HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

          இத்தனை வளமாகவும் ஈர்ப்பாகவும் பாடும் பாலமுரளி குரல் வளத்திற்காக சாதகம் பண்ணுவதில்லையாம். ஆச்சர்யம் கச்சேரிக்காக பயிற்சியும் செய்வதில்லை என்கிறார். எங்கு எந்த மேடை என்றாலும் நேராகப் போய் அமர்ந்து கச்சேரி! அங்கு அந்த நேரத்தில் என்ன வருகிறதோ அதுதான் பாடல்!

    அவை நன்றாகவே வருகின்றன! குவைத்திலும் கூட இவருக்கு பக்க வாத்தியமாக உள்ளூர் கலைஞர்கள்தான் அமர்ந்தனர். அவர்களுக்குக்கூட பாலமுரளி பயிற்சி எதுவும் தராமலே நேராக மேடை ஏற்றி பாராட்டுப் பெற்றார்.

   பாலமுரளியின் குரலில் எந்த பிரச்னையுமில்லை-ஜஸ்கிரீம்கள் விரும்பி சாப்பிட்டும் கூட அதே மாதிரி இவருக்கு கிடைத்துள்ள இன்னொரு வரம்-நோயின்மை!

    சுகர் கிடையாது! இதுவரை ஒரு தலைவலிகூட வந்ததில்லை என்று இறைவனுக்கு நன்றி சொல்கிறார்.

   மியூசிக் தெரபி மூலம் நோய்களை குணப்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருந்தாலும்கூட இன்னும் அதை இவர் செயல்படுத்தி பார்க்கவில்லை.

        கர்னாடக சங்கீதம் என்பது காலத்தால் அழியாதது. இளைஞர்கள் இன்று புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். நம் கலாச்சாரத்தின் மேல் பற்றும் பெற்றிருக்கிறார்கள். சங்கீதம் நம் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறது. காப்பாற்றுகிறது.

    யுனிவர்சிடி அங்கீகாரம் பெற்றுள்ள பாலமுரளிகிருஷ்ணா பைன் ஆர்ட்ஸ் அகடமி உலகம் முழுவதும் சென்று குழந்தைகளுக்கு தேர்வு வைத்து சான்றிதழ் வழங்குகிறது.

    கர்னாடக சங்கீதத்தை இளைஞர்களும் ரசிக்கும் வண்ணம் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வழங்குவது இவரது சிறப்பு.

    பாலமுரளி உணவில் எந்த கட்டுப்பாடும் வைத்துக் கொள்வதில்லை ரசித்து சாப்பிடுவார்.

    `சாப்பாட்டுக்காகத் தானே சா-பாடுகிறோம்! சாப்பிடறமாதிரி அமர்ந்துதானே பாடறோம்! பாட அமரும்போது இலை போடுவாளா.... எனக்கூட தோன்றுவதுண்டு என்கிறார் நகைக்சுவையுடன்.

    ஓய்வு நேரத்தில் பாலமுரளி என்ன செய்கிறார்-பாடல்கள் பயிற்சி செய்வாரா...?

    ``இல்லை எப்போதும் டி.வி.தான்! அதிலும் கூட விரும்பி பார்ப்பது ஆக்‌ஷன் மூவிகள்!

    ஆச்சர்யப்படுத்துகிறார் சங்கீத வித்வான். 

       எம்.எஸ்.விஸ்வநாதன்;

      கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய இசையமைப்பாளர்கள் என்னதான் அட்டகாசமும் ஆர்ப்பாட்டமும் பண்ணினாலும் பழைய பாடல்களில் உள்ள இனிமையே தனி.

     அந்த மாதிரி காலத்தால் அழியாத பாடல்களை படைத்த எம்.எஸ்.விஸ்வநாதனை தற்போது சினிமா உலகம் மறந்துவிட்டாலும் கூட அவரது சாதனைகள் மறையவில்லை.

     குவைத் ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பு மூலம் அவரது 50 வருட கலைச்சேவைக்கு பாராட்டுவிழா எடுக்க வண்ணப்பட யோகா மூலம் அணுகிய போது எம்.எஸ்.வி உடனே ஒப்புக் கொண்டார்.

     சிலபேர் நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டாலும் கூட எனக்கு அது வேணும்-இது வேணும்-பேச மாட்டேன் பாட மாட்டேன் என்று அடத்தில் ஆரம்பித்து-வேறு யார் யாரை அழைக்கப் போகிறீர்கள் என ஒவ்வொரு காரியத்திலும் தலையிட்டு படுத்தி எடுத்து விடுவதுண்டு

     இவர் மிகுந்த ஒத்தழைப்பு.

     பேச்சு- நடத்தை எல்லாவற்றிலும் எளிமை, பண்பான பழக்கம்- தலைகனமில்லாமல் எல்லோரையும் மதிக்கும் பாங்கு.

     பாராட்டு விழாவில்- குவைத்தில் திறமையான பாடகர்களுக்கு போட்டி வைத்து எம்.எஸ்.வி. விருது தரணும் என்றதும் சம்மதித்தார். ஆர்கெஸ்ட்ரா மற்றும் பாடகர்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ள அனுமதித்தார்.

     ``நிகழ்ச்சியில் நான் பாட வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் பாடுகிறேன் என்றதுடன் ``என் நிகழ்ச்சி என்பதால் நான் இசையமைத்த பாடல்களைத்தான் பாடவேண்டும் என்றில்லை. இன்றைய பிரபல பாடல்களையும் சேருங்கள். அப்போதுதான் நிகழ்ச்சிகளை கட்டும் என்று ஒப்புதல் தந்தார். என்ன ஒரு பெருந்தன்மை!

     எம்.எஸ்.வி.குவைத் வந்தபின் கூட அத்தனை ஒத்தழைப்பு! எங்கே போகணும்- யாரை சந்திக்கணும் என்று கேட்டு அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்.

     `குவைத்திற்கு வருபவர்கள் தங்கள் கைவசம் எப்போதும் பாஸ்போர்ட் மற்றும் விசா வைத்திருக்க வேண்டும்-இல்லாவிட்டால் போலீஸ் பிடிப்பார்கள் என்று அவரிடம் சொல்லலாம் என்று வாயெடுக்கும் போதே-

    ``இதோ எல்லாம் இதில் இருக்கு. மறக்க மாட்டேன் என்று ஹேண்ட பேகை உஷாராக காட்டுகிறார். எம்.எஸ்.வி எல்லா காரியத்திலுமே உஷார்.

    சொன்னபடி சொன்ன நேரத்தில் செல்ல வேண்டும் என்பதில் உறுதி.

    அவரது கையில் ஹேண்டபேக்,மூக்கு கண்ணாடி எப்போதும் இருந்தாகணும். ``கொடுங்கள். நான் எடுத்து வரேன் என்றாலும் கேட்கமாட்டார். ``வேணாம் எனக்கு `கன்டினியுடி போயிரும். அப்புறம் மறந்திருவேன்!  என்று சிரிப்பு.

    மேடையிலும் சரி, வெளியேயும் சரி, நாற்காலி கொடுத்து உட்காரச் சொன்னால், ``நான் நிற்கணும், நிற்கவே விரும்புகிறேன் என்கிற பிடிவாதம்.

    பேச்சில் இயல்பான நகைச்சுவை இழையோடுவது இவரிடம் விசேஷம்! ``எனக்கு உழைக்கத் தெரியும்-பிழைக்கத் தெரியாது! எனக்கு சங்கீதத்தை விட இங்கிதம் அதிகம் தெரியும்! எனக்கு எலக்ட்ரிசிட்டியைவிட பப்ளிசிட்டியில் அதிக பயம்! என்று பஞ்ச்கள்!

    குவைத் இந்திய தூதுவர் திரு. கணபதியுடன் பழைய பாடல் நினைவுகளை எம்.எஸ்.வி, மணிக்கணக்காக பகிர்ந்து கொண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன் பற்றி பேசும்போது எம்.எஸ்.வி. உற்சாகமாகிவிடுவதை அறிந்து இங்குள்ள பண எக்ஸேஞ்ச்சின் நிர்வாகி திரு.என்.ஆர்.சம்பத் அவருக்கு உற்சாகம் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

    இசைக்குழு இருந்தாலும் கூட- ஆர்மோனியம் கையிலிருந்தால் தான் தனக்கு பாட முடியும் என்று வரவழைத்து மேடையில் எம்.எஸ்.வி.பாடி அசத்தினார்.

    `நான் செத்துப் போனாலும் கூட என் ஞாபகமாய் இந்தப் பாடலை நீ மேடைகளில் பாட வேண்டும் என்று கண்ணதாசன் கேட்டுக் கொண்டாராம். அதன்படி குவைத்திலும் `புல்லாங்குழல் இசைத்த மூங்கில் பாடலுடன் ஆரம்பித்து எம்.எஸ்.வி. உருகினார்.

     ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அந்தந்த பாடல்கள் உருவான சூழ்நிலைகளை அவர் விவரித்த விதம் நிகழ்ச்சிக்கு சுவை சேர்த்தது.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles