HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      பெண் தானே என்று ஆரம்பத்தில் இளப்பமாய் அணுகின சப்ளையர்கள் கூட இவரது கறார் நிர்வாகத் திறமையை கண்டு மதிக்கின்றனர்.

    வீட்டுச் சாமான்கள் அனைத்தும் சுத்தமான பேக்கிங்கில் –சுத்தம் சுகாதாரத்துடன் வீட்டுக்கும் சப்ளை செய்கிறார்கள். இட்லி மாவு, தோசைமாவு முதற்கொண்டு எல்லாம் இங்கு கிடைக்கிறது.

    வியாபாரத்தில் நாளொரு தலைவலி சகஜம்தான். தனது துணிவான முடிவால் அவற்றை ஆனந்தி சமாளிக்கிறார். ஒரு சமயம் பெரிய தொகைக்கு நம்பிக்கையின் பேரில் கடன் வைத்துப் போன நபர்-

    பணம் கேட்டதால் –கடைக்கு ரவுடிகளை அழைத்து வந்து மிரட்ட அந்த நிமிடமே- இவர் போலீஸ் கண்ட்ரோல் ரூமை போனில் அழைக்க-அவர்கள் திரும்பி ஓடிவிட்டதை ஆனந்தி நினைவு கூர்கிறார்.

    குடும்ப நண்பரான கேப்டன் விஜயகாந்தும் அவரது மனைவியும் இக்கடையை திறந்து வைத்ததை ஆனந்தி பெருமையாய் நினைக்கிறார்.

    கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகில் ஆரம்பிக்கப்பட்ட இதை சென்னை முழுக்க விரிவாக்கும் திட்டத்தில் இருக்கிறார் இந்த சாதனை ஆனந்தி.

 தீபாவளி மலர்;  லேடீஸ் ஸ்பெஷல், நவம்பர் – 2006 

 பூரம் எஸ்.சத்தியமூர்த்தி;

    தமிழகத்தின் பல பகுதிகளில், புதுக்கோட்டையில் பிறந்தவர்கள், புகழ்கொடி நாட்டிக் கொண்டுள்ளனர். உலகளவிய அளவில், அறிவில் சிறந்து, ஆற்றலில் பெருகி, பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டுள்ளதால் புதுக்கோட்டை என்றால் புகழ்க்கோட்டை என்று குறிப்பிடலாம் போலிருக்கிறது.

    அந்த வகையில், எழுத்துலக இமயமாய் எழுந்து நிற்கும், புதுக்கோட்டை பூரம், எஸ்.சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை ஐயர் குளத் தென்கரையில், ஒரு சிறிய ஓட்டுவீட்டில் பிறந்தவர் (1937ல்).

இவரது தந்தை திரு.டி.சீனிவாச ஐயங்கார் வக்கீல் குமாஸ்தாவாக இருந்தார்.

    திரு.சத்தியமூர்த்தி, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை மாமன்னர் கல்லூரியிலும் முடித்தார்.

    திரு.சத்தியமூர்த்திக்கு எஸ்.ரங்கநாதன் என்று ஒரு சகோதரர், அவரது மனைவி திருமதி. பத்மா ஹைதராபாத்தில் வசிக்கின்றனர்.

    திரு. சத்தியமூர்த்தியின் தாயார் திருமதி.சீதா வாரப் பத்திரிகைகளைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அந்தத் தாய்ப்பால் அருந்திய சத்தியமூர்த்திக்கு, எழுத்தார்வம் உதிரத்தோடு கலந்துவிட்டது எனலாம். இவரது தாய், தான் படித்த கதைகளை, அழகாக ``பைண்ட்’’ செய்து வைத்து, சத்தியமூர்த்தியின் அண்ணனைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். அப்போது, அதைக் கேட்ட நான்கு வயதுச் சிறுவனாக இருந்த சத்தியமூர்த்திக்கு, கதை படிக்கும் ஆர்வம் உருவாயிற்று.

   இவர் கல்லூரியில் படிக்கும் போதே சிறுவர்களுக்கான கதைகள் எழுதத் தொடங்கினார். இவரது முதல்-சிறுகதை, புதுக்கோட்டையிலிருந்து வெளியான டிங்-டாங் பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து, சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான நாடகம், சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றார். தங்கப் பதக்கமும் பெற்றார். கண்ணன் பத்திரிகை நடத்திய தொடர்கதைப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றார்.

   இவருக்குச் சென்னை துறைமுக அலுவலகத்தில் வேலை கிடைக்கவே புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்குச் சென்று வசிக்கத் தொடங்கினார். சென்னை வந்த பிறகு, பெரியோர்களுக்கான இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. அமரர் கி.வ.ஜ அவர்கள் ஆசிரியராக இருந்த கலைமகள் வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு `கருவளை” என்ற தலைப்பில் கதையெழுதி முதல் பரிசு பெற்றார். மிகத் தரமான இதழான கலைமகளில் இவரது சிறுகதை வெளிவந்து, முதல் பரிசும் பெற்றது.

   தொடர்ந்து கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. 1990 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி நடத்திய வானொலிப் போட்டியில், இவரது நாடகம் ஒலிபரப்பப்பட்டது.

   இவர் சிறுவர்களுக்காக எழுதிய 35 சிறுகதைகள் ``அறிவூட்டும் கதைகள்’’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பெற்றது. இந்த நூல் சிறுவர்களுக்கான நூலாக அந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெற்று, திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் ``ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா” விருதும் பெற்றது.

    திரு.சத்தியமூர்த்திக்கு முப்பத்தி இரண்டு வயது நடக்கும்போது ஒரு வேத விற்பன்னரிடம் ஐந்து ஆண்டுகள் காலங்களில் இசைக்கப்பட வேண்டிய அவ்வேத மந்திரங்களை, இவரும் இசைபாடி வந்தார். அவ்வப்போது, வேத ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு, ``````சப்தகிரி’’ என்ற இதழில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரதிபலன் பாராமல், திருவல்லிக்கேணிப் பாடசாலை மாணவர்கள் பலருக்கு வேதங்களை தினமும் காலையும் மாலையும் கற்றுக் கொடுத்து வருகிறார். இவரிடம் வேதம் பயின்ற மாணவர்கள் பலர், பல திருக்கோவில்களில் ஆன்மீகப் பணிகளை ஆற்றி வருகின்றனர்.

   பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவர் கண்பார்வையை இழந்துவிட்டார். கண்பார்வை இழந்ததை ஒரு ஊனமாகக் கருதாமல், தளர்ந்து போகாமல்,ஆன்மீகப் பணியும், இலக்கியப்பணியும் தொடர்ந்து செய்து வருகிறார். இறைவன் அளிக்கும் எச்சோதனையையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று எண்ணுபவர் இவர்.

   அன்று, நாட்டின் விடுதலை வேண்டிப் போராடிய நாவன்மை மிக்கவர் புதுக்கோட்டைத் தீரர் சத்தியமூர்த்தி, இன்று, சீரிய எழுத்துக்களால், இலக்கியம் படைக்கும் இமயமாய் விளங்குபவர் பூரம் சத்தியமூர்த்தி. இலக்கிய உலகில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிச்சம் கொடுத்த இவர், இன்று விழி ஒளியிழந்து இருட்டில் இருக்கிறார். ஆனால் இன்னும் இலக்கிய ஒளியேற்றி வருகிறார். இறைவன் பார்வையைப் பறித்தானே என்று எண்ணாமல், இன்னும் இறைப்பணி ஆற்றி வருகிறார். வேதம் கற்பித்து வருகிறார்.

   இலக்கியத்தையும், ஆன்மீகத்தையும் இரண்டு கண்களாகக் கொண்ட இவரது சேவையைப் பாராட்டி ``வித்யா சேவா ரத்னா’’ விருது வழங்கப்பட்டது.

   இவரது தரமான எழுத்தைப் பாராட்டிப் போற்றிய பல எழுத்தாளர்களில் அமரர். கே.ஆர்.வாசுதேவன் (ரத்னமாலா), கவிஞர் பீஷ்மன் வாசவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

   பிரபல எழுத்தாளர் கே.ஜி. ஜவகர் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் ``பல்விழுந்த பெரியவர்கள் முதல் பல் முளைக்காத பாலகர் வரை அத்தனை பேரையும் தம் எழுத்தால் கட்டிப் போட்டவர் பூரம் சத்தியமூர்த்தி. `என் கதைகளை கரையான் சாப்பிட விடமாட்டேன்’ என்று உறுதியுடன் செயல்பட்டு, கண்பார்வை பறிபோன பிறகும், கதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுச் சாதனை படைத்த சாதனையாளர், தலைவலித்தாலே தளர்ந்து விடும் நபர்கள், பூரத்தைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எழுத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு `பூரம்’ ஒரு துருவ நட்சத்திரம்’’ என்கிறார்.

   வெவ்வேறு இதழ்களில் எழுதிய இவரது சிறப்புக் கதைகளைத் தொகுத்து. பூரம் பரிசுக் கதைகள் எனும் புத்தகத்தைப் பிரபல பதிப்பகம் ``சாந்தி நூலகம்’’ வெளியிட்டுள்ளது.

    சிறுகதை படிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றத்தில் வாரந்தோறும் கூட்டங்கள் நடத்துகிறார். பிரபல எழுத்தாளர்கள், இந்திரா பார்த்தசாரதி, சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ராணிமைந்தன், மதிஒளி சரஸ்வதி, கூத்தபிரான், இளையவன் ஆகியோர் இவரது அமைப்புக்கு வந்து வாழ்த்தியுள்ளனர்.

   நாம் தியானம் செய்யும்போது கண் மூடித் தியானம் செய்கிறோம். விழி மூடிய இருளில், ஆன்ம ஒளியில் இறைவனைக் காண்கிறோம். ஆனால், விழி ஒளி இழந்தவர்கள், எல்லா நேரமும் பார்வையின்றி இருளில் உள்ளனர்.

   எப்போதும் கண்மூடி இருக்கும் அவர்கள், இறைவனின் அருகிலேயே உள்ள கடவுளின் பிள்ளைகள் எனலாம்.

   51 சிறுவர் சிறுகதைகளும், 54 பொதுச் சிறுகதைகளும், நாடகங்களும் எழுதியுள்ள இவர், ஆன்மீகம் குறித்து ஒன்பது கட்டுரைகளும் எழுதியுள்ளார். ``The Musical Instruments of India”       என்ற ஆங்கிலப் புத்தகமும் எழுதி வெளியிட்டுள்ளார். எகிப்து நாட்டு பிரமிடுகள், ஓடு மனச்சக்தி, சோதிடக்கலையைப் புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள், கைரேகை சோதிடம் –புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள், பாரத நாட்டு இசைக்கருவிகள் ஆகிய தனி நூல்களும், இவரது கை வண்ணத்தில் வெளியாகி உள்ளன.

   திரு.பூரம் சத்தியமூர்த்திக்கு திரு. அமுதன் சீனிவாசன். திரு.ராமானுஜன் என்று இரண்டு குமாரர்கள் உள்ளனர். அமுதன் சீனிவாசன் எம்.எஸ்.சி., படித்து, ஹைதராபாத் அரிசி ஆராய்ச்சி இயக்குநரகத்தில் இணை விஞ்ஞானியாக உள்ளார். இரண்டாவது மகன் திரு. ராமானுஜன், இளங்கலைப் பட்டம் பெற்று, சென்னை அஞ்சல் துறையில் உதவியாளராக உள்ளார்.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles