HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

        தனக்குக கலைகளில் நாட்டம் வந்தது எப்படி? என்று ஆசிரியர் திரு.சாவி அவர்கள் முன்பு நடத்திய ``சுஜாதா என்ற பத்திரிகையில் செட்டியார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ``திருப்பதி பிரம்மோத்சவத்துக்குப் போயிருந்த போதுதான் தனக்கு இசை மற்றும் நுண்கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதாகவும், கலைகளைக் கற்க தனக்கு வாய்ப்பின்றி போனாலும் தன் குழந்தைகள் அவற்றைக் கற்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவரது மகனுக்குத் திருமணம் நடைபெற்ற போது அந்த விழாவில் என் மாமனார் திரு.நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள்தான் வாசித்தார். செட்டியாரின் கலையார்வத்துக்கு அந்தக் கச்சேரியே சான்று!.

        நூறாண்டு புகழ்பெற்ற ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி சபா, நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாடமி, கிருஷ்ண கான சபா போன்ற பிரபல கலை அமைப்புகளின் தலைவராக இருந்து கொண்டு செட்டியார் ஆற்றிவரும் கலைப் பணிகள் பற்றி நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

        குறிப்பாக டிசம்பர் இசை விழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் செட்டியார் ஆற்றிவரும் ஒரு வித்தியாசமான பணி பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.

        ஒவ்வொரு சபாவிலும், எந்தெந்தத் தேதியில், எந்தெந்த நேரத்தில், யார் யார் கச்சேரி செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாகத் தொகுத்து அதை ஒரு அழகிய கையேடாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறார். இந்தக் கையேடு இசை ரசிகர்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் இந்தக் கையேட்டை வெளியிட்டு வந்த செட்டியார் பின்னர் அதனோடு இன்னொரு பயனுள்ள காரியத்தையும் செய்தார். இசை விழா நிகழ்ச்சிகளின் போது தவறாமல் பாடப்படும் சில முக்கியமான பாடல்கள், கீர்த்தனைகளையும், அவை அமைந்துள்ள ராகத்தையும் குறிப்பிட்டு இன்னொரு கையேட்டையும் தயாரித்து வழங்கினார்; வழங்கி வருகிறார்.

        மூத்த இசைக் கலைஞர்களுக்கு அவர் காட்டும் மரியாதை அலாதியானது. குறிப்பாக எம்.எஸ்., செம்மங்குடி போன்றோர் மீது அளவு கடந்த மதிப்பு. ஒருவகையான பக்தியையே அவர் கொண்டிருக்கிறார். அவர்களை சந்திக்கும் போதெல்லாம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் பெருமைப்படுவார். அவரோடு செல்லும்போது இத்தகைய மேதைகளின் ஆசீர்வாதங்கள் எனக்கும் பல முறை கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையின் பெருமைக்குரிய தருணங்கள் அவை.

         இயல்-இசை-நாடகம் என முத்தமிழ் மீது ஆர்வம் கொண்டு கலை, பண்பாட்டு ஈடுபாடுகளை ஊக்குவிப்பவர், செட்டியார்.

         திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையின் மீது தணியாத ஆர்வம் கொண்டு அவரது ஒலி நாடாக்கள் வெளிவர உதவி செய்திருக்கிறார் பிள்ளையவர்களின் நினைவாக மாபெரும் விழாக்களை சென்னை, கும்பகோணம், டில்லி ஆகிய நகரங்களில் முன்னின்று நடத்தியுள்ளார்.

         பட்டுநூலை நேசிக்கும் அளவுக்கு செட்டியார் அவர்கள் நல்ல தமிழ் நூல்களையும் நேசிப்பவர். புத்தங்களின் மீது அவர் கொண்டிருக்கும் காதல் இணையற்றது. உண்மையானது.

 தகவல் உதவி `ஸரிகமபதநி

 ஏ. நடராஜன்.

         ``தன்னம்பிக்கையும் பெரியார், அண்ணா, காமராஜ், மு.வ.போன்றவர்களின் வாழ்வை படித்து அறிந்து பக்குவப்படுத்திக் கொண்டதும் எனது பலம் என நினைக்கிறேன். எந்தப் பிரச்சினையையும் வெற்றியுடன் அணுகலாம். என்பதற்கு கல்லூரியில் படித்த `குளிர்காலம் வந்தால் வசந்தகாலம் வராமல் போகாது என்கிற வரி எனக்கு உதவிகரமாயிருக்கிறது என்று மனம் திறக்கிறார் எழுத்தாளரும், முன்னாள் தொலைக்காட்சி இயக்குநருமான திரு.ஏ.நடராஜன்.

          முசிறி தாலுகாவில் திருஈங்கோய்மலை எனும் ஊரில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் 1955 வரை வசதியில்லாமல் முசிறிக்கு நடந்து போய் படித்தவர்.

          மணமேடு எனும் ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நடராஜனுக்கு அப்போது சைக்கிளில் லிஃப்ட் கொடுப்பாராம். இருவரும் திருக்குறள் அனைத்தையும் மனப்பாடமாக சொல்லிக் கொள்வார்கள். 40 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் அந்த பால்ய சினேகிதனை பொதுபணித்துறை பொறியாளராக சந்தித்தேன் என்று மகிழ்கிறார் நடராஜன்.

          1955-ல் திருச்சி நேஷனல் கல்லூரியில்  பி.ஏ. பொருளாதாரம் சேர்ந்து, வீட்டு பொருளாதார பிரச்சினையில் ஹாஸ்டலில் சேர முடியாமல் பெரியார் மாளிகை அம்பேத்கார் இல்லத்தில் வீராசாமி எம்.பி. இடம் கொடுத்து படித்தார்.

          அந்த நாட்களில் பெரியார் அங்கு வந்து தங்கும்போது. அவரை கவனித்து , அவருடன் பேசும் வாய்ப்பு பெற்று அவரிடமிருந்து தன்மானம்,பணிவு, பிறருக்கு மரியாதை செலுத்துவதையெல்லாம் கற்றுக் கொண்டார்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles