HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

     திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு திருமதி அனுருயா, வேதவல்லி என இரண்டு மகள்கள். இருவருமே எம்.ஃபில் பட்டம் பெற்றவர்கள்.

   இளம் வயதில் ஏழ்மை விரட்டினாலும், எழுத்தை மறக்காமல், இலட்சிய வேட்கையில் இமயமாய் எழுந்து நின்று, இலக்கியம், ஆன்மீகம், சோதிடம் எனப் பன்முகம் காட்டி, விழி இழந்த போதும் வழி அடைபடவில்லை என்று விஸ்வரூபமெடுத்து, வேதங்கள் கற்ற வித்தகராய், ஓதி உணர்ந்த உத்தமராய், எழுபதைத் தாண்டியும், இன்னும் இலக்கியம் படைக்கும் எழுத்தாளராய்த் திகழுகிறார் திரு. பூரம்.

 தகவல் நன்றி:  சொல்லருவி மு. முத்துசீனிவாசன். 

  மு.தேசிங்குராஜன்:

  மார்க்குகள், ரேங்குகள் என்று மாணவர்களை மூச்சுவிடாமல் துன்புறுத்தி ரேஸ் விட்டு அதன் மூலம் வியாபார ஸ்தாபனங்களாக பள்ளி-கல்லூரிகள் மாறிவிட்டன என்கிற பரவலான புகார்களுக்கு மத்தியில்.

   வெறும் படிப்பு மட்டுமின்றி மாணவ மாணவிகளை ஒரு சிறந்த மனிதனாக தன்னம்பிக்கையுடன் வாழ்வில் எந்த சூழலிலும் சமாளித்து எதிர் நீச்சலடித்து முன்னேற்றும் பயிற்சி பட்டறையாகவும் நடத்தப்படும் பள்ளிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக-சேலம் மாவட்ட ஆத்தூரில் உள்ள தனது கிரீன்பார்க் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியை இயக்கி வருகிறார். அதன் பிரின்ஸிபலும், சேர்மனுமான திரு.மு.தேசிங்குராஜன்.

   இப்பள்ளியின் சிறப்பை கேள்விப்பட்டு பார்க்கப் போனபோது எனக்கு இன்ப அதிர்ச்சி. காரணம் தேசிங்குராஜன் எனது பள்ளி கிளாஸ்மேட்! (30 வருடங்களுக்கு பின் உணர்வுபூர்வ சந்திப்பு!) பள்ளியின் வளர்ச்சியும், பெயருக்கேற்றபடி உருவாக்கியிருக்கிற பசுமையும் பிரம்மாண்டம்! இவரது உழைப்பு முயற்சியும் மாணவ சமுதாயத்தின் மேல் கொண்டிருக்கிற பற்றும் பெருமைப்படும் விஷயம்.

    நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளாலப்பட்டியை சேர்ந்த இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம் சிறுமலர் உயர்நிலை பள்ளியில் அடித்தளம் அமைக்கப்பட்டவர்.

   பிறகு திருச்சி பிஷப் ஹீபரில் பி.ஏ. ஆங்கிலம்; திருச்சி P.G.Extension
Research Centre of Madras University  மூலம்  M.A.

    (இலக்கியம்:நியூடெல்லி  IIMC மூலம் P.G டிப்ளமா மாஸ் கம்யூனிகேஷன்; Central Institute of English and Foreign Language, Hyderabad  மூலம் P.G Couse ofTeaching  English ;அண்ணாமலை யுனிவர்சிடி மூலம் B.Ed மற்றும் M.Ed.,     தேசிங்குவின் கல்வித் தகுதி மலைக்க வைக்கிறது. இவரது கல்வித் தேடல் முடியவில்லை, இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    குடும்ப பொருளாதாரம் காரணமாய் பி.யு.சி. வரை மட்டுமே பெற்றோர்களை சார்ந்திருந்த இவர் அதன்பிறகு தன் தேவைகளுக்காக பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும் கல்லூரி அலுவலகங்களில் பகுதி நேர கிளார்க்காகவும் பணிபுரிந்து படித்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.

     ஹரியானா   Gurgaon பள்ளி மற்றும் டெல்லி பால்பவன்  பள்ளியில் பணியாற்றினவர். தலைமையாசிரியராக ராசிபுரம் ஸ்ரீவாணி மெட்ரிகுலேஷனிலும், பெரம்பலூர் மாவட்ட உடும்பியம் எடென்கார்டன்ஸ் மெட்ரிகுலேஷனிலும் பணியாற்றி, 1999 முதல் இப்பள்ளியை சிறப்புற நடத்தி வருகிறார்.

    பள்ளி நண்பர்களான ஆடிட்டர் நடராஜன், வக்கீல் ராஜேந்திரன் (MLA ) வாத்தியார் பன்னீர் செல்வம், அட்வகேட் முருகனுடன் என்னையும் பெருமையுடன் நினைவுகூரும் பெருந்தன்மை இவருக்கு.

   தேசிங்கு அதிகம் ஆசைப்படுவதில்லை. ஒரு வேள்விபோல் இப்பள்ளியை நடத்தி வருபவர்இதை இப்படியே காப்பாற்றி வந்தால் போதும் என்கிறார்.

   பிள்ளைகளிடம் டொனேஷன் பெறுவதில்லை; தவறு செய்தாலும், படிக்காவிட்டாலும் கூட தண்டிப்பதில்லை, அடிப்பதில்லை; அன்பாலும் கலந்து பேசி அவர்களை புரிய வைத்தும் திருத்துவது இவர்களது சிறப்பு.

   1200 மாணவமாணவிகள்! ஹாஸ்டலில் 150 பேர்கள் என வரையறுத்திருக்கிறார்கள். 55 ஆசிரியர்கள்!

   மனைவி திருமதி கண்மணி இவருக்கு பக்கபலம் சரித்திரம் மற்றும் ஜாக்கிரபியில் முதுகலை பட்டமும்  B.Ed ம் பெற்றுள்ள இவர் தேசிங்கு ஆக்கபூர்வமாய் செயல் பட ஊக்கமும் உற்சாகமும் தந்து வருபவர்.

   இந்த காம்பஸிற்குள்ளே இவர்களின் வீடு இருந்தாலும்கூட காலையில் வீட்டைவிட்டு இறங்கினால் பிள்ளைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட்டு இரவுதான் திரும்புகிறார்கள். அந்த அளவிற்கு ஆத்மார்த்தம்!

    நேர்மை ஒழுக்கம்-அறிவு ஆற்றலுக்கு பிள்ளைகளுக்கு முன் உதாரணமாய் இருக்கிறார்கள் பள்ளி முழுக்க இருக்கும் செடி-கொடி மரங்களின் பசுமை- பிள்ளைகளின் எதிர்காலத்திலும் இருக்க வேண்டும் என்கிற ஆர்வம்.

   படிப்போடு, மனிதாபிமானம், தன்னம்பிக்கை, முயற்சி, தலைமை ஏற்கும் பயிற்சி, உயரிய பண்புகள் என பல்துறைகளிலும் இங்கு பயிற்சியளிக்கின்றனர்.

    English Structure,Perfect your English Speech, Developing leadership among school children     போன்ற புத்தகங்களை தேசிங்கு எழுதியிருக்கிறார்.

    பள்ளி கல்லூரி மாணவர்கள் பெங்களூர் இன்டர்நேஷனல் ஸ்கூல் டீச்சர்கள், B.Ed.,  கல்லூரி என இவர் பயிற்சிகளும் கொடுத்து வருகிறார்.

    இவர்களது மகன் திவ்யா கண்ணன் பெங்களூர் Indian Institute of Planning Management  .ல்  M.B.A .,  படித்து வருகிறார்.

    ஒரு கனவு பள்ளியை நனவாக்கி சிறப்பாக்கி செயல்பட்டு வரும் தேசிங்கு இது மாதிரி தரமான தன்னம்பிக்கை ஊட்டும் பள்ளிகளை தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் உருவாக வேண்டும் என விரும்புகிறார்.

   பிள்ளைகளின் மற்ற திறமைகளை வளர்க்க பள்ளியில் நீச்சல், ஸ்கேடிங், செஸ்,நாடகம் மற்றும் தபால்தலை சேகரிப்பு, இசை நாட்டியம், நாடகம் பேச்சுக்கலை, ஸ்போர்ட்ஸ், கேம்ஸ் கலந்துரையாடல்கள், பேச்சு போட்டிகள் என நடத்திவருகிறார்கள்.

    இப்பள்ளியின் வெற்றியை தனக்கு வழிகாட்டின மாடலாக அமைந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு தேசிங்கு நன்றியோடு காணிக்கையாக்குகிறார்.

 குவைத் இந்திய தூதுவர் திரு. கணபதி

  குவைத்தில் இந்திய தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் திரு. கணபதி தமிழ்நாட்டை சேர்ந்தவர்-அதுவும் இப்பதவி வகிக்கும் முதல் தமிழர் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

   எளிமையும், கனிவும், நாட்டுப்பற்றும் மிக்க இவரது செயல்பாடுகள் குவைத் வாழ் இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன.

   நம் நாட்டின் வளத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தி குவைத் இந்திய உறவை வலுப்படுத்தும் விதத்தில் இவரது பணி தொடர்ந்து வருகிறது.

  சென்னைவாசியான இவரின் தந்தை ஜபல்பூரில் டெலிபோன் துறையில் என்ஜினியராக பணிபுரிய, அங்கேயே பள்ளி படிப்பு; பிறகு கோவை அரசாங்க கலை கல்லூரியில் பி.எஸ்ஸி (இரசாயனம்); அடுத்து சென்னை மாநில கல்லூரியில் எம்.எஸ்ஸி (இரசாயனம்), 1974 ல் முடித்து வெளியே வந்தார்.

   முதலில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையில் பணிக்கு சேர்ந்தவர், ஐஎப்எஸ் எழுதி பாஸ் செய்து, 1975 ல் மினிஸ்ட்ரி ஆஃப் ஃபாரின் அஃபயர்ஸில் இரண்டு வருடங்கள் பயிற்சிபெற்று, 1977-ல் மாஸ்கோவில் மூன்றாம் செயலாளராக பொறுப்பேற்றார்.

   பிறகு பல பொறுப்புகளில் பல்கேரிய, சிங்கப்பூர்,லண்டன், யுகோஸ்லேவியா-பெல்கிரேட் என்று பல நாடுகளிலும் பணியாற்றினார்.

  குவைத்திற்கு 2006 ஜனவரியில் வரும் முன்பு சிட்னில் சுமார் 5 வருடங்கள் கவுன்சிலர் ஜெனரலாக இருந்தார்.

  ஆத்மார்த்தம், ஒழுக்கம், நேர்மை, மலர்ந்த முகம், பிரச்சினை என்று வருபவர்களை அரவணைத்து உதவுவது, ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு உண்மையாகவும் வேகமாகவும் செயல்படுவதெல்லாம் இவரது பலம்.

 இரசாயனம் படித்தவருக்கு இந்த துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

  ``இரசாயனம் இரண்டு கெமிக்கலுக்கிடையே ஈக்குவேஷனை பேலன்ஸ் செய்கிறது. டிப்ளமஸி இரு நாடுகளுக்கும் ஜனங்களுக்குமிடையே ஈக்குவேஷனை பேலன்ஸ் செய்கிறது! இரண்டுக்குமிடையே பெரிய வித்யாசமில்லை! என்று சிரிக்கிறார்.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles