HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      தன் எழுத்துகள் வாசகர்களை ஈர்த்து, சிந்திக்க வைத்து அவர்களது எண்ணங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆர். நடராஜன் உழைப்பில் உயர்ந்த தொழிலதிபர்கள் பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுபவர். பொருளியல், நிர்வாகவியல் பற்றித் தமிழில் அதிகம் எழுதுபவர். எழுத்துப் பணி மனித குல மேம்பாட்டிற்காகவே என்று நினைக்கும் இருமொழி எழுத்தாளர் இவர்.

 எம்.பி.வாசிமலை:

    மதுரையில் கிராமப்புற மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் வைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. DHAN Foundation (Development of Human Action). இதன் எக்ஸிகியூடிவ் டைரக்டர் திரு.எம்.பி. வாசிமலை முழுக்க முழுக்க தன்னை சமூக சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.

     உசிலம்பட்டி அருகே எழுமலை எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கூட்டுக் குடும்ப அன்பில் பண்போடு வளர்க்கப்பட்டவர்.

     இவர் பாளைங்கோட்டையில் பியூசியும், பி.எஸ்.ஸி. மற்றும் எம்.எஸ்.ஸி அக்ரி மதுரையிலும் முடித்து பவானி சாகர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் நீர் வேளாண்மை சம்மந்தமாய் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.

     பிறகு அகமதாபாத் IIMA யில் எம்.பி.ஏ படித்தபோது அவரது மனதில் ஒரு பளிச்! தங்களது படிப்பு கிராம மக்களுக்கு பயன்பட வேண்டும். இந்தியாவின் நாடித்துடிப்பான கிராமங்களை முன்னேற்ற வேண்டும் என்று நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து  PRADAN (1983) (professional Assistance for Development Action) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.

     படித்த இளைஞர்கள்-இவர்கள் மூலம் இப்போது ஏழாயிரத்துக்கும் மேல் கிராமங்களில் பணிபுரிகின்றனர். பிற தொண்டு நிறுவனங்களுக்கும் தொழில் நுட்பங்கள் கொடுத்து செயல்பட வைக்கின்றனர்.

     வாசிமலை மதுரை காந்திய நிறுவனத்தில் 6 வருடங்கள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். 70 கூட்டுப் பண்ணைகளை நிர்வகித்திருக்கிறார்.

     1987 இல் தனியாய் மத்தியபிரதேசம் கிராமம் ஒன்றை தத்தெடுத்து கோழி, காளான் வளர்ப்பை ஊக்கப்படுத்தினார். ராஞ்சி, லக்னோவிலும் இதை விரிவுபடுத்தினார்.

      1990 இல் களஞ்சியம் எனும் பெண்கள் சுய உதவி குழுக்கள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கிராமியம், நகரசேரிகள், மீனவர்கள், பழங்குடியினர் என்று 4 சூழலில் செயல்பட்டு அவர்களை வறுமையிலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் விடுவிக்கிறார்கள்.

     சின்னப்பிள்ளை போன்ற தலைவர்களை உருவாக்கி மக்கள் கல்வி நிலையம் மற்றும் சுகாதார பயிற்சிகள் தருகிறார்கள். நேரடி ஜனநாயகத்தை வளர்த்தல், சாதி மத, அரசியலுக்கு அப்பாற்பட்ட தொண்டு, சமூக சிந்தனையுடன் கூடிய குறும்படங்களுக்கு விருது போன்றவை இதன் செயல்பாடுகளில் சில.

    1992இல் வயலகம் திட்டம் அறிமுகமாயிற்று. இதன் மூலம் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது. உழவர் ஒருங்கிணைப்பு, ஏரி-குளம்-கண்மாய் போன்ற நீர் ஆதாரங்களை சரி பண்ணி மழை நீர் சேமிப்பு, பால்வளம் பெருக்கல் செய்து வருகிறார்கள்.

    கிராமங்களிலும் இன்டர்நெட் மையங்கள் உருவாகி, இலவச இமெயில், சான்றிதழ் பெற உதவி, அப்பல்லோ-அரவிந்தர் மருத்துவமனையுடன் தொடர்பு, தொலைபேசி வசதி எல்லாம் செய்து தருகிறார்கள்.

    இவர்களின் செயல்பாடுகளுக்கு  Ford Foundation,TATA மற்றும் நெதர்லாந்து   Oxfamnovio உதவி வருகின்றன.

    1992-97 வரை பிரதான தலைமை அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டது. 98-ல் தானம் அறக்கட்டளை தென் இந்தியாவில் தனியாக ஆரம்பிக்கப்பட்டு ஏழாயிரம் கிராமங்களில் 4.5 லட்சம் குடும்பங்கள் பலனடைந்துள்ளனர்.

    650 முழுநேர சேவை பணியாளர்களை கொண்ட இதில் 400 பேர் தொழில்நுட்ப வல்லுனர்கள். இவர்கள் ENDP-ADP,RB, நபார்டு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

     1995-ல் ஆரம்பிக்கப்பட்டு 70 நாடுகளில் செயல்பட்டுவரும்  INAFI  (அகில உலக மாற்று நிதி நிறுவனங்கள்) செகரட்டரியாய் இருக்கிறார் வாசிமலை.

      சுனாமி போன்ற பேரிழப்பிற்கும் உதவுகிறார்கள். டாடா DHAN அகாடமி இலவச கல்லூரி நடத்தி PMD (Program Management development) பட்டம் வழங்கி கிராமங்களுக்கு அனுப்புகிறார்கள்.

      மனைவி வாசுகி இவரது செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.

      விரைவில் அகில உலக அளவில் இந்த அமைப்பு விரிவாக்கப்பட்டு ஒரு மில்லியன் குடும்பங்களை இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. 

  டாக்டர் த.ரவிச்சந்திரன்

     சங்க தமிழ் முதற்கொண்டு மதுரைக்கென்று எத்தனையோ பெருமைகள் உண்டு. அத்துடன் இன்னொன்று கூட;

     மகாத்மா காந்தி தனது கோட் சூட் உடையை துறந்து எளிமை-ஏழை உடைக்கு மாறினது. (1921 செப் -22) மதுரையில் வைத்துதானாம். அத்துடன் அவர் பயன்படுத்திய 14 பொருட்களை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் பாதுகாத்து வருகிறது.

     தென் இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு காந்தி நினைவு அருங்காட்சியகமான இதன் பொறுப்பாளராகவும் திட்ட அலுவலராகவும் இருக்கும் திரு.த.ரவிச்சந்திரன் மிக எளிமையானவர். சமூகம்-இளைஞர் மேம்பாட்டுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்.

     இவரது தாத்தா திரு. பஞ்சரத்னம் சுதந்திர போராட்ட வீரராக இருந்தாலும்கூட ஆரம்ப நாட்களில் ரவிச்சந்திரனுக்கு காந்தி கொள்கைகளில் பிடிப்பில்லாமல் இருந்தது. ஆனால் பின்னாளில் அவரைப் பற்றி படித்த பின்பு மாற்றம்!

    ரவிச்சந்திரன் அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.(ஆங்கிலம்); இதே கல்லூரியில் காந்திய சிந்தை அமைதி கல்வியில் எம்.ஏ, எம்ஃபில்லும் 1989 இல் முடித்தவர்.

    1986 இல் ஆர்வமுடன் பிறருடனும் சேர்ந்து ஆரம்பித்த அமைதி விஞ்ஞான கழகம் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனதில் இவருக்கு வருத்தம் உண்டு. அப்போது, சுயமுன்னேற்றம்-சமாதான- சாத்வீக பயிற்சிகளை இளைஞர்களுக்கு காந்தி மியூசியத்தில் வைத்து கொடுத்திருக்கிறார்கள்.

    குடும்பத்தினர் நடத்திய ஹோட்டல் தொழிலிலோ, வாய்ப்புகள் வந்த அரசாங்க உத்தியோகத்திலோ இவருக்கு ஈடுபாடு வரவில்லை.

    ஜப்பானியர்களுடன் சேர்ந்து இவர் புதுக்கோட்டை மாவட்ட அம்மன் கோயில்களை பற்றின ஆய்வு செய்திருக்கிறார், நகரத்தாரின் சிவாலயங்கள் பற்றியும் ஆய்வு பணி!

     ரவிச்சந்திரன் 13 வருடங்கள் `தமிழகத்தில் சாதி சமய கலவரங்களும் அதற்கான தீர்வு முறைகளும் எனும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பெற்றுள்ளார்.

     பொது வாழ்வின் தூய்மை இயக்க பணிகள், சைக்கிள் யாத்திரை, மதுரை-ஸ்ரீலங்கா பாதயாத்திரை (1998) அகிம்சை கோட்பாடு, தனிமனித மேம்பாடு என்று இவரது கவனம் முழுக்க சேவை பணிகளிலேயே இருக்கிறது.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles