HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

  `குவைத்தில் அல் கபாண்டி இண்டர்நேஷனல் குரூப்பின் பார்ட்னரும் நிர்வாக இயக்குனருமான திரு.சிரிஸ் தன் அனுபவங்களை அசைபோடுகிறார்.

  `மர்ச்சேன்ட் நேவி ஷிப்பில் பணிபுரிந்த அப்பா சிரிஸின் இரண்டாம் வயதிலேயே இறந்துவிட, அதன்பின் இவரை படிக்க வைத்து ஆளாக்கினது. தபால் தந்தி துறையில் பணியாற்றிய அம்மாவும் தாத்தா பாட்டியும்.

  வியாபார சிந்தனை பள்ளி பருவத்திலேயே சிரிஸின் உள்ளத்தில் ஊறியிருந்தது. தன் செலவுக்காக தாயை அதிகம் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஆறாம் வகுப்பு முதலே தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் விற்பனை செய்து பணம் சம்பாதித்திருக்கிறார்.

  சென்னை செயின் பாட்ரிக்ஸ்ஸில் ஸ்கூல் முடித்தவருக்கு மேலே படிக்க விருப்பமில்லை. எண்ணமெல்லாம் வியாபாரத்திலேயே இருந்தது. வீட்டினரின் நிர்ப்பந்தத்தால் டி.பி.ஜெயின் கல்லூரியில் பி.எஸ்ஸி.(கணிதம்) சேர்ந்தவர், முதல் வருடத்தோடு வெளியே வந்து விளம்பர கம்பெனி ஒன்றில் சேர்ந்து பனியாற்ற ஆரம்பித்தார்.

  சின்ன வயது முதலே நட்பாக இருந்த இவரது மனைவி ஷாலினியை திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது-

  ``குறைந்தபட்சம் பட்டபடிப்பு முடித்தால்தான் எங்கள் பெண்ணை தருவோம் என்று அவர்கள் தரப்பில் கறாராய்  தெரிவிக்க-

   சிரிஸீக்கு அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து அதன் மூலம் கிடைத்த தொடர்புகளை வைத்து நண்பர்களுடன் சேர்ந்து 1994 ல் TAURUS கம்யூனிகேஷன்ஸ் எனும் விளம்பர கம்பெனியை ஆரம்பித்தார். விளம்பரப் படங்கள், விளையாட்டு மற்றும் சில நட்சத்திர நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனிலும், சன் டி.வி.யிலும் கொடுத்ததில் இவருக்கு நல்ல பெயர் . சம்பாத்யமும், சிறந்த தயாரிப்பாளர் என்கிற விருது பிரசிடென்ஸி கல்லூரி மூலமும் கிடைத்தது.

  சிரிஸின் பிசினஸ் வாழ்வில் ஒரு சீரான நிலைமை என்றுமே இருந்ததில்லை. முன்னேற்றம், பின்னடைவு, லாபம் நஷ்டம் என்று மாற்றி மாற்றி தாக்கும் போதெல்லாம் சிரிஸ் தன்னம்பிக்கையை மட்டும் இழப்பதில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டேயிருப்பார்.

  எல்லாம் சுமூகமாய் போய்க் கொண்டிருக்கும்போது சில பைனான்ஸ் கம்பெனிகளின் வீழ்ச்சியால் இவரது தொழிலுக்கு பெரிய அடி! முதலீடு, வரவேண்டிய பணமெல்லாம் முடங்கிவிட, 20 ஊழியர்களைக் கொண்ட இவரது கம்பெனியை மூடவேண்டி வந்தது.

  என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பிலிருந்த போது, இவரது மாமியார், ``எக்காரணம் கொண்டும் தளர்ந்து விடாதீர்கள். உங்களுக்கென்று நிச்சயம் ஒரு உன்னத இடம் இருக்கிறது என்று ஆறுதல் படுத்தினார். ``சென்னையிலேயே இருந்தால் உங்கள் மனது தளர்ந்து போகும். பேசாமல் எங்களுடன் குவைத்திற்கு வந்துவிடுங்கள். இங்கு ஏதாவது வேலை தேடிக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தார்.

  இப்ராஹிம், எஸ்.அகமதி எனும் நல்ல உள்ளம் கொண்டவர் தனக்கு விசா கொடுத்ததோடு இல்லாமல்- தனது டிரேடிங் கம்பெனியில் குறைந்த சம்பளம் என்றாலும்கூட வேலையும் தந்ததை சிரிஸ் நன்றியோடு நினைவு கூர்கிறார்.

  சிரிஸ் தனக்கு அனுபமுள்ள விளம்பரத் துறையில் குவைத்தில் வேலை தேட இவர்   Over qualified என ஒதுக்கப்பட்டார். இருந்தாலும் நல்ல வேலைக்காக அலைந்து வெறுத்துப்போய் ஊர் திரும்பிவிடலாம் என்று முடிவு எடுக்கும்படி ஆயிற்று.

  அந்தச் சமயம் இவருக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கவே (குவைத்தில் லைசென்ஸ் கிடைப்பது அத்தனை எளிதல்ல) கார் எடுத்துக்கொண்டு பொருட்களை வாங்கி கம்பெனி கம்பெனியாக ஏறி விற்கலாம் என்கிற தெம்பு வந்தது.

  ``நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று மனைவி கொடுத்த நம்பிக்கையும் அவருக்கு பலமாக இருந்தது.

  ஏறக்குறைய இவரைப் போலவே மனமுடைந்து தன் நாட்டுக்குத் திரும்பிப்போகும் எண்ணத்திலிருந்த  FADI  னும் ஜோர்டானியரின் சந்திப்பும் நட்பும் இவருக்கு கிடைத்தது மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

  இருவரும் சேர்ந்து  AL QABANDI group மூலம் தனி பிரிவு ஆரம்பித்து குவைத்திலுள்ள அமெரிக்கன் ஏர்போர்ஸுக்கு வேண்டிய பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்து இன்று அது மிக பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கிறது.

  எம்.பி.ஏ.படித்த மனைவி ஷாலினி கம்பெனியின் நிதி நிலைமைய பார்த்துக் கொள்ள, மைத்துனர் இக்கம்பெனியின் ஓமன், கத்தார், துபாய், ஈராக் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள பிரிவுகளை கவனித்துக் கொள்ள கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது இந்த நிறுவனம்.

 உணவு பொருட்கள் விநியோகத்திலும் இக்கம்பெனி கால் பதிக்க இருக்கிறது.

 சிரிஸ் தம்பதியர்களுக்கு இரண்டு மகன்கள் அளவான- வளமான குடும்பம்!

  ``யாருமே தனி ஒருவராய் இருந்து வெற்றி பெற்றுவிட முடியாது. பலரின் ஒத்துழைப்பு தேவை. எனக்கு வழிகாட்டியாக இருந்தது ராஜூவ்காந்தி எனும் இளைஞர். மல்டி மில்லியனரான அவரிடமிருந்து நிறைய பிசினஸ் விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தத் தருணத்திலும் தலைக்கனமில்லாமல் எளிமையாக, மற்றவர்களையும் மதித்து, நடக்க வேண்டும் என்பது அவரிடமிருந்து நான் கற்று கடைபிடிக்கும் விஷயம்.

   தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் திருவாளர்கள் சுனில்மேனன், மேத்யூதாமஸ், மனீஷ்ஜோசப் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மைல்ஸ் ரோகர்ஸ் போன்றோருக்கு சிரிஸ் நன்றி நவில்கிறார்.

   எளிமை, எளிதில் பிறரை கவரும் பேச்சு, பழக்கவழக்கம், கடின உழைப்பு, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிவு என்று இவரிடம் உள்ள சிறப்பு பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

  சினிமா நாயகன் போன்ற கவர்ச்சியான உடல்வாகு கொண்ட இவருக்கு நடிகர்கள் விஜய், சூர்யா எல்லாம் கல்லூரி நண்பர்கள்.

  கஷ்டம் அனுபவித்து உணர்ந்து வளர்ந்து வந்துள்ள சிரிஸ் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் ஏழை எளியவர்களுக்கு நேராகவும் Frontliners அமைப்பு மூலமும் உதவி வருகிறார்.  

  எம்.நாகபூஷணம்:

  எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பயந்து ஒதுங்கி விடாமல் அல்லது தள்ளி வைக்காமல் துணிச்சலுடன் நேரிட வேண்டும். ஒரு சிக்கல் ஏற்படும்போது பதற்றமில்லாமல் ஆர்பரிப்பில்லாமல் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து அலசி ஆராய்ந்து- பேசி சுமூகமாய் முடிவு எடுப்பது குவைத்தில் ரேங்க் ஜெனரல் டிரேடிங் காண்டிராக்டிங் கம்பெனியின் நிறுவனரும் மேனேஜிங் டைரக்டருமான திரு.நாகபூஷணம் அவர்களின் சிறப்பு.

  சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த நாகா பிரெசிடென்ஸி கல்லூரியில் பி.எஸ்ஸி, இயற்பியலும் பிறகு எம்.ஐ.டி.யில் என்ஜினியரிங்கும் முடித்து 1975 ல் நெய்வேலி என்.எல்.சி.யில் சேர்ந்தார்.

  இங்கு எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக பணியாற்றிய சமயம் 1982 ல் குவைத் வந்து முதலில் பாப்-காக் எனும் ஜெர்மன் கம்பெனியில் சேர்ந்தார்.

  பிறகு 1984 ல் ISCO  அப்போது இந்த கம்பெனி புதிதாய் காண்டராக்டிங் டிவிஷன் ஆரம்பித்திருக்க அதன் வளர்ச்சிக்கு கடுமையாய் உழைத்து தனது திறமையை நிரூபித்தார். 1500 பேர்களுக்குமேல் பணிபுரிந்த அக்கம்பெனியில் எந்த தொழிலாளர் பிரச்சினை என்றாலும் இவரை அனுப்பி தீர்த்து வைக்கிற அளவிற்கு இவருக்கு நல்ல பெயர். நாகாவும் நடுநிலைமையுடன் செயல்பட்டு பிரச்சினைகளை முடித்து வைப்பார்.

  குவைத்தில் ஸ்பிக் கம்பெனி காலூன்றுவதிற்கு நாகா தன் கம்பெனி மூலம் பாலமாயிருந்திருக்கிறார்.

  சதாம் சண்டை சமயம் தனக்கு கீழ் பணியாற்றியவர்களுக்கு உதவவும்- பாதுகாப்பாய் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கவும் தனது உடமைகளை விற்று பணம் கொடுத்தது. இவரது தொண்டுள்ளத்திற்கு சான்று.

  தன் திறமை, உழைப்பு இவற்றை பிறருக்காகவே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வி எழ நாகா தன் அனுபவம் தொடர்புகளை வைத்து இந்த ரேங்க் கம்பெனியை ஆரம்பித்து தற்போது இது 200 பேர்களுக்குமேல் வேலை கொடுத்து சிறப்பாக இயங்கி வருகிறது.

  திருமதி ரஞ்சிதம் நாகா குடும்பத்தை நிர்வகித்து, இவர் முழுநேரம் தொழிலை கவனிக்க பக்கபலமாய் இருப்பதை பெருமையுடன் நினைவுகூர்கிறார். இவர்களது மகள் லண்டனில் மருத்துவராயிருக்கிறார். மகன் பொறியாளர்! தன் வருமானத்தில் கணிசமான பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவரும் நாகா, குவைத்தில் பலவித கலைநிகழ்ச்சிகளுக்கும் துணையாயிருக்கிறார், பாரதி கலை மன்றம், தமிழ்நாடு பொறியாளர் சங்கம் போன்றவற்றின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் ஆலோசகரும் கூட.  

  திருமதி-திரு.முத்துக்கிருஷ்ணன்:

  ``இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வு கிடையாது. எல்லோரையும் சமமாக பார்க்கணும் படிப்பு- பணம்-பதவியைவிட மனிதாபிமானம் முக்கியம் கடவுள் எங்களுக்கு எல்லா வசதிகளும் கொடுத்திருக்கிறார். அவருக்கு நாம் திருப்பி எதுவும் செய்வதில்லை. செய்யவும் முடியாது. நமக்கு சுற்றிலும் கஷ்டப்படுபவர்களுக்கு செய்யும் சேவைதான் கடவுளுக்கு நாம் காட்டும் நன்றி என்கிற சீரிய கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள் திரு.முத்துக்கிருஷ்ணன் திருமதி. ரமா தம்பதியினர்.

  India International School ல் தலைமை ஆசிரியையான இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உமையாள்புரத்தை சேர்ந்தவர். இசை  வளர்ப்பில் முக்கிய பங்கு பெற்றுள்ள தியாகராஜரின் சிஷ்யர்கள் வாழ்ந்த ஊர் அது.

  ரமா சகோதரருடன் பிறந்த இரட்டையர். அப்பா விவசாயம் பார்த்தாலும் கூட அம்மா இசையில் நாட்டம் கொண்டு கற்று- கச்சேரிகல் பல செய்து பாகவத திலகம் என்கிற பட்டம் பெற்றவர். தாயின் இசைஞானம் ரமாவிடமும் சிறுவயதிலிருந்தே தொற்றிக் கொண்டிருந்தது.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles