HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

        அத்துடன் தமிழகத்தில் வளர்ச்சியிலும் மேம்பாட்டுக்கும் கூட தினமலரின் பங்கு பெருமளவில் இருக்கிறது என்பது உண்மை. அதற்கு சமீபத்திய உதாரணம்-தெலுங்கு கங்கை கால்வாயில் உள்ள சீர்கேடுகளை தினமலர் படம் பிடித்துக்காட்டி சரிசெய்ய வைத்திருப்பது.

        ராஜீவ்காந்தி கொலை- புகைப்படங்கள் தினமலரிலிருந்து தான் மற்ற மீடியாக்களுக்கு விநியோகமானது குறிப்பிட வேண்டிய ஒன்று.

        தினசரியில் முதன் முதலில் ஆஃப்செட் கொண்டு வந்தது: நஷ்டம் என்றாலும் கூட, இலவச இணைப்பு இதழ்கள் தர ஆரம்பித்தது என்று இவர்களது `முதல் சாதனைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

        பத்திரிகை துறைக்கும் அப்பால் சங்ககால நாணய சேகரிப்பிலும் இவரது சாதனை சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

        1984ல் கோடையில் ஓய்விற்காக கொடைக்கானல் சென்றபோது பஸ் ஸ்டாண்டு அருகே கடை ஒன்றில் ஓலைச் சுவடிகளுக்கிடையே கண்ட செப்பு நாணயம் இவரை ஈர்த்தது.

        அதை வாங்கி, அதை விநியோகித்த, மதுரை சையத் இஸ்மாயிலை சந்தித்து அவர் மூலம் குதிரை படத்துடன் -`பெருவழுதி என எழுதப்பட்டிருந்த நாணயம் இவரது ஆராய்ச்சிக்கு திருப்பு முனையாயிற்று. அது சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட  நாணயம். பெருவழுதி என்ற மன்னரின் பெயர் சங்க இலக்கியத்திலும் உள்ளது.

      சங்ககால மன்னர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை, வடநாட்டில் மவுரியர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களைத்தான்  அக்காலத்தில் மக்கள் பயன்படுத்தினர் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வந்ததை தன் கண்டுபிடிப்பால், அவர்கள் கூறியது தவறு என்று நிரூபித்தார்.

      வாரணாசி அகில இந்திய நாணயவியல் சங்க மாநாட்டில் 1984ல் ஆர்.கே. இது குறித்து கட்டுரை வாசிக்க, அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது.

       பிறகு சங்ககால சோழர், பாண்டிய நாணயங்கள் பற்றி புத்தகங்கள் எழுதி தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார்.

       1986 வரை சங்ககாலச் சேர நாணயங்கள் கிடைக்காமலிருந்து, அந்த ஆண்டு அவருக்கு கிடைத்த நாணயங்களின் பின்புறத்தில் வில்-அம்பு இருப்பதைக் கண்டு சேரர் நாணயங்களைத் தேடத் துவங்கினார்.

       கரூர் அமராவதி ஆற்றில் கிடைத்த சங்ககால சேர நாணயங்கள் குறித்து ஆய்வு செய்தார். மாக்கோதை, குட்டுவன் கோதை வெள்ளிக் காசுகளைக் கண்டுபிடித்தார்.

       ஆர்.கே லண்டன் போனபோது ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி புரொஃபசர் ஒருவர் பிரிட்ட்டிஷ் மியூசியத்திலிருந்து எடுத்துக் கொடுத்த புத்தகம் இவருக்கு  லேட் ரோமன் காப்பர் காயின்ஸ் ஃப்ரம் கரூர்  மதுரை  நூல் உருவாக்க உதவிற்று .

       இதை பார்த்துவிட்டு ராயல் நியூமிஸ்மேடிக்  சொஸைட்டி இவரை அவர்கள் அமைப்பில் ஒரு உறுப்பினராகத் தேர்வு செய்தது. கடந்த நூறு வருடங்களில் எந்த தமிழருக்கும் கிடைக்காத அங்கீகாரம் இது.

       தமிழகத்திற்கு வாணிபம் செய்ய உரோமானியர்கள் வரும். முன்னே கிரேக்கர்கள் சேர நாட்டுடன் கி.மு., மூன்றாம் நூற்றாண்டிலே வந்தனர் என்பதை நாணயங்கள் மூலம் நிரூபணம் செய்திருப்பதும் முக்கியமான ஒன்று.

      சங்க கால நாணயங்களின் மேல் இவருக்குள்ள பற்றும் ஆர்வமும் அலாதியானது. இதன் மூலம் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு ஏதோ ஒரு வகையில் தன் பங்களிப்பு இருப்பதில் இவருக்கு ஆத்மதிருப்தி.

      ஆர்.கே. தமிழ்நாடு நியூமிஸ்மேடிக்    சொசைட்டி  ஆரம்பித்து இங்கும் வெற்றிகரமாய் கான்ஃபரன்ஸ்கள் நடத்தி வருகிறார்.

      ஆரம்ப நாட்களில் இவர் இத்துறையில் இறங்கிய போது கேலி- கிண்டல் பேசி தளர வைத்தவர்களும் உண்டு.

      கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைத்திருந்தால் தன் பத்திரிகை பலத்தை வைத்து வேறு எந்தெந்த துறைகளிலோ கவனம் செலுத்தி ஆதாயங்கள் தேடியிருக்கலாம்.

      கிளப்கள்- அமைப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் என்று ஓய்வு நேரத்தை செலவிட்டிருக்கலாம்.

       ஆனால் தன் பொன்னான நேரத்தை, தமிழர்கள்- தமிழர் வரலாறு- தமிழ்மொழி என அர்ப்பணித்திருப்பது போற்றுதலுக்குரியது.

 நல்லி

          டாக்டர் நல்லி அவர்களை தள்ளியிருந்து பிரமிப்போடு பார்த்து வந்த எனக்கு அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது - முன்னாள் தொலைக்காட்சி இயக்குனர் திரு.ஏ.நடராஜனும் வண்ணப்பட யோகவும் தான்.

          2003 அகில இந்திய அளவில் சிறந்த தொழிலபதிராக - பத்மஸ்ரீ விருது பெற்ற நல்லிக்கு குவைத் ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பாராட்டுவிழா எடுக்க, அணுக ஒப்புக் கொண்டார். குவைத்தில் மேனகா காந்தி தலைமையில் நல்லிக்கு பாராட்டு விழா எடுத்து ஃப்ரண்ட்லைனர்ஸ் பெருமை தேடிக் கொண்டது! அன்று முதல் அவரிடம் அன்பும் பண்புமான நட்பு தொடர்கிறது.

           65-ஐ கடந்த நல்லி செட்டியார் என்று தொழில்-வர்த்தக வட்டாரங்களிலும் பொதுவாழ்வு அமைப்புகளிலும் அறிமுகமாகியுள்ள டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். உத்தரவாதமுள்ள உயர் ரக தரமான பட்டுத் துணிகளுக்கு `நல்லி என கூறும் அளவிற்கு, பலரின் தேர்விற்கும் பாராட்டுக்கும் உரிய பெருமையைத் தம் கடின உழைப்பால் தேடிக்கொடுத்தவர்.

        

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles