HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      1985 முதல் பட்டிமன்ற நடுவராயிருக்கும் ஞானசம்பந்தன், இதுவரை 5000க்கு மேல் மேடை ஏறியிருக்கிறார்.

    1991 இல் ``ஹியூமர் கிளப் ஆரம்பித்து பிரதி மாதம் முதல் ஞாயிறுகளில் நடந்துவரும் இது 15 மாவட்டங்களில் கிளைவிட்டிருக்கிறது. அமங்கலம், ஆபாசம், அரசியல், பிறரை தாக்குதலில்லாமல் நகைச்சுவை அமைப்பது இவரது சிறப்பு.  

     வானொலி, தொலைகாட்சி சொற்பொழிவுகள் 2000 முதல் ஜெயா டி.வி.யில் தினந்தோறும் இன்றைய சிந்தனை என நிகழ்ச்சிகளுக்காக இவர் நிறைய படித்துக் கொண்டேயிருக்கிறார்.

     சமூக மேம்பாடு இவரது கொள்கை. பெற்றோர் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து ஏழைகளின் கல்விக்கு இவர் உதவி வருகிறார்.

     சென்னையில் கலைஞருடன் சேர்ந்து முதன் முதலில் ஞானசம்பந்தன் பேசியதை கேட்ட அவர் மனம் மகிழ்ந்து `தமிழ் இயக்கத்தின் சிற்றரசு! என்கிற பட்டத்தை அளித்தார் (கோகலே அரங்கு 1985).

     இளம்பருவத்தில் மல்லிகை மன்றம் மூலம் கதை வசனம் எழுதி டைரக்ட் செய்து நடித்த அனுபவம் இவருக்கு இன்று சினிமாவிலும் காலூன்ற உதவியிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா மூலம் கமல் அறிமுகமாகி, அவருடன் விருமாண்டி படம் சேர்ந்து பணியாற்றினதை கு.ஞா. பெருமையாய் நினைக்கிறார். அதன் பிறகு பல படங்கள்! கமலுடன் நெருக்கம்!

    வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் தரும் இவரது பலம்-படிப்பு! அறிவு தேடல்! பலவீனம், கறாராய்- கடுமையாய் நடந்து கொள்ள முடியாததால் ஏற்படும் நேர விரயம்! பண இழப்பு!   

 டாக்டர் அக்பர் கவுசர்:

     டாக்டர் அக்பர் கவுசர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாராயணகுப்பம் எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். வறட்சி காரணமாய் 1950-ல் பிழைப்புக்காக குடும்பம் வாணியம்பாடிக்கு மாறிற்று.

    கவுசர் 1976 ல் வாணியம்பாடியில் பி.காம் முடிந்திருந்தாலும் கூட அவரது ஆர்வமெல்லாம் (அம்மாவழி) தாத்தாவின் நாட்டுவைத்தியத்தின் மேலேயேயிருந்தது.அதன் பலனாக பேரணாம்பட்டில் அரசு பதிவுபெற்ற வைத்தியசாலையில் முறைப்படி ``யுனானி  மருத்துவம் படித்து அம்பலூர் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் மருத்துவமனை தொடங்கினார்.

     40 கிராமங்களை உள்ளடக்கிய அம்பலூர் வட்டத்தில் இவர் மட்டும்தான் இஸ்லாமியர். தாய்மொழியாக உருதில் படித்திருந்த அக்பர் கவுசர். அதன் பிறகு தான் தமிழ் படித்தார்.கவுசரின் திறமையை உலகுக்கு உணர்த்த அவருக்கு பல சந்தர்ப்பங்கள் வாய்ந்தன.

     அந்தநாளில்- பெரிய கவுண்டர் எனும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்த கேன்சர் நோய் இவரது மூலிகை வைத்தியத்தால் சரியாயிற்று குழந்தை இல்லாத தம்பதிக்கு இந்த வைத்தியம் மூலம் குழந்தை பாக்யம்! இதன் காரணமாய் கைராசி டாக்டர் என வேகமாய் இவரது புகழ் பரவ ஆரம்பித்தது.

     இவரது மனைவி திருமதி. அப்சர் சைதா கர்னாடகத்தில் உள்ள கோலார் நகரத்தை சேர்ந்தவர். அக்பரின் மாமனார் அட்வகேட் மேயராகவும் இருந்தவர்.

     அக்பரின் வளர்ச்சி சொந்தமாய் வாணியம்பாடியில் மருத்துவமனை கட்டுகிற அளவிற்கு உயர்ந்தது. குடிப்பழக்கத்தை விரட்டவும், அவர்களை திருத்தவும் அக்பர் கவுசர், `மது அடிமை மறுவாழ்வு மையம் ஒன்றை நிறுவினார். 1989-ல் வி.பி.சிங் பிரதமராகவும் ராம்விலாஸ் பஸ்வான் மருத்துவ துறை மந்திரியாகவும் இருந்த சமயம்

    பீகாரில் குடியால் பாமரர்கள் அதிகம் அழிந்துபோகும் சம்பவங்கள் நடக்க குடிக்காமல் இருப்பதற்கு சிகிச்சை ஏதும் உண்டா என அலசப்பட்ட போது தமிழக அரசு இவரை சிபாரிசு செய்ய, அக்பர் கவுசர், யுனானி மருத்துவத்தை பரிந்துரை செய்ய தேசிய அளவில் இவரது பெயர் பரவ ஆரம்பித்தது.

    இவரது பரிந்துரைப்படி, வேலையில்லா பட்டதாரிகளை மது அடிமை மீட்பு பணிக்கு அரசு அனுப்ப ஆரம்பித்தது. தமிழக அரசும் இதற்காக சுமார் 6000 பேரை இவரது மருத்துவமனைக்கு பயிற்சிக்கு அனுப்ப இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

     அக்பர் கவுசரின் மருத்துவத்துறை தேடலும், ஆர்வமும் எந்த தருணத்திலும் குறைவதில்லை. இவர் இலங்கை பல்கலைகழக வைஸ் சான்ஸ்லர் ஆண்டன் ஜெய்சூர்யாவிடம்  அக்குபஞ்சர் பயிற்சி பெற்று அந்த அடிப்படையில் மூலிகை மூலம் போதை மருந்துக்கு முறிவு வைத்தியம் கண்டு பிடித்தார்.

 அந்த சமயம் `தேவி வார இதழ்

    காஷ்மீர் போலீஸ் கமிஷனரின் மனைவி அஸ்மா என்பவர் போதைக்கு அடிமையாகி சீரழிந்து, உலகம் முழுவதும் வைத்தியம் பார்த்தும் பிரயோஜனமில்லாமல் சென்னை உதவும் கரங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கட்டுரை வெளியாகி இருந்தது.

    கவுசர் `தேவி ஆசிரியர் மூலம் அந்த பெண்ணை போய் சந்தித்து சிகிச்சையளித்து ஒரே வாரத்தில் அவர் குணமானார். அன்று முதல் ``தேவி இதழ் இவருக்கும் இவரது கட்டுரைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறது.

    கவுசர், தனது மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைக்காக 1991 ல் நடந்த உலக மருத்துவ மாநாட்டில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

    1992 ல் கவுசர் பான்மசாலாவை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதே போல வாணியம்பாடியில் குடிகாரர்கள் மாநாடு!

    அன்றைய கலெக்டர் திரு.ராமசுந்தரம் கிராமத்துக்கு இருவர் என அழைத்துப் போய் அதில் கலந்துகொள்ள உத்தரவிட்டார்.

     1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகம் சிறுநீரகம் , கல்லீரல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளித்து குணம் பெறச் செய்ததாக செய்தி கிடைக்க அது என்ன மருந்தாக இருக்கும் என்று கவுசர் ஆராயும்போது காசினி கீரை கிடைத்தது.

     அந்த சமயம் சிறுநீரக மாற்று செய்ய முடியாத ஒருவர் வர- கவுசர் நபி மருத்துவம் மூலம் முயற்சி செய்ய, அவர் குணம் பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

   1995 ல் கவுசர், இந்த காசினி கீரை நல்ல மருந்து என சிபாரிசு செய்ய 5 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் இவருக்கு சாதகமான பதில் கிடைத்தது.

    கோவை அவினாசிலிங்கம் பல்கழகவேந்தர் டாக்டர்.ராஜம்மாள் தேவதாஸின் எம்.எஸ். டாக்டர் மகளுக்கு இருதய வால்வு அடைப்புடன் சிறுநீரகமும் வேலை செய்யவில்லை. கவுசர், காசினி கீரை மூலம் அவரை குணப்படுத்த அதன் பிறகு அந்த மருந்துகள் கோவை பல்கலைகழக நோயாளிகளுக்கு நேராக கொடுக்கப்பட்டது.

   காசினி கீரை சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதன் மகிமைகளை அறிந்த அன்றைய கலைஞர் அரசு காசினி கீரை மருந்துக்கு வரிவிலக்கு அளித்தார்.

   கவுசர், காசினி பவுடர் கேப்சூல் கம்பெனியும், மூலிகை பண்ணையும் உருவாக்க இது பெரிதும் உதவிற்று.

    அக்பர் கவுசர் தான் கற்ற- கண்டறிந்த யுனானி மருத்துவ விஷயங்களை வெளிப்படுத்த 200 நோய்கள் யுனானி வைத்யம் என்கிற நூலை சாந்தி பதிப்பகம் மூலம் வெளியிட்டார். பிறகு மூலிகை மருத்துவம் என்கிற பெயரில் மாத இதழும் வெளியிட்டார்.

    பிறகு அல்கவுசர் பப்ளிகேஷன் மூலம் கவுசர் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உருது, ஆங்கிலத்தில் 100 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ளார். மணிமேகலை பிரசுரமும் இவரது மூலிகை வைத்தியம் என்ற நூலை வெளியிட்டுள்ளது.

     அக்பர் கவுசர் வாணியம்பாடியில் கட்டடம் கட்டி பளிங்கு கற்களில் தான் கற்றதை கல்வெட்டுகளாக சுவர்களில் பதிந்து வைத்திருக்கிறார்.

     இந்து மதத்திலும் 1000 வருடங்கள் முன்பிருந்தே ஸ்தலவிருட்சம் மரங்களை கோயில்களில் வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. அக்பர் அதுபற்றி ஆய்வு செய்து `கோயில் மரங்கள், எனும் பெயரில் 15 பாகங்களாக நூல் வெளியிட்டுள்ளார்.

     அத்துடன் தன் பண்ணையிலும் கோயில் மரங்கள், தோட்டம் என்று தனியாகவும் அமைத்துள்ளார்.

     இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் என ஆறு வாரிசுகள். இவருக்கு சென்னை மற்றும் பெங்களூரில் சொந்தமாய் மருத்துவமனை உள்ளது. அங்கு நோயாளிகள் தங்குவதற்கு இலவசமாய் அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

     தமிழகத்தில் சித்தவைத்தியம் திராவிடர் மூலமும், ஆயுர்வேதம் ஆரியர் மூலமும், யுனானி இஸ்லாமியர் மூலமும் வெளிக் கொணரப்பட்டுள்ளது.

     யுனானி அரபு நாட்டு கலாச்சாரம் என்பதால் உருது, அரபியில் உள்ளதால் தமிழக மக்களிடம் முழுமையாய் போய்ச் சேரவில்லை என்று கவுசர் அவற்றை தமிழாக்கம் செய்துள்ளார்.

     கர்னாடகா சுகாதார மந்திரி, டாக்டர் மகாதேவப்பா, டாக்டர் அக்பர் கவுசருக்கு `தெய்வீக மருத்துவர் பட்டம் கொடுத்து கெளரவித்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படும் விஷயம்.

 அறிவொளி:

     ``ஒரு பிரச்சினை அல்லது சிக்கல் என்றால் அவற்றிலிருந்து விலகுவது கூடாது. விலகினால் அது திரும்பவரும். அதை எதிர்கொள்ளும் எதிர்ப்புசக்தியை வளர்த்துக் கொண்டோமானால் வந்த பிரச்சினை தானே ஓடிப்போய்விடும்!

     பன்றி மூலம் காய்ச்சல் பரவுகிறது என்கிறார்கள். ஆனால் பன்றியோடு வாழும் மனிதனுக்கு எதுவும் வருவதில்லையே!

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles