HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      படிக்கும் போது பல்வேறு துறைகளைப் பற்றி அறிவும் ஆர்வம் இவருக்கு இருந்தது. ஷேக்ஸ்பியர், மில்டன், சிலப்பதிகாரம், இலக்கியம் எல்லாம் இவரை கவர்ந்தாலும் கூட படிப்பில் கோல்ட் மெடல் வாங்கினார்.

          இறைவன் அருளாலும், சொந்த முயற்சியாலும் கட்டுரை-பேச்சு-பாட்டு போட்டிகளில் கல்லூரியில் நிறைய பரிசுகளை வென்றிருக்கிறார்.

           1959-ல் லக்ஷ்மி விலாஸ் பேங்கில் இவருக்கு வேலை கிடைத்தது. நண்பர் ஒருவர் ரஷ்யன் நாவல்,பிரெஞ்சு,யூரோப்பியன் நாவல்கள் வாங்கிப் படித்து இவருக்கும் கொடுக்க, நடராஜனுக்கு ஆங்கில இலக்கியங்கள் மேலும் ஆர்வம் திரும்பிற்று.

          அண்ணா,கலைஞர், மு.வ.,ஜெயகாந்தன், சுஜாதா எழுத்துக்களுக்கு இவர் ரசிகர். 1960-ல் சென்னைக்கு மாற்றலாகி அங்கு திருவல்லிக்கேணி உடுப்பி கிருஷ்ண மந்திரத்தில் செய்தித்தாள் எழுத்தாளர் கா.நா.சு.,வுடன் படித்து, பின்னால் 1984-ல் இருவரும் சேர்ந்து விருது பெற்றதை நினைவு கூர்கிறார்.

          அந்த கால கட்டத்தில் கர்னாடக இசைக் கச்சேரி, பொதுக்கூட்டங்கள், கன்னிமரா லைப்ரரி என்று பல விஷயங்கள் இவரது மூளையில் பதிவாயிற்று. சம்பள பணத்தை வீட்டில் கொடுத்து விட்டு தன் அதிகப்படி செலவுக்காக நடராஜன் துணுக்குகள் எழுத ஆரம்பித்தார்.

          பிறகு திருச்சி வானொலி நிலையத்தில் வேலை கிடைத்து, துறைவன்,சுகி சுப்ரமண்யம், மீ.ப, சோமு போன்ற ஜாம்பவன்களுக்கு மத்தியில் மிரண்டு, பிறகு சிறுகதைகள். நாடகங்கள் எழுதி திறமையை வெளிப்படுத்தி எல்லாரிடமும் மதிப்பை வளர்த்துக் கொண்டார்.

          மும்பை,கோவை, பெங்களூர், சென்னை வானொலிகளில் பணி புரிந்து பிறகு தொலைக்காட்சியிலும் பத்து வருடங்கள் சாதனை! ரிடையரான பிறகும் கூட நடராஜன் எப்போதும் பிஸி!

          கலை,இலக்கியம் இசை,நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு இவரது பங்களிப்பு உண்டு. திருப்பணி,திருமணம், புத்தக வெளியீடு என்று இந்தியா முழுக்க பயணித்துக் கொண்டிருப்பவர். தற்போது ஹியூமன் ரிசோர்ஸஸ் மற்றும் ஹெல்த்-ஃபேமிலி வெல்ஃபேர் மத்திய அரசு கமிட்டிகளில் உறுப்பினராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

         நடராஜன் ஒரு விஷயத்தை செய்ய தீர்மானித்து விட்டால், அதில் தீவிரமாய் இறங்கி விடுவார்.

         `பாதங்கள் நடக்கத் தொடங்கி விட்டால் பாதை மறுப்பு சொல்வதில்லை என்பது இவருக்கு வேதவாக்கு. வேகம்,விவேகம், நேர்மை,இவரது விசேஷ குணம்.

         பதவியில் இருந்தபோது சரி,பிறகும் சரி பிறரிடமிருந்து இவர் காபி,டீ கூட வாங்கிக் குடித்ததில்லை. கொடுத்து மகிழும் குணம்!

         திருச்சி வானொலியில் பல புதுமைகள் செய்து மக்களை கவரச் செய்தது போல சென்னை வானொலியில் பிரச்சினைகளைச் சொல்லி பத்திரிகையாளர்கள் மூலம் தீர்வு கண்ட நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றது.

         ஏற்ற காரியத்தை செயல்படுத்தும் முயற்சி ஆத்மார்த்தம்,உத்வேகம்,கெளரவம் பார்க்காமல் மீடியாவிற்காக பலரையும் சந்தித்து திறமையானவர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு கொடுத்து சாதனை பல செய்திருக்கிறார்.

      பெங்களூரில் கன்னடம் பயின்று அங்குள்ளவர்களை கவர்ந்து, அங்கு வானொலியில் முதன் முதல் வர்த்தகச் ஒலிபரப்பு ஆரம்பித்தது இவர்தான்.

       தனிப்பட்ட நபரை, மொழியை, நிறுவனத்தை வெறுப்பதோ,துவேசம் கொள்வதோ இவருக்கு பிடிக்காது `எதிலும் நல்லதைப் பார்ப்பவருக்கு சலிப்புமில்லை-சங்கடமுமில்லை என்கிற கீதை வாசகம் இவருக்கு பாதை.

       தனக்குக் கீழ் உள்ளவர்களையும் அலட்சியப்படுத்தாமல் அவரது திறமையை மதித்து, ஊக்கப்படுத்தி அவர்களின் தவறுகளை மன்னித்து, கண்டிப்போ-பாராட்டோ-தனியாக அழைத்துச் சொல்வது இவரது இயல்பு.

      படிப்பதும் எழுதுவதும் இவரது பொழுது போக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகள் என பயணித்துள்ள நடராஜன் உலகத்தின் 75 சதவிகிதத்தை சுற்றிப் பார்த்திருக்கிறார்.

      கலைக்கும் கல்விக்கும் உதவியதும், வாய்ப்பு கொடுத்தாலும் இவருக்கு திருப்தி தரும் விஷயங்கள். திருக்குறள் மேல் உள்ள பற்றில் நடராஜன் தன் சொந்த ஊரில் திருவள்ளுவருக்கு ஆலயம் கட்டி சிறப்பித்திருக்கிறார்.

        ``தீதும் நன்றும் பிறதர வாரா

         நோதலும் தணிதலும் அதனிலும் இலமே

         ஆதலால் பெரியோரை வியத்தலும் இலமே

         சிறியோரை இகழ்தலும் இலமே

என்பதை வேதவாக்காக எடுத்து, சக்திவாய்ந்த மீடியாவில் பெரிய பொறுப்புகளில் இருந்தும் கூட யாரும் எந்த குற்றமோ பழியோ சொல்லி விடாத அளவிற்கு நியாயமாய்- நேர்மையாய் செயல்பட்டு-முடிந்த அளவிற்கு இன்றும் சமூகத்திற்கு உதவிகரமாய் இருக்கும் இந்த முசிறி நடராசர் ஓர் ஆச்சரியம்.

       இரட்டையர்களோ என்று வியக்கும் வண்ணம் கலை,இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்ளும் நடராஜனும், நல்லியும் நட்புக்கு மிக சிறந்த உதாரணம்.

       2003இல் நல்லி பத்மஸ்ரீ பெற, அகில இந்திய அளவில் பத்மஸ்ரீ பெற்ற ஒரே ஒரு தொழிலதிபரான நல்லியை குவைத் அழைத்து  Fronliners        அமைப்புமூலம் பாராட்ட விரும்பினோம். உடனே நடராஜன் அதற்கு ஏற்பாடு செய்து குவைத்தில் மேனகா காந்தி நிகழ்ச்சியில் நல்லிக்கு பாராட்டுவிழா நடத்தியதில் குவைத் தமிழர்களுக்கெல்லாம் பெருமையாயிற்று.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles