HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

 பிறகு 1984-ல் லண்டனில் Steiger Software;Glaxco Digital Equipment Corporation;

      அதன் பிறகு 1985-ல் செளதியில்  Consulting Centre for Finance &Investment இல் சேர்ந்தார். ஒரே ஒரு நபரில் ஆரம்பித்த அக்கம்பெனி-செளதியில் ஹாஸ்பிட்டல்கள், அலுவலகங்கள்,தொழிற்கூடங்களுக்கு Software  செய்து கொடுத்து இவர் 1999 இல் வெளியே வரும்போது 100 பேர் வேலை செய்கிற அளவிற்கு வளர்ந்திருந்தது அந்த வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை உணர்ந்த டிகேசிக்கு கற்ற கல்வி-பெற்ற அனுபவத்தை வைத்து நாமே ஏன் சொந்த கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது என்று தோன்றிற்று.

   அதன் விளைவுதான் 2001இல் செளதியில் இந்த Adriot Systems  உருவாயிற்று. பஹரினில் இதன் கிளை TEK Soft!  சென்னையிலுள்ள Zeetaa Software ம் இந்த குரூப்பில் அடங்கினதே.

   ஐந்து மில்லியன் டாலர் வர்த்தகம் செய்யும் இம்கம்பெனி-வளைகுடா நாடுகள் முழுக்க காலூன்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக குவைத் வந்தபோதுதான் டிகேசியை சந்தித்தேன்.

  35 வருட அனுபவம், கம்பெனி தலைவர், என்ஜினியர் என்கிற மமதை இல்லாத எளிமை இவரிடம் விஷயங்கள் பல உள்ளடக்கியிருந்தாலும் கொஞ்டம்கூட அலட்டலில்லா அமைதி.

   டிகேசியிடம் அலங்கார பேச்சு கிடையாது சொன்னதை செய்யும் தீவிரம், நேர்மை, நா நயம்! ஊழியர்களிடம் நட்பு பாராட்டி வேலை வாங்குவது இவரது பலம். ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால் ஊழியர்களுக்கு பாதிப்பு வராமல் அவர்கள் பக்கமிருந்தும், அதே சமயம் நிர்வாகத்திற்கும் இழப்பு ஏற்படாமல் முடிவெடுப்பது இவரது சிறப்பு.

   டிகேசி என பிரியமாய் அழைக்கப்படும் இவர் சுமார் 400 பேர்களுக்கு மேல் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

   தொழில் காரணமான அலைச்சல்-அதன் வளர்ச்சிக்கான முயற்சிக்கிடையே குடும்பத்திற்கு போதுமான நேரம் ஒதுக்கித் தரமுடியாத வருத்தம் இவருக்குண்டு.

       திருமதி வள்ளி சந்திரசேகரன் (எம்.எஸ்ஸி, கணிதம்) தொலைபேசி துறையில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு கணவருக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்!

 கே.காமேஸ்வரன்:

    இந்த குரூப்பை சேர்ந்த சென்னை Zeetaa Software கன்சல்டன்ட் கம்பெனியின் CEO  திரு.கே.காமேஸ்வரன் கும்பகோணத்தை சேர்ந்தவர். பி.எஸ்ஸி பட்தாரியான இவர் ஒரு ஜீனியஸ் என்று டிகேசியே புகழ்கிறார்.

   காமேஸ்வரன் I.T மானேஜராக 20 வருடங்கள் கனரா பாங்கிலும், 10 வருடங்கள்  I.T  ப்ராஜக்ட் மானேஜராக செளதி பிரெஞ்சு பேங்கிலும் அனுபவம் பெற்றவர்.

   இந்த Zeetaa கம்பெனி ஆரெக்கிள், ERP ஜாவா, ஹோட்டல்களுக்கு இன்ஷிரன்ஸ் கம்பெனிகளுக்கு, சிறு தொழில்களுக்கு Software புராஜக்ட்கள் செய்து தருகின்றது.

   காமேஸ்வரன் 2000 இல் அமெரிக்காவின் Computer Quality Assurance தேர்வில் (உலக அளவில்) கோல்ட் மெடல் பெற்றிருக்கிறார். ஆன்மீகம், எதையும் அலசி ஆராயும் குணமும், கடின உழைப்பும் இவரது பலம்.  

  டாக்டர் M.K.S. சம்சுதீன் (ஹாங்காங்);

   முயற்சி திருவினையாகும் என்பதற்கும் தளரா மனதுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ஹாங்காங் எஸ்ஸெம் பார்மசூடிக் டிரேடிங் கம்பெனியின் பார்ட்னரான டாக்டர். M.K.S  சம்சுதீன்.

   ராமனாதபுரம் பழைய புகழ் பெற்ற துறைமுகப்பட்டினமான தொண்டியைச் சேர்ந்த இவரது முன்னோர்கள் பெரிய நிலசுவான்தார்களாக இருந்தனர். பர்மாவிலிருந்து தேக்கும் ஒத்தையானை ஓடும் வரவழைத்து வியாபாரம் செய்தவர்கள்.

 இவரது தந்தையும் அந்த வழியில் விவசாயமும் வியாபாரமும் பார்த்தவர்.

 சம்சுதீன் 1956 -57 மதுரை தியாகராயர் கல்லூரியில் PUC (PUC யின் முதல் செட்) படித்து-

   தந்தை நோய் வாய்பட்டு விட அந்த இளம்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். மதுரை மெடிக்கல் கல்லூரியில் MBBS  முடித்து சம்சுதீன் மெட்ராஸ் மெடிக்கல் சர்வீஸில் அசிஸ்டென்ட் சர்ஜனாகவும் பிறகு சர்ஜரியில் டியூடராக செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலில் முதல் போஸ்டிங்கும் பெற்றார்.

   பிறகு தஞ்சாவூர் அருகே திருவங்காடு பிரைமரி ஹெல்த் சென்டருக்கு மாற்றப்பட்டர். அப்போது வெறும் MBBS  உடன் நிறுத்தாமல் சர்ஜரியும் படிக்க இவருக்கு விருப்பம். அதற்காக MS க்கு அப்ளை பண்ணினார்.

   ஆனால் இவரது துரதிர்ஷ்டம் அப்ளிகேஷன் மிஸ்ஸாகி இன்டர்வியூவே வரவில்லை. மனமுடைந்திருத சமயத்தில் நீடுரைச் சேர்ந்த ஹாங்காங் நவரத்தின வியாபாரி திரு.A.S  தீனின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அவர் சம்சுதீன் ஆறுதல்படுத்தி ஹாங்காங் வாங்க அங்கு FRCS  எழுதலாம் என்று உற்சாகம் தந்தார்.

   அந்த நாட்களில் வெளிநாட்டு விசா கிடைப்பது ரொம்ப சிரமம். மலேசியா போய் அங்கிருந்து தீன் மூலம் ஹாங்காங் கஷ்டப்பட்டு போனவருக்கு ஏமாற்றம்.

   எமிகிரேஷனில் பாஸ்போர்டில் வேலையில் சேரக்கூடாது என சீல் வைக்கப்பட்டிருக்க-அதை கேன்சல் செய்து வாருங்கள் பிறகு படிப்பை பற்றி பேசலாம் என்றனர்.

   அதை கேன்சல் பண்ண ஹாங்காங் மெடிக்கல் கவுன்சிலில் ரெஜிஸ்தர் பண்ண வேண்டும். ஆனால் இந்தியன் MBBS க்கு அங்கு அங்கீகாரம் இல்லாததால் லண்டன்-ஜெனரல் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு பண்ணுங்கள் என்றனர்.

    இதற்கு வேண்டிய வழிமுறைகளை செய்து கொடுக்க ஆறுமாதம் ஓடிப்போயிற்று. சம்சுதீன் கொஞ்சமும் சளைக்கவில்லை. அந்த இடைவேளையில் தெரிந்த நம் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார்.

   அந்த சமயம் ஹாங்காங்கில் இருந்த திரு.B.S.A  ரஹ்மான தன் PTC  கம்பெனி மூலம் நவரத்னம் சம்சுதீனுக்கும் சப்ளை பண்ணி பிசினஸில் ஈடுபட வைத்தார்.

   இதற்கிடையில் ஹாங்காங் மெடிக்கலில் இவருக்கு பதிவாகி நியூரோ சர்ஜரியில் போஸ்டிங் கிடைத்தது. பிறகு FRCS  க்காக UK  போக அப்ளை பண்ண Middlesix Hospital ல் Attachment  place  கிடைத்தது.

  UK போக வேண்டி இந்தியா வந்தபோது குடும்பத்தினர் உடனே செல்ல தடை விதித்தனர்.லண்டனுக்கு எக்ஸ்டென்ஷன் விண்ணப்பிக்க அவர்கள் தராததால் பிரைவேட்டாய் பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தார்.

   ஊரிலேயே M.S  செய்யலாம் என முயற்சிக்க தனியாய் பிராக்டீஸ் செய்பவர்களுக்கு M.S  சேர முடியாது என்றனர். சரியென்று சர்வீஸ் கமிஷன் எழுதி 1972 ல் ராமனாதபுரம் ஹெட் குவார்டர்ஸில் வேலை பெற்றார்.

   மதுரைக்கு செல்ல சம்சுதீனுக்கு விருப்பம். ஆனால்  P.G அப்ளை பண்ணினால்தான் செல்ல முடியும் என்கிற நிலைமை. அந்த நேரம் அனஸ்தீஷியாவிற்கு நல்ல மவுசு இருக்க சம்சுதீன் P.G  அனஸ்தீஷியா முடித்தார்.

   பிறகு காஞ்சிபுரம் தலைமையகத்தில் 5 வருடம் அடுத்து காரபேட்டை கேன்சர் இன்ஸ்டிடியூட் , மதுரை மெடிக்கல் கல்லூரியில் பார்மகாலஜி டியூடர்; டி.பி.ஆஸ்பத்ரியில் பல டிபார்ட்மென்ட்களிலும் தனியாகவும் பிராக்டீஸ்சும் செய்தார்.

   1990 ஹாங்காங் சென்று CARITIS  மெடிக்கல் சென்டர், பிறகு அரசாங்க பெரிய மருத்துவமனையான TUENMUM  -ல் அனஸ்தீஷியனாக 9 வருடங்கள் பணியாற்றினார்.

   அங்கு பள்ளிவாசல் மூலம் இலவச கிளினிக் சேவை செய்திருக்கிறார். ஹாங்காங்கில் குடியுரிமை பெற்றுள்ள சம்சுதீன், ரிடையர்மென்டிற்கு பிறகு துபாய் நண்பர் சம்சுதீன் S.S  டிரேடிங் மூலம் சீனப் பொருட்களை அனுப்ப ஆரம்பித்தார்.

    சம்சுதீன், ஒரு ஸ்போர்ட்ஸ்மேனும் கூட, PUC  படிக்கும்போது, தமிழுக்கு பெயர் பெற்ற தியாகராயர் கல்லூரியில் சீவக சிந்தாமணியை எடுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார். மதுரை தமிழ்சங்கத்திலிருந்து வரும் செந்தமிழ் பத்திரிகையில் அவ்வை துரைசாமி, டாக்டர் மு.வ. போன்றோரின் கட்டுரைகளுடன் மாணவனாகிய இவரது கட்டுரைகளும் இடம் பெற்றதை பெருமையுடன் நினைவு கூர்கிறார்.

   மனைவி திருமதி.பார்த்திமா சம்சுதீனுக்கு பலம் சேர்ப்பவர். இவர்களது ஆறு மகள்கள், இரண்டு மகன்களும் சீரும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

   சமீபத்தில் இவரது `அல்குரான் ஒரு அறிவியல் பூங்கா நூல் மணிமேகலைப் பிரசுரம் மூலம் துபாயில் வெளியிடப்பட்டது.

   எவ்வளவோ படித்திருந்தாலும், வியாபாரத்தின் மூலம் பொருள் ஈட்டியிருந்தாலும் கூட இலக்கியத்தின்பால் இவருக்குள்ள் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

  வ.மா.குலேந்திரன் (லண்டன்)

   லண்டனில் வாழ்ந்து வருகின்ற வ.மா.குலேந்திரன் சாதாரண ஒரு குடும்பத்தில் இலங்கையில் திருநெல்வேலி எனும் கிராமத்தில் பிறந்தவர்..

 இவர் குடும்பத்தின் மூத்த புதல்வர். இவருக்கு மூன்று சகோதரிகள்.

    இவர் சத்திரசிச்சை மூலம் பிறந்த காரணமாக இவரின் தாய் மீது டாக்டர்கள் கவனம் செலுத்தினார்களே தவிர இவரை தண்ணீரில் விட்டு விட்டதை மறந்து விட்டார்கள். மூன்று மணி நேரத்தின் பின்னர் இவரது தந்தை போய் பிள்ளை எங்கே என்று கேட்ட போது தான் அவர்கள் விழித்துக் கொண்டு இவரை தூக்கி சுத்தம் செய்திருக்கிறார்கள். அதே நாள் இரவு இவரை தொட்டிலில் தாதிகள் உறங்க வைத்து வெளிச்சத்திற்காக அரிக்கேன் விளக்கை அதில் ஏற்றி விட்டிருந்தனர். நள்ளிரவு அந்த புதிய விளக்கின் பெயின்ட் (Paint)  சூட்டில் உருகி தொட்டிலில் போடப்பட்டிருந்த கொசுவலை எரியத் தொடங்கியது. கட்டிலில் படுத்திருந்த இவரது தாயார் தையல் போடப்பட்ட நிலையில் எழும்ப முடியாமல், துணைக்காக நல்ல உறக்கத்தில் இருந்த அவரது தாயாரை எழுப்பியதால் பிறந்த அன்றே நீரிலும், நெருப்பிலும் இருந்து தப்பியவர் தான் இந்த குலேந்திரன்.

   இவரது தந்தையார் ஒரு கணக்காளராக நீர்ப்பாசன இலாகாவில் பணிபுரிந்தார். அன்னையார் அன்னலட்சுமி இல்லத்தரசி. கொழும்புவில் இவர்கள் வசித்து வந்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து அலுவல் நிமித்தமாக அல்லது கதிர்காம யாத்திரைக்காக மொழும்பு வருவோர் இவர்களின் இல்லத்திலேயே தங்குவது வழக்கம். குறைந்தது 10 பேராவது தினமும் இவர்கள் இல்லத்தில் தங்குவர். இவர்கள் அனைவருக்கும் இவரின் பெற்றோர் உணவளித்து, வேண்டிய உதவிகளைச் செய்து வந்தனர்.

 இவரின் தந்தையார் வல்லிபுரம் மாணிக்கம் சிறந்த சமூக வையாளராவர்.

திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில், தலைவராக செயற்பட்டவர். நெசவு நிலைய கட்டிடத்தை அரசுடன் போராடி பெற்றுக் கொடுத்தவர். இரவுப் பாடசாலை ஆரம்பித்து ஏழைச் சிறார்களுக்கு கல்வியை இலவசமாக போதித்தவர் திருநெல்வேலி அநாதைச் சிறுவர்கள் இல்லத்தை சிறப்பாக நடைபெற உதவியுதுடன் ஆங்கில பாடத்தையும் போதித்து வந்தார். யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் மின்சாரத்தில் இயங்கும் சுடுகாட்டை ஏற்படுத்த முயற்சி எடுத்தார். ஆனாலும் இலங்கை போர் காரணமாக அம்முயற்சி கை கூடவில்லை. திருநெல்வேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தை திறம்பட இயங்க வைத்தவர். ஓய்வூதியம் பெறும் தமிழர்களுக்காக ஓய்வூதியர் சங்கத்தை நிறுவி செயற்பட்டவர் இவர்.

   குலேந்திரன் தனது கல்வியை யாழ், சென் பேட்றிக்ஸ் கல்லூரியிலும் (St.Patricks College)  பின்னர் கொழும்பு இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

   இவர் பொதுப் பரீட்சை எழுதும் வேளை இலங்கை அரசு பரீட்சைகள் தமிழில் அல்லது சிங்களத்தில் எழுத வேண்டும் என்ற சட்டத்தை அமலாக்கியதால் இவர் தமிழிலேயே பரீட்சை எழுதிய முதலாவது பகுதி (Group)  மாணவர்களில் ஒருவரானார்.

  பல்கலைக் கழக அனுமதி இவருக்கு B.A  பயில கிடைத்தபோது சட்டம் பயில்வதை குறிக்கோளாகக் கொண்டு அதனை உதறிவிட்டு வெளிவாரி மாணவராக (External Student)  சட்டம் பயின்றார்.

   சட்ட பட்டதாரி இறுதிப் பரீட்சையில் எட்டுப் பாடங்களிலும் சித்தி பெற்ற இவருக்கு சிங்கள அரசின் தரப்படுதல் (Standardisation)  கொள்கை காரணமாக பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படவில்லை. வழங்க வேண்டும் என்று இவரின் போராட்டங்கள் அரசின் செவியில் செவிடன் காது சங்கானது.

    இலங்கை அரசு அமுலாக்கிய தரப்படுதல் கொள்கை (Standardisation Policy )  தமிழ் மாணவர்கள் அதிகளவில் பல்கலைக் கழகம் நுழைவதை தடைசெய்தது.

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles