HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      மூன்றாவது மகன் திரு.கணேசன் ரெடிமேட் கார்மென்ட்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

     பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து பொறுப்புகளை பிரித்து கொடுத்துவிட வேண்டும் என்பது இவரது கொள்கை. அப்போதுதான் அவர்களுக்கு பொறுப்பு வரும். தன்னம்பிக்கை! அவர்களின் போக்கிலோ செயலிலோ தவறு தோன்றினாலும் திருத்தவும் உதவியாக இருக்கும்!

     வி.என்.சி. தனது வளர்ச்சிக்கு அடித்தளமாய் நினைப்பது இறைபக்தி. இயல்பிலேயே தன் தாத்தா மூலம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார். தாத்தா கட்டின பிள்ளையார் கோயிலில் ஆரம்பித்த இவரது பக்தி- சமய வேதங்களுக்கு அப்பால் எல்லா கடவுள்களையும் நேசிக்கிறது.

     இவரது கடைசி மகனின் 3 மாத பருவத்தில் குழந்தையின் கண்களில் தொடர்ந்து கண்ணீர் வடிய அந்த சின்ன வயதில் ஆபரேஷன் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கை விரித்துவிட-

     மனைவி கமலாவுக்கு கலக்கம். அந்த நேரம் தங்கள் தியேட்டரில் அன்னை வேளாங்கன்னி படம் பார்த்தவர் வேளாங்கன்னியின் மகிமைகளை கண்டு- தன் குழந்தைக்காக வேண்டிக்கொண்டு வேளாங்கன்னிக்கு போய் அவர்கள் செய்த பிரார்த்தனைக்கு உடனடி பலன்! இன்று வரை எந்த வித ஆபரேஷனும் தேவைப்படவில்லை என்பதை வி.என்.சி. உருக்கத்துடன் நினைவு கூர்கிறார்.

     பொதுவாழ்வில் பல பிரபலங்களுடனும் நல்ல நட்பும் தொடர்பும் கொண்டிருக்கிற வி.என்.சி.எம்.ஜிஆர், சிவாஜி,பெரியார் ஸ்வாமிகளுடன் நெருக்கமாய் பழகி அவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர்.

            எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு தலைவராக எட்டு வருடங்கள் இருந்த போது இவர் பக்தர்களுக்கு வேண்டி பல செளகர்யங்களையும் செய்து கொடுத்திருக்கிறார்.

      அதில் முக்கியமான ஒன்று.

      அதுவரை குறுகிய பிரதேசத்தின் மேல் மட்டங்கள் வெறும் 2000 பேர்கள் மட்டுமே பார்த்து வந்த மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை ஆடி வீதிக்கு மாற்றி அம்பதாயிரம் பக்தர்களுக்கு மேல் கண்டு களிக்க வைத்தது! அன்று ஏகப்பட்ட எதிர்ப்புக்கிடையே இவர் செயல்படுத்தியது இன்று வரை சாதாரண பக்தனுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது!.

     தொண்டுள்ளம் என்பது பாரம்பர்யமாய் இவர்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருகிறது. தாத்தா சொத்து கிராமத்தின் கோயில் கட்டினார் அப்பா-தர்மாஸ்பத்திரி கட்டி-அரசாங்கத்திடம் கொடுத்து அது சிறப்பாக இயங்கி வருகிறது.

    முதியோர் இல்லம், ஏழைகளின் படிப்பு என்று ரோட்டரி மூலம் உதவி வருகிற இவர்-ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டி பள்ளிக்கூடம் கட்டும் லட்சியத்தில் இருக்கிறார்.

    தமிழ் மற்றும் இலக்கியப் பற்றுள்ள இவர் `தனவணிகம் எனும் பத்திரிகை நடத்தி வருகிறார். பல்வேறு தலைப்புக்களில் எட்டு நூல்களும் எழுதியுள்ளார்.

    சஞ்சய்காந்தி இறந்த சோகத்துடன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த இந்திராகாந்தி-தரிசனத்துக்குப்பின் மகிழ்ச்சியாக திரும்பிச் சென்றதை- செல்ல வைத்ததை வி.என்.சி பூரிப்புடன் நினைவு கூர்கிறார்.

     ஆத்ம நண்பர் சிவாஜிக்கு சிலை வடித்து- மதுரையில் நிறுவப் போகிறார் இவர்.

     புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோலக்குடி மலைமேல் அமைந்துள்ள 3 பாறைகற்களை சிற்பிகளை கொண்டு பிள்ளையார், சிவன், யானை உருவமாக உருவாக்கும் முயற்சியில் இவர் இறங்கியுள்ளார். பிரம்மாண்டமான இந்த சிலைகளை 7 கி.மீ. தள்ளியிருந்தும் கூட பார்க்க முடியுமாம். 

            டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா

     கலாஞ்சலி அமைப்பு வழங்கிய `வாழ்நாள் சாதனை விருதை ஏற்கவும், கச்சேரி செய்யவும் டாக்டர் பாலமுரளி முதன் முதலாக குவைத் வந்திருந்தார்.

    பாலைவனத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் 76 வயதிலும் கூட பாலமுரளியின் குரலில் மட்டுமில்லை பேச்சிலும் இளமை! வளமை!

    சங்கீதக்காரர்கள் அதிலும் மூத்தவர்களெல்லாம் கோபக்காரர்களாக இருப்பார்கள் என்கிற மாதிரி ஒரு பெயர் உண்டு. இவர் ரொம்ப சகஜம், யதார்த்தம் நகைச்சுவை கலந்த உரையாடல்! புன்னகை மாறா முகம்.

    விஜயவாடாவை சேர்ந்த இவர் 1964க்குப் பிறகு சென்னைவாசம்!இளம்வயதிலேயே பாலமுரளியின் தாய் தவறிவிட, பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் சங்கீதக்காரரான அப்பா மூலம் இருவருக்கும் அதன்மேல் இளம்வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது.

    பாலமுரளிக்கு இசைமேல் காதல்! இசைக்கும் இவர்மேல்! எட்டு வயது முதல் பாட ஆரம்பித்தவர் 25,000 கச்சேரிகளுக்கு மேல் சீனா, ஜப்பான் தவிர்த்து உலகம் முழுக்க நடத்தி இருக்கிறார்.

    பதினாறு வயது முதல் கீர்த்தனைகள், ராகங்கள் என பண்பட்டிருக்கிறார். சங்கீதத்தைப் பொறுத்தவரை தென் இந்தியாதான் `ஸ்ட்ராங் என்பது இவரது அனுபவம்.

    சங்கீதம் மட்டுமன்றி 19 வருடங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதற்கொண்டு ஏழு மொழிகளில் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்.

    பாலமுரளியின் குறுகிய கால குவைத் பயணத்திற்கிடையே நேர நெருக்கடிக்கிடையில் காலை சிற்றுண்டிக்கிடையில் அவரை சந்திக்க-கலாஞ்சலியின் தலைவர் முரளிமனோகர் எனக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்.

    சாப்பிட விடாமல் எப்படி பேசுவது என்கிற தயக்கத்தை பாலமுரளி போக்கி ``எது வேணாலும் கேளுங்க! என்று முன் வந்தார்.

    சினிமாக்காரர்கள் என்றால் ஏதாவது கேட்டுவிடலாம். சாஸ்திரிய சங்கீதம் கர்னாடகம்! ராகம்-தாளம்-பல்லவி என்னை மிரட்டிற்று.

    சங்கீத ஞானமில்லாமல் ஏதாவது கேட்டுவிட்டால் அவர் நமக்கு `குட்டு வைத்து விடக்கூடாதே என்கிற பயம். நண்பர் லட்சுமிநாராயணனும் திருமதி.பிரேமாவும் அவருடன் சங்கீதத்தை அலச எனக்கு வசதியாயிற்று.

    எந்தப் பாடல் என்றாலும் அனுபவித்து பாடுவார், என்றாலும் கூட அவர் ராமதாசா கீர்த்தனையில் ரொம்பக்கூட லயித்து விடுகிறார். அது கஷ்டத்தில் வந்த சங்கீதமாம்! கஷ்டத்தில் வருவது எப்போதும் நன்றாக இருக்கும் என்று சிரிக்கிறார்.

    பாலமுரளி தமிழ் நன்றாக பேசினால் கூட இன்னமும் தெலுங்கில் எழுதி வைத்துத்தான் பாடுகிறார்.

    முன்பெல்லாம் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லி கொடுத்திருக்கிறார். டி.வி.டைரக்டர்களின் பிள்ளைகளும், கமலும் இதில் அடக்கம் சினிமா இவர் விரும்பி போன துறையில்லை.

    1954-ல் சென்னையில் லைட் மியூசிக் பிராக்டீஸ் செய்த சமயத்தில் இவரது மாணவியான எஸ்.வரலட்சுமியின் விருப்பத்தின் பேரில் சினிமாவுக்கு பாட சம்மதித்தார்.

    `சங்கீதம் எனக்கு வருகிறதோ இல்லையோ...ஈகோ வராமல் பார்த்துக் கொள்கிறேன்! என்கிறார் பாலமுரளி.

    தான் பெரிய அளவில் படிக்க முடியாமல் போயிற்றே-பெயருக்குப் பின்னால் பட்டங்கள் போட முடியவில்லையே என்று அவர் முன்பு வருந்தியதுண்டு, ஆனால் தற்போது ஆறு டாக்டர் பட்டங்கள் பெற்று-போட இடமில்லாத நிலைமை!

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles