும் அடையாதார் எவருமே இல்லை எனலாம்.

?தூங்காதே? என்ற பாடல் குழந்தைகளுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல.... இன்றைய தினம் நாட்டின் நிலையை அறியாமலிருப்பவர்கள், அறிந்தும் அறியாதவர் போலிப்பவர்கள், யார் எப்படி இருந்தால் நமக்கென்ன என்றிருக்கும் சுயநலமிகள்....இத்தனை வகையினரையும் அறிவுறுத்தி எச்சரிக்கும் பாடலாகும் அது.

?காடு வெளைஞ்சென்ன மச்சான்? பற்றி விளக்கம் கூடவா வேண்டும்....அது முழுக்க முழுக்க தி.மு.கவின் கொள்கை விளக்கப் பாடலாகும். அவர் தி.மு.க வைச் சேராதவராக இருக்கலாம். ஆனால் இதைப் போன்ற கருத்துக்களில் அவருக்கும் எனக்கும் வேறுபாடே இல்லை....?மானைத் தேடி மச்சான் வரப் போறான்? குறும்புக்காரப் பெண்கள் தங்களது தோழிகளைக் கேலி செய்வதற்கு (விரசமில்லாமல்) ஒரு எடுத்துக்காட்டு.

?கண்ணோடு கண்ணு கலந்தாச்சு?

என்ற பாடலில் ?என் இன்பம் எங்கே? என்ற பகுதி கதையின் முக்கிய கட்டத்தில் தலைவி தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இடமாகும். கதையோடும் பாத்திரத்தோடும் இணைந்து வெளிவரும் வார்த்தைகளாக அதில் சேர்க்கப்பட்டிருக்கிறது...சிறந்த பாடல் என்பது நிகழ்ச்சியோடிணைந்தும் பாத்திரத்தின் எண்ணத்தை வெளியிடுவதாகவும் அமைந்துள்ளதைப் போலல்லாது வேறு எப்படியிருக்க முடியும் !

?உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா? என்ற பாடலை எழுதி முடிப்பதற்குள் பாடலாசிரியர் திரு. இலக்குமண தாஸ் அவர்கட்கும் எனக்கும் ஏற்பட்ட உழைப்பு அதிகமாகவே இருந்தது...ஏனெனில் புதுமைக் கருத்துக்கும் அவருக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகம்! ஆனாலும் என் எண்ணத்தை அப்படியே பாடலில் கொண்டுவர மிக மிகக் கஷ்டப்பட்டார். ஆனாலும் சோர்வடையாது முயன்று எனது விருப்பப்படி பாடலை அமைத்துக் கொடுத்தார். ?இரப்போர்க்கு ஈதலிலும்? என்ற வரி .....இது இலக்கிய உலகத்திலிருந்து வரும் ஒரு முடிவை மாற்றிச் சொல்லுவதாகும்.....

மக்களுக்கு ஈந்து, அவர்கள் அதன் பயனை அடைந்து மகிழ்வதைக் காணுவதே இன்பம், இது தான் இதுவரை சொல்லப்பட்ட நியதி..ஆனால் இதில்...கொடுத்து மகிழ்வதில் கூட இன்பமில்லை என்று சொல்லப்படுகிறது. கொடுப்பவன், வாங்குகிறவன் என்ற பேதமே இந்நாட்டில் இருக்க கூடாதென்ற கருத்தில் பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வார்த்தை இலக்குமண தாஸ் ஏற்றாரோ, இல்லையோ, அழகுபட எழுதிக் கொடுத்தார்.

?பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா? என்ற வரியின் கருத்து இன்றைய தின...அதிகார பீடத்திலிருப்பவர்களுக்கு (இருக்கப் போகிறவர்களுக்கும்) ஒரு அறை கூவலாகும். இது போன்ற நல்ல கருத்துக்களைச் சொல்வதைவிடக் கவிஞன் தனது மக்களுக்குச் செய்யும் சேவை வேறு எதுவாக இருக்க முடியும்?

Back To Index