HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

     வெளிநாட்டு பொறுப்புகள், நட்பு வட்டம் மற்றும் பிள்ளைகளின் படிப்பில் கொஞ்சம் பிரச்சினை என்றாலும் கூட புதுப்புது ஜனங்கள் பலவித கலாச்சாரங்களுடன் பழகும்போது எந்த சூழலிலும் வாழலாம் என்கிற தன்னம்பிக்கை பிள்ளைகளுக்கு வளர்த்திருக்கிறது என்று மகிழ்கிறார்.

  திரு. கணபதி பிரச்சினைகளையோ, சிக்கல்களையோ கண்டு பயப்படுவதில்லை, தளர்ந்து விடுவதில்லை. ``பிரச்சினைகள் வரதான் செய்யும். அவற்றை சுமுகமாய் தீர்க்கதானே எங்களை அமர்த்தியிருக்கிறார்கள்! என்று புன்னகைக்கிறார்.

  ``பிரச்சினைகள் வரும்போது அதற்கான அடிப்படையான காரணத்தை ஆய்ந்தறிந்து அகற்ற வேண்டும். இங்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட முடியாது, கூடாது.

   நம் நாட்டின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் வந்துவிடாமல் அதே நேரம் நம் நாட்டின் பலத்தையும் விட்டுக் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும்.

   இந்த பதவியில் சேவைக்கு அளவு கிடையாது எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலும் பிரச்சனைகள் வரலாம். என்பதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.

   ``எப்படி இத்தனை எளிமையாய் உங்களால் இருக்க முடிகிறது?

    ``எளிமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக நான் இப்படி இல்லை. என் இயல்பே அதுதான். பெற்றோர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பண்பு இது என நினைக்கிறேன்!

    குவைத்துடனான கலை கலாச்சார-வியாபார தொடர்புகளை வலுப்படுத்தும் சீரிய குறிக்கோளில் இவரது பயணம் தொடர்கிறது.

   குவைத்திலிருக்கிற லேபர் பிரச்சினைகளை தீர்க்கும் முனைப்பிலும் இந்தியர்களுக்கு எம்பஸி மூலம் சிறந்த சேவை செய்ய வேண்டும் என்கிற தீவிரத்திலும் திரு.கணபதி வெற்றி கண்டு வருகிறார்.

   திருமதி உமா கணபதி இவருக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் துணையாக நின்று நம் சமுதாயத்திற்கும் உதவுவதில் பக்கபலமாயிருந்து வருகிறார்.

  இவர்களது மகள்கள் அபர்ணா, ஆர்த்தி இருவரும் சிட்னியில் தங்களது மேல்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

 என்.ஆர்.சம்பத் (வளைகுடா நாடுகள்)

   `இந்தியா ஏழைநாடு, ஏழைகள் நிறைந்த நாடு என்கிற மாதிரியான அபிப்ராயம் உலக அளவில் பரவியிருப்பது மறுக்கமுடியாத உண்மை.

   ஆனால் உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் பெருமளவில் தொழிலிலும், பிசினஸிலும், பெரிய பதவியிலும் கொடிகட்டி பறக்கின்றனர். குவைத்தை எடுத்துக் கொண்டால் எழுபது சதவிகித தொழில்கள் இந்தியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

   இதில் தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பவர்கள் பலருமுண்டு. அந்த மாதிரி பெருமை சேர்ப்பவர்களில் திரு. என்.ஆர்.சம்பத்தும் ஒருவர்.

   இவர் குவைத் இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் கம்பெனியின் ஜெனரல் மானேஜர் குவைத்திலிருந்து ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியாவிற்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. அதில் பெரும்பகுதி இவர்களின் மூலமே அனுப்பப்படுகிறது.

   யாராக இருந்தாலும், எந்த ஒரு பெரிய பதவிக்கும் எளிதாய் வந்துவிடுவதில்லை. ஒவ்வொருவருடைய வெற்றிக்குப் பின்னாலும் கடுமையான உழைப்பும், திறமையும் நிச்சயம் இருக்கும். இருவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

   சென்னையைச் சேர்ந்த இவர் இந்து தியோலோஜிகல் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். கடுமையான சட்டதிட்டம், நெறிமுறைகள், ஒற்றுமை, நேர்மை, நாட்டுப்பற்று, இறைபற்று, தியாக மனப்பான்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், கடின உழைப்பு, சமூதாய சேவை போன்ற விஷயங்களை பள்ளி தனக்கு கற்றுத் தந்தது என்று பெருமைப்படுகிறார் திரு.சம்பத்.

  பத்து வயதிலேயே தந்தையை இழந்த இவரை, இவரது தாத்தாவும் பிரபல வக்கீலுமான என்.சி.விஜயராகவாச்சாரியார் எடுத்து வளர்த்திருக்கிறார்.

  தாத்தாவின் பராமரிப்பில் சம்பத் சிறந்த மாணவனாக மட்டுமின்றி, கொள்கை வீரனாகவும் வளர முடிந்தது. ``எனது வெற்றிக்கு, சாதனைகள் எல்லாமே எனது தாத்தாவால் கிடைத்தவையே என்று சம்பத் உருகுகிறார்.

   சம்பத் வாழ்க்கையில் முன்னேற அவருடைய தாயின் தியாகமும், அன்பும், வழிகாட்டுதலும் முக்கிய காரணங்கள் என்று நினைவுகூர்கிறார். தந்தையில்லா குறை தெரியாமல் சம்பத்திற்கு அன்பும், பண்பும், கடமையும், கண்டிப்பும் ஊட்டி வாழும் கலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்ததது.

  லயோலாவில் எம்.காம். முடித்து அங்கேயே லெக்சரராக பணியில் சேர்ந்தார். அந்த சமயம் வங்கி தேர்வு எழுதி ப்ரபேஷனரி ஆபீசராக ஸ்டேட் பாங்கில் சேர்ந்தார். 37 வருடம் எஸ்.பீ.ஐயில் சர்வீஸ் பார்த்திருக்கிற சம்பத்தின் விருப்பமான சப்ஜெக்ட் என்.ஆர்.ஐ பற்றியது. இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிற சம்பத் உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து என்.ஆர்.ஐ பத்திரங்களை மார்க்கெட் பண்ணியிருக்கிறார்.

  என்.ஆர்.ஐ சர்வீஸ் அவரது நட்பான அணுகுமுறையும், பிரச்னைகளை சுமுகமாய் தீர்த்து வைக்கும் திறமையும் வங்கிக்கு பலவிதங்களில் உதவியிருக்கின்றன.

  சம்பத், இந்தியாவில் பலவித பயிற்சிகளும் பெற்றதுடன், ஜெர்மனி பிஎச்எப் பேங்கில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார்.

   இவர் கடைசியாக பேங்க் ஆபீசர்களுக்கு முக்கியமான பயிற்சி ஸ்தாபனமாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஸ்டாஃப் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்திருக்கிறார்.

   ``ஸ்டேட் பாங்கில் எனது பயிற்சியும், பெற்ற அனுபவமும் என்னை தொழில் ரீதியாக சிறந்த ஒரு பேங்கராக ஆக்கியிருக்கிறது. ஸ்டேட் பாங்க் மூலம் கடின உழைப்பு, நேர்மை, நாணயம், டீம் ஓர்க் போன்றவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன். என்கிறார் சம்பத் பெருமையுடன்.

   குவைத்தில் 1982 முதல் 5 வருடங்கள் இதே கம்பெனியில் பணிபுரிந்திருக்கிற சம்பத் இப்போது குவைத் இந்தியா எக்ஸ்சேஞ்சின் தலைமைப் பொறுப்பை ஏற்று- இந்தியர்களுக்கு சிறந்த சர்வீஸ் கொடுப்பதற்கு பலவித திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

  எந்த ஒரு வெற்றிக்கும் டீம் ஓர்க் தேவை. எனது சக ஊழியர்களும் எனக்கும் பெருமளவில் ஒத்துழைப்பு தருகின்றனர்.

   சம்பத்தின் மனைவி திருமதி. மாலினியும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் 15 வருடங்கள் ஆபீசராக பணிபுரிந்து குடும்பத்தை கவனிக்க வேண்டி விடுப்பு பெற்றவர். மகன் அரவிந்த் கம்யூனிகேஷன் படித்து அந்த துறையில் பணிபுரிந்து வருகிறார்.

   சம்பத்திற்கு பக்க பலமாயிருக்கும் மாலினி இசையில் அதிக நாட்டமுள்ளவர்.

   சம்பத்தின் பொழுதுபோக்கு, இந்தியன் மற்றும் வெஸ்டர்ன் மியூசிக், சுற்றலா செல்லுதல், மேனேஜ்மெண்ட் சம்பந்தமான புத்தகங்கள் படித்தல்.

   சொந்த திறமையுடன், மனிதநேயம் வளர்த்து இந்திய சமுதாயத்திற்கு உதவி செய்து, அதன்மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி, கம்பெனியை என்றும் முதல் இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது இவரது ஆசை.

 குவைத் இந்தியா எக்ஸ்சேஞ்ச்

   குவைத் வாழ் இந்தியர்களுக்கு நம்பகமான பொறுப்பான, பணிவான சேவை செய்யும் நிறுவனங்களில் ஒரு தலைசிறந்த, புகழ்பெற்ற நிறுவனமாக குவைத் இந்தியா இண்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் கம்பெனி விளங்கி வருகிறது. 22 ஆண்டுகளாக இந்தியாவின் மிகச் சிறந்த ஊர்களுக்குக் கூட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெயப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதரபாத் கிளைகள் மூலமாக இந்தியர்கள் சேமிக்க குவைத் இந்தியா உறுதுணையாக இருந்து வருகிறது.

   இந்தியர்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்ப ஒரு நம்பகமான நிறுவனம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது, குவைத் இந்தியா 1979ல் தன் சேவையைத் தொடங்கியது. இந்தியாவுக்கு மட்டுமின்றி, அமெரிக்க, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, ஜக்கிய அரபுக் குடியரசு, பஹ்ரைன், போன்ற நாடுகளுக்கும் டிராப்ட் மற்றும் டெலக்ஸ் மூலமாகப் பணம் அனுப்பும் பணியில் இன்று இந்தியர்களுக்குச் சிறந்த முறையில் குவைத் இந்தியா பணியாற்றி வருகிறது.

  1990ல் ஈராக் படையெடுப்பைத் தொடர்ந்து இந்தியர்கள் இந்தியா திரும்பிச் சென்றபோது. அவர்களிடம் டிராப்ட் வாங்கிய அத்தாட்சி இல்லாத போதிலும், அவர்கள் யாவரும் இந்தியாவில் டிராப்ட் பணத்தை வாங்கிக் கொள்ள உதவி செய்த ஒரே நிறுவனம் குவைத் இந்தியர்கள் குவைத் இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். டிராப்ட், டெலக்ஸ் பணமாற்றல் தவிர, டாலர், இந்திய ரூபாய் பயணக் காசோலைகளும் இந்த நிறுவனத்தில் விற்கப்படுகின்றன.

   இங்கு பணிபுரியும் யாவரும் இந்தியர்களாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடன் அவர்கள் மொழியிலேயே பேசி அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது. முகமலர்ச்சியுடன், சேவை மனப்பான்மையுடன் சிறந்த முறையில் பணியாற்றும் குவைத் இந்தியாவின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் போற்றத்தக்க வண்ணம் பாடுபடுகிறார்கள்.

  இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் அனைவரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 20 முதல் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குவைத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அன்னியச் செலாவணியில் மிகப் பெரும் பங்கு குவைத் இந்தியாவின் கிளைகள் மூலமாகத்தான் அனுப்பப்படுகிறது.

  இந்தியர்களின் பேராதரவைப் பெற்ற இந்த நிறுவனம் இந்தியக் கலைநிகழ்ச்சிகள், விழாக் கொண்டாட்டங்கள் முதலிவற்றிற்கும் நிதி உதவி செய்து இந்திய ஒற்றுமைக்கும், கலை வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கிறது.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles