HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

நாடும் கொடியும்

    

  

   எல்லா வகுப்பு மாணவர்களும் தயாராக நின்றவுடன் பள்ளி மாணவர் தலைவன் தலைமை ஆசிரியரை நெருங்கி அவருக்கு வணக்கம் செலுத்துவான். தலைமை ஆசிரியர் உடனே பதில் வணக்கம் செலுத்துவார். பின்னர் தலைமை ஆசிரியர் (சில சமயம் விசேஷ விருந்தினர்) கொடியை ஏற்றி வைப்பார். அவருக்குப் பள்ளி மாணவர் தலைவன் உதவி புரிவான்.

 

      கொடியைப் பறக்க விடுவதற்கு முன்னால் எல்லா மாணவர்களும் அட்டன்ஷன் நிலையில் நிற்குமாறு பள்ளி மாணவர் தலைவன் கேட்டுக் கொள்வான். கொடி விரிந்து பறக்கத் தொடங்கியதும் அதற்கு வணக்கம் செலுத்துமாறு எல்லோருக்கும் அவன் அறிவிப்பான். ஒரு விநாடி நேரம் அனைவரும் சல்யூட் செய்து கொடி வணக்கம் செலுத்துவர், பின்னர் தலைவனின் ஆணைப்படி அவர்கள் அனைவரும் மீண்டும் அட்டன்ஷன் நிலைக்குத் திரும்புவார்கள்.

 

      கொடி வணக்கம் முடிந்ததும் அடுத்து தேசிய கீதம் இசைக்கப்படும். அல்லது அனைவரும் சேர்ந்து பாடுவார்கள். தேசிய கீதம் முடிந்ததும் கொடி உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். எல்லோரும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க, தலைமை ஆசிரியர் வரிவரியாக உறுதிமொழியைச் சொல்ல உடனே மற்றவர்கள் அதனைத் திருப்பிச் சொல்வார்கள்.

 

      பள்ளி விழாக்களில் எடுக்கவேண்டிய கொடி உறுதிமொழி வருமாறு!

 

      நமது தேசியக் கொடிக்கும், அதை சின்னமாகக்கொண்ட ஜனநாயகக் குடியரசுக்கும், தாய்த்திருநாட்டுக்கும் விசுவாசமாக இருப்பேன். தாயகத்தின் உயர்வுக்காக என் உடல், பொருள், ஆவியையும் அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன் என உறுதியளிக்கிறேன்!

 

      இந்த உறுதிமொழி முடிந்தவுடன் தலைமையாசிரியரும், இதர ஆசிரியர்களும் கலைந்து செல்வார்கள். அதன் பின்னர் மாணவர்கள் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்!

     

தேசியக்கொடியும்

அரசாங்க உபயோகமும்

 

      மத்திய மாநில அரசுச் செயலகங்கள், தலைமைச் செயலகங்கள், உச்சநீதி மன்றம், உய்நீதி மன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல் துறை ஆணையாளர் அலுவலகங்கள், சிறைச்சாலைகள், மாவட்டக் கழக அலுவலகங்கள், நகரசபை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முதலிய முக்கியமான பொதுக்கட்டடங்களிலெல்லாம் சாதாரண காலங்களிலும் தேசியக் கொடியைப் பறக்க விடலாம்.

 

      துணை ஜனாதிபதி, முன்னாள் சமஸ்தான மன்னர்கள் ஆகியோரின் தலைமை அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ன இந்தியத் தூதரகங்கள், கிளைத் தூதரகங்கள், அவர்களின் அதிகாரப்பூர்வமான வீடுகள் ஆகியவற்றில் தேசியக்கொடி நிரந்தரமாகப் பறக்கலாம். முன்னாள் சமஸ்தான மன்னர்கள் தங்கள் சொந்தக் கொடியுடன், தேசியக்கொடியையும் சேர்த்துப் பறக்கவிட விரும்பினால் அவ்வாறே செய்யலாம்.

 

      எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள சுங்க அலுவலகம், காவல் சாவடி, எல்லைச் சாவடி மற்றும் எல்லைப்புற ரோந்து குழுக்களின் முகாம்கள் ஆகியவற்றில் தேசியக் கொடியைப் பறக்கவிடலாம்.

 

      ஜனாதிபதி, கவர்னர்கள், ஜம்மு காஷ்மீரின் ஸதர் ரியாஸத், லெப்டினண்ட் கவர்னர்கள் ஆகியோரின் சொந்தக் கொடிகளைப் பறக்கவிடுவது பற்றிய விதிகள் வருமாறு!

 

      இந்திய ஜனாதிபதிக்கென விசேசமான சொந்தக்கொடி ஒன்று உண்டு. செவ்வக வடிவில் நான்கு சமக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இடது மேல் கட்டம் கருநீலமாகவும், இடது கீழ்க்கட்டம் சிவப்பாகவும் இருக்கும். மேல் கருநீலக் கட்டத்தில் மூன்று சிங்கமுள்ள இந்திய அரசின் முத்திரைச் சின்னம் மஞ்சள் வண்ணத்தில் பதிக்கப்பட்டிருக்கும், இடது கீழ்ப்பக்கக் கட்டத்தில் சிவப்பு வண்ணத்தின் நடுவே மஞ்சள் வண்ணத் தராசு உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். வலதுமேல் பக்க சிவப்புக் கட்டத்தில் மஞ்சள் வண்ண யானை உருவமும், வலது கீழ்ப்பக்க கருநீலக்கட்டத்தில் பூஜாடியும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தக் கொடியை அவர் இடைவிடாமல் பறக்கவிடலாம்.

 

      இதேபோல, கவர்னர்களுக்கும் விசேசமான சொந்தக் கொடிகள் உண்டு. அவற்றை அவர்கள் தங்கள் மாநில எல்லைகளுக்குள் இருக்கும்போது இடைவிடாமல் பறக்க விடலாம்.

 

      இளம் ஆரஞ்சு வண்ண செவ்வக வடிவக் கொடியின் மத்தியில் இந்திய அரசின் முத்திரை பொறிக்கப்பட்ட கொடிதான் எல்லா மாநில கவர்னர்களுக்கும் பொதுவான கொடியாகும். அந்தந்த மாநிலத்தின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கும். கவர்னர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது தங்குமிடங்களில் தேசியக் கொடியைத்தான் பறக்க விட வேண்டுமே தவிர தங்கள் விசேஷக் கொடியைப் பறக்கவிடக்கூடாது.

 

      ஜனாதிபதி, துணைஜனாதிபதி அல்லது பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகை தரும்போது கவர்னர் மாளிகையில் தங்கினால் தேசியக்கொடியையும், கவர்னரின் விசேசக் கொடியையும் பறக்கவிடலாம். ஜனாதிபதி வருகையின் போது, அவருடைய விசேக் கொடியையும், ஆளுநரின் விஷேசக்கொடியையும் முக்கியமான ஓர் இடத்தில் பறக்க விட வேண்டும்!

 

      துணை ஜனாபதிபதிக்கும், பிரதமருக்கும் ஆளுநர் கொடியோடு தேசியக் கொடியைப் பறக்கவிட்டால் போதுமானது.

 

      ஜானதிபதி ஒரு நிறுவனத்துக்கு வருகை தந்தால், அப்பொழுது தேசியக் கொடியை மட்டும் பறக்கவிட்டால் போதும். ஜனாதிபதியின் விசேசக்கொடியைப் பறக்கவிடத் தேவையில்லை. துஐண ஜனாதிபதி, பிரதமர் முதலியோருக்கும் அப்படியே.

 

கார்களில் கொடி

 

      பின்வருபவர்கள் மாத்திரமே தங்கள் கார்களில் தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.

 

      1. துணை ஜனாதிபதி

 

      2. கவர்னர்கள் (தங்கள் மாநிலத்துக்கு வெளியே இருக்கும் போது.)

 

சொந்த மாநிலத்தில் இருக்கும்போது தங்கள் விசேஷக் கொடிகளை மட்டுமே காரில் பறக்க விடுவார்கள். லெப்டினண்ட் கவர்னர்களும் அப்படியே.

 

      3. முன்னாள் சமஸ்தான மன்னர்கள், இவர்கள் விரும்பினால் தங்கள் சொந்தக் கொடியோடு தேசியக் கொடியையும் காரில் பறக்கவிடலாம்.

 

      4. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் அந்தந்த நாடுகளில் மட்டும கார்களில் தேசியக் கொடியைப் பறக்கவிடலாம்.

 

      5. மத்திய மாநில அமைச்சர்கள்: தேசியமுக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் மட்டும தங்கள் கார்களில் தேசியக்கொடியைப் பறக்க விடலாம். சுற்றுப்பயணம் செய்யும் போது மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களை விரைந்து கடந்து செல்வதற்கு உதவும் பொருட்டு கார்களில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

 

      ஜனாதிபதி, கவர்னர்கள் தங்கள் விசேஷக் கொடிகளையே பறக்க விடுவார்கள்.

 

      ஜனாதிபதியோ, வேறு சில பதவிவகிக்கும் பிரமுகர்களோ சேர்ந்து பயணம் செய்தால் அவர்களில் மிகப்பெரிய அந்தஸ்துள்ள ஜனாதிபதியின் தனிக்கொடியை மட்டுமே காரில் பறக்க விட வேண்டும்.

 

      கவர்னரும், பிரதமரும் ஒரே காரில் பயணம் செய்யும்போது தேசியக்கொடியை மட்டுமே காரில் பறக்கவிட வேண்டும்.

 

      அந்நிய நாட்டு அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள் முதலியோர் நம்நாட்டுக்கு வரும்போது நமது அரசாங்கம் அளிக்கும் கார்களில் பறக்கவிட வேண்டிய கொடிகளின் விவரம் வருமாறு!

 

      (அ) அந்த அந்நிய நாட்டுப பிரமுகரோடு நமது ஜனாதிபதி பயணம் செய்தால் காரின் இடது பக்கத்தில் அந்நிய நாட்டுப் பிரமுகரின் கொடியும், வலப் பக்கத்தில் நமது ஜனாதிபதியின் விசேஷக் கொடியும் பறக்கும்.

 

      (ஆ) அந்த அந்நிய நாட்டுப பிரமுகரோடு கவர்னர்கள் பயணம் செய்தால் இடப் பக்கம் அயல்நாட்டுப் பிரமுகரின் கொடியும் வலப்பக்கம் கவர்னரின் விசேஷக் கொடியும் பறக்கும்.

 

      (இ) அந்நிய நாட்டுப் பிரமுகரும், இந்திய பிரதமரும் ஒரே காரில் பயணம் செய்தால் இடப் பக்கம் அயல்நாட்டுப் பிரமுகரின் கொடியும், வலப் பக்கம் நமது தேசியக் கொடியும் பறக்கும்.

 

விமானங்களில்!

 

      அந்நிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர், துணை ஜனாதிபதி முதலியோர் பயணம் செய்யும் இந்திய விமானங்களில் நமது தேசியக் கொடியும், அவர்கள் செல்ல இருக்கும் நாடுகளின் தேசியக்கொடியும் சேர்ந்து பறக்கவிடப்பட வேண்டும்.

 

      செல்லும் வழியில் வேறு நாடுகளில் விமானம் தரையிறங்கவோ தங்கிச் செல்லவோ நேர்ந்தால், அந்நாடுகளுக்கு நம்முடைய நல்லெண்ணத்தையும் மரியாதையையும் தெரிவிக்கின்ற வகையில் அந்நாடுகளின் கொடிகளையும் சேர்த்துப் பறக்க விடலாம். ஓர் அயல்நாட்டுக்கு நமது ஜனாதிபதி விஜயம் செய்யும்போது தேசியக் கொடிக்குப் பதில் அவரது சொந்தக் கொடியும், அந்நிய நாட்டின் தேசியக் கொடியும் பறக்கும்.

 

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 

தொடரும்

More Profiless