HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

  தனது சம்பாத்தியம் சமூகத்திற்கும், நலிந்தோருக்கும் பயன்பட வேண்டும் என்று செயல்படுகின்ற வெகு சிலரில் நம் லக்கி சுலைமானும் ஒருவர். குவைத்தில் நடக்கிற இந்திய, குறிப்பாக தமிழக கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் லக்கி பிரிண்டிங் பிரஸ்ஸின் ஆதரவு பெருமளவில் உள்ளது நிஜம்.

   சாதி, மத மொழி,இன வேறுபாடின்றி எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டிவரும் சுலைமானின் பங்கு ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் செயல்பாடுகளிலும் பெருமளவில் உள்ளது என்பது இவரது தொண்டுள்ளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

 கே.சோமசுந்தரம்

  ``என்ஜினியரிங் படிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பும், அதன் மூலம் கற்றறிந்த தொழில் அறிவும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகமும் அதற்கான கடுமையான முயற்சியுமே என்னுடைய இந்த உயர்வுக்கு காரணம்!

   குவைத்தின் பிரபல அல்குனைமான் ஜெனரல் டிரேடிங்&காடிராக்டிங் கம்பெனியின் நிறுவனங்களில் ஒருவரும் சீனியர் மேனேஜரும்- சீனியர் எலக்ட்ரிகல் என்ஜினியருமான திரு.கே.சோமசுந்தரம் தன் அனுபவங்களை அசைபோடுகிறார்.

 குவைத்தில் 36 வருடங்கள் அனுபவமுள்ள சீனியர்.

   மயிலாடுதுறையை சேர்ந்த இவர் அங்கே பள்ளி படிப்பு முடித்து, லயோலாவில் இடைநிலையும்-பிறகு கோவை பிஎஸ்பியில்  1958-ல் எலக்ட்ரிகல் என்ஜினியரிங்கும் முடித்து அங்கேயே லெக்சரராக சில மாதங்கள் வேலையும் பார்த்தவர்.

   அந்த நாட்களில் தமிழகத்தில் ஐந்து பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இடம் கிடைப்பது என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல.

   ``எனது தந்தை அட்வகேட் திரு.குஞ்சிதபாதம்பிள்ளை மற்றும் தாயார் செளந்திரம் அம்மாள் இருவரும் கொடுத்த ஊக்கம்-உற்சாகத்தினாலேயே – நன்றாக படித்து அங்கு இடம் பெற முடிந்தது’’ என்று சோமு தன் பெற்றோரை நினைவு கூர்கிறார்.

   1959-ல் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பயிற்சியில் சேர்ந்தவர் இரண்டே வருடத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூவ் என்ஜினியராக பதவி உயர்வு பெற்றார்.

   நெய்வேலியில் இவருக்கு கிடைத்த அனுபவம் நல்ல அடித்தளமாக அமைந்தது. அங்கு UNESCO Fellowship  க்குகாக இவர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் –டர்போ ஜெனரேட்டர்கள் பற்றிய பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.

    நெய்வேலியிலிருந்து வட இந்தியா-குறிப்பாக உத்திரபிரதேச பவர் ஸ்டேஷன் ப்ராஜக்ட்டுகளுக்கு சோமு அனுப்பப்படிருக்கிறார்.

    நெய்வேலியில் மேற்கொண்டு வளர வாய்ப்பில்லை என்கிற நிலைமையில் அந்த வேலையை விட்டுவிட்டு 1970 –ல் குவைத் –மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரிசிட்டி & வாட்டர் புராஜக்ட்டுக்கு புராஜக்ட் என்ஜினியராக சோமு தேர்வு செய்யப்பட்டர்.

  இவருடன் இன்னும் மூன்று தமிழ்நாட்டு என்ஜினியர்களும் சேர்ந்து SHUAIBA    புராஜக்டை வெற்றிகரமாய் முடித்து பாராட்டு பெற்றனர். அதன் காரணமாய் அந்த எலக்ட்ரிகல் ஸ்டேஷனுக்கு செக்‌ஷன் ஹெட் ஆக பொறுப்பேற்று 18 வருடங்கள் பணியாற்றினார்.

  பிறகு AL.ZOUR South  பவர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு அங்கு தன் திறமையை நிரூபித்தார்.

  1990 –ல் ஈராக் ஆக்ரமிப்புக்கு பின், திரும்பி வந்தபோது அதே மாதிரி வேலையில் தொடர்வதில் சலிப்பு ஏற்பட்டது. ஏதாவது புதிதாய் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எழ தனது குவைத் பார்ட்னர் திரு Khalid Al ghunaiman  மற்றும் ஜப்பான் என்ஜினியர் திரு Hideaki Wajanabe - இருவருடனும் சேர்ந்து இக்கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு 70 பேர்களின் உழைப்பில் இது வெற்றிகரமாய் செயல்பட்டு வருகிறது.

  மின்சாரம் சம்மந்தமான கட்டுமானம் பழுதுபார்த்தல், விரிவாக்கம், இயந்திரம் நிறுவுதல் இவற்றுடன் ஜப்பான் JOSHIBA  கார்ப்பரேஷனில் ஏஜண்ட்டாகவும் இக்கம்பெனி  செயல்பட்டு வருகிறது.

  கம்பெனியில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வெற்றி காண்பதில் மனைவி திருமதி நீலாவின் பங்கு அதிகம் என்றும், வீட்டுகாரியங்களை திறம்பட அவர் நிர்வகித்து அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தியிருந்ததாலேயே தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது என்று சோமு பெருமைப்படுகிறார்.

  இவரது மகன் திரு. சிவக்குமார் கம்பெனியின் நிர்வாகத்தை கவனிப்பதுடன் திருச்சியில் பிரபலமான `பணாணா லீவ்ஸ் ரெஸ்டாரென்ட்குவைத் கிளையையும் நடத்தி வருகிறார். திருமதி கார்கி சிவக்குமார் இந்திய பள்ளியில் ஆசிரியை !

   இவரது மூத்த மகள் திருமதி ராதிகா சுவாமிநாதன் இந்தியன் கம்யுனிடி ஸ்கூலில் வைஸ் பிரின்சிபாலாக இருப்பதுடன் கலை மற்றும் தொண்டு காரியங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறார். இவரது கணவர் திரு. சுவாமிநாதன் SHUAIBA  South  பவர் ஸ்டேஷனில் சீனியர் மெக்கானிகல் என்ஜினியராயிருக்கிறார்.

   சோமுவின் இளை மகன் செளந்தர்யாவும், அவரது கணவர் கிருஷ்ணராய காமத்தும் டாக்டர்கள், எடின்பர்கில் இருவரும் பணிபுரிகின்றனர்.

  குவைத்தில் முதன் முதல் தமிழ் அமைப்பு ஆரம்பித்து நடத்தியதில் சோமுவுக்கு முக்கிய பங்கு உண்டு.

  மகன் மற்றும் மகளுக்கு,சாதி-மதம்-மொழி பாகுபாடில்லாமல் அவர் விரும்பியபடி வாழ்க்கை அமைத்து கொடுத்தது. இவரது விசால மனதிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

  சட் சட்டென வரும் கோபம் இவருக்கு ஒரு பலவீனம் என்றாலும்கூட வந்த சுவடிலேயே அது காணாமல் போய் இயல்பாகி விடுவார்.

  மனிதாபிமானம், உதவும் குணம் தேசப்பற்று, தாய்மொழிப்பற்றும் கொண்டு –அலட்டலில்லா – ஆர்பாட்டமில்லா அறிவு களஞ்சியமான திரு.சோமசுந்தரம் ஒரு நிறைகுடம்.

 இராமசாமி ரெட்டியார்;

  படிக்காத மேதை என பாராட்டப்படுபவர் ராமசாமி ரெட்டியார். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லை, குவைத் நாட்டிலும் செல்வாக்கு.

  குவைத்தில் பல கோடி ரூபாய்கள் Turn over  ல் கான்ட்ராக்ட் எடுத்து, 50க்கும் அதிகமான தமிழர்களுக்கு வேலை கொடுத்து வருகிறார்.

  ராமசாமியின் சொந்த ஊர் கோவில்பட்டி அருகே எம்.துரைசாமிபுரம் கிராமம்! இரண்டு சகோதரர்கள். இரண்டு சகோதரிகளுடன் இவர் கடைக்குட்டி, சிரமமான குடும்பச்சூழல்,

  1952 –ல் பிழைப்புக்காக தன் 17 வயதில் பர்மாவுக்கு பயணமானார். அங்கு, கிராம்ப்டன் கம்பெனியில் தன் சகோதரருடன் சேர்ந்து டவர்லைனில் வேலை! ஆரம்பத்தில் லேபர்! பிறகு படிப்படியாய் ஃபோர்மேனாக முன்னேற்றம்!

  1950 –ல் குவைத் நாட்டில் –ஓவர்  ஹெட் டிரான்ஸ்மிஷன் வேலையை மேற்கொண்டிருந்த ஏதோ ஒரு வெளிநாட்டு கம்பெனி, அதை பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட, இவர் அதை எடுத்து வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கவே , அரசாங்கத்திற்கு சந்தோஷம்!

 புதுப்புது கான்ட்ராக்ட்கள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

   `ALKULAB & ramasamy’  என்கிற கம்பெனி ஆரம்பித்து இன்று குவைத்தில் எலக்ட்ரிக் மற்றும் டெலிபோன் வேலைகளுக்கு இவர்கள் தான் கான்ட்ராக்ட்.

    TCIL எனப்படும் டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட்டுடன் சேர்ந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய டவர் ஒன்றை இவர்கள் குவைத்தில் நிறுவியிருக்கிறார்கள்.

   சதாம் சண்டைக்கு பிறகு குவைத்தில் மின்சாரம் மற்றும் தொலைபேசி மங்கிப் போயிருக்க, மிக விரைவாய் சரிபண்ணி பெயர் எடுத்து இந்தியாவிற்கு மட்டுமில்லை தமிழகத்திற்கும் பெயர் வாங்கி தந்திருக்கிறார் இந்த ராமசாமி.

   குவைத் மட்டுமின்றி செளதி, ஈராக்கிலும் நிறைய ப்ராஜக்ட்டுகளை செய்து முடித்திருக்கிறார். மின்சார வேலை மட்டுமின்றி பல அணைக்கட்டுகள், எட்டயபுரம் அருகிலுள்ள பிரபலமான ``எப்போதும் வென்றான்’’ டேம் இவரது கைவண்ணம் தான்.

  நாகலாந்து, மேற்கு வங்காளத்திலும் இவரது பணி தொடர்கிறது. உலகம் முழுவதும் போய் கால்பதித்தாலும் கூட இவர் தான் பிறந்த ஊரையும், மாவட்டத்தையும் மறப்பதில்லை.

  இந்தியாவில் கோவில்பட்டியில் விஸ்வநாத ஜின்னர்ஸ் காட்டன் மில்ஸ், லக்ஷ்மி அம்மாள் பாலிடெக்னிக் நேஷனல் என்ஜினியரிங் காலேஜ். சாரதா ஹையர் செகன்டரி, இலவச மருத்துவமனை, ஜின்னிங் பேக்டரி, கொடைக்கானலில் ஹோட்டல்கள், ரகு இண்டர்நேஷனல் டெல்லியில் ரியல் எஸ்டேட் பிசினஸ்.

  ராமசாமி ரெட்டியாருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் BBA படித்துவிட்டு Indo Kuwait General Trading and Contracting’     கம்பெனியை நிர்வகித்து வருகிறார்.

  இளையவரான அருணாச்சலம், கோவில் பட்டியிலுள்ள நிறுவனங்களை பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

  இத்தனை வளர்ந்தாலும், ராமசாமி அவர்கள் ரொம்பவும் எளிமை! பகட்டு கிடையாது. அதிர்ந்து பேசுவதில்லை. இனிமையான சுபாவம். பிறருக்கு உதவும் தயாள குணம்!

  வாழ்க்கையில் பணம் பிரதானமாக இருந்தாலும் அது மட்டும் போதாதே ! காலாகாலத்திற்கும் பெயர் சொல்லும்படி ஏதாவது செய்தாக வேண்டுமே!

 ராமசாமி ரெட்டியார் நிறைவே செய்திருக்கிறார்.

  கோவில்பட்டிக்கருகே இலவச மருத்துவமனை, இந்துக் கோவில்களுக்கு மட்டுமின்றி கிறிஸ்தவ மாதா கோயில், மசூதி என்று ஏழைகளுக்கு உதவல் என்று அரசியல் சார்பில்லாமல் சமூக சேவையும் செய்து வருகிறார். ஆன்மீக ரத்னா- திருப்பணிச் செல்வர் என்கிற பட்டங்கள் இவருக்குண்டு.

 டிசம்பர் 97, தொழில் முதலீடு இதழிலிருந்து.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles