HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

  மாற்றுவழி தெரியாமல் தமிழ் மாணவர்கள் திகைத்து நின்ற வேளையில் அவர்களுக்கு அபயம் அளிக்க குலேந்திரன் முன் வந்தார். வெளிவாரிப் பட்டப்படிப்புகள் நிறுவனம் (External Studies Organisation ) ஸ்தாபித்து வார இறுதி நாட்களில் பல்கலைக் கழக விரிவுரையாளர்களை பகுதி நேர விரிவுரையாற்ற அழைத்து அவர்களை பல்கலைக் கழக பட்டம் பெற வைத்து சாதனை புரிந்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் பயன்பெற்று பட்டதாரிகள் ஆகினர்.

   1972 –ல் இலங்கை அரசு இந்தியாவில் இருந்து வாராந்திர சஞ்சிகைகள் இறக்குமதியாவதை தடை செய்தது.

    அப்போது இவர் `விகடன்’ என்ற சஞ்சிகையை ஆனந்த விகடன் பாணியில் வெளியிட்டார். இவர் ஒரு இதழில் எழுதிய ஆசிரியத் தலையங்கம் அரசு அந்த சஞ்சிகையை தடை செய்ய காரணமாயிற்று.

     இலங்கை இலக்கிய பேரவை அமைத்து அதன் தலைவராக விளங்கிய இவர் இலங்கையில் வழக்காடு மன்றம் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார். இலங்கையில் `பரதநாட்டியப் போட்டி’ 1974-ல் இவரால் நடத்தப்பட்டது. இதற்கு முன்போ அல்லது பின்போ இவ்வகையான போட்டிகள் இன்னமும் நடத்தப்படவில்லை.

    1966 –ல் இவரது சிறுகதை `ஜோதி’ வார இதழில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நிறைய எழுதி வருகிறார். ஐரோப்பா நகரில் செய்திமுரசு எனும் தமிழ் பத்திரிகையை முதலில் வெளியிட்டவர் இவரே. எந்தவித கணினி வசதிகளும் அற்ற அந்த நேரத்தில் பத்திரிகைகளில் வருகின்ற எழுத்துகளை வெட்டி ஒட்டியே இந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டது. இதே போல `லண்டன் மாலை’ என்ற முதல் மாலைத் தினசரியும் இவர் வெளியிட்டார்.

   இலங்கையில் உள்ள வசதியற்ற எழுத்தாளர்கள் 13 பேரின் நூல்களை இலவசமாக இவர் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

   சுனாமி பற்றிய தகவல்கள் முதல் நூலாக வெளியிட்ட இவர், இலங்கை தமிழ் முஸ்லீம் அறிஞர்கள் நூலை இலவசமாக இலங்கையில் உள்ள பாடசாலைகள், பல்கலைக் கழகங்களுக்கு வழங்கியுள்ளார்.

   அண்மையில் தமிழகத்தில் கண் பார்வையற்ற ஒரு மாணவனுக்கும், மூன்று வசதியற்ற மாணவிகளுக்கும் கல்விக்காக பணம் வழங்கியுள்ளார். பாலம் நிறுவனருடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கான உதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

   லண்டனில் சர்வதேச அகதிகள் சம்மேளம் என்ற தனியார் நிறுவனத்தை ஸ்தாபித்து உலகளவிலான அகதிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றார்.

   `தமிழினி மஞ்சரி’ , `தமிழினி’ ஆகியவற்றின் ஆசிரியரான இவர் உலகத் தமிழர் பேரமைப்பின் உறுப்பினராவார். இவரது மனைவி சரோஜினி தேவி பக்கபலம். இவருக்கு ஒரே ஒரு மகள் தமிழினி M.SC  படிக்கிறார். 

  U.S.A வி.பாலசந்திரன்;

  புத்தி வடிகால் (Brain drain) இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு இருப்பினும் அயல்நாடுகளில் ஒளிவீசும் இந்திய ரத்தின்ங்களில் ஒரு சிலர் இந்தியாவிலும் தம் அறிவொளியைப் பாய்ச்சி வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ என்.ஆர்.ஐ.களில் ஒருவர்தான் பாலா.வி.பாலசந்திரன்.

    புதுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட பாலா தற்போது அமெரிக்காவின் இல்லினாய்ஸில் எள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே.எல்.கெல்லோக் நிர்வாகவியல் கல்லூரியின் பேராசிரியர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஆலோகர். கணக்கியல் (Accounting) துறையில் உலகப்புகழ் பெற்ற நிபுணர். முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர்.நாராயணனிடமிருந்து `பத்மஸ்ரீ’ விருது பெற்ற 30 பேரில் ஒருவர்.

   செலவின நிர்வாகம் (Cost Management)  குறித்துப் பன்னாட்டு நிறுவனங்கள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் லாபத்திறன் நிர்வாகம் (Profitability Management)  என்ற புதிய பொருளாதார உத்தியை உபதேசித்தவர் பாலா உற்பத்திச் செலவைச் சுருக்குவது என்ற கொள்கையுடன் நிறுவனங்கள் சுருங்கிக் கொள்வதில் என்ன பயன் என்ற இவரது அடிப்படைக் கேள்வியில் அதுவரை இருந்த நிறுவன நிர்வாக கணக்கியல் சூத்திரங்கள் ஆட்டம் கண்டன.

  நேர்முகச் செலவான உற்பத்திச் செலவைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதைப் போலவே, விளம்பரம் வாடிக்கையாளர் சேவை போன்ற மறைமுகச் செலவுகளைக் குறைப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இவர் வலியுறுத்தினார்.

   இந்தப் புதிய கோட்பாடு குறித்த இவரது ஆய்வுக் கட்டுரை, Business week  என்ற அமெரிக்க இதழில் 1994-ல் வெளியானது. இந்தக் கட்டுரையே பாலாவுக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்துள்ளது. தற்போது பல்வேறு நிறுவனங்களும் இவரது அணுகுமுறையை அனுசரிக்கின்றன.

    இந்தியாவில் கணக்கியல் தகவல் தொழில்நுட்பங்கள்( Accounting Informarion Systems ) மேம்படவும், கல்வித்துறை வளர்ச்சிக்காகவும் ஆலோசனைகளை அளிப்பதுடன் நிதியுதவிகளையும் செய்து வருகிறார். மற்றொரு பிரபல என்.ஆர்.ஐ.யான சாம் பிட்ரோடோவுடன் இணைந்து `இந்திய நடவடிக்கை இயக்கம்’ (Action India movement) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் பாலா. இசை மற்றும் நடனங்கள் மூலம் பல்வேறு பாடங்களையும் கற்பிக்கும் நவீன முறையை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சோதனை ரீதியில் இந்த அமைப்பு தொடங்கியுள்ளது. பின்னர் பல்வேறு மாநிலங்களுக்கும் இதை விரிவுப்படுத்த உள்ளது. அத்துடன், செயற்கைக் கோள் உதவி மூலம், தொலைக்காட்சிகளில் இந்தக் கல்வி முறையை ஒளிபரப்பவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவும் சுமார் 250 என்.ஆர்.ஐ.களைச் சேர்த்துள்ளார் பாலா. சுமார் 700 கோடி ரூபாய் செலவில், பெரிய அளவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

   இந்தியாவில் இத்தகு சேவைகளை ஆற்றி வருவதால் தான் , பாலாவுக்கு `பத்மஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவரையுமே சமமாக  பாவிக்கக்கூடாது; வாடிக்கையாளர்களைப் பாகுபடுத்தி உணர்ந்து, அதிக வர்த்தக வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பாலாவின் லாபத்திறன் நிர்வாக உத்திகளில் ஒன்று. என்னதான் வெளிநாட்டில் பெயர்- புகழ்-பணம் சம்பாதித்தாலும், நாம் பிறந்து –வளர்ந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தாக்கம் இவரிடம் எப்போதும் உண்டு. அதன் ஆக்கம்தான் பாலா இப்போது சென்னையில் ஆரம்பித்திருக்கும் சைதாப்பேட்டை GLIM  பயிற்சிக்கூடம்.

  Great Lakes Institute of Manaagement (GLIM) பிசினஸ் மனேஜ்மென்ட்டில், 12 மாத பயிற்சி தந்து இளைஞர்களுக்கு முன்னே வழிகாட்டி வருகிறது.

   ``சின்ன வயசுலே எங்கப்பா விளையாட்டா வெச்ச போட்டி தான் நான் வாழ்க்கையிலே ஜெயிக்கக் காரணம். நான் நான்காவது ஐந்தாவது படிக்கிறபோது கிளாஸ்ல முதலாவதா வந்தா, நாலணா பரிசு தர்றேன். என்பார் நாலணா மதிப்பை விட அப்பா தருகிற பரிசு என்கிற விஷயம் தான் எனக்கு பெரிதாய் தோன்று, அந்தக் காசை வாங்காம நான் ஓய்ந்ததில்லை. அங்கீகாரம் என்ற வார்த்தை தான் என்னை உந்தித் தள்ளியது. அமெரிக்கப் படிப்பிலே அத்தனை வகுப்பிலும் நான் முதல் மாணவனாக வந்ததற்காக என்னை ஊக்குவித்து, உதவிதொகையை அதிகப்படுத்தி என்னைப் பெருமைப்படுத்தினாங்க’’ என்று தனது தந்தை தந்த ஊக்கத்தையும், அவர் ஊட்டிய ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வையும் எண்ணி எண்ணி மகிழ்கிறார், திரு.பாலா.

   1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் துவங்கிய பொருளாதார விரிவுபடுத்தல் நான் இவருக்கும் இந்தியாவுக்கும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இவரது கவனமெல்லாம் மேலாண்மையியல் (மேனேஜ்மெண்ட்) கல்வி முறையில் இருந்தது.

   அதனால் இந்திய அரசுடன் பேசி டெல்லியை அடுத்துள்ள குர்ஹாம் பகுதியிலுள்ள ``மானேஜ்மென்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூஷன்’’ நிறுவனத்திலுள்ள பேராசிரியர்களுக்குப் பாடங்கள் நடத்த வந்தார். இந்தியாவிலிருந்து இருபத்தி இரண்டு பேராசிரியர்களை அமெரிக்கா வரவழைத்து, அவர்களுக்குத் தொழில் அதிபர்களை எப்படி அதிக அளவில் உருவாக்குவது என்பதில் பயிற்சி அளித்தார். இப்போது தென்னிந்தியர்களுக்குத் தான் அமெரிக்காவில் பெரிய மரியாதை. நமது இளைஞர்களை அங்கே அறிவின் முதலீடாகவே காண்கிறார்கள்.

   புள்ளியியலிலும், கணிதத்திலும் தனது இளங்கலை அறிவியல் தேர்வுத் தேர்ச்சி பெற்றார். அதே போல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1961 ஆம் ஆண்டு புள்ளியியல், மற்றும் கணக்கியல், முதுகலைப் பட்டமும் 1963 ஆம் ஆண்டு புள்ளியிலில் எம்.எஸ்.சி., பட்டமும் பெற்றார். ``System effectiveness alias sure Reach ‘’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை அளித்து அமெரிக்க, டேய்டன் பல்கலைக்கழகத்தில் 1969 ஆம் ஆண்டு எம்.எஸ்.சி., (பொறியியல்) பட்டம் பெற்றார். தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு அதே பல்கலைக் கழகத்தில் (Carnagie –Mellon University)  தொழிற்சாலை நிர்வாகம் குறித்து``Major, Operation Research Minor –Systems’’  என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை அளித்து முனைவர் பட்டம் பெற்றார் தொழில் ரீதியாக அமெரிக்காவில் உள்ள் இல்லினாய்ஸ் மாநிலத்தில் தன்னை ஒரு சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கராகப் பதிவு செய்து கொண்டுள்ளார்.

   அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் சி.பி.ஏ. சான்றும் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் அக்கெளண்டிங் அமைப்பின் சி.எம்.ஏ.சான்றும் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டர்னல் ஆடிட்டர்ஸ் நிறுவனத்தின் சி.ஐ.ஏ. சான்றும் பெற்றுள்ளார், தமிழகத்தில் தனது முதுகலைப்படிப்பு முடித்தவுடன் திரு. பாலா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் மற்றும் கணக்கு உதவிப்பேராசிரியராகப் பணிப்புரிந்தார்.

   அதன் பின்னர் அமெரிக்கா சென்று டேய்ட்டன் பல்கலைக்கழகத்தில் 1969 ஆம் ஆண்டு தொழிற்சாலைப் பொறியியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்! அத்துடன் பிட்ஸ்பர்க் கார்னஜிக் மெல்லன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் பாடங்கள் நடத்தினார். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து, பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று, அதே பல்கலைக்கழகத்தின் Accounting Information systems and decision Sciences J.L.Kellog Graduate school of Management   என்ற துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் 1984 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார். இப்போது அதே இடத்தில் கணக்கியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

  தகவல்கள் நன்றி; திரு.பி.வெங்கட்ராமன் (முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி –டிவி.எஸ்) மற்றும் முத்து யூனிவாசன்.

 

   

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

More Profiles