HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

தன்னம்பிக்கை தமிழர்கள்  - "என்.சி.மோகன்தாஸ்"

தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி

 காலைக்கதி வாரக்கதிர் மே- 2003

 வி.என்.சிதம்பரம்;

      `நான் எதுவும் பெரிதாய் சம்பாதித்து விடவில்லை. தாத்தா; அப்பா சம்பாதித்ததை சிதைக்காமல் காப்பாற்றி வருகிறேன். எனக்கு வழிகாட்டி-ரோல் மாடல் எல்லாம் தாத்தா திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்கள்தான்! என்று தன்னடக்கத்தோடும் புன்னகையோடும் பேச ஆரம்பிக்கிறார் சென்னை கமலா தியேட்டர் அதிபரான தி.வி.என். சிதம்பரம்.

      செட்டிநாட்டு வட்டத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராங்கியம் கிராமம் இவரது பூர்வீகம், அந்த நாட்களில் தாத்தாவின் இளம் வயதிலேயே அவரது தந்தையார் இறந்து விட குடும்பத்தை வறுமை சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலைமை.

      தாத்தா பிழைப்பு தேடி மலேசியா போய் அங்கு பார்ட்னர்ஷிப்பில் வட்டி வியாபாரம் தொடங்கினார். அயராத-தளராத உழைப்பில் அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. பிறகு ரப்பர் தோட்டம்!

     அந்த வருமானத்தில் பர்மாவில் நெல் வயல்கள் வாங்கினார்-மலேசியாவில் பத்து ஊர்களில் கடை எஸ்டேட் என வளர்ந்து, கோடீஸ்வரர் ஆன தாத்தாவின் தாரகமந்திரம்-நேர்மை-உண்மை-உழைப்பு!

 அது இவர்களது பலமும் கூட.

     இரண்டாம் உலக போர் சமயம் தாத்தாவின் பெரும்பகுதி சம்பாத்தியங்கள் அழிந்துபோக-அப்பா-மனம் தளராமல் அவற்றை திரும்ப நிலை நிறுத்தினார்.

     வி.என் . சிதம்பரம் புதுக்கோட்டையில் இன்டர்மீடியட் முடித்ததும் மலேசியாவுக்குப் போய் ரப்பர் தோட்டங்களை கவனிக்க ஆரம்பித்தார்.அவர்களுக்கு அப்போது ஸ்ரீலங்காவிலும் தேயிலை தோட்டங்கள் இருந்தன.

     ஒரு கால கட்டத்தில் அயல்நாட்டு முதலீடுகள், சொத்துக்களை தொடருவதில் சிக்கல்களும் நம்பிக்கையின்மையும் ஏற்பட சிதம்பரம் எல்லாவற்றையும் காலி பண்ணி தமிழகம் திரும்பினார்.

     முதலில் சென்னையில் 1963ல் கிருஷ்ணவேணி தியேட்டரை வாங்கி சில காரணங்களால் அதை விற்க வேண்டி வந்தது. சினிமா தியேட்டரில் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்கிற நம்பிக்கை வரவே 1970ல் இப்போது உள்ள கமலா தியேட்டர் இடத்தை வாங்கி 1972ல் ஆரம்பித்தார்.

     வி.என்.சியிடம் உள்ள சிறப்பு குணம் தோல்வி கண்டு தளராமை, வியாபாரத்தில் வெற்றித் தோல்விகள் சகஜம். ஒன்றை சரியாய் ஆரம்பிக்கவில்லை அல்லது சூழ்நிலையாய் சரியாய் நடத்தவில்லை என்றால் தோல்வி வரத்தான் செய்யும். அதற்காக துவண்டுவிடக் கூடாது.

    ஒன்று அதை சரிபண்ண வேண்டும் அல்லது ஒத்துவராத்தை கெளரவத்திற்காக பிடித்துக் கொண்டிருக்காமல் விட்டுவிட்டு வேறு தொழில் பக்கம் போய்விட வேண்டும். இவருக்கு இப்படி பல அனுபவங்கள்!

    1970-ல் கும்பகோணத்தில் டயர் ரீடிரேடிங் ஆரம்பித்து அது சரிவராது என தெரிந்ததும் மூடிவிட்டு மதுரையில் ரியல் எஸ்டேட் ஆரம்பித்தார். அதில் வெற்றி! அடுத்து ஷேர் பிசினஸ்!

    இடையில் சில காலம் மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் ஃபேன்பெல்ட்கள் தயாரிப்பில் இறங்கினார். அதிலும் தோல்வி ஏற்படவே கலங்கி விடவில்லை. மூடிவிட்டார்.

    மைசூரில் காபி எஸ்டேட் நல்ல லாபம் ஈட்டித் தந்தாலும் கூட அங்கு போய் கவனிக்க முடியாததால் விற்பனை செய்து விட்டார். இங்கே வெற்றி தோல்வி என்பதெல்லாம் நம் கையில்தான் உள்ளது.

    சிதம்பரத்திடம் இன்னொரு விஷேச குணம்-போதும் என்கிற மனம். உள்ளதை வைத்து திருப்திப்படுவது! அவரவர்கள் சினிமா தியேட்டரை இடித்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களாக மாற்றிக் கொண்டிருக்க.... ``எனக்கு இதில் லாபம் வருகிறது. திருப்தியோடு இருக்கிறேன்! என்று மனம் மகிழ்கிறார்.

    எந்த மாதிரியான தொழிலாக இருந்தாலும் சரி, அதன் பெறுமானத்தில் 25%க்கு மேல் கடன் வாங்கக்கூடாது; உண்மை-நேர்மையாய் தொழில் செய்யணும்; பிறரை ஏமாத்தக்கூடாது; நம்பிக்கை துரோகம் கூடாது; அப்போது தான் நாமும் நிம்மதியாய் இருக்க முடியும் குடும்பமும் தழைக்கும் என்பது இவரது ஆழமான அபிப்ராயம்.

     அதே மாதிரி சம்பாத்தியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவரவர்களின் வசதிக்கேற்ப காளி இடங்களை வாங்கிப்போட்டு வைத்தால் அது பிற்காலத்தில் கை கொடுக்கும் என்கிறார்.

     தொழிலை நாமே நேரடியாக கவனிக்க வேண்டும் என்பதில்லை; நம்பிக்கையான நேர்மையான திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பொறுப்பும் முழு சுதந்திரமும் கொடுத்து செயல்பட வைப்பது இவரது பலம். அதே மாதிரி நல்ல, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்வது இவரது பழக்கம். அங்கே கெளரவம் பார்ப்பதில்லை.

     மனைவி திருமதி கமலா குடும்பத்தை நிம்மதியாக பார்த்துக் கொள்வது இவருக்கு வெளியே செயல்பட உதவியாயிருக்கிறது. (இவரது மனைவியின் பெயரில் தான் தியேட்டர்! வெளியே பரவலாய் அபிப்ராயம் இருப்பது போல சிவாஜியின் மனைவி திருமதி கமலாவுக்கு சொந்தமான தியேட்டர் அல்ல இது!)

 இவர்களுக்கு மூன்று மகன்கள்.

     மூத்தவர் திரு. வள்ளியப்பன் அமெரிக்காவில், படித்து, தியேட்டர் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். அடுத்தவர் திரு. நாகப்பன் போரூரில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி தொழில்! மீடியம் ஸ்கேல் தொழிலில் சிறப்பாக செயல்படுவதற்காக இவர் ஜனாதிபதி விருது, பெற்றியிருக்கிறார்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
 

21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38

தொடரும்

More Profiles