HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

    1957இல் அவர் தியாகராஜர் மில்ஸ் ஆரம்பித்தார்.

     திரு.கருமுத்து கண்ணன் தங்கள் கல்லூரியில் பி.பி.ஏ.முடித்து தொழிலை கவனிக்க களத்தில் இறங்கினார். அப்பா ஆரம்பித்த மில்லை நவீனப்படுத்தி-ஏற்றுமதியில் கவனம் செலுத்தினார். இதன் நிர்வாக இயக்குனரான இவர்,காலத்திற்கேற்ப மாற்றங்கள் இல்லையென்றால் முன்னேற்றமில்லை என்பதால் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப டெக்னாலஜியில் கவனம் செலுத்தியது தொழிலை வளர்க்க இவருக்கு பலமாக அமைந்தது.

    அதன் பலனாய் அகில இந்திய அளவில் ஏற்றுமதிக்காக முதன்மை விருது இந்த மில் பெற்றிருக்கிறது.தொழில்நுட்பம் மூலம் இயந்திரங்களை ஏற்றுமதி தரத்திற்கு மாற்றி 90 சதவிகித உற்பத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த மில்லின் கிளைகள் கோவை, நிலைக்கோட்டை,விருதுநகரில் சுமார் 2000 தொழிலாளர்களின் ஆத்மார்த்த உழைப்பில் செயல்பட்டு வருகிறது.

     அடுத்து சுமார் 100 கோடி முதலீட்டில் கடலூரிலும் துவங்கப்படவுள்ளது.

     தொழில் வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் வாங்குவதும்,தொழிலாளர்களின் சந்தோஷமும் திருப்தியும் மிகமிகத் தேவை. இவ்விரண்டிலும் இவர் கவனமாயிருக்கிறார்.

     இவரது இன்னொரு சிறப்பு-வெகுஜன தொடர்ந்து கஷ்டப்படுபவர்களின் மேல் காட்டும் பரிவு! தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து மனமுவந்து உதவுவதால் இங்கே பிரச்னைகளே வருவதில்லை.

     2001 இல் சில காரணங்களால் பல மில்கள் நடத்த முடியாமல் மூடப்பட்ட போதும்-இவர் கலங்கவில்லை சிரமத்தையும் பார்க்காமல் நடத்தினார்.

     புதிய சிந்தனைகளை, செயல்பாடுகளை வரவேற்பது இவரது சிறப்பு. பிரச்னைகள் வரும்போது நேர்மையுடனும் நடுநிலையுடனும் அணுகுவது இவரது வழக்கம்.

     மனைவி திருமதி உமா குடும்பத்துடன், கல்லூரி ஹாஸ்டலையும் நிர்வகித்து வருகிறார். நகரத்தார் சமூகம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அவர் இவருக்கு பக்கபலம்.

     இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் மூத்த மகள் அமெரிக்காவில் மற்ற இருவரும் மேற்படிப்பில்.

     இவர்களது கல்லூரிகளில் டொனேஷன் பெறுவதில்லை. கேபிடேஷன் கட்டணம் கிடையாது மிக குறைந்த கட்டணத்தில் ஏறக்குறைய தர்ம ஸ்தாபனம் போல் இயங்கி வருகின்றன. தமிழக அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இக்கல்லூரி இடம் பிடித்திருக்கின்றது.

     தியாகராஜர் கல்லூரி தமிழுக்கு எப்போதும் முக்கியவத்துவம் கொடுத்து வருகிறது. பல தேசிய தலைவர்கள் இங்கிருந்து உருவாகியுள்ளனர். இங்கு மிகப்பெரிய தமிழ் நூலகம் உள்ளது.

     பொறியியல் கல்லூரியில் 90 சதவிகித மாணவர்களுக்கு படிப்பு முடிக்கும் முன்பே பெரிய பெரிய கம்பெனிகளில் வேலை வாய்ப்பும் கிடைத்து விடுவது இன்னொரு சிறப்பு.

     ஹனிவெல் கம்பெனியுடன் கூடிய கூட்டு ஒப்பந்தம்,  TIFAC மூலம் வயர்லெஸில் ஸ்பெஷல் ரிசர்ச் சென்டர் என இவர்களின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.

     இக்கல்லூரி பேராசிரியர் ஒருவர், வீணாகும் பிளாஸ்டிக்கை வைத்து தார் ரோடு போட்டால், சுற்றுப்புற சூழலும் காக்கப்படுவதுடன் ரோடும் நல்ல பலம் பெறுகிறது என கண்டுபிடித்து-செயல்படுத்தி-காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

    கருமுத்து கண்ணன் அவர்கள் மீனாட்சி கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த சமயத்தில்-

    கோயிலின் பாரம்பர்யம் பழைய சடங்குகள்-கோட்பாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். பக்தர்களுக்கு திருப்தி தரும் வகையில் சுத்தம் சுகாதாரம்!

     நடராஜர் சன்னதியின் வெள்ளி பழுதடைந்திருந்ததை முழுமைப்படுத்தினார். அதற்கு முன்பு வரை காண்ட்ராக்ட் விடுபட்டு தரமில்லாமலிருந்த பிரசாத கடைகளை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்த ஏற்பாடு செய்து தரத்துடன் கோயிலுக்கு வருவாயும் ஈட்டிதர வைத்தது விசேஷமான செய்தி.

     கண்ணன் இந்திய தொழில் கூட்டமைப்பின்  (CII) தென் மண்டல தலைவராக இருந்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஏற்படும் சாதி கலவரங்களுக்கு காரணம் வேலையின்மையே என்றும், இளைஞர்களுக்கு எந்தெந்த பகுதிகளில் எப்படி வேலைவாய்ப்பு அமைத்து தரலாம் என்றும் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles