HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

நீர்க் குமிழிகள்

 

    தன் கண்ணெதிரே இளம் ஜோடிகள் அதன்குட்டி மான்களோடு இன்பமாய் உலா வரும்போது. இவள் இவளின் குட்டி மானோடு வசந்தத்தை தேடுகிறாள்.

 

     இலையுதிர் காலத்தில் தனக்காக தன் கணவன் இருக்கிறான் என்ற ஆணித்தரமான நம்பிக்கை இவளை விட்டு கொஞ்சக் கொஞ்சமாய் போய் கொண்டிருக்கிறது. தன்னால்தானே கணவனுக்கு பல நெருக்கடியென உறவுகளிடம் மனு கொடுத்தாள், பதில் நீண்டுக்கொண்டே இருக்கிறது. அக்கம்பக்கத்தின் ஆதரவற்றப் பார்வை. இளக்காரமானப் பேச்சு உறவுகளிடம் கூட முகம் சுளிப்பு ஏன்? இந்நிலை தனக்கு என வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும்போதெல்லாம் அம்மா என்றக் குரல் இவளை வாழவைத்து கொண்டிருக்கிறது. ஒரே வீட்டில் நான்குச்சுவரில் புதைந்துப்போன இவள் கனவுகள், ஆசைகள் என்று தலைதூக்கும்? ஒட்டியக் கண்ணாடிக்குள் ஒரே முகம்கூட பல பிரதிகளாகத்தானே தெரியும்? உடைந்துபோன இதயம் மட்டும் என்ன விதிவிலக்கா? இதையும் மீறி ராஜீயின் உதடுகள் முணுமுணுக்கிறது.

 

     உன்னை நானறிவேன்.

 

     என்னையன்றி யார் அறிவார்?

 

     என் கண்ணில் நீர் வழிந்தால்,

 

     உன்னையன்றி யார் துடைப்பார்?

 

     என ராஜீ யாரை நினைத்துதான் பாடுகிறாள், தவறு செய்தது ராஜீயாகவே இருக்கட்டுமே அதற்கு இத்தனைப் பெரிய தண்டனையா? ஒரு வேளை சோற்றை உற்றார் உறவுகள் தரலாம், ஒரு லட்சம் கடனை உறவுகள் அடைக்கலம்; ஆனால் அவளை வாழத்துடிக்கும் வாழ்க்கையை?

 

     இறந்தக் காலத்தையெண்ணி நிகழ்காலத்தை வெறுப்பதால் இளங்கன்றின் எதிர்காலம் என்னவாகும். இரயிலின் தண்டவாளங்கள் வேண்டுமானால்; ஒன்றையொன்று உரசாமல் பயணத்திற்கு வழிகாட்டலாம். இதயங்களின் இணைப்பு இலலாமல் இல்லறம் செழிக்குமா? ராஜியின் வினாவிற்குத் தீர்வு கிடைக்குமா?

 

 

     வாழ்க்கை ஒரு வித்தியாசமானப் பரீட்சை இங்கே கேள்வி பதில் இரண்டையும்; தயாரித்துத் தந்துவிட முடியாது.

 

     தன்னம்பிக்கையோடு இரு; அது தளரும்போது தட்டிக் கொடுத்து, முறுக்கேற்றும் நண்பர்களைப் பெறு; அதற்கும் வழியில்லையா?

     இறை நம்பிக்கையைப் பயன்படுத்தி வெற்றியைக் குவிக்கப் பார்.

(சுகிசிவம்)

மூன்றாவது மாதம்

 

     மாயிக்கு திருமணமாகி இன்றோடு பனிரெண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது, குறிஞ்சி மலராவது பனிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலரும், தன் மருமகள் இன்னும் வயிற்றைத் தடவி பார்த்தப்படியே நிற்கிறாளே என்று வள்ளி ஆதங்கப்பட்டு, அழுவது தினம் ஒரு தொடர்கதை ஆனதுதான் மிச்சம். மாதம் முப்பது நாட்களில் முதல் மூனறு வாரத்தை மகிழ்வுடனே கழிக்கும் மாயிக்கு 4-வது வாரம் ஒரு யுத்தகளமே. அவளின் மனப்போராட்டத்திற்கு அவளது எண்ணங்கள் தான் போர் வீரர்கள். இந்த மாதம் நாள் தள்ளாதா இந்த மாதம் நாள் தள்ளாதா என்ற அவளது பேராசைக்கு கண்ணீரை மட்டுமே இறைவனால் பரிசளிக்க முடிந்தது. அவள் ஏறாத கோயில் இல்லை, சுற்றாத மரமில்லை. செய்யாதப் பரிகாரமில்லை. விழுங்காத மாத்திரையில்லை, போடாத ஊசியில்லை, உடம்பும், மனமும், காயப்பட்டதுதான் மிச்சம். பட்ட இடத்திலேயே படும் என்பதுப் போல அவளுக்கு ஆதரவாய் இருந்த மாமியாரும் புலம்பியபடியே போய் சேர்ந்துவிட்டாள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் ஆலோசனைப்படி மாமியாரின் இறுதிச்சடங்கில் வைக்கப்பட்ட கலசத்தை பெற்றுக் கொண்டு நீராடினாள் மாயி.

 

     மாமியார் நோய்வாய்ப்பட்டு வலியால் துடிக்கும்போதெல்லாம் மாயி தன் மாமியாரிடம் அருகில் போய் சொல்வாள் நீ சாகும்போது என் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே சாகு என்று, அது அவளது மாமியாரை காயப்படுத்தும் வார்த்தையாக பலர் நினைத்திருக்கலாம், ஆனால் அப்படியாவது தன் வயிறு ஒரு கருவை சுமந்து விடாதா என்ற நப்பாசைதான் மாயிக்கு. இவள் என்ன நினைத்து அந்த வார்த்கையை சொன்னாளோ தெரியவில்லை அது இவளது வாழ்வில் பலித்தது.

 

     முதன்முறையாக அந்த மாதம் இவளுக்கு நாள் தள்ளியது. தான் நட்டுவைத்த ரோஜா செடி எத்தனையோ ஆண்டுக்குப் பின்னால் பூ பூத்து நிற்கும் கோலத்தை கண்ட மாயிக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை சாம்பலை அள்ளித் தின்றாள். மசக்கையில் மயங்கி மயங்கி விழுந்தாள். உற்றார் உறவினர்க்கு எல்லாம் வாய்விட்டு சொல்ல வேண்டும் என்று துடித்தாள். கணவனோ கன்பார்ம் ஆகட்டும் மாயி. அதுதான் என்று தெரிந்ததும் சொல்லலாம் என்று அவளது ஆசைக்கு தடைக்கல் ஒன்றை செல்லமாய் விதித்தான். தன் தாயை பார்க்கும் போதெல்லாம் தான் தாயாகி விட்டதை செல்ல வேண்டும் என்று துடிப்பாள், ஆனால் தெளிவாய் தெரிந்தப்பிறகு சொல்லலாம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொள்வாள்.

 

     ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒரு யுகமாகவே கழிந்தது. அவளது கைவிரல்கள் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி அவளது அடிவயிற்றை எதிர்பார்ப்போடு தடவிக்கொடுத்து உறங்க வைத்திருந்தது. எந்த ஒரு அதிர்ச்சியையும் அவள் கேட்கத் தயாராக இல்லை. ஒவ்வொரு அடியையும், பார்த்து, பார்த்து வைத்தாள், நாட்கள் நகர, நகர அவளின் கற்பனை வானினும் விரிந்து நின்றது. இந்த உலகத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டு தன்னையே ஒய்யாரமாய் பார்த்து ரசித்தாள். அவள் வீட்டில் பூத்திருந்த பூக்களிடம் எல்லாம் சொன்னாள். உங்களுக்குப் போட்டியாய் ஒரு பூ இங்கு பூக்கப் போகிறது என்று, கிருஷ்ண ஜெயந்திக்கு தன் கரங்களையே பாதமாய் வரைந்து வந்தவள் அடுத்த கிருஷ்ணஜெயந்திக்கு தன் மழலையின் பிஞ்சுக் கால்களை சுவடுகளாக்கக் கனவு காண்கிறாள்.

 

     அறுபது நாட்கள் முடிந்தத் தருவாயில் சிறுநீரை பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறாள். மாயி, அவளின் இதயத்துடிப்பு என்றையும் விட அன்று அதிகமாகவே துடித்தது. வியர்வை படிந்த முகம், ஏக்கம் தோய்ந்த விழிகள் என்ன சொல்வார்களோ என்று எண்ணும் எண்ணம் ரிசல்ட்டுடன் வந்த கணவரை ஆயிரம் கேள்விகளோடு அண்ணாந்து பார்த்தாள். கணவனிடம் புன்சிரிப்பு இல்லை, கலங்கிய விழிகளோடு கட்டியணைக்கிறான். உச்சிதலையில் மெதுவாய் உதட்டை புதைத்துவிட்டு, மாயியின் முகத்தை நேராய் சந்தித்தான். என்ன சொல்லப் போகிறானோ என்று அலையும் விழிகளுக்கு பாசிட்டிவ் என்ற ரிசல்ட்டைக் காட்டி நீ அம்மாவாகப் போகிறாய் என்றான். கோயில் மணிகள் எல்லாம் கணீர் கணீர் என்று ஒலி எழுப்புவதுப்போல அறைமுழுவதும் ஒரே சப்தம். சப்த நாடியும் அடங்கியபடியே ஆடாமல் அசையாமல் இருந்த மாயி ஓடிப்போய் திறந்தாள்.

 

     பூஜையறையை இத்தனை நாளாய் வெறும் கல்லாகவே காட்சியளித்துவந்த சிலைகள் இன்றுதான் அவளுக்குக் கடவுளாய் காட்சியளித்தது. அறுபது நாள் ரகசியத்தை அன்றே அவள் தாயிடம் போட்டுடைத்தாள். தெரிந்தவர், தெரியாதவர் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. அத்தனைப் பேர் செவிக்கும் விருந்தானது இந்த விஷயம்.

 

     மாயியின் மட்டற்ற மகிழ்ச்சிக்கு இடி விழுந்ததுப்போல் இருந்தது மருத்துவர் சொன்னச் சேதி, மாயின் கருவறை ரொம்பவும் பலவீனமாய் இருப்பதால் குழந்தை வளர, வளர தாங்கும் சக்தி குறைவாக இருக்கிறதாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற ஒற்றை பதிலில் மாயியின் மகிழ்ச்சிக்கு மதிற்சுவர் எழுப்பிவிட்டார் மருத்துவச்சி, தாலாட்டுப் பாடி குழந்தையைத் தூங்க வைப்பாளா? இல்லை. ஒப்பாரிப் பாடி குழந்தையைக் காலனிடம் புதைக்கத் தருவாளோ என்று அக்கம்பக்கமெல்லாம் ஒரே முணுமுணுப்பு.

 

     அதிகமாய் ஆசை வைக்காதே மாயி என்று ஆறுதல் சொல்லும் கணவனின் விரல்களை விலக்கி நிற்கிறாள். எல்லாம் அவன் செயல் என்றத் தாயின் தத்துவத்தை விரக்தியாய் கேட்கிறாள். ஒன்றும் ஆகாது என்ற தமக்கையின் உத்திரவாதத்தை நம்ப மறுக்கிறாள். மாயி தனக்குள்ளேயே விம்முகிறாள். அளவற்ற ஆசைக்கு அர்த்தம் கிடைக்கும்முன்பே முகாரி பாட வேண்டியது நினைத்து மூலையிலேயே முடங்கி போகிறாள். தன் அடிவயிற்றில் இருந்து தன் குழந்தையின் அழுகுரல் இவள் செவிகளுக்கு மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்னை காப்பாற்று; என்னை காப்பாற்று என்று;

 

     மூன்றாவது மாதம் முறையாக முடிய இன்னும் மூன்றே நாட்கள், அதற்குள் ஐந்தாவது மாத விழாவிற்கு ஆயத்தமானார்கள் குடும்பத்தினர். நீ இதை செய், நீ அதை செய் என்று மாமியின் அம்மா மற்றவர்களுக்கு ஆணையிட்ட நேரம் உள்ளேயிருந்து அம்மா வயிறு வலிக்கிறதே என்று ஒரே அலறல். அவளது கருவறையின் கஜானா இன்று காலியாகிவிட்டது. அவளுக்குள் இலுந்தத் தாய்மை பூரிப்பு, தார்மீகமாய் பிடுங்கப்பட்டவிட்டது. அவள் பதியம் போட்ட ரோஜாவிற்கு யாரோ அவசர அவசரமாய் வெந்நீர் ஊற்றிவிட்டார்கள். வெறுமையில் மாயி, செத்துப் பிழைத்தவர்கெள் மத்தியில், இவள் பிழைத்து, செத்துக் கொண்டிருக்கிறாள். இவளது உதிரம் இவளின் காலிடுக்குகளில் கட்டியணைத்தபடியே கதறியழுதுக் கொண்டிருக்கிறது. இவளால் அழக்கூட முடியவில்லை. தனக்கு என்ன நேர்ந்தது என்று சுயநினைவிற்கு வரவே இவளுக்கு மூன்று மாதங்கள் ஆனது. முன்னூறு நாட்கள் சுமக்க வேண்டிய சுமையை வெறும் மூன்றே மாதத்திற்கு ஒத்திகை பார்த்துவிட்டார். மூன்றாம்பிறை முழுமதியாகுமா? விட்டுசசென்ற மூன்றாம்பிறையின் தடயத்தைத் தடவிப்பார்த்தப்படியே பாடுகிறாள். குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா, குறையொன்றும் இல்லை. பொய்யாய் இருப்பவனிடம் இவளும் பொய்யாய் பாடினாள். குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா - என்று;

 

பிடிவாதம் ஒரு தவறானக் குணம் அல்ல;

 

     எதற்காகப் பிடிவாதம் என்பதுதான்

 

     முக்கியமான விஷயம்.

 

     சரியான ஒன்றை அவமதிப்பது தவறு;

 

     எனினும், தவறான ஒன்றை அனுமதிப்பது

 

     தவறிலும் தவறு.

 

(சுகிசிவம்)

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5

More Profiles