HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

 மணவை முஸ்தபா;

     அறிவியல் தமிழ்ப் பணியை வாழ்நாள் பணியாக மேற்கொண்டுள்ள மணவை முஸ்தபா, சென்னை,அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெற்றவர். தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாகப் பதிப்பாசிரியர். சர்வ தேச திங்களிதழ் `யுனெஸ்கோ கூரியர் ஆசிரியராகப் பணியாற்றி, 30 உலக மொழி ஆசிரியர்களில் `பணி மூப்பு ஆசிரியர் எனும் தகுதிக்காக யுனெஸ்கோவால் சிறப்பிக்கப்பட்டவர்.

     இவரது 40-க்கு மேற்பட்ட நூல்களில் 8 கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். இவை இந்திய மொழிகளில் முதலாவதாகும். பல இலட்சம் கலைச் சொற்களை உருவாக்கிய இவரை உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் விருதளித்துப் பாராட்டிப் பரிசளித்துள்ளன். தமிழ்நாடு அரசின் ஐந்து விருதுகள் உட்பட 30 க்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் எனும் சிறப்புப் பெற்றவர்.

   எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிப் பேரவை இணைச் செயலர், தொலைக்காட்சி, வானொலி, ஆலோசனைக் குழு உறுப்பினர். ஞானபீடத் தேர்வுக்குழு உறுப்பினர். முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மேல்மட்டக் குழு உறுப்பினர், சுதந்திர பொன்விழாக் குழு உறுப்பினராகப் பணியாற்றியவர். அண்ணா பல்கலைக்கழக தமிழ்வளர்ச்சிக் குழு உறுப்பினர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக, கலைச் சொல்லாக்க குழு உறுப்பினர், முன்னாள் கெளரவ மாகாண மாஜிஸ்திரேட்.

    இதழ்கள், தொலைக்காட்சி, வானொலிகளின் நூறுக்கு மேற்பட்ட படைப்புகளை வெளிப்படுத்தியவர். பன்னிரெண்டு மொழி பெயர்ப்பு உத்திகளை வகுத்தவர். இவரது அறிவியல் நுல்கள் தமிழ் நாடு அரசு,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றுள்ளன.

    மலையாள-தமிழ்ப் பணிக்காக கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை பொன்விழாவில் சிறப்பிக்கப்பட்டவர்.

    இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புது தில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மணவையார் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட இவர் மூன்று முறை உலகை வலம் வந்துள்ளார்.

    திண்டுக்கல் அருகே விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் மணப்பாறையில் பள்ளி வாழ்க்கை, பல்வேறு வகைகளில் எழுத்து, பேச்சு, மற்றும் இலக்கிய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பாசறையாக அவ்வூர் இருந்ததால் அதற்கு நன்றிகாட்டும் விதமாக அவ்வூரின் பெயரை சேர்த்து மணவை முஸ்தபாவாக மாறினவர்.

 தமிழறிஞர் தெ.பெ.மீனாட்சி சுந்தரம் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்.

    குவைத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்தபோது சாதனைகள் நிகழ்த்தி வரும் இவரது அமைதித் தோற்றம் வியப்பளித்தது.

   மனிதரின் தமிழ் பற்று அலாதியானது. இவரது உடல் ரத்தம்- மூச்சு எல்லாவற்றிலும் தமிழ்!

    பட்டபடிப்பு தேர்வு முடிவு வந்த ஒரே வாரத்தில் சேலம் அரசினர் கல்லூரியில் வேலை வாய்ப்பு கிடைக்க இவர் குருநாதர் தொ.பொ. மீயிடம் ஆசீரிவாதம் வாங்கப் போனார்.

    அப்போது அங்கு நடந்த பயிற்சிமொழி கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அவர் அழைக்க சென்றார்.

    அங்கு பேசியவர்கள் பயிற்சி மொழியாக ஆங்கிலயே தொடர வேண்டும்-தமிழில் போதிய அறிவியல் நூல்களும் சொற்களும் இல்லை. அதனால் தமிழில் அறிவியல் தேவையில்லை என்கிற மாதிரி பேச-

 மணவைக்கு ஆவேசமாயிற்று.

    உடன் மேடை ஏறி- ``தமிழில் எந்தத் துறைக் கல்வியையும் கற்பிக்க முடியும். அறிவியலையும் சொற்சொட்டோடும்  பொருட்செறிவோடும்  சொல்ல முடியும். அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன். அதை உறுதிபடுத்தும் வகையில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வேலையை உதறி தள்ளுகிறேன். என்று மேடையிலேயே அந்தப் பணி ஆணையை கிழித்தெறிய அனைவரும் ஆர்ப்பரித்தனர்.

     அந்த வயதில் இவர் கொண்ட ஆவேசத்தின் வெளிப்பாடு இன்றும் தொடர்கிறது. அறிவியல் துறை மட்டுமின்றி சட்டத்துறையிலும் இவரது கவனம் திரும்பிற்று. சட்டப்படிப்பும் படித்து அதன் நுணுக்கங்கள் அறிந்தார்.

    சட்டத்தை தமிழில் கொண்டு வர முடியாது என்றதை சவாலாக ஏற்று இவர் காரியத்தில் இறங்கினார். மலேசிய பயணத்தின் போது டத்தோ சாமிவேலுவின் ஊக்கத்தில் சட்டத்தை தமிழ்ப்படுத்தி நான்கு மாதத்தில் செய்து முடித்தார்.

    மணவைக்கு ஆங்கிலம், தமிழ் மட்டுமின்றி சமஸ்கிருதம், மலையாளத்திலும் நல்ல புலமையுண்டு. செம்மொழி தமிழின் பலன் முழுதாகக் கிடைக்க இவர் அரும்பாடுபட்டு வருகிறார்.

    சேவரத்னா, கலைமாமணி , திரு.வி.க. விருது, போன்றவற்றுடன் அறிவியல் தமிழ் தந்தை, தமிழ் தூதுவர் வளர்தமிழ் செல்வர், அறிவியல் தமிழ் சிற்பி, அறிவியல் தமிழ் வித்தகர் என புகழப்படுபவர்.

 இவரது அறிவியல் தமிழ் நுல் பள்ளிகளில் பாடமாக்கப்பட்டுள்ளது.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles