HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

   காலைக்கதிர் வாரக்கதிர்,டிசம்பர் 2003

    கருமுத்து தி.கண்ணன்;

      ``உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் வாழ்கிறவர்கள் அல்லர். உயிரோடு பலர் இருக்கிறார்கள்.சிலர் மட்டுமே வாழ்கிறார்கள். `வாழ்வாங்கு வாழ்தல் என்ற வள்ளுவர் வாக்கிற்கு `வாழவேண்டிய முறைப்படி வாழ்தல் என்பது பொருள்.

      இது டாக்டர் ராதா தியாகராசன் அவர்களின் `ஆலை அரசர் கருமுத்து தியாகராசர் புத்தகத்திற்கு திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கொடுத்த அணிந்துரை வாக்கு.

        சென்றநாள் மனதில் வைத்து

        சேர்த்ததையெல்லாம் கல்விக்காக

        செலவிட்டானே நாம் இனி

        காண்பதென்னாள்

     இது கலை தந்தை திரு.கருமுத்து தியாகராசர் அவர்கள் மறைந்த போது உதிரம் சொட்ட கவியரசு கண்ணதாசன் பாடினது.

       மதுரையில் கல்வி, தொழில், இறைபற்று, நாட்டுப்பற்று போன்ற உன்னத வழிகளை தேர்வுசெய்து அந்த பாரம்பர்யத்தை தெளிவோடு காத்துவரும் திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு தினமலர் மூலம் கிடைத்தது.

       இவர், நிறைகுடம் என்பதிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்-எல்லா வளமும்  பெற்றிருந்தும் கூட- அமைதி அடக்கம்!சிந்தையிலும் செயலிலும் ஒரு தெளிவு! வலியோர்-எளியோர் என பாராமல் அனைவரையும் மதிக்கும் பண்பு!

       ஆழமாய்- அதே சமயம் அளந்து அளந்து-அனாயசமாய் அதேசமயம் அனாவசியமாய் வார்த்தைகளை விடாத பக்குவம்! விஷயங்களை சுவையாய்-கோர்வையாய் அதே சமயம் கொஞ்சமும் செருக்கில்லாமல் வெளிப்படுத்தும் மாண்பு! மனிதாபிமானம்! ஈகை குணம்! நாட்டுப்பற்று! தமிழ்பற்று!

      இந்த நிறை குடத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற தாழ்வு மனப்பான்மை எழுந்தது நிஜம்.

      ``நான் புதுசாய் எதுவும் பண்ணிடலை. எங்கள் தந்தையார் ஆலை அரசர் திரு.கருமுத்து தியாகராசர் அமைத்துத் தந்த கொள்கை-குறிக்கோள்-அடித்தளத்தில் அவர் விட்டுப்போன பணியின் தொடர்ச்சிதான் எங்கள் செயல்பாடு என்று தன்னடக்கத்தோடு தன் தந்தையின் நினைவுகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

      செட்டிநாட்டில் திருப்பட்டூர் அருகே ஆ.தெக்கூரை சேர்ந்த திரு. தியாகராசர் அந்த நாளில் பத்தாம் வகுப்பு வரைத்தான் படிக்க முடிந்தது. சின்னச்சின்ன வியாபாரங்கள் செய்து கொண்டிருக்கிறார்.

     இலங்கை சென்று மார்னிங் லீடர் எனும் பத்திரிகையில் அசிஸ்டென்ட்

எடிட்டராக பணியை துவங்கினார்.

      அந்த நாட்களில் பிரிட்டீஷ் காலனியில் தமிழ் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகளை பத்திரிகையில் இவர் வெளியிடவே-

      உண்மை நிலையை அறிய கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சமர்ப்பித்த ரிப்போர்ட்டில் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை என இருக்கவே-தியாகராசர் துணிச்சலுடன் அதை விமர்சித்து எழுதினார்.

     அதன்மூலம் இவருக்கு பலதரப்பினரிடையேயும் நல்ல மதிப்பும் செல்வாக்கும் வளர ஆரம்பித்தது.

     1923இல் அவர் மதுரை வந்து மதுரா கோட்ஸில் (அந்த நாளில் ஆர்.வி.மில்) சேர்ந்தார். பிரிட்டீஷ் நிர்வாகத்தின் சீர்கேடுகளை பொறுக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்களை நிர்வாகம் வெளியேற்ற-

     ஏழை-எளியோர் கஷ்டப்படுபவர்கள்-தொழிலாளர்கள் மேல் பற்றும் பாசமும் கொண்ட தியாகராசர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவவேண்டி மீனாட்சி மில்ஸ்-ஐ துவக்கினார்.

     பல சிரமங்களை சந்தித்த அந்த மில்-பிறகு பல கிளைகளாக வளர்ச்சி பெற்றது என்றால் அதற்கு காரணம் அவரது நேர்மை- நாணயம்-கடுமையான உழைப்பு.

    நாட்டுப்பற்றுடன் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து அவரது வீட்டில் காந்திஜி மண்டப யாத்திரைக்கு வந்தபோது தங்கியிருக்கிறார்.

    தொழில்,வியாபாரம் செய்தாலும் கூட-வெறும் சம்பாத்யத்தை மட்டுமே நோக்கமாய் கொண்டிராமல்-தன்னால் படிக்க முடியாமல் போனதே என்கிற ஆதங்கத்துடன் மக்களுக்கு கல்விக்கண் தரவேண்டும் என்று வருமானத்தில் பெரும்பகுதியை கல்விப் பணிகளில் செலவழித்தார்.

     1994இல் தியாகராயர் கல்லூரி ஆரம்பித்தார். பிறகு பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மேனேஜ்மெண்ட் கல்வி என முழுமூச்சில் பலதும் உருவாக்கினார்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles