HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

 ஆர்.சி.சுரேஷ்

  1990 வரை இந்தியாவிலிருந்து கோழி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் தானிருந்தன. அதை முதலில் ஆரம்பித்து வைத்தது. ஆ.சி.சுரேஷ் எனும் கன்னியாகுமரிகாரர்.

  குவைத்தில் சப்ளையாகும் உணவு பொருட்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கோடி கணக்கில் பிசினஸ் பண்ணி முன்னணியில் இருப்பவர் இவர்.

  பொதுவாய் நமது வீடுகளில்,  சின்ன வயதிலேயிருந்து பசங்களை, ``ஒழுங்காய் படி அப்போதான் வேலைக்கு போக முடியும் வேலை கிடைக்கும் என்று அடித்து வேலை தான் பிரதானம் என்பதை மனதில் பதிய வைத்து விடுகின்றனர்.

  இதனால் நமது நோக்கமும் வேலைதான் என்ற அளவில் அழுக்கப்பட்டு விடுகிறது. அதற்கப்பால்  எந்த முயற்சியும் இளைஞர்களுக்கு எடுக்க முடியாமல் போய்விடுகிறது.

  வேலை என்பது சராசரியாயும் பாதுகாப்பாயும் ஒரு சம்பளத்தை தரக்கூடியது என்கிற அளவில்லை.

 ஆனால் மாதசம்பளம் இன்றைய தினம் எந்த அளவிற்கு போதுமானதாக இருக்கிறது?

  ``வேலை என்பதையே குறிக்கோளாகக் கொள்ளாமல் சொந்தமாய் பிசினஸ் ஆரம்பித்தால் நிறைய சம்பாதிக்கலாம். நம்மூரில் அதற்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம் என்கிறார்.

  பட்டதாரியான இவர் இதுவரை தன் பயோடேட்டாவே தயாரித்ததில்லை. வேலைக்காக எங்கும் போய் நின்றதில்லை என்கிறார்.

  இவரது தந்தை ஆர்.சி.தம்பி அம்புலிமாமாவின் மலையாள பதிப்பான `சந்தமாமா மற்றும் அதன் ஆங்கில பதிப்பிற்கும் ஆசிரியராயிருந்தவர்.

 அவர் சற்று வித்தியாசமானவர்.

  சின்ன வயதிலிருந்தே மகனிடம் அவர் ``நீ முடிகின்றவரை படி. ஆனால் யாருக்கு கீழேயும் வேலை செய்யாமல் சொந்த காலில் நிற்கணும். சொந்தமாய் தொழில் செய்யணும் என்று போதித்து அது சுரேஷின் அடி மனதில் ஆழமாய் பதித்து விட்டதாம்.

  படிப்பு முடிந்ததும் தொழில் கற்றுக் கொள்ள வேண்டி ஊட்டியில் ``டிம்பர் பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார். இளமையிலிருந்தே சுரேஷிற்கு இசை என்றால் உயிர். இவரது தாய், தங்கை அம்புலி எல்லோருமே இசைஞானம் உள்ளவர்கள். சுரேஷ் ஊட்டியில் ஓய்வு கிடைக்கும்போது அங்கே மியூசிக் ட்ரூப்பில் பாடுவதுண்டாம்.

  1977 ல் குவைத்திற்கு 14 பேர் அடங்கிய இசைக்குழு ஒன்று நிகழ்ச்சி நடத்த கிளம்பிற்று. அதில் ஒருவர் எதிர்பாராத விதமாய் பயணிக்க முடியாமல் போக, கடைசி நேரத்தில் அந்த சான்ஸ் இவருக்கு அடித்தது.

  குவைத்தில் நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது ஏர்இந்தியா விமானம் கோளாறு காரணமாய் 24 மணி நேரம் தாமதம்.

  அந்த இடைவேளையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த திரு.கேடிபி மேனன் இவரது மனதை கலைந்து, நீ ஏன் ஊருக்கு திரும்பிப் போகணும், இங்கேயே ஏதாவது வேலை பாரேன்! என்றிருக்கிறார்.

   ``இல்லை. இங்கு வேலை பார்க்கும் எண்ணத்தில் நான் வரவில்லை!

   ``பரவாயில்லை. அந்த எண்ணத்தை இனி வளர்த்துக்கொள். உனக்கு நான் வேலை வாங்கித் தரேன்! என்று மேனன் தங்க வைத்துவிட்டாராம்.

   குவைத் இந்தியர்களுக்கு இந்த மேனன்தான் முன்னோடி அவர் பல்லாயிரக் கணக்கில் இந்தியர்களை குவைத்திற்கு வரவழைத்து வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

  சுரேஷிற்கு வேலை பார்க்க வேண்டும் என்கிற அபிப்ராயம் இல்லாவிட்டால் கூட ``வேலை பார்ப்பதென்றால் எனக்கு பாங்கில்தான் வேண்டும் என்றிருக்கிறார்.

  மூன்று மாதங்களில் அவருக்கு குவைத் நேஷனல் பேங்கில் வேலை ஏற்பாடாயிற்று. அதுவும் லெட்டர் ஆஃப் கிரடிட் எனப்படும் எல்.சி.செக்‌ஷனில்.

  அரபு நாடுகளில் எண்ணெய் மட்டும்தான் ஏற்றுமதி. மற்றபடி ஜனங்கள் உபயோகிக்கும் அத்தனை பொருட்களும் இறக்குமதிதான். இந்த இறக்குமதி சமாசாரங்களை கவனிக்கும் செக்‌ஷனில் சுரேஷ் வேலை பார்த்ததால் அதன் நுணுக்கங்களும் கஷ்டங்களும் அவருக்கு அத்துபடியாயிற்று.

 1980 சமயத்தில் இவருக்கு பயங்கர பண நெருக்கடி

  அதை எப்படி சமாளிப்பது என்று யோசித்த தருணத்தில் ஏதாவது பிஸினஸை செய்தால் என்ன என்று தோன்றிற்று.

  எதேச்சையாக ரெஸ்டாரெண்ட் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது சிக்கனுக்கு அப்போது பயங்கர டிமாண்ட் என்பதும், அது கிடைப்பதேயில்லை என்பதும் சுரேஷிற்கு தெரியவந்தது. அதை அவரது மனது ஆராய ஆரம்பித்தது.

  ஹோட்டல்காரர் விளையாட்டாய் ``எனக்கு ஆயிரம் கிலோ சிக்கன் வேணும் . உன்னால் சப்ளை பண்ண முடியுமா? என்று கேட்க, சுரேஷ் சற்றும் யோசிக்கவில்லை ``யெஸ் என்று கிளம்பினார்.

  அது அவரது அப்பாவின் பாலிஸி. வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்கும் நோ சொல்லக்கூடாது. லாபமோ-நஷ்டமோ ஒரு மோது மோதி பார்த்துவிட வேண்டும்-முயற்சிக்கு தடைகூடாது, தயக்கம் கூடாது.

  ஏதோ ஒரு வேகத்தில் ஒப்புக் கொண்டுவிட்டு சுரேஷ் சிக்கனுக்காக குவைத் முழுக்க அலைய ஆரம்பித்தார். ஓரிடத்தில் ஆயிரம் என்ன, ஐயாயிரம் கிலோ தருகிறேன் என்றதும், உடனே, வண்டி ஏற்பாடு செய்து ராத்திரியோடு ராத்திரியாக கிலோவுக்கு பத்து ரூபாய் லாபம் வைத்து அந்த ஹோட்டலில் கொண்டுபோய் இறக்கினார்.

 ஒரே நாளில் பத்தாயிரம் லாபம்!

  இது அவரது முயற்சியின் வெற்றி, சமயோசிதம், சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம் இதெல்லாம் அவரை அன்று வேகமாய் செயல்பட வைத்தன.

  அன்று இரவு அவருக்கு தூக்கமில்லை. ஞானோதயம் தோன்றிற்று. ஏன் குவைத் முழுக்க நான் ஆர்டர் பிடிக்கக் கூடாது?

   எல்லா ஹோட்டல்களிலும் அவருக்கு ஏக வரவேற்பு. ``விலை குறைவாயும் தரமாயும் சப்ளை பண்ணுவதானால் உங்களுக்கு ஆர்டர் தருகிறோம்.

 அதை அவர் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டார்.

  அதன்பிறகு பார்டனருடன் கம்பெனி ஆரம்பித்து இருநூறுக்கும் அதிகமான உணவு பொருட்களை குவைத்தில் சப்ளை செய்து வருகிறார்.

  1982 ல் இவருக்கு திருமணம், மனைவி நளினி இவருக்கு பக்கபலம், சோர்வடையும் போதெல்லாம் மனைவி உற்சாகம் தந்து தூக்கிவிட்டிருக்கிறார்.

 இவரது வேகமான வளர்ச்சிக்கு என்ன காரணம்?

    ``ஒரு பொருளை ஒரு ஹோட்டலுக்கு சப்ளை பண்ணும்போது அதனுடன் சம்பந்தப்பட்ட ஸ்பூன், டிஷ்யூ பல்குத்தும் குச்சி, ஷாஷே, மில்க் பவுடர் இப்படி எல்லாவற்றையும் தேவை அறிந்து சப்ளை பண்ணினேன் இதனால் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இடத்தில் ஹோட்டல்காரர்கள் அலைவது மிச்சப்பட்டது. என்னிடம் வந்தனர். அப்புறம் தரம்! சப்ளை!

 அடுத்த காரணம் எனது வேகம்

   பிறரிடம் ஆர்டர் பண்ணினால் பத்துமணி நேரத்தில் கிடைக்கும் என்றால் நான் அதே பொருளை இரண்டு மணி நேரத்தில் சப்ளை செய்வேன்! ஆரம்பத்தில் சிங்கப்பூர் ஹாங்காங், நியூசிலாந்து, அமெரிக்கா என்று பொருட்களை இறக்குமதி செய்தவருக்கு `ஏன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது? என்று தோன்றிற்று.

  வெளிநாட்டினருக்கு கிடைக்கும் பலன் நம் நாட்டிற்கும் கிடைக்கட்டுமே என்கிற நாட்டுப்பற்று!.

  அப்படித்தான் முட்டையை இந்தியாவிலிருந்து முதன் முதலில் ஏற்றுமதி செய்ய வைத்தார். 1990 ஆரம்பித்த முட்டை ஏற்றுமதி-இன்று உலகத்திலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

 குவைத்தில் இவரது கம்பெனியில் 300 பேர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர்.

  சுரேஷ் தன் லாபத்தில் ஐம்பது சதவிகிதத்தை நம்மூரில் கஷ்டப் படுபவர்களுக்கு உதவுவதற்கும், படிப்பு வசதி, கோயில், திருமண உதவிக்கும் செலவிட்டு வருகிறார்.

   இந்த உலகத்திலேயே பெரிய சந்தோஷம், பிறகுக்கு உதவி செய்து அவர்களின் குறை போக்கி பார்ப்பதுதான்.

 சுரேஷின் ஹாபி-போட்டோ எடுப்பது. மியூசிக் இவரது வீக்னஸ் என்கிறார்.

   சுரேஷ் கோயமுத்தூர் காரமடையில் Golden Frice எனும் உருளைக்கிழங்கு சிப்ஸ் கம்பெனி பெரும் முயற்சியில் ஆரம்பித்து இன்று அது வெற்றிகரமாய் இயங்கி வருகிறது. இதன் காரணமாய் உருளைகிழங்கு சாகுபாடியாளர்களுக்கு நல்ல லாபம்.

  நாட்டுப்பற்று, முயற்சி, செயல்திறம், உழைப்பு, பிறருக்கு உதவுதல், துணிச்சலான அணுகுமுறை, எளிமை எல்லாமே சுரேஷ் அவர்களின் வெற்றி ரகசியமாய் பளிச்சிடுகின்றன.

 தொழில் வணிக முதலீடு, 1998 ஜனவரி.  

 சிரிஸ்:

  `ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரி பெண் இருக்கிறாள்' என்கிற மொழி என் அளவிலும் உண்மை என்பேன். அதுவும் ஒரு பெண் மட்டுமல்ல அம்மா, மாமியார், மனைவி என்று மூவர். கஷ்டமான நிலைமையில் இருந்தபோது உறவுகளும், நட்புகளும் கைகொடுத்தது எனது வெற்றிக்கு படிகளாக அமைந்தது.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles