HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

நாடும் கொடியும்

       

    

   சொற்பொழிவு மேடையில் போடப்படும் மேசைமீது விரிப்பாகவோ, மேடையை அலங்கரிக்கும் திரைச்சீலையாகவோ கொடியை உபயோகிக்கக்கூடாது.

 

      கொடியின் கேஸரி வண்ணப் பகுதி அடிப்பாகமாக இருக்கும் வகையிலும் கொடியைத் தொங்க விடக்கூடாது.

 

      பூமியையோ தளத்தையோ தொடும் வகையில் தேசியக் கொடியைத் தொங்க விடுவதும், தண்ணீரில் நனையும் வகையிலோ, இழுபடும் வகையிலோ கொடியை உபயோகிப்பதும் கூடாது.

 

      அரசாங்கத் தலைவர் மற்றும் இராணுவ அதிகாரிகளின் சவ ஊர்வலங்களைத் தவிர இதர மனிதர்களின் சவ ஊர்வலங்களில் தேசியக் கொடியை அலங்காரச் சீலையாக உபயோகிக்கக் கூடாது. அத்தகைய ஊர்வலத்தின்போது சவக்கட்டில் அல்லது சவப்பெட்டியின் தலைப்பாகத்தை நோக்கி கேஸரி வண்ணப்பகுதி இருக்கும் வகையில் கொடியைச் சுற்றி வைக்கக் கூடாது. கல்லறையில் கொடியை இறக்குவதோஇ சிதையில் எரிப்பதோ கூடாது.

 

      வாகனம், ரயில் அல்லது படகின் கூண்டு மீதோ, அவற்றின் உச்சியிலோ விலாப்பக்கங்களிலோ பின்புறத்திலோ, கொடியைத் தொங்கவிடக் கூடாது. கட்டடங்களைத் தேசியக் கொடிகளால் மூடிவைப்பதும்கூடாது.

 

      எந்த ஓர் ஆடை அல்லது சீருடையின் ஒரு பாகமாகவும் தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது. மற்றும் மெத்தை, தலையாணை, கைக்குட்டை முதலியவற்றில் தேசியக் கொடியின் உருவத்தைப் பூத் தையலாகவோ, அச்சுப் பதிப்பாகவோ போடக் கூடாது. துடைப்புத் துணிகள் அல்லது பெட்டிகளின் உறைகளின் மீதும் தேசியக் கொடியின் உருவத்தைப் பதிக்கக் கூடாது.

 

      தேசியக் கொடியின் முது எந்தவிதமான எழுத்துக்களையும் பதிக்கக் கூடாது.

 

      வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள் எதிலும் தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது. கொடிக் கம்பங்களில் விளம்பரப் பலகைகளை இணைத்து வைப்பதும் கூடாது. தேசியக் கொடியையோ அதைப் போன்ற போலி வண்ண உருவத்தையோ மத்திய அரசின் முன்னனுமதி இல்லாமல் வியாபாரம். தொழில் சின்னம், பேடண்ட் பெற்ற பெயர் முதலியவற்றில் உபயோகிப்பது சட்டப்படி குற்றமாகும்.

 

      எந்த ஒரு பொருளையும் பொட்டலம் கட்டிக் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது.

 

      தேசியக் கொடி பழுதடைந்தாலோ, அல்லது அதில் கறை படிந்தாலோ அதைத் தூர எறிந்துவிடுவது கூடாது. அதேபோல மரியாதையற்ற முறையில் அதை பல பேருக்கு நடுவில் வைத்து எரித்து அழிக்கவோ கூடாது. தனியாக எவ்வித விளம்பரமும் இல்லாமல் எரித்து அழிக்கலாம். நான்கு பேருக்கு மத்தியில் விளம்பரத்தோடு தேசியக் கொடியை எரிப்பது கடுமையான குற்றமாகும். 

 

உபயோகிக்கும் நாட்கள் 

 

      குடியரசுத் தினம், தேசிய வாரம், சுதந்தர தினம், காந்தி ஜெயந்தி, நேரு ஜெயந்தி, இந்திராகாந்தி பிறந்தநாள் முதலிய தேசியத் திருநாள்களில் தேசியக் கொடியை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றிப் பறக்க விடலாம். ஆனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கூடக் கார்போன்ற வாகனங்களில் வழக்கமான விதிகளின்படிதான் தேசியக்கொடியைப் பறக்க விட வேண்டும். 

     

கொடி வணக்க முறை

 

      கொடியை ஏற்றம்போதும் இறக்கும் போதும், பரேட் அல்லது அணிவகுப்பு மரியாதைகளில் கொடியைத் தாண்டிச் செல்லும்போதும் அங்கே இருப்பவர்கள் அனைவரும் கைகால்களை அடக்கிக்கொண்டு நிமிர்ந்து கொடியைப் பார்த்தவாறே நிற்க வேண்டும். சீருடை அணிந்தவர்கள் எல்லோரும் தங்களுக்கு உரியமுறையில் வணக்கம் செலுத்த வேண்டும்.. கொடியை ஒரு குழுவினர் ஏந்திச் செல்லும்போது, அது தங்களுக்கு முன்னால் வரும் சமயம் மற்றவர்கள் அட்டன்ஷன் நிலையில் நின்று வணக்கம் செலுத்தவேண்டும். உயர்நிலை அதிகாரி அல்லது அமைச்சர்கள் தலைஅணி எதுவும் இல்லாமல் அந்த வணக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

      இதர நாட்டுக் கொடிகளும்

 

      நமது தேசியக் கொடியும்

 

      இதர நாடுகளின் கொடிகளோடு நமது நாட்டின் தேசியக் கொடியையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் வருமாறு

 

      மற்ற நாடுகளின் கொடிகளோடு நமது நாட்டுத தேசியக் கொடியை நேர் வரிசையில் பறக்கவிடும்போது நம்முடைய கொடி வலது கோடியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதையடுத்து இதர நாடுகளின் கொடிகளை அந்த நாட்டுப் பெயர்களின் ஆங்கில அகர வரிசைப்படி பறக்க விடலாம். அப்படிப்பட்ட சமயங்களில் வரிசையின் ஆரம்பித்திலும் முடிவிலும் நமது கொடியைப் பறக்க விடலாம். அதேபோல நாடுகளின் அகர வரிசைப் பெயர்களின் படி நமது நாட்டுக் கொடியையும் அதற்குரிய இடத்தில் பறக்க விடுவதும் அனுமதிக்கத் தக்கதே. ஆனால், இதர நாட்டுக் கொடிகளுக்கு முன்னால் நமது நாட்டுக் கொடியை ஏற்ற வேண்டும். இறக்கும்போது மற்ற நாட்டுக் கொடிகளையெல்லாம் இறக்கிய பின்னர் கடைசியாகத்தான் நமது கொடியை இறக்க வேண்டும்.

 

      முற்றுப்பெறாத சக்கர வியூகத்திலோ, வளைகோட்டிலோ, பாதிவட்ட வியூகத்திலோ பல நாடுகளின் கொடிகளைப் பறக்கவிடும் போதும் மேற்கூறிய முறையிலேயே தேசியக் கொடியைப் பறக்கவிட வேண்டும்.

 

      முழுவட்ட வியூகத்தில் கொடிகளைப் பறக்க விடுவதானால், வட்டத்தின் ஆரம்பத்தில் தேசியக் கொடி இருக்கவேண்டும். மற்றநாட்டுக் கொடிகளை கடிகார வரிசையில் நாட்ட வேண்டும். கடைசிக் கொடியானது தேசியக்கொடியை அடுத்து இருக்க வேண்டும். கொடிகளின் வட்டத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு இடங்களைக் குறிப்பதற்காக வெவ்வேறு கொடிகளை உபயோகிக்க வேண்டியதில்லை. இதைப்போன்ற முழுவட்ட வியூகத்திலும் அகர வரிசைப்படி தேசியக் கொடிகளை அமைக்கலாம்.

 

      சுவர்களின் மீது குறுக்கக் கம்புகளில் வேற்று நாட்டுக் கொடியோடு நம்முடைய நாட்டுக் கொடியை மாட்டுவதானால் நமது தேசியக் கொடி வலதுபக்கத்தில் இருக்க வேண்டும். அதன் கம்பு மற்ற கொடியின் கம்புக்கு மேலே இருக்கவேண்டும்.

 

      தேசியக் கொடிக்கு எந்த விலாப்பக்கத்தில் வேண்டுமானாலும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கொடியைப் பறக்கவிடலாம். தேசியக்கொடி எந்தப் பக்கத்தைப் பார்த்திருக்கிறதோ, அந்தப் பக்கத்தின் வலது கோடியில் இதைப் பறக்க விடுவதுதான் பொதுவான பழக்கம் ஆகும்.

 

      மற்ற கொடிகளுடன் தேசியக் கொடியைப் பறக்கவிடும்போது, எல்லாக் கொடிக்கம்பங்களும் ஓதே உயரமுள்ளவையாக இருக்கவேண்டும். சமாதான காலத்தில் ஒரு நாட்டின் கொடியைவிட உயரமாக இன்னொரு நாட்டின் கொடியைப் பறக்க விடுவது சர்வதேச சம்பிரதாயத்துக்கு முரணானதாகும்.

 

      ஒரே கம்பத்தில் வேறு எந்தக் கொடியுடனும் அல்லது கொடிகளுடனும் சேர்த்து தேசியக் கொடியைப் பறக்க விடக்கூடாது. வெவ்வேறு கொடிகளுக்கு வெவ்வேறு கம்பங்கள் இருப்பதுதான் முறையானதாகும்.

 

      அயல்நாட்டு அரசுத் தலைவர்கள் நம் நாட்டுக்கு வருகை தரும்போது அரசாங்க வேண்டுகோளுக்கேற்ப பொதுமக்கள் இருதேசங்களின் தேசியக்கொடிகளை குறிப்பாகக் காகிதக் கொடிகளை கையில் ஏந்தி அசைத்து வரவேற்கலாம். வரவேற்பு முடிந்ததும் அந்தக் கொடிகளை கண்ட இடங்களில் எறிந்து காலில் மிதிபடவிடக்கூடாது.

 

      அந்நிய நாட்டுத் தூதரகங்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதி இடங்கள் மற்றும் கிளைத் தூதரகங்கள் சார்பில் நடத்தப்படும் வரவேற்புகள், கலைநிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், கண்காட்சிகள் முதலியவற்றில் தேசியக் கொடியையும் வேற்றுநாட்டுக் கொடியையும் அரசு அனுமதி பெற்றுப் பறக்க விடலாம்.

 

      இந்திய நாட்டின் தேசிய விழா நாட்களின்போது ஓர் அந்நியர் அல்லது அந்நியக் கம்பெனி அல்லது பொது ஸ்தாபனம் ஆகியவை தங்கள் நாட்டு தேசியக்கொடியோடு இந்திய தேசியக்கொடியையும் சேர்த்துப் பறக்க விடலாம்.

 

கல்வி நிலையங்களும் தேசியக்கொடியும்

 

      விசேஷ விழாக்களின் போதும் தேசியக்கொடிக்கு மரியாதை தருவதைப் போதிப்பதற்கான சந்தர்ப்பங்களிலும், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு முகாம்கள், சாரணர் முகாம் மற்றும் தேசிய மாணவர் படை முகாம்கள் ஆயிவற்றில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கலாம்.

 

      அப்பொழுது திறந்த வெளி மைதான அமைப்பில், மூன்று பக்கங்களில் மாணவர்கள் வரிசையாக நிற்கவேண்டும். நான்காவது பக்கத்தின் மத்தியில் கொடிக்கம்பம் இருக்கவேண்டும. தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர் தலைவர் ஆகியோர் கொடிக் கம்பத்தின் பின்னால் மூன்று அடி தூரத்தில் இருக்க வேண்டும்.

 

      வகுப்பு வாரியாக பத்துப் பத்துப் பேராக அணிவகுத்து நிற்கவேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அணியில் இருக்க வேண்டியவர்களின் எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளலாம். ஒன்றன்பின் ஒன்றாக அணிகள் வரிசையாக நிற்கவேண்டும். அந்தந்த வகுப்பின் மாணவத் தலைவன் தன் வகுப்பின் முதலாவது அணிக்கு வலப்பக்கத்தில் நிற்க வேண்டும். வகுப்பு ஆசிரியர் தம் வகுப்பு மாணவர் அணிவகுப்பின் கடைசி அணிக்கு மூன்று அடிகளுக்குப் பின்னால் நடுமததியில் நிற்க வேண்டும. மேல் வகுப்பிலிருந்து வரிசைக் கிரம வகுப்பு வாரியாக நிற்க வேண்டும்.

 

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 

தொடரும்

More Profiless