HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

     

 

 

மாவட்ட ஆட்சி தலைவருக்கு வாழ்த்துகள்!

 

           

    மதுரையின் தற்போதை மாவட்ட ஆட்சியாளர் திரு.க.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் பல சமூகப் பணிகளுக்கு ஒத்துழைப்பு, உதவியும் செய்து வருகிறார். இது ஊக்கமாகவும், உந்துதலாகவும் இருக்கிறது.அவருக்கு இந்நேரத்தில் மனமுவந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

அக்ரினி எஸ்.சீதாராமன்;

   `பணம் எவ்ளோ சம்பாதித்தாலும் அவற்றை யாரும் தன்னுடன் கொண்டுபோய் போவதில்லை அதனால் கடவுளே வந்தாலும் மயங்காமல், கையளவேயானாலும் கலங்காமல் மாநிலம் பயனுற வாழவேண்டும் என்கிற சீரிய கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் அருட்செல்வர் அக்ரினி திரு.ச.சீதாராமன்

    பூர்வீகம் திருநெல்வேலி என்றாலும்கூட சென்ட்ரல் பேங்க் ஊழியரான தந்தையின் பணி காரணமாய் ராஜபாளையம், திண்டுக்கல்லில் பள்ளி படிப்பும் பி.ஏ.(இளங்கலை) மதுரையிலும் சீதாராமன் 1978இல்

    படித்த பின்பு சரியான வேலை கிடைக்காததால் இவர் தேர்ந்தெடுத்தது வீடு-மனை-நிலம்-தரகுதொழில் அதில் 1989இல் மனை வாங்கி பிரித்து விற்கிற அளவிற்கு வளர்ந்தார்.

    1993இல் சாஸ்வத் கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனராக வீடுகள் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.

    1999 இல் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் ஆரம்பித்து 1000 வீடுகளுக்கு மேல் கட்டிக் கொடுத்து முன்னணியில் இருக்கிறது இவரது அக்ரினி ஃபிளாட்ஸ்!

    அக்ரினி என்றால் சமஸ்கிருதத்தில் முன்னிலை வகிப்பது என அர்த்தம். பெயருக்கேற்றபடி இவரும் முன்னிலையில்!

    வீடு வாங்குபவர்கள் ஒன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் குடியிருக்க வாங்குகிறார்கள். அல்லது உள்ள பணத்தை உரிய முறையில் முதலீடு செய்து விற்கும்போது நல்ல விலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    இந்த இரண்டு தரப்பினரையும் நிறைவு செய்வது இவரது வெற்றியின் ரகசியம்.

    குடியிருப்போரின் பாதுகாப்பு-மரங்கள்-பசுமை-நீர்வளங்கள்-சுற்றுச்சூழல்-வாகனங்கள் நிறுத்துமிடம்-விளையாட பூங்கா-சரியான ஆவணங்கள் ஏமாற்றாத அங்கீகாரம் தரமான பொருட்களை வைத்து கட்டுமானம்- இவற்றுடன் நியாயமான விலை போன்றவை மக்கள் இவரை நாடிவர காரணமாய் அமைந்திருக்கின்றன.

    போட்டிக்கிடையில் எப்படி இத்தனை விஷயங்களையும் இவரால் சரியாய் கவனிக்க முடிகிறது?

     ``ஏன் முடியாது? சீதாராமன் சிரிக்கிறார். ``என்னிடம் நேர்மையும் உண்மையுமிருக்கிறது. வாடிக்கையாளர்களை மதிப்பவன் நான். அவர்களது தேவைதான் எனது சேவை. சரியாய் திட்டமிட்டு பெரிய அளவில் கட்டுமானம் செய்வதால் குறைந்த தொகையில் வீடுகளை என்னால் தரமுடிகிறது.

    அதே மாதிரி எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள், ஆசைகள் இல்லாததால் குறைந்த லாபத்தில் நிறைவு காண முடிகிறது. கட்டுமானத்திலும் அகச்சிக்கனம்,(வாங்கும் பொருட்களை வீணடிக்காமல் உபயோகிப்பது. புறச்சிக்கனம் (மொத்தமாய் பொருட்கள் வாங்குவதால் குறைந்த விலைக்கு கொள்முதல்) இரண்டும் காப்பதால் எல்லாம் திட்டப்படி நடக்கிறது.

    கடின உழைப்பும் எப்போதும் தளராத உற்சாகமும் இவரது பலம். இவரிடம் சற்று பேசினாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது! எளிமை! எதற்கும் கலங்காமை, நகைச்சுவைப் பேச்சு, பிறர் திறமையை மதித்தல், கஷ்ட நஷ்டங்கள் அறிந்து உதவுதல், ஆன்மீக ஈடுபாடு, தமிழ் இலக்கியப் பற்று இவரது சிறப்பம்சங்கள்.

   கணினித் துறையால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளவர்கள், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் என வருவாய் பெருக்கத்தால் நல்ல வீடு தேடி வருபவர்களும் அதிகமாகியுள்ளது அவர்களின் திருப்தியை சீதாராமன் தனது மூலதனமாய் நினைக்கிறார்.

    சீதாராமனுக்கு பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் உண்டு. பிறகு காரைக்குடி மற்றும் சென்னை கம்பன் கழக செயல்பாடுகளை பார்த்துப் பார்த்து மதுரையிலும் கம்பன் கழகம் ஆரம்பிக்கப்பட்டு அதன் துணைத் தலைவராகவும் தூணாகவும் இருந்து வருகிறார்.

    அன்றன்றைய லாபங்களை பார்க்காமல் தொலைநோக்கில் தொடர்புகளை வளர்ப்பதும். வாடிக்கையாளர்களை தக்கவைத்து மென்மேலும் பெருக்குவதும் இவரது சிறப்பு.

   சீதாராமன் பிரச்சனைகளையே சந்திக்க வழியில்லாமல் செயல்படுபவர். இவரிடம் அடாவடி கிடையாது. செருக்கு இல்லை சமாதான சாத்வீக முறையை பின்பற்றுபவர். பாதிக்கப்பட்டவர் அல்லது எதிராளியின் இடத்தில் நம்மை வைத்து பார்த்தால் நல்ல தீர்வு கிடைத்து விடும்.

   இலக்கியமும் இவருக்குத் தெரியும். உலகியலும் அத்துபடி. அதனால் எல்லாம் சுமுகமாய் போகிறது. அக்ரினி வீடுகள் வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் அமைத்து அரசியல் அல்லாதவற்றிற்கு இலவசமாய் இடம் தருகிறார். அத்துடன் அவையோருக்கு அறுசுவை உணவும் வருடம் முழுக்க இந்த அரங்கில் இலக்கிய சமூக-சமய சீர்திருத்த நிகழ்ச்சிகள் நடந்து வருவது பெருமைப்படும் விஷயம்.

   மனைவி, 2 வாரிசுகள் என சந்தோஷமாய் வாழும் சீதாராமன் விஸ்வாஸ் கல்ச்சுரல் அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலம் பல நல்ல காரியங்களும் செய்து வருகிறார்.

    தன் தொழிலுக்கு 35 கோடிகள் கடனுதவி அளித்து வளர காரணமாய் இருந்த இருக்கும் யூனியன் வங்கிக்கு நன்றியோடு இருக்கிறார் இந்த அருட்செல்வர்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles