HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      இந்த நூல்களை பல்வேறு பல்கலைக் கழக மாணவர்கள் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இலக்கிய வீதியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை மதுரைப் பல்கலைக் கழகம் முதுகலைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது.

    இலக்கியவீதியின் 30ஆம் ஆண்டினைக் கொண்டாடும் விதமாக 30 கூட்டங்களை நடத்த இனியவன் தீர்மானித்திருக்கிறார். அதிலும் தேசிய அளவிலான எழுத்தாளர்களை அழைத்து கெளரவிக்கும் விதமாக நான்கு கூட்டங்கள்! குழந்தை எழுத்தாளர்களுக்காகவே ஒரு கூட்டம்! ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் பெறப்படும் சிறுகதைகளில் சிறந்தவற்றைக் தேர்ந்தெடுத்து அவற்றைத் தொகுத்து ஆண்டு விழாவில் நூலாக வெளியிடும் திட்டமும் உண்டு. இவை தவிர, பல்வேறு போட்டிகளை நடத்தும் திட்டங்களும் உள்ளன.

    சென்டினேரியன் ட்ரஸ்ட் இவருக்கு வழங்கிய `சேவாரத்னாவிருதும், அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் வழங்கிய `மாட்சிமை விருது (FelloWship) விருதும், சென்னைக் கம்பன் கழக விருதும் குறிப்பிடத்தக்கவை.

     மேலும், உலகம் சுற்றிய தமிழர் சோமலெ பெயரால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையினர் இந்த ஆண்டு இனியவனுக்கு `சோமலே விருது அளித்து கெளரவித்துள்ளனர். சென்னை கம்பன் கழக செயலாளராக இனியவன் நியமனம் செய்யப்பட்டு, தற்போது பணியாற்றி வருகிறார். 

  தி. தமிழ்ச் செல்வன்:

        ஒரு தொழிலை துவக்கவும் அதை நடத்திச் செல்லவும் பாரம்பர்ய தொழில் அறிவு வேண்டும். பெரிய முதலீடு வேண்டும்-செல்வாக்கு வேண்டும் இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்கிற நடைமுறை கோட்பாடுகளுக்கு விதிவிலக்காக இருக்கிறார் திருச்சி `சூப்பர் குவாலிடி சர்வீஸஸ் கம்பெனியின் உரிமையாளரான திரு.தி.தமிழ்ச் செல்வன்.

    திருச்சி மாவட்டத்தில் `பெல் மற்றும் அது சம்மந்தப்பட்ட கம்பெனிகள் தவிர  பெரிய அளவில் தொழில்கள் கிடையாது. விவசாயம் தான் பிரதானம் தமிழ்ச் செல்வனும்கூட திருச்சி மாவட்டம் எதுமலை கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

    இளம் வயதிலிருந்தே இவருக்கு சொந்தமான தொழில் தொடங்க வேண்டும் எனும் ஆர்வம். திருச்சி கவர்மென்ட் பாலிடெக்னிக்கில் சேர்ந்தபோது இவர் விரும்பின மெக்கானிக்கல் துறையில் சீட் முதலில் மறுக்கப்பட்டது.

    தமிழ்ச்செல்வன் விடவில்லை,``எனக்கு சீட் தாருங்கள். இந்த துறையில் படித்து தொழில் தொடங்கி பலருக்கும் வேலை வாய்ப்பு தரவேண்டும் என்பது என் லட்சியம். தொழில்களை ஊக்கப்படுத்தி வரும் அரசாங்கத்தின் கொள்கையை செயல்படுத்த எனக்கு வாய்ப்புத் தாருங்கள் என்று இவர் எழுதின கடிதம் கல்வியாளர்களை கவர்ந்தது-அனுமதி கிடைத்தது.

    படிக்கும்போது லேத்-மெக்கானிக்கல் ஒர்க்‌ஷாப்பில் பிறருக்காக பணியும் செய்து தன் படிப்பு செலவிற்கும் மேல் சம்பாத்யம் பெற்றதை தமிழ்ச்செல்வன் நினைவு கூர்கிறார்.

    1978 இல் டி.எம்.இ முடித்தவர் `பெல் கம்பெனியில் பயிற்சி பெற்றார். அங்கேயே வேலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும்கூட அரசாங்க கம்பெனியில் சொகுசு அனுபவித்து விட்டால் பிறகு சொந்த தொழிலில் கவனம் திரும்பாது என்று வெளியேறி காவிரி என்ஜினியரிங்கில் சேர்ந்து 10 வருடங்கள் பணியாற்றினர்.

    அங்கு பல பிரிவுகளிலும் உழைத்து கற்றுக் கொண்ட விஷய ஞானம் இவருக்கு நல்ல அஸ்திவாரம் அமைந்தது. அதன் பலனாய்-

    1986 இல் இக்கம்பெனி பார்ன்ர்ட்ஷிப்பில் உதயமாயிற்று. பிறகு இவரே தன் கடுமையான உழைப்பு-முயற்சி திறமையால் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

    திருச்சி மட்டுமன்றி மாத்தூர்,விராலிமலை கோவை என கிளைகள் உள்ள இக்கம்பெனியில் 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களின் பணி பெரும்பாலும் `பெல் கம்பெனிக்கு நடக்கிறது. அதிக காற்றழுத்தமுள்ள கலங்கள், வால்வுகள் போன்ற உலோக உறுப்புகளின் தர- பரிசோதனை இவர்களது பணி.

    இவர்கள்- எக்ஸ்ரே ரேடியோலஜி, அல்ட்ராசோனிக் (Flow detection and thicknes gauging Magnetic particle testing and Dye Penetrant testing, Stress relieving            போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    ஊழியர்களின் ஆத்மார்த்த உழைப்பும், கூட்டு முயற்சியும், தரமான தொழில் உபகரணங்களும், கற்று- பயிற்சி பெற்ற தொழில் அறிவும் தன் பலம் என்கிறார் தமிழ்ச்செல்வன்.

    கம்பெனியில் ஒவ்வொரு தொழில் செயல்பாட்டிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருப்பதால் சரியாய் திட்டமிட முடிகிறது இவரால்.

     கடின உழைப்பும் எந்த வேலையானாலும்- இரண்டு வருடங்கள் முன்பே திட்டமிட்டு அதற்கு வேண்டிய உபகரணங்களை வரவழைத்து தன்னை தயார்படுத்திக் கொள்வது இவரது சிறப்பு. கம்பெனிக்கு இவர் செலவை பார்க்காமல் வெளிநாடுகளிலிருந்து தரமான  equipment  களை வரவழைத்து விடுகிறார்.

 அதனால் Quality  சர்வீஸ் தரமுடிகிறது என்பார்.

     மனைவி லதாவும், கம்பெனியின் இதர கிளைகளை கவனித்து வரும் சகோதர்களும் இவருக்கு பக்கபலம். எம்.பி.ஏ. படித்துள்ள மகள் லட்சுமி பிரபாவும் இதே கம்பெனியில் பணியாற்றி தந்தைக்கு உதவியாயிருக்கிறார்.

    பொது காரியங்கள், சேவைகளில் நேரடியாய் ஈடுபட அவகாசமில்லாவிட்டாலும் கூட-தமிழ்ச்செல்வன் சேவை அமைப்புகளுக்கு முடிந்த அளவில் உதவி வருகிறார்.

    தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள் வியாபார ரீதியில் போய் கொண்டிருப்பதால் சாதாரண மனிதர்களுக்கு நல்ல சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது.

    ஏழை எளியோரும் பயன்படும் வகையில் திருச்சியில் தரமான எல்லா வசதிகளும் கொண்ட மருத்துவமனை நிறுவ வேண்டும் என்பது இவரது லட்சியம். 

 ஆனந்தி நடராஜன்

    பெண்களின் சக்தி அபாரமானது. அவர்களது திறமை, பலம், சாமர்த்தியம், துணிச்சல் போன்றவற்றை ஆண்கள் என்றில்லை, பெரும்பாலான பெண்களும் அறிவதில்லை என்பதுதான் உண்மை.

    குடும்பம், குழந்தைகளை கவனித்து கொள்வதற்குமப்பால் கலை, இலக்கியம், விளையாட்டு இவற்றுடன் வியாபாரத்திலும் முன்னணி வகிக்கும் பெண்களில் திருமதி. ஆனந்தி நடராஜனும் ஒருவர்.

    இவரது கணவர் திரு.நடராஜன் ஸ்பிக்கில் தூத்துக்குடியிலும் பிறகு குவைத்திலும் பணிபுரியும் போது ஆனந்தி அந்தப் பகுதிகளில் சமூக அமைப்புகளில் தன்னை ஐக்கியப்படுத்தி சிறப்பாக செயல்பட்டவர்.

   குவைத்தின் பாரம்பர்யமிக்க தமிழ் அமைப்பான பாரதி கலை மன்றத்தில் துணைத் தலைவியாக இருந்து ஆற்றிய பணிகள் ஆனந்தியை வியந்து பார்க்க வைத்தன.

   வேகம்-விவேகம்-அஞ்சாமை ஒரு காரியத்தை தொட்டுவிட்டால் அது வெற்றிபெறும் வரை ஓயாமை-குழுவினரை அரவணைத்து செயல்பட வைக்கும் பக்குவம்-சாமர்த்தியம்-எந்த பிரச்னை என்றாலும் அதை நேரிடும் ஆற்றல்-மேடைபேச்சு-கலைகளின் மேலுள்ள ஆர்வம்- அவற்றை வளர்க்க உதவும் பாங்கு. இவற்றுடன் விருந்தோம்பல்-எப்போதும் கலகல பேச்சு-என ஆனந்தி பற்றி நிறையச் சொல்லலாம்.

    குவைத்தில் இருக்கும்போது ஃப்ரண்ட்லைனர்ஸ் அமைப்பிற்காக திரு.ப.சிதம்பரம், திரு.டி.என்.சேஷன் வந்தபோது- குவைத்திற்கு வரும் அவர்களை தமிழ் அமைப்பான பாரதி கலை மன்றம் வரவேற்க வேண்டும்- கெளரவிக்க வேண்டும் என்று இணைந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது இவரது தமிழார்வத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    பின்னர் மகளின் படிப்பிற்காக சென்னையில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது-எப்போதும் ஆக்கப்பூர்வமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த அவரது செயல்பாடுகளில் ஒரு தேக்கம்.

    சென்னையில் எதுவுமே செய்யாமல் சும்மா அடங்கிக் கிடப்பதில் அவருக்கு விருப்பமில்லை. கணவர் நடராஜனின் தூண்டுதலில் நண்பர்களின் ஆலோசனையில் ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்கிற முடிவிற்கு வந்தார்.

 வியாபாரம் என்றால் எந்த மாதிரி?

   ஒரு பெண் தனியாக வியாபாரத்தில் ஈடுபட முடியுமா என்று பலரும் மிரட்டினர். ``வேண்டாத தலைவலி! நிம்மதி போகும்!

   ஆனந்தி ஒரு மாதம் தீவிர `சர்வேயில் இறங்கினார். எது சரியாக வரும்? பெண்கள் கவனித்துக் கொள்கிற மாதிரி எளிமையான தொழிலாக பார்க்கலாம் என்றனர். பியூட்டிபார்லர் வைக்கலாம் என்று சிலர்.

    ஆனந்திக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை. சவாலான துறையாக தேர்வு செய்தார். அதன் செயல்வடிவம் தான்  Magna Shopee.

    இதெல்லாம் பெரிய தலைவலி பிடித்த வேலை, கஸ்டமர்கள், கடன்காரர்கள், சப்ளையர்கள் என அல்லாடணும். ஆரம்பிக்காதே. ஆரம்பித்தாலும் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என்று பலரும் மிரட்டினர்.

    கணவர் நடராஜன் கொடுத்த தெம்பில் ஆனந்தி-வந்தது வரட்டும் என்று இந்த பல்பொருள் அங்காடியை துவங்கி அது இன்று 4 வருடங்களாக வெற்றிகரமாய் நடந்து கொண்டிருக்கிறது.

         ஆனந்திக்கு அவரது தாயும், சகோதரி நிர்மலாவும் உதவுகிறார்கள். 14 பெண் ஊழியர்களைக் கொண்ட இக்கடையின் பர்ச்சேஸ் முதல் அனைத்தும் ஆனந்தியே கவனிக்கிறார்.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles