HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

      நம்நாடு- நம் கலாச்சாரம் உலகில் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று. நம் தொன்மையான கோயில்களை இன்று-வல்லரசுகள் ஒன்று சேர்ந்தாலும் கூட கட்ட முடியாது.

     இளைஞர்கள் அதிகம் கொண்ட நம் நாட்டில் இளைய சமுதாயம் நம் கலாச்சாரம்-பாரம்பர்ய பலத்தை உணரவில்லை. அவற்றை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

     நம் நாட்டில் எல்லா வளமும் உண்டு. பல துறைகளிலும் நம்மவர்கள் சாதனை படைத்திருப்பதற்காக பெருமைப்படணும். கடமை-கட்டுப்பாடு-நேர்மை-ஒழுக்கமான பழக்க வழக்கங்களுடன் இளைஞர்கள் வளர வேண்டும்.

    இவற்றை கல்வி நிலையங்கள் பாதியும் மீதியை குடும்பங்களும் அவர்களுக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும்-என்று திரு.கண்ணன் விருப்பப்படுகிறார்.

    கலைத் தந்தையின் பேர் சொல்லும் பிள்ளை! 

      வீகேஎன்;

     ``தொழிற்சாலை தான் எனக்குக் கோயில் இயந்திரங்கள்தான் மூலஸ்தானம். தொழிலாளர்கள் தான் இதன் உற்சவமூர்த்திகளான கடவுள்கள் என்று மனம் உருகுகிறார் திரு, வி.கே.என்.கண்ணப்பன்.

     திருச்சி   BHEL    நிறுவனத்தில் 35 வருடங்களாக ஃபேப்ரிகேஷன் கான்ட்ராக் எடுத்து நடத்தி வரும் வீகேஎன் குரூப்பில் 300 பேர் பணிபுரிகிறார்கள்.திருச்சியில் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் எல்லா இடங்களிலும் வி.கே.என் பெயர் பிரபலமாகவும் ஆத்மார்த்தமாகவும் உச்சரிக்கப்பட்டு வருகிறது.

     வீகேஎன், சிவகங்கை மாவட்டத்தில் கண்டராமணிக்கம் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர், விவசாயக் குடும்பம். அப்பா பைனான்ஸ் தொழில் பார்த்தவர்.

     வீகேஎன் 1970-ல் அண்ணாமலை யுனிவர்சிடியில் சிவில் என்ஜினியரிங் முடித்தார். படிக்கும்போது `நாடு உனக்கு என்ன செய்தது என்று பார்க்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று யோசி என்கிற ஜான் கென்னடியின் வார்த்தைகள் இவரது மனதில் ஆழமாய் பதிந்தன.

     படித்ததுமே ஏதாவது தொழில் ஆரம்பித்து பலருக்கும் வேலை கொடுக்க வேண்டும். என்கிற கனவு இருந்தது. படிக்கும் நாட்களில் திருச்சி பெல் கம்பெனி வழியாய் பயணிக்கும் போது அந்த கம்பெனியின் கட்டுப்பாடு, உழைப்பு, வெற்றி, தொழிலாளர்களுக்கு அவர்கள் மூலம் கிடைக்கும் பலன்களை அறிந்து அவர்களிடம் தொழில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற தாக்கம் ஏற்பட்டது.

    ஆரம்ப நாட்களில் தொழில் தொடங்க வள்ளியப்பன் என்பவரிடம் பண உதவி பெற்று சின்னதாய் ஒரு ஒர்க்‌ஷாப் எட்டு பேருடன் சேர்ந்து ஆரம்பித்தார்.

    அது வளர்ந்து வளர்ந்து பெல் கம்பெனிக்கு ஏ.இஸ்ட்ஃபேப்ரிகேஷன் வேலைகளை செய்து தரும் முதன்மை கம்பெனியாக பெயரெடுத்திருக்கிறது.

    கான்ட்ராக்டில் போட்டியிருந்தாலும்கூட,`வேறு எவரும் செய்ய முடியாத கடினமான வேலைகளை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டு வாங்குவது இவரது இயல்பு.

     நேரடி வேலை மட்டுமின்றி சுற்றுப்பக்கம் 200 கம்பெனிகளுக்கு மெஷினரி ஆன்சலரீஸ் சப்ளை பண்ணுகிறார்.

    வீகேஎன்   நின் பலம், எதையும் சாதிக்க முடியும் என்கிற அவரது தன்னம்பிகை, சவாலாக எடுத்து செயலாற்றும் துணிவு, கம்பெனியின் முன்னேற்றத்திற்காக யார் நல்லது சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்.

    வீகேஎன் தனக்கு கீழ் இருப்பவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருக்கிறார்.`` ஏதாவது தேவை என்றால் நீயே ஓனர் என நினைத்து முடிவெடு, நீ எடுக்கிற முடிவு ஒரு வேளை தவறு என்றாலும்கூட அதை ஒரே மாதத்தில் சரி பண்ணிவிடலாம். அதனால் துணிச்சலுடன் செயல்படுங்கள். சந்தோஷத்தை அனுபவியுங்கள்.

     காசு மட்டுமே உலகமல்ல, மனிதாபிமானத்துடன் செயல்படு, முயற்சியில் ஆத்மார்த்தமும் இருந்தால் இங்கே தீர்த்து வைக்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது.

     வீகேஎன் எந்த விஷயத்தையும் மறைத்து வைப்பதில்லை. தனது கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தொழிலதிபர்களாக வேண்டும். தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக 72 பேர்களுக்கு தலா லட்ச ரூபாய் வீதம் வழங்கியிருக்கிறார்.

     இது மாதிரி 100 பேர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரது நோக்கம். தொழிலாளர்களுக்கு இலவச வீடு, சாப்பாடு என்பது இவரது லட்சியம். இவர் இதுவரை 300 கிராமங்களுக்கு போர்வெல் போட்டு குடிநீர் பிரச்சினையை தீர்த்திருக்கிறார். குடங்கள். வேட்டி சேலை என பல ஆயிரம் பேர்களுக்கு உதவியுள்ளார்.

2000 நலிந்தோர் குடும்பங்களுக்கு திருமண உதவி பள்ளி, கல்லூரிகளுக்கு உதவி! மத வித்தியாசம் பார்க்காமல் ஆலய திருப்பணிகள்!

     மதுரை, கன்னியாகுமரி, திருச்செந்தூர்,திருச்சி போன்று 7 இடங்களில் வீகேஎன் கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டி, தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி முன்பதிவு செய்யும் பொதுமக்களுக்கும் இலவசமாய் தங்க அனுமதி தருகிறார்.

     ``நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் எவ்வளவு  Turn over செய்கிறேன் என்பதை விட எவ்வளவு உதவிகள் செய்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிறார் வீகேஎன் ஹானரரி டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவரின் எளிமையும் மனிதாபிமானமும் வியக்க வைக்கிறது.

     இவருக்கு பிடித்த கலர் நீளம். ஒரு ஐடண்டிஃபிகேஷனுக்காக இவரது கம்பெனி, கட்டிடங்கள் எம்பளம், கார், போடும் சட்டை எல்லாமே நீலம்தான் அதில் உதயசூரியன் சின்னமும் பொருத்தியிருப்பார்.

     திமுக மற்றும் கலைஞரின் மேல் பற்றுள்ள வீகேஎன் கட்சியிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத சீரிய தொண்டர் தனது நிகழ்வு, நிகழ்ச்சி படங்களை பாதுகாத்து எக்ஸிபிஷனாக வைத்துப் பார்த்து மகிழ்கிறார்.

     வீகேஎன் னின் மனைவி திருமதி கண்ணாத்தா குடும்பத்தை திறம்பட நிர்வகிப்பதுடன் பக்க பலமாகவும் இருக்கிறார். இவர்களின் மூத்த மகன் வீகேஎன் ராஜா.பி.இ யுனிவர்சிடியில் ராங்க் பெற்று ரிலைன்ஸ் புராஜக்ட்களை நிர்வகிக்கிறார். அடுத்த மகன் வீகேஎன் கல்யாண சுந்தரம் பி.இ முடித்து அப்பாவுக்கு துணை. மூன்றாவது மகன் நாராயணன் பி.இ., சிவில்.

    ``மின்சாரம் இருக்கும் வரை பெல் கம்பெனி இருக்கும். பெல் இருக்கும் வரை இந்த வீகேஎன் கம்பெனியும் சமூகப் பணிகளும் இருக்கும் என்று பூரிக்கிறார் வீகேஎன்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles