HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

 சாலமன் பாப்பையா;

        சினிமா பிரபலங்களையும் மிஞ்சும் வண்ணம் பட்டிமன்றம் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிற திரு.சாலமன் பாப்பையாவின் வெற்றி திடீரென வந்ததல்ல.

    இந்த நிலையை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் முயற்சிகள் எல்லாம் பிறருக்கு ஊக்கம் தரும் விஷயங்கள்.

    இவரது பூர்வீகம் தென்காசி பக்கம் கிராமம். பெற்றோர் பஞ்சம் பிழைக்க வேண்டி திருமங்கலம் அருகே சாத்தங்குடி எனும் கிராமத்திற்கு வந்து நெசவு தொழில் பார்த்தனர்.

 பிறகு மதுரைக்கு இடப்பெயர்ச்சி!

    அந்த தொழிலில் வெற்றி கிடைக்காததால் இவரது தந்தை மதுரை ஆர்வி மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். குடும்பத்தில் சாலமன் ஒன்பதாவது பிள்ளை. மூத்த உடன் பிறப்புகள் திருமணமாகி சென்று விட, சகோதரிகளின் திருமணத்திற்கு, இவர்களது ஒரே சொத்தான (ஒரு செனட் பரப்பளவில்) வீடு எப்போதும் ஒத்தியில் இருக்கும் அம்மாவுக்கும் உடல் நல குறைவு!

    வசதியில்லாத சூழலில் மாதம் 21/2 ரூபாய் படிப்புக்கு செலவு செய்ய முடியாத அளவிற்கு வீட்டில் வறுமை. அதையும் மீறி முன்னேற வேண்டும் எனும் உத்வேகத்துடன் ஸ்காலர்ஷிப்பிலும் நண்பர்களின் உதவியுடன் அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ.முடித்தார். (1957)

    சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும்போது மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.துவக்கப்பட அதில் சேர்ந்து முதல் அணியாக 1960 இல் வெளியே வந்தார்.

    வேலூர் ஊரில் கல்லூரியில் சிலகாலம் வேலை பார்த்தபோது அமெரிக்கன் கல்லூரியிலிருந்து அழைப்புவர 1961 இல் டியூட்டராக சேர்ந்தவர் 1994 இல் துறைத் தலைவராக வெளியே வந்தார்.

    தமிழ்ப்பற்றும் இறைபக்தியும் (எம்மதமும் சம்மதம்) இவரது பலம். டாக்டரேட் பெற வேண்டும் என சாலமன் எடுத்துக் கொண்ட ஆய்வு முயற்சிகள் பலன் தராததால்- பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று- பேச்சுக்கலை மூலம் பொதுமக்களை சந்திக்க கிளம்பினார்.

     ஆரம்ப காலங்களில் இலக்கணம்-இலக்கிய வெறியோடு அமைந்த இவரது பேச்சுக்கள் ஜனங்களுக்கு புரியாததால் அவர்களிடம் போய் சேரவில்லை.

     பாப்பையாவின் முதல் பட்டிமன்றம் 1962 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தலைமையில் அரங்கேறிற்று. பட்டிமன்றம் தமிழகத்தில் இருவருக்கு கடமைப்பட்டிருக்கிறது என்று நினைவு கூர்கிறார் இவர்.

    முதலாவது, பட்டிமன்றத்தை கம்பன் கழகம் மூலம் தோற்றுவித்த கம்பன் அடிபொடி சா.கணேசன் அவர்கள். அடுத்தது அவற்றை பொதுமக்களிடம் கொண்டு சென்று அங்கீகாரம் பெற்று  தந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

    அடிகளார் எப்போதும் சமூக தலைப்புகளே கொடுப்பார். இலக்கிய தமிழைவிட நடைமுறை தமிழுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கவே பாப்பையா மெல்ல மெல்ல அதற்கு தன்னை மாற்றிக் கொண்டார்.

 எழுபதுகளில் பட்டிமன்றங்களுக்கு பல விதங்களில் சோதனைகள்!

    இலக்கிய தலைப்புகளால் நெருக்கடி பட்டிமன்றத்தை விரட்ட வேண்டி-கடவுள் பற்றி எப்படி பேசலாம் என்றும் அதிலும் வேற்று மதத்தினர் எப்படி இந்து கடவுள்களை விமர்சிக்கலாம் என்றும் போர்க்கொடி தூக்கினர்.

   இளைஞரான சாலமனுக்கு முக்கியத்துவம் கிடைப்பதை பொறுக்கமாட்டாத மூத்த புலவர்களும் வாய்ப்புக் கிடைக்காத அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவிக்க பட்டிமன்றங்களுக்கு ஆள் வரவு குறைந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள்!

    இங்கே பெண்கள் இல்லாமல் எந்தக் கலையும் வெற்றி பெறாது என்பதை உணர்ந்த சாலமன் யோசித்து- `கணவன் மனைவியா போன்ற தலைப்புகளை வைக்க, குடும்பம் குடும்பமாய் மக்கள் வந்து ரசிக்கவே பட்டிமன்றங்கள் பிரபலமடைய ஆரம்பித்தன.

    எத்தனையோ மேடைகள் கண்டிருந்தாலும்கூட 1988 இல் முதன் முதலில் தொலைக்காட்சியில் தன் பட்டிமன்றத்திற்கு வாய்ப்பளித்த முன்னாள் தொலைக்காட்சியின் இயக்குனர் திரு.ஏ.நடராஜனை நன்றியோடு நினைவு கூர்கிறார். அதன்பிறகு இவருக்கு வேகமான வளர்ச்சி!

    ``பண்டிகை என்றால் பட்டாசு,புத்தாடைபோல இன்று பட்டிமன்றமும் ஆயிற்று! என்று சிரிக்கிறார்.

     எளிமையும், யதார்த்த அப்பாவித்தனமான-நகைச்சுவை பேச்சும் இவரது சிறப்பு. அதிலும் கூட சன் டி.வி. மூலம் மலையாளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடர்கள் கூட மொழி புரியாவிட்டாலும் கூட இவரது பட்டிமன்றத்தை பார்த்து ரசிப்பது இன்னும் கூட விசேஷம்.

     டீச்சர் வேலைக்கு படித்திருந்தாலும் கூட குடும்பத்தை கவனித்துக் கொண்டு வெளியே சுதந்திரமாய் இயங்கவிட்டிருக்கும் திருமதி ஜெயபாய் இவரது வெற்றிக்கு ஊன்றுகோல்.

    இவர்களது மூத்த மகன் எம்.ஏ.(ஜப்பான் இலக்கியம்) படித்து அதே துறையில் படிப்பித்து வருகிறார். மகன் என்ஜினியரிங் முடித்து கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்து வருகிறார்.

    ``எந்த தொழிலும் போட்டிகள் வர வேண்டும் அப்போதுதான் நாமும் ஆணவமில்லாமல் இருப்போம் போட்டியை சமாளிக்க புதுப்புது யுத்திகளை தேடிப் போவோம். எத்தனை போட்டிகள் வந்தாலும் நமக்கு எது கிடைக்கணுமோ அது கிடைக்கும். எனக்கு இந்த 70 வயதில் பேராசைகள் எதுவுமில்லை. இறைவனருளால் திருப்தியாய் இருக்கிறேன் என்று மகிழ்கிறார் பாப்பையா.

   ஏற்கனவே திருக்குறளை குடும்பம், சமூகம் அரசியல், நிர்வாகம், பண்பாடு, மெய்ப்பொருள் என வகைப்படுத்தி நூல் வெளியிட்டுள்ள இவர்- சங்க இலக்கியங்களைப் பற்றி எழுதும் விருப்பத்தில் இருக்கிறார்.

   தன் சம்பாத்தியத்தில் ஒரு தொகையை ஏழை மாணவர்கள் குறிப்பாய் பெண்களின் படிப்புக்கான சாலமன் உதவி வருகிறார். பேரன் பேத்திகள் இளைஞர்கள் என்று இளைய வட்டத்துடன் நெருக்கமாய் இருப்பதால் அவர்களையும் கவரும் வண்ணம் நிகழ்ச்சிகள் தரமுடிகிறது என மகிழ்கிறார் இந்த இளைஞர்.

  `மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம்`

  எளிமை; நகைச்சுவை உணர்வு; பண்பான பழக்க வழக்கங்கள்; குற்றங் குறைகளை கண்டு நமக்கென்ன என்று ஒதுங்கிவிடாமல் அவற்றை நாகரிகமாய் சுட்டிக்காட்டி திருத்தும் துணிச்சல்; எல்லோரும் நல்லவரே- எல்லோரும் வல்லவரே என்று ஊக்கப்படுத்தும் மனப்பக்குவம்;

   மனிதாபிமானம்; அடிமட்டத்திலிருப்பவர்களுக்கும் உதவி,அவர்களையும் உயர்த்தும் உதவி குணம். செருக்கின்மை; கல்லூரியில் கால் பதிக்காவிட்டாலும் கூட இன்று உயர்கல்வியாளர்கள் அத்தனை பேருடனும் உள்ள நெருக்கம்; உயர்ந்த சிந்தனை; தன்னம்பிக்கை; தமிழ்ப்பற்று; நல்லதை போற்றி அல்லவை அகற்றும் சுவையான சொற்பொழிவு; நாட்டுப்பற்று;

   இப்படி நிறைய நிறைய நற்பண்புகளைக் கொண்டிருக்கிற மனிதத் தேனீ என்று அனைவராலும் பிரியமாய் அழைக்கப்படுகிற மதுரை திரு.ரா.சொக்கலிங்கம் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

   காரைக்குடி அருகே பள்ளத்தூரை பூர்வீகமாய் கொண்ட இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை.

   இவரது தாத்தா திரு.காசிநாதன் செட்டியார் அந்த நாட்களில் காங்கிரஸ் இயக்கம் காலூன்ற வலுவாக உழைத்தவர். ஹிந்தி மொழியின் அவசியத்தை எடுத்துரைத்து ஹிந்தி புத்தகங்களை விற்பனை செய்தவர்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles