HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

நாடும் கொடியும்

   

    இன்று இங்கே நம்மிடையே இல்லாத பலர், காலம் சென்ற நமது தோழர்கள் இந்தக் கொடியை விடாப்பிடியாக ஏந்தி நின்றனர். இறக்கும் தறுவாயில்கூட அதைப் பிறரிடம் கொடுத்து உயர்த்திப் பிடித்துக் கொள்ளச் செய்தனர். ஆகவே மேடு பள்ளங்களும், சோதனைகளும் நாசங்களும் நிறைந்த மக்களின் சுதந்திரப் போராட்டமும், அந்தப் போராட்டம் முடிவுற்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமிதமும் இந்தத் தீர்மானத்தின் எளிய சொற்களுக்குப் பின்னணியில் உள்ளன. நானும் அப்படிப்பட்ட பெருமித உணர்வுடன் தான் இந்தத் துர்மானத்தை முன்மொழிகின்றேன்...

 

      இந்தக் கொடி பலவிதமாக வருணிக்கப் பட்டிருக்கிறது. சிலர் அதன் தத்துவத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அப்படித் சரியாகப் புரிந்துகொள்ளாமல், வகுப்பு வாத அடிப்படையில் அர்த்தம் செய்து கொண்டனர். இந்தக் கொடியின் ஒருபாகம் இந்த வகுப்பையோ அந்த வகுப்பையோ பிரதிபலிப்பதாக அவர்கள் நம்பினர்.

 

      ஆனால், இந்தக் கொடி உருவாக்கப்பட்ட போது அதற்கு வகுப்புவாதப் பொருள் எதுவும் கற்பிக்கப்படவில்லை. கொடியின் அழகான அமைப்பு என்றுதான் அதைப்பற்றி நாங்கள் எண்ணினோம். ஏனெனில் ஒரு நாட்டின் சின்னம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். நாட்டு மக்களின் உள்ளுணர்வை, பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தனிச் சிறப்பாக இருந்துவரும் ஐக்கியப் பாரம்பரியத்தை அந்தக் கொடியின் முழு உருவமும், அதன் பாகங்களும் பிரதிபலிக்க்கும் என்று நினைத்தோம்...,

 

      இந்தக் கொடியைப் பற்றி நான் ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். நம்முள் பலர் முன்பு கையாண்டு வந்த கொடியிலிருந்து இது வேறுபட்டிருக்கிறது. ஆழ்ந்த குங்குமப்பூ வண்ணம், வெள்ளை, கரும்பச்சை போன்ற முந்திய வண்ணங்களே இதிலும் உள்ளன. வெள்ளைப்பட்டையில் முன்பு ஒரு ராட்டை இருந்தது. பாமார இந்திய மக்களின்இ தொழில் சின்னமாகவும், நமக்கொல்லாம் மகாத்மா காந்தி அருளிய உபதேசத்தின் சின்னமாகவும் அது விளங்கியது.

 

      இப்பொழுது இந்தக் கொடியில் அந்த ராட்டைச் சின்னம் சிறிது மாற்றப்பட்டுள்ளது. அது அடியோடு அகற்றப்படவில்லை. சாதாரணமாக கொடியின் ஒரு பக்கத்தில் உள்ள சின்னமே மறுபக்கத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாவிட்டால் அது சம்பிரதாயத்துக்கு மாறுபட்டதாகக் கருதப்படும். ஆனால், இந்தக் கொடியில் முன்னர் இடம் பெற்றிருந்த ராட்டையின் ஒரு பக்கத்தில் சக்கரமும் மறுபக்கத்தில் கதிரும் இடம் பெற்றிருந்தன. கொடியின் பின்புறத்தில் பார்த்தால் கதிரும் சக்கரமும் இடம் மாறித் தெரியும். இப்படி ஒரு நடைமுறைச் சங்கடம் இருந்தது. அதனால்தான் நாங்கள் தீர்க்கமாக யோசித்து மக்களுக்கு உற்சாக மூட்டிய இந்த மகத்தான சின்னத்தை ஒரு சிறய மாறுதலோடு நீடிக்கச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தோம். ராட்டையின் சக்கரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, குழப்பத்துக்குக் காரணமான கதிர் மாற்றும் கயிறு போன்ற மற்ற பகுதிகளை நீக்கி விடலாம் என்று தீர்மானித்தோம்.

 

      ராட்டையின் பிரதானமான பாகமாகிய சக்கரம் அதில் நீடித்து இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம். இவ்வாறு ராட்டைச் சக்கரம் பற்றிய பழைய சம்பிரதாயம் நீடித்திருக்கும்.

 

      ஆனால், அந்தச் சக்கரம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தபோது பலவகைச் சக்கரங்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், அவற்றில் ஒரு குறிப்பிட்ட சக்கரம் மிகவும் எடுப்பாகத் தோன்றியது. பல இடங்களில் பரவலாக இருப்பதும், நாம் அனைவரும் பார்த்திருப்பதுமான புகழ் பெற்ற சக்கரம் அது. அசோக ஸ்தூபியின் தலைப்பாகத்திலும், வேறு பல இடங்களிலும் உள்ள சக்கரம் அது. பழம்பெரும் பாரதப் பண்பாட்டின் சின்னமாகச் சக்கரம் விளங்குகிறது. பல சகாப்தங்களாக இந்தியா பின்பற்றிப் போற்றிவரும் லட்சியங்கள் பலவற்றின் சின்னம் அது! ஆகவே, நமது கொடியில் இந்தச் சக்கரம் இடம் பெற வேண்டும் என்று நினைத்தோம். என்னைப் பொறுத்த வரை இந்தக் கொடியுடன் இந்தச் சின்னத்தை இணைத்ததோடு, இந்திய சரித்திரத்திலும், உலக வரலாற்றிலும், மிக உன்னதமான புருஷர்களில் ஒருவரான அசோகரின் திருநாமத்தையும் சம்பந்தப்படுத்துவது அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. பூசலும், மோகலும், சகிப்பின்மையும் நிறைந்த இந்தக் காலத்தில் நம மனமானது தொன்மைக் காலத்தில் விரும்பிப் போற்றிய இலட்சியத்தை, யுகயுகாந்தரமாக விரும்பி பரும் அடிப்படை இலட்சியத்தை எண்ணிப்பார்ப்பது மிகவும் பொருத்தமானதே...

 

      அசோகரின் பெயரைக் குறிப்பிட்டேன். இந்திய வரலாற்றிலே அசோகரின் காலம் முக்கியமாக, ஒரு அனைத்துத் தேசியக் காலமாக விளங்கியது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறுகிய தேசியக் காலம் அல்ல அது! சாம்ராஜ்யம். அல்லது ஏகாதிபத்தியத்தின் தூதர்களாக அல்லாமல் சாந்தி, பண்பாடு, நல்லெண்ணம் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக இந்தியாவன் தூதர்கள் தொலை தூர நாடுகளுக்கெல்லாம் சென்ற காலம் அது!

 

      ஆகவே, நான் உங்கள் முன் சமர்ப்பித்துள்ளன இந்தக் கொடியானது ஒரு சாம்ராஜ்யத்தின் கொடியாகவோ, ஏகாதிபத்தியத்தின் கொடியாகவே, யார்மீதும் ஆதிக்கம் செலுத்தும் கொடியாகவோ அல்லாமல், சுதந்திரத்தின் கொடியாக விளங்கும் என்று நம்புகிறேன். நமக்கு மட்டும் அல்ல, இதைப் பார்ப்போர் எல்லோருக்குமே சுதந்திரத்தின் கொடியாக விளங்கும் என்று நம்புகிறேன்.

 

      நமது தூதர்களாக இந்தியர்கள் சென்று வசிக்கும் இடங்களுக்கு மட்டுமின்றித் தூரக் கடல்களைக் கடந்து நம்முடைய கப்பல்கள் போகும் நாடுகளுக்கெல்லாம் அது செல்லும் என்று நினைக்கிறேன். அது எங்கு சென்றாலும் சுதந்தரம் என்ற செய்தியை, தோழமை என்ற செய்தியை உலகில் உள்ள எல்லாத் தேசங்களுடனும் இந்தியா நட்புறவு கொள்ள விரும்புகிறது என்ற செய்தியை, சுதந்திரத்தை நாடும் மக்களுக்கெல்லாம் உதவி செய்வதற்கு இந்தியா விரும்புகிறது என்ற செய்தியை ஏந்திச் செல்லும் என்று நம்புகிறேன்!

 

      இவ்வாறு இந்தியாவின் தேசியக் கொடியின் பின்னால் உள்ள பாராம்பரியப் பெருமையையும், இலட்சியத்தையும் பற்றி பிரதமர் ஜவஹர்லால் நேரு உணர்ச்சி பூர்வமாகப் பேசினார்.

 

கொடி வருணணை

 

      தேசியக்கொடி பற்றிய தீர்மானத்தி இடம் பெற்றுள்ள கொடி வருணணை வருமாறு

 

      சம அளவில் அமைந்த மூன்று நீண்ட சதுரப் பாகங்கள் கொண்ட, நீண்ட சதுர மூவண்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம் குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. நடுமத்தியில் உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

 

      கொடியின் இருபக்கங்களிலும் இச் சக்கரத்தை ஸ்கிரீன் அச்சு முறையில் அச்சிடுவது நல்லது. அல்லது சக்கரத்தை அச்சிடவோ, ஸ்டென்ஸில் (உருவத்தை வெடடியெடுத்து மை தடவி துணிமீது பதிப்பது) முறையில் பதிக்கவோ, அல்லது பூத்தையல் போடவோ செய்யலாம். எப்படிச் செய்தாலும் கொடியின் இருபக்கங்களிலும் சக்கரம் இருக்க வேண்டும்.

 

      இதுதான் கொடியைப் பற்றிய வருணனையாக அரசியல் நிர்ணய சபைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகும்.

 

      பிரதமர் ஜவஹர்லால் நேரு மட்டுமின்றி அரசியல் நிர்ணய சபையில் இருந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் முதலிய வேறு பலம தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு வகுப்பு வாதப் பொருள் எதுவும் கிடையாது என்பதைத் தெளிவுபடுததினார்கள்.

 

      இது தவிர தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் தத்துவார்த்த விளக்கமும் கொடுத்திருக்கிறார். குங்குமப்பூ வண்ணம் துறவு அல்லது பற்றின்மையைக் குறிக்கிறது என்றும், அதனால் உலகியல் லாபங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் தலைவர்கள் அனைவரும் பொதுப்பணிக்கே தங்களை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நடுவீல் உள்ள வெள்ளை நிறம் நமக்கு வெளிச்சத்தையும், சத்தியமார்க்கத்தையும் காட்டுகிறதென்றும், மண்ணுடன் நமக்குள்ள உறவை, உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் தாவர உயிர்களுடன் நமக்குள்ள உறவைப் பச்சைநிறம் காட்டுகிறது என்றும் குறிப்பிட்ட தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்னன், வெள்ளைப்பட்டையின் மத்தியில் உள்ள அசாகச் சக்கரத்தைப் பற்றிக் கூறிய விளக்கம் வருமாறு:

 

      அசாகச் சக்கரம் தர்மச் சக்கரத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கொடியின்கீழ் பணிபுரிவோர் அனைவரும் சத்தியம், தர்மம், அல்லது ஒழுக்கம் என்ற கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மற்றம் தொடர்ச்சியான இயக்கத்தையும் சக்கரம் குறிக்கும். தேக்கம் என்பது மரணம். இயக்கம் என்பது உயிர். இனிமேல் மாறுதல்களை இந்தியா எதிர்க்காமல் முன்னோக்கி இயங்கவேண்டும். முன்னேற வேண்டும். அமைதியான சீரான மாறுதலுக்கான இயக்கத்தை இந்தச் சக்கரம் பிரதிபலிக்கிறது. ஆகவே தேசியக் கொடியில் இராட்டைச் சக்கரத்தைப் பொறித்திருத்தற்குக் காரணமான மூலக் கருத்து இந்த மாறுதலால் பாதிக்கப்படவில்லை! என்று கூறினார் டாக்டர் ராதா கிருஷ்ணன்.

 

     அசோகர் காலத்துக்கும் முன்னரே சக்கரத்தின் மகத்துவம் உணரப்பட்டிருந்தது என்பதைச் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 

தொடரும்

More Profiless