HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

   ரமா பி.ஏ.ம் பி.எட்ம் முடித்ததும் திருமணமாகி 1975ல் குவைத் வந்தார். கணவர் திரு.முத்துக்கிருஷ்ணன் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த எம்.ஐ.டியில் என்ஜினியரிங் படித்து KNPC   யில்  Lead Engineer ஆக பணிபுரிபவர்.

  சிறந்த மனிதாபிமானி எளிமையும் உதவும் குணமும் கொண்டவர். கீழ்மட்டம் மேல்மட்டம் என பார்க்காமல் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவி வருபவர். ஒவ்வொரு உயிரிலும் கடவுள் இருக்கிறார் என நம்புவர். பிறரின் திறமைகளை மதிப்பவர். ரமா போலவே இவரிடமும் போலித்தன்மை கிடையாது.

  எவரைப் பற்றியும் தப்பாய் பேசுவதில்லை பொய்புறங்கூறுதல் கிடையாது. பிறர் நலத்திற்கு முன்னுரிமை கொடுத்து-அதன் பிறகே தனது தேவைகளைப் பற்றி சிந்திக்கும் முத்துவை கணவராக பெற்றது தனது பாக்கியம் என்று ரமா பெருமைப்படுகிறார்.

  மகன் திலீப்பும் மகள் காயத்ரியும் கொஞ்சம் வளரும் வரை அவர்களது பராமரிப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரமா 1984 Indian school ல் பணிக்கு சேர்ந்தார்.

 2002 முதல் மங்காஃப் பள்ளி!

 தேவையானவர்களுக்கு

  பணம் பொருள் கொடுத்து விட்டு ஒதுங்கிவிடுபவர்கள் உண்டு. பணம் பொருளுடன் நேராக பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று சேவை செய்வது இவரது பழக்கம். குவைத்தில் ஊனமுற்றவர்கள் பள்ளிக்கு சென்று அங்கு செயல்பட முடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேண்டிய ஒத்தாசை செய்து, பாட்டுப்பாடி அவர்களை மகிழ்விப்பதில் தனக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிறார். அது மாதிரி பாட்டுப்பாடுவதில் அவர்களுக்கும் குணம் கிடைப்பதாய் பள்ளியினர் தெரிவிக்கின்றனர்.

  இசை, பாட்டு, நடனம், நாடக நடிப்பு பேச்சுதிறமை இவற்றுடன் ரமா வீணையும் வாசிப்பார். சேலை டிசைனும் செய்கிறார்.

  வேலை- பிசினஸ்-பொதுவாழ்வில் கவனம் செலுத்துபவர்களுக்கு குடும்ப வாழ்வில் அமைதியும் சந்தோஷமும் கிடைக்காமல் போவதுண்டு இவர்கள் அதற்கு விதிவிலக்கு.

  இருவருமே ஒரே மாதிரியான சிந்தனையிலும் செயலிலும் இருப்பதால் மனத்தாங்கல்களோ பிரச்சனைகளோ வருவதில்லை என்று மகிழ்கிறார்கள்.

  முத்து தனது குரு போன்ற தாசரி அங்கிள் கூற்றுப்படி மனைவிக்கும் 50-50 பொறுப்புகள் சுதந்திரம் பிரித்து கொடுத்திருப்பதால் குடும்பத்தில் பிரச்சனை வர பணம் தான் முக்கிய காரணமாக இருக்கும். பணத்திற்கு முக்கியவத்துவம் தராமல்-பரஸ்பர நம்பிக்கையுடன் வேறுபாடில்லாமல் பழகும்போது மனஸ்தாபமே வருவதில்லை.

  மகன் திலீப் தற்போது USA  யில் M.S (Engineer) காயத்ரி  Bio Engineering +P.hd USA வில் செய்துவருகிறார். சுமுகமாய் குடும்பம் போகிறது.

   சொந்த ஊரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக இலவசமாய் ஓர் இல்லம் ஆரம்பித்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனபது இவர்களது எதிர்கால திட்டம்.

 என்.லட்சுமி நாராயணன்;

  இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் NRI Welfare Society     வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியர்களை ஊக்கப்படுத்த வேண்டி கடந்த சில வருடங்களாக HIND RATTAN விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

   குவைத்தில் இவ்விருது பெற்ற முதல் தமிழர் என்கிற பெருமை சென்னைக்காரரான திரு.என்.லட்சுமி நாராயணணுக்கு உண்டு.

   பொதுவாக விருதுகள் வழங்கப்படும்போது விமர்சனங்கள் எழுதுவதுண்டு. ``இந்த விருது எந்த அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்டது. என்று தெரியவில்லை! என்று தன்னடக்கத்துடன் இவர் குறிப்பிட்டாலும்கூட-

   பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது மிக பொருத்தம்.

   சாதாரணமாக, சிந்தையை பிசகவிடாமல் ஒரே துறையில் கவனம் செலுத்தினால்தான் வெற்றி பெற இயலும் என்பார்கள். ஆனால் இவர் விதிவிலக்கு.

   அறிவு சார்ந்த விஷயங்கள்! விளையாட்டு! கிரிக்கெட் வீரர்! தொழில் ரீதியில் சிறந்த பொறியாளர்! இசை, கலை, சமூக தொண்டு, இவற்றுடன் வலியோர் எளியோர் என்கிற பாரபட்சம் பார்க்காமல் உதவி என்று அணுகிவிட்டால் மனம் கோணாமல் உடனே ஆவன செய்துதரும் மனிதாபிமானம்.

   வேலையாகட்டும், இன்ன பிற காரியங்களாகட்டும், இவரால் பலன் பெற்றவர்கள் குவைத்தில் ஏராளம், தாராள மனது.

   ஆச்சரியப்பட வைக்கும் சுறுசுறுப்பு!எப்போதும் உற்சாக பேச்சு! மலர்ந்த முகம்! ஒன்றை ஏற்றுக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு முடித்துவிடும் பண்பு.

   முடியும் முடியாது சரி-தவறு என்று ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்திவிடும் துணிச்சல்! `நம்மால் முடியாதது உண்டா வாங்க ஒரு கை பார்த்திடலாம் என்று நல்ல காரியங்களுக்கு தரும் ஊக்கம்! அப்படியே வெறுமனே சொல்லிவிட்டு போய்விடாமல் கைகோர்த்து களத்தில் இறங்கும் பக்குவம்! கடின உழைப்பு! தளர்ந்து போகாத வேகம்! விவேகம்!

  இவையெல்லாம் எப்படி இவருக்கு சாத்தியப்படுகிறது என்று கேட்டால், ``பெரியவர்களின் ஆசிர்வாதமும், இறையருளும் குடும்ப பாரம்பர்யமும் அண்ணா யுனிவர்சிட்டி தந்த மெக்கானிக்கல் என்ஜினியரிங் அறிவும்தான் காரணம்! என்பார் புன்னகையுடன்.

   நான் சோர்வாய் உணரும்போது `பேட்டரியை சார்ஜ் பண்ணிக்கொள்ள வேறு எதுவும் செய்வதில்லை இந்த `லட்சுமி க்கு போன பண்ணினால் போதும். உற்சாகத்தை அள்ளி தந்து விடுவார்!.

 இது மிகைப்படுத்தல் அல்ல, உண்மை.

  இவரது தாத்தா 1900 ல் பிரசிடென்ஸி கல்லூரியின் பட்டதாரி! பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தஞ்சாவூர் கோர்ட்டில் கெளரவ மாஜிஸ்டிரேட்டாக இருந்தவர்.

   அப்பா திரு. டி.ஆர் .நடராஜன் சுதந்திரத்திற்கு முன்பு `கெஸ்ட்டர்டு ஆபிசராக பணியை தொடங்கி தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையில் இணை இயக்குனராக 1974 ல் ரிடையரானவர். உடல் ஊனமுற்றோர்க்கு முதன்முதலில் தனி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்த பெருமை இவருக்கு உண்டு.

   அப்பாவின் நேர்மை-நாணயம்-திறமை- அலுவலகம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் அணுகும் விதம் எல்லாவற்றையும் பார்த்து கற்றுக் கொண்டது லட்சுமியின் ரத்தத்தில் ஆழமாய் ஊறிப் போயிற்று.

   அதுவே இன்று இவரது நிர்வாக திறமைக்கு பலமாகவும், அடிப்படையாகவும் அமைந்துள்ளது. குடும்பத்தில் ஆறு சகோதரிகளுக்கு பிறகு பிறந்த ஒரே பையனான இவருக்கு அன்பு மழை! குடும்ப பாரம்பர்ய ஒழுக்கம், வரைமுறை மாறாத வாழ்க்கை, நேர்மையான அணுகுமுறை எல்லாம் இவரை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.

   மெக்கானிக்கல் என்ஜினியராக பல சாதனைகள் செய்த மூத்த சகோதரியின் கணவர் இவரையும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க தூண்டுகோலாக இருந்தவர்.

   கிண்டி என்ஜினியரிங் கல்லூரியிலும் ஸ்போர்ட்ஸ் மற்றும் யூனியன் செயல்பாடுகள் மூலம் அன்றே லட்சுமி பிரபலம்.

   படிப்பு முடிந்ததும் ஸ்பிக் கம்பெனியின் துத்துக்குடி உரத் தொழிற்சாலையில் பெற்ற அனுபவம் இவருக்கு நல்ல பலமான அஸ்திவாரமாக அமைந்தது.

   டெக்னிகலாக தன் துறையில் இவர் தயாரித்து அனுப்பின பேப்பர்களுக்கு 1994-ல் டெல்லி FAI  இரண்டாம் பரிசு கொடுத்து கெளரவித்திருக்கிறது. அடுத்து இவரின் கட்டுரைக்கு கோலாலம்பூர், லண்டன் போன்ற இடங்களிலிருந்தும் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

 1994 ல் குவைத் நேஷனல் பெட்ரோலியம் கம்பெனியில்  Rotating Equipment

          என்ஜினியராக சேர்ந்தவர் இங்கும் தன் திறமையாலும் கடின உழைப்பாலும் `சிறந்த அலுவலர் விருதை பெற்றிருக்கிறார்.

   லட்சுமி எந்த தருணத்திலும் தன் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதில்லை. எடுத்த காரியத்தை வெற்றிகரமாய் முடிக்கும் வரை ஓய்வதில்லை.

    அன்பை ஊட்டி வளர்த்த தாய் திருமதி பத்மலோசனியும், கெமிஸ்ட்ரி பட்டதாரியும் இல்லற பங்காளியுமான மனைவி சத்யாவின் ஒத்துழைப்பும் முகம் கோணா பண்பும் வாழ்வில் தனக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்று லட்சுமி பெருமைப்படுகிறார்.

  இவர்களுக்கு வருண் சந்த், ஸ்வேதா என இரண்டு செல்வங்கள்.

    குவைத் தமிழ்நாடு பொறியாளர் சங்கத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து லட்சுமி-

    குவைத் ஃப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் ஆலோசராகவும் பக்க பலமாகவும் இருந்து தொண்டாற்றி வருகிறார்.

    நாட்டுப் பற்றுமிக்க இவர் வெளிநாட்டு இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் நாட்டிற்கு பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கிறார்.

    வெளிநாட்டில் பொருளீட்டும் இந்தியர்கள் முயற்சித்தால் முடிவு காணப்படாமல் இருக்கும் `நதிகளின் ஒருங்கிணைப்பு திட்டம் எளிதாய் முடிந்துவிடும்- அதன்மூலம் இந்திய நாடு சுபிட்சம் பெறும் என்பது இவரது நம்பிக்கை விருப்பமும் கூட.

 வீ.கே.பெரியசாமி:

  ``உன் வாழ்க்கையில், நீ எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றால் அதற்காக இடிந்து போய் உட்கார்ந்துவிடாமல், கையில் இருப்பதை இறுகப்பிடித்து அதையே ஏணியாக்கி, உயரத்தை எட்டி விடு என்கிறார் திரு.பெரியசாமி.

 இவர் குவைத்தின் ஒரு பெரிய நிறுவனத்தில் நிதி கட்டுப்பாட்டாளராக பணியாற்றுகிறவர்.

    இலங்கையில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைநாட்டில் பசுமலை என்ற சிறியதொரு ஊரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, இந்தியா சுதந்திரம் பெறும் முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்று அங்கு குடியேறியவர்.

   பெரியசாமி தனது பள்ளிப்படிப்பை அட்டன் சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியில் முடித்ததும், ஒரு தேயிலை தோட்டத்தில் கிளார்க்காக  வேலைக்கு சேர்த்து விட்டபோது, அதை விட்டு விலகி மேல் படிப்பு. படிப்பதற்காக இந்தியா சென்று திருச்சியில் கல்லூரியில் சேர்ந்தார். பி.யூ.சி முடித்ததும், மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். அங்கு இடம் கிடைத்த போதும், அவர்கள் கேட்ட `டொனேஷன் கொடுக்க முடியாததால் டாக்டராக வேண்டும் என்ற கனவு, காற்றோடு கரைந்துவிட்டது. இனி என்ன செய்வது? அவரின் தந்தை கூறியபடி வணிகவியல் படிப்பை திருச்சி தேசிய கல்லூரியில் முடித்துவிட்டு, உடன் இலங்கை சென்று அங்கு ``சார்ட்டட் அகெளண்ட்டன்ட்ஸ் படிப்பை முடித்து ஆடிட்டர் பட்டத்தோடு வெளிவந்தார்.

   அங்கு ஒரு பிரசித்தி பெற்ற ஆடை தையல் நிறுவனத்தில் சீப் அக்கெளண்டன்ட் ஆக வேலைக்கு சேர்ந்து சில வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தினால் குடும்பத்துடன் இந்தியா செல்லவேண்டிய நிலை. 1983-ல் ஏற்பட்ட அந்த கலவரத்தில் அவர் வேலை செய்த தொழிற்சாலை முழுவதும் எரிக்கப்பட்டு விட்டது.

   எதிர்காலம் தெளிவற்ற நிலையில், இந்தியாவில் போய் என்ன செய்வது என்ற யோசனை. அங்கிருந்த கல்லூரி நண்பர்கள், பேராசிரியர்களின் கருத்துப்படி இந்தியாவிலும் சார்ட்டட் அக்கெளண்ட்டன்ட்ஸ் தேர்வு எழுதி குறுகிய காலத்தில் இந்தியாவிலும் ஆடிட்டருக்கான பட்டம் பெற்றார்.

   அடுத்த வருடமே மத்திய ஆப்பிரிக்க நாடான சாம்பியா நாட்டிற்கு ஒர் மிகப் பெரிய நிறுவனத்தின் கணக்காளராக சேரும் சந்தர்ப்பம் கிடைத்து அங்கு சென்றார். ஐந்து வருடங்கள் அங்கு வேலை செய்து, அவரின் நண்பர் திரு.நடராஜன் உதவியால் குவைத் நாட்டிற்கு வந்து ஒரு பெரிய கம்பெனியின் நிதி கட்டுப்பாளராக சேர்ந்த நிகழ்வை நெகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார். International Trade Holding Company  என்ற இந்த கம்பெனிக்குச் சொந்தமாக வியாபாரக் கம்பெனிகள் இருக்கின்றன. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கட்டிட கான்ட்ராக்ட் கம்பெனி, ஆடை நிறுவனங்கள் என்று பத்துக்கு அதிகமான கம்பெனிகள் குவைத், லெபனான், துபாய், இங்கிலாந்து என்று பல நாடுகளில் இருக்கும் இந்த எல்லா கம்பெனிகளுக்கும் நிதிக் கட்டுப்பாட்டாளராக இருக்கும் இவர் தனது முயற்சியாலும், நிர்வாகத் திறமையினாலும் கம்பெனியை வளர்த்திருக்கிறார். இந்த கம்பெனிகளின் உரிமையாளரும் பிரசிடன்ட்டுமான டாக்டர். ஹாமட் அல் துவைய்ஜிரி அரசியலில் டாக்டர் பட்டம் பெற்று பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதியாக (எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு பெரியசாமியின் திறமை மீது ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதால், இவரால் திறம்பட செயல்பட முடிகிறது என்கின்றார். இரண்டாயிரம் பேருக்கு அதிகமாக வேலை செய்யும் இந்த நிறுவனத்தின் மிகப்பொறுப்பான பதவியில் இருக்கும் இவரால் இங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தனி கெளரவம் கிடைத்திருப்பது.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles