HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

   பாம்பேயில்  Price water house  கம்பெனியில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபோது, அங்கு பணிபுரிந்த நண்பர் குவைத்தில் இக்கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, சந்திரசேகரையும் அழைத்துக் கொண்டார்.

  1990 வரை இக்கம்பெனியில் சீனியர் ஆடிட்டர் இன்சார்ஜாக சந்திரா பணியாற்றி –ஈராக் சண்டை காரணமாய் பாம்பே திரும்பி Wockhaddt  மெடிக்கல் கம்பெனியில் ஒரு வருடம் வேலை பார்த்தார்.

   1991 –ல் திருமணம் செய்து –அந்த நேரம் இக்கம்பெனியின் அழைப்பின் பேரில் மறுபடியும் குவைத்! ஈராக் யுத்தத்தின் காரணமாய் குவைத் முழுவதுமாய் இயல்புக்கு திரும்பாத நிலையில், வேலைபளு மற்றும் குடும்பத்தை அழைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இவருக்கு விரக்தியை ஏற்படுத்திற்று.

   `எவ்ளோ நாளுக்குத்தான் இப்படி அந்நியருக்கே உழைத்துக் கொண்டிருப்பது. சொந்தமாய் பிராக்டீஸ் செய்து முன்னேற வேண்டும்’ என்று ஊருக்கு திரும்பி-

   சென்னையில் 1992 -96களில் சொந்தமாய் ஆடிட்டிங் செய்ய ஆரம்பித்தார். இந்த துறைக்கு தொடர்புகள் ரொம்ப முக்கியம், கம்பெனிகளிடம் தன் திறமையை வெளிப்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

  இடையில் குவைத்தில் இளமைப் பருவத்தை செலவிட்டு தாமதமாய் அங்கு ஆரம்பித்ததால் எதிர்ப்பார்த்த அளவிற்கு செயல்பட முடியாமல் போனது. சந்திரசேகர் அதற்காக தளர்ந்து விடவில்லை.

  குவைத்திலிருந்த இந்த கம்பெனிக்கு வந்து சேரும்படி அழைப்புவர 1996 டிசம்பரில் மறுபடியும் குவைத்.

  குவைத்தில் இந்த துறையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இக்கம்பெனியின் உரிமையாளர் திரு.Mr. Badar AL –Bazie  நிரம்ப படித்தவர். பண்பாடும், கடின உழைப்பும் ஊழியர்பால் அன்புகாட்டி, அவர்களுக்கு முழுசுதந்திரமும் கொடுத்து செயல்பட வைப்பவர்.

  அதனால் சந்திராவுக்கு இங்கு பரிபூரண திருப்தி தன் பணியில் ஓனருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நல் உறவுடனும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறார்.

  கடின உழைப்புடன் –தன்னுடன் பணிபுரிபவர்களையும் ஒரு குழுவாக அரவணைத்துச் செல்வது இவரது பலம். அத்துடன் தந்தையிடம் கற்றுக்கொண்ட பண்பாடுகள் மிகவும் உதவியாக உள்ளன.

  கும்பகோணத்தை சேர்ந்த திருமதி மங்களா சந்திரசேகர் திருமணத்துக்கு முன்பே நன்கு அறிமுகம் என்பதால் நல்ல ஐக்கியத்துடன் குடும்பம் செல்கிறது. கணவரின் நெருக்கடியான அலுவல் சூழலை உணர்ந்து மங்களா முழு ஒத்துழைப்பும் தருவது இவருக்கு ஊட்டச்சத்தாக உள்ளது.

  இவர்களது மூத்த மகள் செளந்தர்யா கோவை சின்மயாவிலும், இளைய மகள் சுபிக்‌ஷா குவைத்திலும் படிக்கிறார்கள்.

  தமிழில் பற்றும் ஆர்வமும் உள்ள இத்தம்பதிகள் பாரதி கலைமன்றம் மற்றும் குவைத் தமிழ் சங்கம் மூலம் கலை மற்றும் கலாச்சார பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

   கோவையில் அமெரிக்க தரத்திற்கு  C.A  கோச்சிங் தர கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்பது சந்திராவின் எதிர்கால லட்சியம்.  

   ஜி.ராஜசேகர்:

  நம்பிக்கை வாழ்க்கையின் அச்சு, அதிலும் தனது திறமையின் மேல் நம்பிக்கை மிக முக்கியம். இத்துடன் உண்மையான உழைப்பும், ஈடுபாடும் இருந்துவிட்டால் வெற்றி நம் பக்கம்தான் என்பதில் தளராத நம்பிக்கையுடையவர் திரு.ராஜசேகர், Assistant General Manager ஆக Warba Insurance Co., Kuwait  ல் பணியாற்றுபவர்.

   B.Com ல் மாநிலத்தில் இரண்டாவது இடத்தையும் C.A ல் அகில இந்திய அளவில் 19வது இடத்தையும் இன்சூரன்ஸ் தேர்வின் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சியில் தென்னகத்தில் முதல் இடத்தையும் எட்டிப் பிடித்ததற்கு இவர் கூறும் காரணம் புதிய பரிமாணத்தில் உள்ளது. படிப்பை ஒரு கடமையாக (நிர்ப்பந்தமாக) நினையாமல் அதை நேசித்தால் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எளிது. மேலும் எந்தப் படிப்பையும் ஆழமாக படிப்பதுதான் சிறந்தது என்கின்றனர்.

   ``படிப்பும் அறிவும் மட்டும் போதாது. அதை எப்படி எங்கு எப்பொழுது பயன்படுத்துவது (Application ) என்பதில்தான் வெற்றியின் ரகசியம் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக Warba வின் பொது மேலாளர் திரு. Tawfik Al Bahar அவர்களைக் குறிப்பிடுகின்றார். சாதாரண கம்பெனியான Warba  வை 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனியாக வளர்வதற்கு முக்கிய காரணம் புதிய முயற்சிகள் மற்றும் வெவ்வேறு MNC உடன் கம்பெனிகளுடன் ஒப்பந்தங்கள். இதில் ராஜசேகர் பங்கும் அதிகம் என்றால் மிகையாகாது. உழைப்பும், நேர்மையும் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் அருளும் முக்கியம் என்பதில் நம்பிக்கை அதிகம் உடையவர். தேவாரம், திருவாசகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம்.

  மனைவி உஷாராணி புதுக்கோட்டையை சேர்ந்தவர். கணவர் அலுவலக வேலைகளுக்கு அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயம். எனவே மனைவிதான் வீடு மற்றும் குழந்தைகள் நிர்வாகம். திருமதி உஷாவின் தாத்தா தெய்வத்திரு தர்மராஜாபிள்ளை புதுக்கோட்டை சேர்மனாகவும் மேலும் சொந்தப் பணம் பல லட்சங்களை பள்ளிக்கூடம் மற்றும் பொதுப் பணிகளுக்கு தானங்கள் வழங்கியவர்.

  மகள் சுபாஷிணி  M.Com மற்றும் இன்சூரன்ஸ் தேர்வுகள் முடித்துள்ளார். கணவருடன் சிங்கப்பூரில் வாழ்கின்றார். மகன் கார்த்திக் USA ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளார்.

  தஞ்சையில் பிறந்த இவர் கம்பெனி அலுவல் காரணமாக உலகின் பல பாகங்களுக்கு சென்று வந்துள்ளார். புதிய இடம் புதிய மக்களை சந்திப்பதில் ஈடுபாடு அதிகம். பயணங்கள் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பயமும் தயக்கமும் அதிகம். துணிந்து செயல்படுவதில்லை என்பது இவரது குறை. இவற்றை ஒழித்தால் தமிழர்கள் நிச்சயம் மேலும் பல வெற்றிகளை பெற இயலும்.

  இந்தியாவின் வளர்ச்சி படிப்பாலும், பண்பாலும் வளர்ந்தது. எனவே படிப்பு சம்பந்தமான உதவிகளில் ராஜசேகருக்கு ஈடுபாடு.

  கடந்த காலம் முடிந்த ஒன்று. எதிர்காலம் நம் கையில் இல்லை. நிகழ்காலத்தை இனிதாக வாழ வேண்டும் என்னும் கருத்துக் கொண்டவர். பிறருக்கு உதவினால் அதனுடைய நற்பயனை இப்பிறவியிலேயே அனுப்பவிக்கலாம் என்பது இவரது அனுபவம். இவ்விஷயத்தில் Frontliners group ல் பணிபுரிவதை பெருமையாகக் கருதுகின்றார்.

  குவைத் இந்தியர்களுக்கு நம்மூரிலும் மருத்துவசேவை கிடைக்க ஆவன செய்யும் முயற்சியில் ராஜசேகர் தற்போது இறங்கியுள்ளார்.  

  ஸ்ரீ ராம்

  ``தன்னம்பிக்கைதான் எனது பலம். எப்போதும் ஆக்கப்பூர்வமாய் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும். சும்மாவே இருக்க முடியாத சுபாவம் எனக்கு. எந்த காரியத்தையும் ஒத்தி வைக்காமல் உடனுக்குடன் செய்து முடிப்பது கூட எனது வளர்ச்சிக்கு உதவிவருகிறது’’ என்கிறார் குவைத் Wataniya  டெலிகாமின் Chief Financial  திரு.ஸ்ரீராமசந்திரன்.

   குவைத்தின் மொபைல் போன் தொடர்புகள் MTC மற்றும் Wataniya  இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பெரும் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றன.

   திருநெல்வேலியை சேர்ந்த ஸ்ரீராமின் தந்தை பெங்களூர் Rajdoot லும் அம்மா Ponds கம்பெனியிலும் பணிபுரிந்தவர்கள். ஸ்ரீராமின் எட்டு வயதிலேயே தந்தை தவறிவிட இவரையும் உடன்பிறப்புகளையும் ஆளாக்கினது தாய்தான்.

   அந்தக் கஷ்ட நஷ்டங்கள் அறிந்து உணர்ந்து வளர்ந்ததாலோ என்னவோ ஸ்ரீராமிடம் ஆச்சர்யப்படும்படி எளிமை. பிறருக்கு உதவும் குணமும் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

    ஸ்ரீராம் பி.எஸ்ஸி கணிதம் முடித்து, C.A., I.C.W.A., 1990ல் முடித்து கல்கத்தா யூனியன் கார்பைடு, இங்கிலீஷ் எலக்ட்ரிக் பிறகு சென்னை 3M India என பணிபுரிந்து 1998ல் குவைத் Algannim இன்டஸ்ட்ரீஸில் சேர்ந்தார்.

   மறுவருடத்தில்,  Chief  அக்கவுண்டன்ட்டாக இக்கம்பெனியில் சேர்ந்தவர் படிப்படியாக பைனான்ஸ் டைரக்டராகி வளர்ந்து இன்று இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

    பல நாட்டினரும் பணிபுரியும் இக்கம்பெனியில் ஒரு இந்தியர் –அதுவும் தமிழர் –இந்த இளம் வயதில் பெரிய பதவியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம்.

    Kipco குரூப்பை சேர்ந்த இக்கம்பெனி நன்கு படித்த அனுபவமுள்ளவர்களை வைத்து நிர்வகிப்பதால் உழைப்புக்கும் தகுதிக்கும் இங்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என்கிறார். ஸ்ரீராம்,

  ``முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் ஆத்மார்த்தமாய் இங்கு செயல்பட முடிகிறது. பல நாட்டு கலாச்சாரங்கள் கொண்டவர்களுடன் இனைந்து பணிபுரிவது சந்தோஷம் தருகிறது.

   1999ல் ஆரம்பிக்கப்பட்ட இக்கம்பெனி குறுகிய காலத்திலேயே மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதற்கு காரணம் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும்  Team work  ம் என்கிறார்.

 ஸ்ரீராமின் கவனம் அலுவலகத்தில் முழுநேரம் இருந்தாலும் கூட

   மேல்படிப்புகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். படிப்பிற்கும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் எல்லையில்லை எனும் இவர் குவைத் வந்த பின்பு C.P.A., C.I.S.A., C.F.A  எல்லாம் முடித்திருக்கிறார்.

   `படிப்பு எப்போதும் நம்மை ஃப்ரெஷாகவும் இளமையாகவும் மாணவ பருவ உற்சாகத்துடனும் வைத்திருக்கிறது!

   ``குறைகள், தவறுகள் எங்கும் எதிலும் சகஜம். அவற்றை தள்ளிப் போடாமல், தவிர்க்காமல் உடனே சரிபண்ணிவிட்டால் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்’’ என்கிறார்.

   ஸ்ரீராம் இயல்பில் மென்மையானவர் என்றாலும் கூட பணவிஷயத்தில் கடுமை எனலாம். உயரமான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணித்து குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டி முயற்சி எடுத்து வெற்றி பெறுவது இவரது சாதனை! கம்பெனிக்கு வேண்டி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல புராஜக்ட்டுகளை நிர்ணயித்து அவற்றை வெற்றிகரமாய் செய்து காட்டியிருப்பதால் இவருக்கு நிர்வாகத்தில் உயர்ந்த இடம்!

  திருமதி சாந்தி ஸ்ரீராம், சாஃப்ட்வேர் துறையை சேர்ந்தவர் என்றாலும் கூட- குடும்பத்தை கவனிக்க வேண்டி –அதைவிட்டுக் கொடுத்து இவருக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார்.

  பள்ளி-கல்லூரி நாட்களில் விளையாட்டு வீரராக ஹாக்கி, கிரிக்கெட்டில் இருந்தவருக்கு அந்த ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் பணியிலும் தொடர்கிறது.

 இக்கம்பெனியின் CEO ஆக வளர வேண்டும் என்பது ஸ்ரீராமின் தற்போதைய லட்சியமுகமது நாசர் இம்ரன்

  பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்களை விட ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் உணர்வும் பற்றும் அதிகம் என்பார்கள். அதற்கு திரு.முகமது நாசர் இம்ரனும் விதிவிலக்கல்ல.

  குவைத்தில் முன்னிணியிலிருக்கிற பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியான Verminex ல் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மேனேஜரான இவர் ஸ்ரீலங்காவில் நிகாம்பேர் பகுதியை சேர்ந்தவர்.

  அப்பா திரு.ஹீசைன் சரூக் செளதியில் வேலை பார்த்து சம்பாதித்ததாலும்-இறை அருளாலும் கஷ்டப்படாமல் வளர முடிந்தது என்கிறார் இம்ரன்.

  இம்ரன் அல் ஹிலால் சென்ட்ரல் கல்லூரியில் பி.எஸ்ஸி (இரசாயனம்) முடித்து 1990ல் செளதி-பின்லாடன் குரூப்பில் பெஸ்ட் கண்ட்ரோல் ஆபரேஷன் மானேஜராக சேர்ந்து 4 வருடங்கள் பணியாற்றினார்.

  பிறகு ஸ்ரீலங்கா திரும்பி –கொழும்புவில் Lawson  கண்ட்ரோல் கம்பெனியில் ஆபரேஷன் மேனேஜராக பணிபுரிந்து நல்ல அனுபவம் பெற்று 1997 ல் குவைத் வந்து இக்கம்பெனியில் சேர்ந்து குறுகிய காலத்திலேயே பெயரும் புகழும் பெற்றிருக்கிறார்.

  இதன் உரிமையாளர் திரு.ஷேக் ஃபஹத் யூசுஃப் செளத் அல் சபா தனக்கு முழுசுதந்திரம் கொடுத்து இயங்க வைத்திருப்பதாக மகிழ்கிறார்.

  இந்த கம்பெனி-வீடுகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரி, உணவு உற்பத்தி கம்பெனிகள் உணவு குடவுன்கள், பயிர்கள், அலுவலகங்கள், ஏர்போர்ட் துறைமுகம், கப்பல்கள், விமானங்கள் என குவைத் முழுக்க சர்வீஸ் தந்து வருகின்றது.

 சமீபத்தில் கைப்பிடித்த மனைவி ஃபாத்திமா இவருக்கு பலமாய் இருக்கிறார்.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles