HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

 லக்கி சுலைமான்:

 இளமையில் கல் என்பது பழமொழி.

  படிப்பு, அறிவை வளர்க்கவும் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கவும் அளவுகோலாக இருப்பது வாஸ்தவம் தான். ஆனால், வெறும் படிப்பும் மட்டும் திறமையையும் வெற்றியையும் தந்துவிடுமா?

  அடிப்படை கல்வி ஒவ்வொருவருக்கும் தேவை. பட்டம் பெற்று மேலே படிக்க முடியாதவர்களும், வசதி வாய்ப்பு கிடைக்காதவர்களும் அதற்காக சோர்ந்து போக தேவையில்லை.

   படிக்காத மேதைகள் பலரையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. காந்தி, நேரு, அண்ணா போன்றோர் படித்த மேதைகள் என்றால் கக்கன், காமராஜ் கருணாநிதி முதல் கமல் வரை படிக்காத சாதனையாளர்களையும் உதாரணமாகக் காட்டலாம்.

   ஒரு தொழில் தொடங்கவும் அதை நடத்தவும் படிப்பு தேவைதான். அதைவிட அதிகமாய் தேவைப்படுவது அனுபவம்! முயற்சி! கடுமையான உழைப்பு! திறமை தோல்வி கண்டு தளராமை! ஊக்கம்! நேர்மை! நாணயம்! அத்துடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் கூட.

  இவை எல்லாம் இருந்தால் ஒரு நாள் உலகையே ஆளலாம் என்பதிற்கு முன் உதாரணமாய் இருப்பவர்களில் குவைத் லக்கி பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் திரு.ஏ.சுலைமான் பாட்ஷாவும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.

   தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த இவரது மூதாதையர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு காலகட்டத்தில் விவசாயம் நலிவடையவே இவருடைய தகப்பனார். திரு.ஏ.அப்துல் கபூர் அவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கு ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்தார்.

  பிறகு இனப்பிரச்னை வந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது திரு.ஏ.அப்துல் கபூர் வெறும் கையுடன் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. என்னதான் தஞ்சை புஞ்சை என நிலங்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து சரியான வருமானம் இல்லாததால் அவர் சென்னைக்கு வந்து பிரபல லெதர் கம்பெனியில் கொள்முதல் பொறுப்பாளர்  Purchase Incharge  பதவியில் வேலைக்கு சேர்ந்தார்.

   மேற்படி கம்பெனியில் வேலையில் இருந்தபோது சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து செய்ய வேண்டும் என்ற மனத்தாக்கத்தால், பகுதிநேரமாய் பார்ட்னர்ஷிப்பில் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அது நன்றாக வளர்ந்த போது பார்ட்னரின் நம்பிக்கை துரோகத்தால் அந்த பார்ட்னர்ஷிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

      அன்று அவர் பட்ட அனுபவம் இனி எந்த தொழில் செய்வது என்றாலும்-சிறியதோ அல்லது பெரியதோ- சொந்தமாய் செய்யவேண்டுமே தவிர பார்ட்னர்களுடன் சேர்ந்துள்ள எந்த ஒரு வியாபாரமோ, தொழிலோ வேண்டாம் என்கிற தீர்க்கமான முடிவுக்கு வரவைத்தது. அதையே தாரக மந்திரமாக தன் பிள்ளைகளுக்கும் சொல்லித் தந்திருக்கிறார்.

   திரு. ஏ.அப்துல் கபூர் அந்த ஏமாற்றத்தினால் சோர்ந்துவிடவில்லை. தான் நன்கு அறிந்த ஹார்டுவேர் தொழிலையே செய்யலாம் என்று சென்னையிலேயே முயற்சி செய்துபார்த்து-போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் சொந்த ஊர் திரும்பினார்.

   பிறகு 1968-ல் சொந்த ஊரிலேயே (அய்யம்பேட்டையில்) அவர் ஆரம்பித்த லக்கி ஹார்டுவேர்ஸ் இன்று அந்த பகுதி முழுவதும் மிகவும் பிரபலமான நிறுவனம். கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் அவர்கள், ஊருக்கும் அந்த பகுதிக்கும் பல வகைகளிலும் உதவி வருகின்றனர்.

   அவரின் மூத்த மகன்தான் திரு.ஏ.சுலைமான் பாட்ஷா, அடுத்த இரண்டு மகன்களான திரு.ஷேக் அலாவுதீனும் (சாப்ஜி), திரு.முகமது இலியாஸீம் ஊரில் வியாபாரத்தை கவனிக்க- சுலைமான் பாட்ஷா குவைத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து நம்மவர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

   பள்ளியில் படிக்கும் போதே சுலைமானின் உள்ளத்தில் வியாபார சிந்தனை ஊறிப் போயிருந்தது.பெரியவர்கள் கஷ்டப்படுகிறார்களே என்று அன்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடையில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால்-மேல் படிப்பில் கவனம் இல்லாமல் போயிற்று.

   இடையில் தொழிலில் தொய்வு ஏற்பட அதை சரிகட்ட என்ன செய்யலாம் என்கிற யோசனை எழுந்தது. அந்த காலகட்டத்தில் ஊர் இளைஞர்கள் வெளிநாடு செல்லும் மோகத்தில் அதுவும் குறிப்பாய் குவைத் சென்று வேலை பார்க்க சென்று கொண்டிருந்தனர்.

   1976 ல் சுலைமான் பாட்ஷா தன் மாமா மூலம் விட்டு வேலை விஸாவில், சரக்கு கப்பலில் குவைத் வந்தார். முதலில் ஆபீஸ் பையனாக ஒன்றரை வருடங்கள் ஓரிடத்தில் வேலை பார்த்தார். பிறகு பிரிண்டிங் பிரஸ்ஸில் லேபராக சேர்ந்தார். அங்கு லேபர் என்றாலும்கூட பிரஸின் நுணுக்கங்களை அதன் பல பிரிவுகளிலும் வேலை பார்த்து-கற்று-படிப்படியாய் வளர்ச்சி பெற்றார். பின்பு குவைத் டைம்ஸ் பத்திரிகை பிரஸ்ஸில் வேலைக்கு சேர்ந்தார்.

   அந்த சமயத்தில் அங்கு அதிக அளவில் இருந்த பாகிஸ்தானியர்கள் பொறாமையில் சுலைமான் பாட்ஷா வளர்ந்துவிடக்கூடாது என்று கொடுத்த சிரமங்களும், இடைஞ்சல்களும் அதிகம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ``செய்யும் தொழிலே தெய்வம் என்று கடுமையாய் உழைத்ததன் பலனாய் அங்கு  அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. இறுதியில் அவருக்கு இடைஞ்சல் செய்து அவரை அங்கிருந்து விரட்ட முயற்சித்தவர்கள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

   ``நம்மிடம் உழைப்பும்,நேர்மையும், நாணயமும் தளரா மனமும் இருந்தால் நம் வளர்ச்சியை யாராலும் தடுத்துவிட முடியாது என்கிறார் சுலைமான்.

   குவைத் டைம்ஸ் பத்திரிகையில் பணிபுரியும் போதே அல்ராய் அல் ஆம் அரபி பத்திரிகையிலும் வாய்ப்பு வர- அனுமதி பெற்று காலையில் குவைத் டைம்ஸ், மாலையில் அரபி பத்திரிகை என சளைக்காமல் 1979 முதல் 1998 வரை சுமார் இருபது வருட காலங்கள் சுலைமான் உழைத்து சம்பாதித்தது. இன்று சொந்த பிரஸிற்கு மூலதனமாகியிருக்கிறது.

   இரண்டு கம்பெனியின் மட்டுமின்றி சுலைமான் தனியாகவும் சில சிறிய தொழில்களில் கவனம் செலுத்தினார். பெரிதாக படிக்காமல் வந்தாயிற்று. முன்னேற்றத்திற்கு அது தடையாக இருந்துவிடக் கூடாது. ஜெயித்துக் காட்டவேண்டும் என்கிற உத்வேகம், லட்சியமாயிற்று. மனதை ஒருநிலைப்படுத்தி வேறு எந்த கேளிக்கை பொழுதுபோக்கிலும் திசை திருப்பாமல்- எப்போதும் உழைப்பும், உழைப்பு, என உழைப்பு ஒன்றே தாரகமந்திரமாய் உழைத்தார். அதன் மூலம் கிடைத்த சம்பாத்யம் சொந்த ஊரில் பொருளாதார பற்றாக்குறையால் தொய்வடைந்திருந்த ஹார்டுவேர் தொழிலை வளர்க்கவும் உதவிற்று. அந்த உதவியினால் லக்கி ஹார்ட்வேர்ஸீம் வேகமாய் வளர ஆரம்பித்தது.

   ஊரில் ஹார்டுவேர் தொழில் நல்லமுறையில் வளர்ச்சியடைந்து நடந்துவர ``நீ தனியாய் குவைத்தில் கஷ்டப்பட்டது போதும், இங்கு வந்து இந்த தொழிலை ஏற்று நடத்து என்று வீட்டினர் அழைத்தனர். ஆனால் சுலைமானின் சிந்தனை, செயல் எல்லாம் தான் வளர்ந்து, கற்று, அனுபவப்பட்ட பிரிண்டிங் துறையிலேயே இருந்தது. வேலை பார்த்த இடத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் மற்றும் தொடர்புகளை வைத்துக்கொண்டு  நாமே சொந்தமாய் ஏன் பிரஸ் ஆரம்பித்து நடத்தக்கூடாது என்ற தாக்கத்தை மனதில் ஏற்படுத்தியது.

   சுலைமான் யதார்த்தவாதி, பேராசைப்படுவதில்லை, பணத்தை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. லாபம் வந்த போதும் சரி, நஷ்டம் கண்ட போதும் சரி ஒரே மாதிரி அணுகுமுறை, எளிமை, பேச்சைவிட செயலில் அதிக தீவிரம் , வீம்பு பொய பித்தலாட்டத்தை அருகில் அணுகவிட்டதில்லை. ஒருவரை பார்த்தவுடனே இவர் நல்லவர், கெட்டவர், வெத்துவேட்டு-பொய் பேர்வழி, கதை அளப்பார் என்று கணித்துவிடும் சாதுர்யம் இவரிடம் இயற்கையிலேயே கடவுள் தந்த வரமாய் அமைந்திருப்பது ஆச்சர்யமான உண்மை.

   பிரிண்டிங்தான் தன் துறை என முடிவெடுத்த பின்பு சொந்த தொழிலுக்காக அவர் அவசரப்படவில்லை. அகலக் கால் வைக்கவில்லை. ஆற அமர சிந்தித்து-அந்த தொழில் பற்றி பல வெளிநாடுகளுக்கு சென்று கற்று-பல கண்காட்சிகளில் பார்வையிட்டு-பல நவீன இயந்திரங்களை வரவழைத்து-சொந்தமாய் முதலீடு செய்து -2004 ல் ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே இன்று 100 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு குறிப்பாய் தமிழர்களுக்கு வேலை தந்துகொண்டிருக்கிறார்.

  பல கோடி ரூபாய்கள் Turn Over செய்து குவைத்தில் பத்திரிகை அல்லாமல் தனியார் இயக்கும்  பிரஸ்களில் இரணடாம் இடத்தை லக்கி பிரிண்டிங் பிரஸ் பிடித்திருப்பது இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தேடித்தந்திருக்கும் விஷயமாகும்.

  மேலும்,மேலும் விரிவாக்கப்பட்டு வரும் இந்த பிரஸ்ஸை அரட்டை அரங்க விசு நடிகர் விக்ரம்,எம்.எஸ்.விசுவநாதன் போன்ற நம் ஊர் பிரபலங்களும் விஜயம் செய்து பாராட்டியிருக்கின்றனர். சிறந்த தரம், நியாயமான கட்டணம், தாமதமில்லா விநியோகம்-இதுவே இவரது கொள்கை.

  எத்தனை வளர்ந்தாலும் கூட சுலைமான் கடந்துவந்த பாதையை மறப்பதில்லை. இந்த வசதி வாய்ப்புகள் திடீரென வந்துவிடவில்லை எத்தனை எத்தனை கஷ்டங்கள் தோல்விகளில் துவண்டுவிடாமல், தடை கற்களை படிகற்களாக்கி கடந்த வந்த சுவடுகளை எப்போதும் மனதில் பதித்து வைத்துள்ளார்.

   தான் அடிமட்டத்திலிருந்து பட்ட கஷ்டங்களை உணர்ந்திருப்பதால் தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் கஷ்டங்களையும் உணர்ந்து அதற்கேற்றபடி சம்பளமும் சலுகையும் அளித்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இவரிடம் முதலாளி தொழிலாளி என்ற பேதமில்லை. எல்லோரையும் வித்தியாசமில்லாமல் அரவணைத்து, நிறைவான தடையில்லா சம்பளம் வழங்குவதால் அவர்களும் ஆத்மார்த்தமாய் பங்களிப்பை செய்துவருகிறார்கள்.

    ``இந்த வெற்றி அலுவலர்களின் ஆத்மார்த்தத்தாலும், கடின உழைப்பினாலும் கிடைத்திருக்கிற கூட்டு முயற்சி என்று பெருமைப்படும் சுலைமான் அத்துடன் ``வீட்டையே கவனிக்காமல் சதா உழைப்பு உழைப்பு என்றிருந்தாலும் கூட முகம் கோணாமல் ஊக்கமும், உற்சாகமும் தந்துவருகிற மனைவி திருமதி ரஜியாவுக்கும் இந்த வளர்ச்சியில் பெரும் பங்குண்டு என்று பூரிக்கின்றார். இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு என்று அளவான குடும்பம்.

   பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள்! எவ்வளவோ சம்பாதிக்கிறார்கள். சம்பாதித்ததை தனக்கு, தன் குடும்பத்தார்க்கு மட்டுமே என்று சுயநல வட்டத்திற்குள் இருப்பவர்களே அதிகம்.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles