HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      இந்த காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கடந்த 20 வருடங்களாக வெள்ளிக்கிழமை மாலைகளில் சர்வசமய வழிபாடு நடந்து வருகிறது.

    தமிழ் ஆர்வலரான டாக்டர் மு.அரம் அவர்கள் எம்.பி.யாக இருந்தபோது அவரது உதவியாளராக ரவிச்சந்திரன் டெல்லியில் இருந்தபோது- இந்தியா முழுக்க கல்வி பணிகள் செய்ய முடிந்ததற்காக மகிழ்ச்சியடைகிறார்.

   அந்த சமயம் அங்கு சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தபோதும் நேர்மையாக செயல்பட்டதற்காக பெருமைப்படுகிறார்.

    ரவிச்சந்திரன் ஊதியத்தை பெரிதாய் நினைப்பதில்லை. தொண்டு செய்யும்போது கிடைக்கும் மனநிறைவு போதும் என்கிறார்.

     இந்த அருங்காட்சியகத்தில் குறைந்த கட்டணத்தில் தினம் நான்கு வகுப்புகள்- யோகா, பிராணாயாமம், தியானம், மன அழுத்த மேலாண்மை, சமச்சீர் உணவு பயிற்சி நடக்கின்றது.

    உடல்வளம் நமக்கு முக்கியம். அவசர உலகத்தில் இளைஞர்கள் உடல் நலத்தைப்பற்றி கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருப்பதாலும், தவறான உணவு பழக்கத்தாலும், பி.பீ., சர்க்கரை  என இளம் பருவத்திலேயே அவதிப்படுகின்றனர்.

    பள்ளி கல்லூரிகளில், சமூகத்தில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பல்லாயிரக் கணக்கானோர் இந்த பயிற்சிக்கு வந்து பயனடைந்திருக்கிறார்கள். யோகா பயிற்சியை வியாபாரமாக்காமல் மாணவர் குழுக்களை உருவாக்கி இது கற்றுத் தரப்படுகிறது.

    அப்துல் கலாம்களை நம்மால் உருவாக்க முடிகிறதோ இல்லையோ சந்தன வீரப்பன்கள் உருவாகி விடக்கூடாது என்பது இவர்களது லட்சியம்.

    ரவிச்சந்திரன் தென்கொரியா, ஹாங்காங் இந்தோனேஷியா, ஹாலந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் அமைதி- தீர்வு கான்பரன்ஸ்களுக்காக பயணித்திருக்கிறார்.

    ஸ்பெயினுக்கு இளைஞர் மேம்பாட்டு குழுத் தலைவராக சென்றிருக்கிறார். 125 நாடுகள் கலந்து கொண்ட இதில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே தமிழர் எனும் பெருமை இவருக்குண்டு.

    இத்தாலியில் போப்பாண்டவரை சந்தித்த அனுபவமும், டென்மார்க்  ஆர் எஸ் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புற பாடல்களை மொழிபெயர்த்து டிஜிட்டலைஸ் செய்ததும் இவருக்கு மறக்க முடியாத விஷயங்கள்.

     இவர்கள் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு, இந்திய விடுதலை போராட்ட வரலாறு, ஹிரோஷிமா நாகசாஹி புகைப்பட கண்காட்சிகள் நடத்தி வருகிறார்கள்.

     தீவிரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள், படிப்புகள், பொதுமக்களுக்கு இங்கு நடத்தப்படுகின்றன.

     மத்திய அமெரிக்காவில் உள்ளதுபோல், மதுரையில் அமைதி பல்கலைக் கழகம் உருவாக்கி அதை சர்வதேச மையமாக செயல்பட வைத்து, உலகம் முழுவதும் அமைதியை தோற்றுவிக்க வேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம். 

  கு.ஞானசம்பந்தம்;

    ``சின்னச் சின்ன தோல்விக்கெல்லாம் சிலர் கலங்கி தளர்ந்து போகிறார்கள். சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். எதிர்நீச்சல் போட கற்றுக்கொள்ள வேண்டும் அதே மாதிரி வெறும் பாராட்டும் புகழ்ச்சியுமே நம்மை உயர்த்திவிட முடியாது.

    மாற்று கருத்துகள் கொண்ட விமர்சனங்களை கண்டு அஞ்சக்கூடாது. நம்மை ஆவேசமாய் செயல்பட வைக்க எதிரிகளும் தேவை. அவர்களுக்கு முன்னில் எழுத்து நிற்க வேண்டும் எனும் உந்துதல் சக்தி தர அவர்கள் நமக்கு முக்கியம். நானும் என்னதான் நகைச்சுவையாய் பேசினாலும் வாழ்வில் பல கஷ்டங்களையும் கடந்து வந்தவன்தான்.

     மதுரையில் தன் வீட்டில் சாந்தமும் புன்னகையுமாய் பேச ஆரம்பித்தார் பேராசிரியர், டாக்டர் திரு.கு.ஞானசம்பந்தம்.

     மனிதரிடம் இயல்பாகவே நகைச்சுவை பொங்குகிறது. சரளமான பேச்சு. தமிழ்! கோர்வையாய் சம்பவங்களை விவரிக்கும் பாங்கு.

     விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அப்பா திரு.குருநாதன், செந்தமிழ் கல்லூரியில் நான்காம் தமிழ்ச் சங்கத்தில் படித்து தமிழாசிரியரானவர். குடும்பத்தில் முதல் படிப்பாளி! சொந்த ஊர் சோழவந்தானிலேயே பணிபுரிந்து, பொதுப்பணிகள், ஆன்மீக பணிகளுடன், படிப்பின் அவசியத்தை ஊட்டிய அப்பாதான் ஞானசம்பந்தத்தின் ரோல்மாடல்! இவரின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்பா தந்த ஊக்கம்தான் இன்று வரை தூக்கி நிறுத்தியிருக்கிறது.

     ஞானசம்பந்தத்தின் மூலப்பெயர் அங்குசாமி. நாகர்கோயில் சைவ மடாதிபதி ஆறுமுகநாவலர் இவரது அப்பாவின் திருமுறை கழகத்தில் பேச வந்தபோது அந்த நிகழ்ச்சியில் 3 வயதேயுள்ள இவர் இறைவணக்கம் பாட- அதில் மெய்மறந்த அவர், இவரது பெயரை ஞானசம்பந்தமாக மாற்றினார். (ஒரே பாடலில் பெயர் பெற்றவர்களில் கு.ஞாவும் உண்டு. அதற்கு பிறகு பாடலை!)

    கு.ஞா. முள்ளிப்பாளையத்தில் பள்ளி முடித்து- மதுரை தியாகராஜரில் பியூசி சேர்ந்தபோது ஆங்கில மீடியம்- கல்லூரி ஸ்டிரைக் போன்றவற்றால் படிப்பை கோட்டைவிட்டு நான்கு முறை தளரா முயற்சிக்குப் பின் அஞ்சல் கல்விமூலம் வென்றார். (``பியுசியில் என் மாதிரி தோல்வி அடைந்தவர்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது!)

          அதுவும்கூட பரீட்சை தினம் தாயார் திடீர் மரணம்! அவரது காரியத்தை முடித்துவிட்டு-சில தினங்கள் வெளியே செல்லக் கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் மீறி எழுதின பரீட்சை அது!

     அதன்பிறகு தந்தை கொடுத்த ஊக்கத்தில் இவரது கல்வி ஏறுமுகம்! பி.ஏ., எம்.ஏ. தமிழ் படித்து படித்த கல்லூரியிலேயே பேராசிரியர் வேலை! (1985). தமிழ்பற்று காரணமாய் கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதுவார். நடிப்பார்! சிறு பத்திரிகை நடத்துவார். பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வார். கு.ஞா.விவசாயத்திலும் தேர்ச்சி பெற்றவர். சளைக்காமல் அனைத்து வேலைகளும் பார்ப்பார்.

       அப்பா செய்துவந்த மார்கழி மாத கோயில் பிரசங்கத்தை விடியற்காலை நான்கு மணி-அவருக்கு முடியாமல் போனதால் ஞானசம்பந்தம் ஆரம்பித்து 14 வருடங்கள் தொடர்ந்திருக்கிறார்.

      படிக்கும் காலத்திலிருந்தே ரயிலில் பாட்டு பேச்சு என்று நண்பர்களுடன் அடித்த கூத்துகள் இன்று நகைச்சுவைக்கு உரமாய் அமைந்திருக்கின்றன. தன்னைவிட நன்றாய் படித்த மாணவர்கள் ஏதோ வேலை பெற்று இன்னமும் அதேமாதிரி ரயில் பயணத்திலும் ஒரே மாதிரி வாழ்வு சூழலில் இருப்பதையும் வியப்போடு தெரிவிக்கிறார் கு.ஞா.

     இவர் ``சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் வேண்டுதலும் வழிபாடுகளும் பற்றி ஆராய்ச்சி நடத்தி எம்.ஃபில் பெற்றுள்ளார்.

           வ.உ.சி.க்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்த அரசன் சண்முகனார் (1868 -1915) பற்றி ஆராய்ந்து ``டாக்டரேட்  பெற்றுள்ளார்.

     இவருக்கு திருமணம் நிச்சயித்த பின்பு அப்பா உடல் நிலை மோசமாகி, ``நான் இறந்தாலும் கூட உன் திருமணம் நிற்கக் கூடாது. குறித்தபடி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நிச்ச்யித்த பெண்ணிற்கு பாதகமாய் அமைந்து விடும் என்று வலியுறுத்தியிருந்தார். சொன்னபடியே அப்பா திருமணத்திற்கு முன்பே இயற்கை எய்தியது இவருக்கு பேரிழப்பு.

     திருமணத்திற்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்திருந்த திருமதி அமுதா சம்பந்தனை அதன்பிறகு எம்.ஏ. பி.எட்., எம்.ஃபில்  வரை படிக்க வைத்தார் இவர். மனைவியின் ஒத்துழைப்பு இவருக்கு பெரிய பலம். இவர்களின் வாரிசுகள் அர்ச்சனா மற்றும் குரு இருவருமே கம்ப்யூட்டர்  என்ஜினியரிங் படிக்கிறார்கள்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles