HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

 பி.ஜெ.வில்லியம்:

  மருத்துவர்கள் கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் ஆரம்பித்து நடத்துவது என்பது இயல்பான ஒன்று. மருத்துவத்துறைக்கு சம்பந்தப்படாத ஒருவர் அதுவும் வெளிநாட்டில் சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறார் என்பது ஆச்சர்யமான செய்தி.

   துபாயில் கராமா மெடிக்கல் சென்டரின் டைரக்டரான திரு.பி.ஜே.வில்லியம் தான் அந்த பெருமைக்குரியவர்.

   மதுரை சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர் தொழில் பார்த்தவர்கள். பயிற்றுவித்தலை வெறும் தொழிலாக மட்டும் செய்யாமல் ஆத்மார்த்தமாய் இலவசமாய் கிராமத்து மக்களுக்கு படிப்பறிவு ஊட்ட வேண்டும் என்று 1932 ல் திண்ணை பள்ளியாக ஆரம்பித்து வளர்ந்து இன்றும் அது நடந்து வருகிறது.

   வசதியில்லா பிள்ளைகளை பெரிய அளவில் படிக்க வைத்து உருவாக்கிய இவரது தந்தை திரு.எஸ்.டபிள்யு.பொன்னைய்யா `கண் திறந்த கல்வித் தந்தை எனும் பெயர் பெற்றிருக்கிறார்.

   இப்போது அப்பள்ளியையும் தந்தையின் நோக்கத்தையும் நிறைவேற்றும் வண்ணம் வில்லியமும் அவரது சகோதரியும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

   பள்ளியை நடத்த வேண்டி ஆசிரியருக்கு படித்த வில்லியம் பொருளாதாரத்தை வலுபடுத்த வேண்டி 1978 ல் துபாய் வந்து வேறு துறையை தேர்வு செய்தார்.

   கிளார்க்காக பணியை ஆரம்பித்த வில்லியம் SULTAN Co  வில் சேல்ஸ் மானேஜராக ரிடையரானார்.

    கடந்த 20 வருடங்களாய் ஒய்வு நேரத்தை வீணடிக்க விரும்பாமல் மெடிக்கல் சர்வீஸ் மற்றும் உணவு தொழிலில் கவனம் செலுத்தி பெற்ற அனுபவம் இப்போது இத்துறைகளை முழு நேர தொழிலாக்க உதவியிருக்கிறது.

   கராமா கிளினிக்கில் 15 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். கடலின் மொத்த மருத்துவ பிரச்னைகளையும் சரி பண்ணும் விதமாக எட்டு பிரிவுகளுடன் குழந்தைகள், கைனா, பொது, டென்ட்டல், எலும்பு, கார்டியாலஜி, நியூராலஜி, கண் என இயங்கி வருகின்றது.

   சர்வதேசத் தரத்தில் தமிழர்களுக்கு சேவை செய்யும் சென்னை மருத்துவமனை என நம்மவர்களால் பிரியமாய் அழைக்கப்படுகிற அளவிற்கு இதன் சேவையும் வளர்ச்சியும் அபரிமிதமாயிருக்கிறது.

   பணம் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பது இதன் சிறப்பு.

 துபாயில் ஏறக்குறைய 2000 குடும்பங்கள் இவர்களது வாடிக்கையாளர்கள்!

   இனிய பண்பும், எளிமையும், இளகிய குணமும், மனிதாபிமான அடிப்படையில் அணுகும் முறையும், ஆத்மார்த்தமும் வில்லியம் அவர்களின் வெற்றிப் படிகள் என்று சொல்லலாம்.

   மதுரையை சேர்ந்த டாக்டர் அவெந்திகாபாய் அவர்களை அறிமுகப்படுத்தி கிளினிக்கின் மெடிக்கல் டைரக்டராக செயல்படுவது இதன் வெற்றிக்கு பக்கபலம் என வில்லியம் மகிழ்கிறார்.

   இங்கு இலவசமாய் மெடிக்கல் கவுன்சிலிங் செய்கிறார்கள்.சாதாரணமாய் வெளிநாடுகளில் தனியார் மருத்துவமனைகளில் நோயை கண்டறிவதற்கே பெரும் தொகை செலவிட வேண்டிவரும் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

 வில்லியத்தின் மகன் நியூயார்க்கில்  MBBS ம், மகள் டென்டிஸ்டாகவும் இருக்கிறார்கள்.

   பர்துபாயில் இவருக்கு சொந்தமான `மதுரா ஸ்வீட் மீல்ஸ் பெயர் பெற்ற தென் இந்திய சைவ உணவகம்! இதன் மதுரை மணம்-குறைந்த விலை, வேகமான சேவையில் ஈர்க்கப்பட்டு வட இந்தியர்களும் விரும்பி சாப்பிட வருவது இதன் சிறப்பு.

   என்னதான் துபாயில் கிளினிக் நடத்தினாலும் சம்பாதித்தாலும், வில்லியத்தின் சிந்தையும் செயலும் நம் ஊரை நோக்கியே இருக்கின்றது.  

   இலவசமாய் சேவை செய்யக்கூடிய மெஷினரி மருத்துவமனையை நம்மூரில் ஆரம்பிக்க வேண்டும் என்பது இவரது லட்சியம்.

  வாழ்த்துகிறோம்!.   

   டாக்டர் காந்தி முருகன்;

   துபாயில் இந்திய டாக்டர்களுக்கு நல்ல பெயரும் புகழும் உள்ளது. அதுபோலவே தமிழ்நாட்டு மருத்துவர்களும் பெருமளவில் சிறப்பாக இயங்கி வருகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் டாக்டர்கள் சேர்ந்து ஆரம்பித்துள்ள அமைப்பின் கமிட்டியில் இடம்பெற்றுள்ள டாக்டர் ஜி.காந்தி முருகன் M.D  சிராஜீதீன் மெடிக்கல் சென்டரில் பொது மருத்துவராக இருக்கிறார்.

 மதுரை போடிநாயக்கனூரைச் சேர்ந்த இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

   1985ல் மதுரை மெடிக்கல் கல்லூரியில் MBBS  முடித்ததும் 2 வருடங்கள் கேரளம் திருவல்லா புஷ்பகிரி மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

   பிறகு சென்னை விஜயா மருத்துவமனையில் மறைந்த டாக்டர் T.G  செரியனுக்கு கீழ் எமர்ஜென்ஸி மெடிக்கல் ரூம் இன்சார்ஜாக ஒரு வருடம் அடுத்து சிவகங்கை பிரைமரி ஹெல்த் சென்டரில் பணிபுரிந்து மதுரை மெடிக்கல் கல்லூரியில் ஜெனரல் மெடிசினில்  M.D  முடித்தார்.

  கோவை ESI  மெடிசின் டிபார்ட்மென்ட்டில் சிவில் அசிஸ்டென்ட் சர்ஜனாக பொறுப்பேற்று, 1998ல் துபாய் வந்து ஹெல்த் கிளினிக்கில் பணியாற்றி இப்போது இந்த மருத்துவமனை.

   உலகத்திலேயே அதிக அளவில் சர்க்கரை நோய் உள்ளது UAF  ல்தான் என்கிறார் டாக்டர் காந்தி. அதற்கு காரணம் பரம்பரை, தட்பவெப்பநிலை, சாப்பாட்டு பழக்கங்கள், ஏஸி, உடல், பருமன் என பல காரணங்கள் உண்டு. அதே மாதிரி அல்சர், அலர்ஜி, சிறுநீரக கல் போன்றவையும் அதிகம் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்.

 திருமதி காந்தீ ஜெயமீனாட்சி இவருக்கு பக்கபலம்.

   நமது கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தன் பங்களிப்பை தரும் காந்தி முருகன் இலவச மருத்துவ முகாம்களிலும் கலந்து கொண்டு சேவையாற்றி வருகிறார்.

   UK யில் MRCP  எழுதுவதும், கோவையில் சொந்தமாய் மருத்துவமனை ஆரம்பித்து சேவை செய்ய வேண்டும் என்பதும் இவரது தற்போதைய லட்சியம்.  

  TKC சேகரன்:

      செளதி, சுந்தார்,சென்னை, சூடான் பஹரினில் கிளைகள் பெற்றுள்ள Adroit Systens சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரிசிடென்ட்டான திரு.டி.கே.சி சேகரன் கம்ப்யூட்டர்துறை தான் எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்.

  சென்னையைச் சேர்ந்த இவர் 1971இல் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் B.E(எலக்ட்ரிகல்& எலக்ட்ரானிக்ஸ்) முடித்து டெல்லி DRDO (Defence Research Development Organisation ) இரசாயனக் கூடத்தில் பணிக்கு சேர்ந்தார்.

   அங்கிருந்து ஹைதராபாத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் மைக்ரோ-வேல்ஸ் ஸ்பெஷ்லைஸ் செய்ய- அனுப்பி-கம்ப்யூட்டர் டிவிஷனில் நியமித்தார்கள். டெல்லியிலிருந்து ஹைதராபாத் மாற்றத்திற்கு சந்தோஷப்பட்டவருக்கு கம்ப்யூட்டர் டிவிஷனை ஏற்க தயக்கமிருந்தது.

   ஆனால் நிர்வாகமோ ``கம்ப்யூட்டர் என்றால் இங்கிரு- இல்லாவிட்டால் டெல்லி! என்று பிடிவாதமாய் சொல்லிவிட டிகேசிக்கு அது ஒரு திருப்புமுனையாக டிகேசி சோர்ந்து விடாமல் கம்ப்யூட்டர் துறையில் முழுகவனம் செலுத்தி அந்த அனுபவத்தில் 1979-ல் பாம்பே Hinditron தனியார் கம்பெனியில் சேர்ந்தார்.

   அங்கிருந்து யு.எஸ்., மற்றும் நைஜிரியாவிற்கு பொறுப்புகள் கொடுத்து அனுப்பப்ட்டது அவரது கணினி அறிவை வளர்க்க பெரிதும் உதவிற்று.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles