HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

          ராஜாஜியைப் போன்ற தோற்றமிருந்ததால் டூப்ளிகேட் ராஜாஜி என போற்றப்பட்ட அவர், காந்திஜியை அழைத்து வந்து கூட்டம் நடத்தியிருக்கிறார்.

   அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த சொக்கலிங்கம் அவர்களின் தந்தை திரு.ராமன் செட்டியார் கால் ஊனம் என்றாலும் கூட தளராமல் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்ட வீரர். மன உறுதி மிக்க தீரர். 1942 இல் அமெரிக்கன் கல்லூரியில்  பி.ஏ.படித்திருந்த அப்பா குடும்பத்தை காக்க வேண்டி விறகு கடை, மண்ணெண்ணெய் கடை, கதர் கடை என பலதும் முயன்று கடைசியாய் 1947 இல் விஜயா அச்சகத்தை ஆரம்பித்தார்.

   ஏழு வாரிசுகளில் கடைசியான சொக்கலிங்கம்- மதுரை ரோஸரி பள்ளி, திருநகர் ஜோசப் பள்ளி, முமு.உயர்நிலைப்பள்ளி, வசந்த நகர் தியாகராசர் பள்ளி என 1975 இல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மட்டுமே படிக்க முடிந்தது.

   அச்சக தொழில் மேல் இருந்த நாட்டத்தால் அதற்குமேல் இவருக்கு படிப்பின் மேல் கவனமில்லாமல் போயிற்று.

    அன்று தந்தை துவங்கி வைத்த அச்சகத்தை தேவையான டெக்னாலஜி மாற்றங்களுடன் இன்றும் சிறப்பாக சொக்கலிங்கம் நடத்தி வருகிறார்.

    இவர் விரும்பியிருந்தால் அச்சகத்தை பெரிய அளவில் கொண்டுவந்து சம்பாதித்திருக்கலாம்.

    ஆனால் குடும்ப பொருளாதார தேவைக்கு போதுமான அளவில் வருமானம் போதும் என்று மிதமாகவே நடத்தி வருகிற இவர் விரும்பி ஏற்றுக்கொண்டது பொது வாழ்க்கை.

    பணம் கொடுக்காத கொடுக்க முடியாத திருப்தியையும் சந்தோஷத்தையும் பொதுச் சேவை தந்திருக்கிறது என்று இந்த மனிதத்தேனீ மகிழ்கிறது.

    1984இல் ஜேஸீஸ் அமைப்பில் உறுப்பினரான பின்பு இவரிடம் பெரிய மாற்றம்! இவருக்குள் தன்னம்பிக்கை விதைத்து-சுய கட்டுப்பாடு ஒழுக்கம்-நேர்மை முறையாய் திட்டமிடல்-பேச்சுக்கலை என பல விஷயங்களையும் அடிகோலிற்று.

    இவர் நடத்தும் அல்லது பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளை குறித்த நேரத்தில் ஆரம்பித்து முடிப்பதை கறாராக கடைபிடிக்கிறார்.

    தன்னம்பிக்கையுடன் இளைஞர்களை உருவாக்கும் சீரிய பணியில் இவர் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார். பேச்சுக்கலை பற்றி சுமார் 300 கூட்டங்கள்! சமுதாய நோக்குடன் 14,000க்கு மேல் நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். சுற்று பக்கங்களில் இவரது சொற்பொழிவை கேட்காதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.

   அந்த அளவிற்கு உற்சாகமாய் செயல்படுகிறார். பிறருக்கும் உற்சாகம் தருகிறார். அநேகமாய் அனைத்து கல்லூரி-பல்கலைக் கழகங்களிலும் சொற்பொழிவாற்றி இருக்கிற இவருக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று அதிகம்.

   எந்த மொழியைச் சேர்ந்தவராயினும் அந்தந்த மொழிகளில் கலப்பில்லாமல் பேச வேண்டும் என்பது இவர் அறிவுறுத்தும் கருத்து.

   சாதி மதங்களை கடந்து மறந்து ஏற்றத்தாழ்வில்லா சமுதாயம் உருவாக வேண்டும் என்பது இவரது விருப்பம். தினமலர் நிறுவனர் திரு.டி.வி.ஆர் உயர்சாதியை சேர்ந்தவர் என்றாலும் கூட ``தாழ்த்தப்பட்டவர்கள் எல்லா துறைகளிலும் முன்னுக்கு வந்தால்தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும் என்பார். அந்த நோக்கத்தில் இவரது செயல்பாடு உள்ளது.

   காங்கிரஸை சேர்ந்தவர் என்றாலும் கூட பிற கட்சியினரையும் மதிப்பவர். எல்லோருக்கும் நல்லவர்! சமூக சீர்திருத்தத்துடன்- அந்தந்த சமூகத்தினரிடம் பேசும்போது அவர்களிடமுள்ள குறைபாடுகள் பலவீனங்களை சுட்டிக்காட்டி உணர வைப்பார்.

   அவையோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப-சிந்தனை-சுவாரஸ்யம் நகைச்சுவை-சமூக கருத்துகள் என சுவையாய் பேச்சை அமைப்பது இவரது வெற்றி. இதற்காக நிறைய புத்தகங்களையும் படிக்கிறார். மனிதர்களையும்!

    ராஜீவ்காந்தி காலகட்டம் முதல் கட்சிக்காக கடுமையாய் உழைத்திருந்தாலும் கூட கட்சி மூலம் பலன் கிடைக்காத சூழ்நிலைகளிலும் கூட கட்சி கட்டுப்பாட்டை மீறாத விசுவாசி. அகில இந்திய அளவில் அதிக அளவில் கட்சி கூட்டங்களில் பேசினது இவராகத்தானிருக்கும்.

    இவரது துணைவி திருமதி அலமேலு, கணவரின் சமூக சேவையுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் .மகன் ராம்குமார் பள்ளி படிப்பில்!

    என்னதான் பொது வாழ்க்கையிலிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்திற்காக ஒதுக்கி அவர்களுடன் செலவிட்டு ஒன்றாய் பயணித்து-அந்தப் பக்கமும் குறையில்லாமல் பார்த்துக் கொள்பவர்.

    குடும்பத்தை பாதுகாத்து தனிமனித ஒழுக்கம் பேணி, நன்றாக தொழிலை கவனித்து வருபவர்களால்தான் பொதுவாழ்வில் தூய்மையாக செயல்பட முடியும் தொடர முடியும் என்பதற்கு சொக்கலிங்கம் ஒரு முன் உதாரணம்.

    முன்னோர்களை மதிக்கணும்; கூட்டுக் குடும்பம் இந்திய பண்பாடு காக்கணும்; குடும்பத்தினரின் உணர்வுகளை அறிந்து கலந்து பேசணும்; கடிதங்கள் எழுதி மனம் திறக்கணும்; தீவிரவாதமில்லா உலகம் உருவாகணும் என்பதெல்லாம் இவர் வலியுறுத்தும் விஷயங்கள்.

   ஆன்மீகம் கலந்த கல்வியும் நகைச்சுவை உணர்வு இருந்தால் துவேசம், ஆவேசம் குறைந்து தீவிரவாதம் குறையும் என இவர் நம்புகிறார்.

   சொக்கலிங்கம் கவியரசர் கண்ணதாசன் நற்பணிமன்ற தலைவராகவும், மதுரை கம்பன் கழக செயலாளராகவும், மகிழ்வோர் மன்ற செயலாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

   `மனிதத் தேனீ பட்டம் இவருக்கு 1992 இல் மதுரை நற்கூடல் இலக்கிய கழகத்தில் சாலமன் பாப்பையா இளம்பிறை மணிமாறன் மூலம் வழங்கப்பட்டது. 1993இல் ஜேஸீஸ் அமைப்பில் 22 மாநில போட்டிக்கிடையே மிகச் சிறந்த தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

   சர்வதேச, இந்திய மற்றும் மாநில அளவில் 46க்கும் மேற்பட்ட விருதுகள்- அங்கீகாரங்களை பெற்றுள்ள இவர் 1993க்குப் பிறகு விருதுகளை தவிர்த்து வருகிறார். இவரது பலம்-மன உறுதியும் தன்னம்பிக்கையும் அடுத்தது, பெரிய எதிர்ப்பார்ப்பில்லா மனப்பக்குவம். யாரிடமும் தன் தேவைக்காக எதிர்பார்க்காத பண்பு.

   தனது வளர்ச்சி செயல்பாடுகளுக்கு உதவிய பத்திரிகையாளர் திரு ப.திருமலை, பேராசிரியர் சக்திவேலன், திருவாளர்கள் ராஜா கோவிந்தசாமி, எம்.எஸ்.முத்துராமன் போன்றோரை நன்றியோடு நினைவு கூறுகிறது. இந்த மனிதத்தேனீ.

 

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles