HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

நீர்க் குமிழிகள்

 

   

எப்படியாவது மரணத்தை ஒத்திப்போட மருந்தும், மருத்துவமும் போராடுகிறபோது உணர்ச்சியே இல்லாத உறவுகளுக்காக உயிரை விடத்துணியாதீர்.

 

சாவைச் சாவடி; வாழப் பழகு, துயரங்களைத் தூக்கி எறி, வெற்றியை நோக்கிப் பயணப்படு.

 

(சுசிசிவம்)

 

காய்ச்சல்

 

போர்வைக்குள் முனகல் சத்தம் கேட்டது. . . . குழந்தக் குட்டி இருந்தும் நம்மள கூட வச்சுக் கவனிக்க ஆள் இல்லையே ! அட கடவுளே சீக்கிரம் என்ன இட்டுக்கினு போகக்கூடாதா? இப்படி ராமாயி ஓரக் கண்ணில் நீர்வழிந்தப்படியே புலம்பிக் கொண்டிருந்தாள்

 

தன் மீது சில்லென்றப் பரிசம் திடீரென்று ஏற்பட போர்வையை விலக்கினாள். அவள் ஏதிரே அவளது செல்லப்பேத்திபாட்டி, பாட்டி என்று பாசத்தோடு வளைய வந்தது.

 

சுஜி செல்லம், எண் கண்ணு வாடி என் பட்டு என்று அணைத்தாள். பாட்டி இப்படி உடம்பு அனலா கொதிக்குதே வா டாக்டர் கிட்ட போலாம் என்ற சுஜியை செல்லமாய்த் தட்டியப்படியே இந்தச் சுரம் இப்படித்தான் வந்து, வந்து மிரட்டும் உங்க அம்மா மாதிரி என்று சிரித்தாள்.

 

அதுசரி அம்மா வரலீயா என்று வாசலை நோக்கினாள். வந்திருக்காங்க பாட்டி அடுத்த வீட்டு லட்சுமியோடு பேசிக்கிட்டு இருக்காங்க. அது சரி இத்தனை நாள் வராம இன்றைக்கு என்னவாம் என்று மனதுக்குள் அங்கலாய்த்துக் கொள்கிறாள்.

 

வாம்மா மலர் எப்படியிருக்க என் மகன் எப்படி இருக்கான், போன  பொங்கலுக்கு பார்த்தது கொஞ்சம் கண்ணுல காட்டக்கூடாதா என்றாள். உங்களுக்கு அவ்வளவு தான் சொல்லிட்டேன். இந்தக் குத்தல் பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம். உங்க சங்காத்தமே வேண்டாம் என்று ஒரே அடியாய் ஒதுங்கி நிற்கிறேனே பத்தாதா !

 

இருக்கிற வீட்டை எங்கப் பேரில எழுதித் தந்துட்டா இங்க எனக்கென்ன வேலை? யேய் சுஜி இப்படி தள்ளி வந்து உட்காரு எங்க பார்த்தாலும் பன்றிக் காய்ச்சல் பரவுதாம் ஒட்டிக்கிடப்போகுது இப்படி பொறுமித்தள்ளும் தன் மருமகளை காய்ச்சலோடு பார்க்கிறாள். வரும் போது போம்போதெல்லாம் கல்லாட்டம் கிடக்குதே இந்தக் கிழம் எப்பதான் போகுமோ தெரியலையே? என்று அவள் மனதுக்குள் அடிக்கிற காய்ச்சலை நினச்சி !

 

 

விளையாட்டிலும் சரி, படிப்பிலும் சரி, தொழிலிலும் சரி, வெற்றி பெற்றவர்கள் ஒரு நொடியில் மேலே வரவில்லை. நெடுங்கால கடின உழைப்பே அவரின் வெற்றியின் இரகசியம்.

மேல்துணிக்கூட அழுக்காகாமல்

 

மேலே வர நினைப்பது அவமானம்

 

(சுசிசிவம்)

 

                       அதிர்ஷ்டம்

 

கடவுளே இன்னைக்கு ஒரு செல்லிக் காசு கூட கிடைக்கலியே பஸ்டாண்டு ஓரத்து பிச்சைக்காரன் புலம்பல் சத்தம்.

 

எப்படியாவது வயத்தக் கழுவுறுத்தக்காவது சில்லற விழுந்திடும், இன்னைக்குப் பார்த்து அது கூட இல்ல...

 

வழக்கம் போல அதே கூட்டம்தான் இரக்கப்பட்டதோடு சரி போலிருககு, இறங்கி வந்து யாரும் உதவி செய்யல போலிருக்கு இதுவும் ஒரு வகை பிசினஸ் தான் பட்டா தான் பாக்கியம். இப்படி நினைத்தப்படியே அந்தக் கிழம் எழுந்துக்கொண்டது. அய்யா பிச்சை போடுங்க கொம்பைத்தட்டிக் கொண்டே ஒவ்வொரு ஆளிடம் கேட்க கிளம்பியது.

 

காலில் ஏதோ தென்பட கீழே தடவி எடுத்தது, அது காந்தி சிரிக்கும் 500 ரூபாய் நோட்டு. கிழவனுக்கு ஒரே சந்தோசம் அட இறைவா.... ஒரு மாதம் முழுவதும் அலைந்து திரிந்தால் கூட இது கிடைக்காதே எப்படி இப்படி எனக்கு

 

ஒரே சந்தோஷம் பொங்க அக்கம் பக்கம் திருடனைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு அவசர அவசரமாய் அந்த நோட்டைக் கிழிந்த உள்ளாடையில் சொருகியது.

 

வீர நடை போட்டு வீட்டிற்குப் புறப்படும் போது பேருந்து நிறுத்தத்தில் ஒரே பரபரப்பு யாரோ ஒருவர் 500 ரூபாய் தொலைத்துவிட்ட தவிப்போடு தரையை உற்றுப்பார்த்தபடியே தேடும் செய்தி கிழத்தின் காதில் விழ கண்டும் காணாமல் நடையை கட்டியது. இது தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பது விதி, இது தனக்குக்கிடைத்த அதிர்ஷ்டம் என தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க நினைத்தது கிழவனின் உள்மனம். வீட்டுக்குப் போய் உள்ளாடையில் வைத்த 500 ரூபாயை எடுக்க கிழிந்தப் பாக்கெட்டில் கைவிடும் போது நோட்டைக் காணோம். ஓட்டை வழியாக கீழே விழுந்துப் போன அந்த 500 ரூபாய் இன்னொரு அதிர்ஷ்டக்காரனை நோக்கி காத்துக் கொண்டிருந்தது. சாலையில் உழைத்ததே நிக்கல கையில இந்த அதிர்ஷடமாவது கிதிஷடமாவது என்ற பக்கத்து வீட்டு பாட்டியின் சத்தம் கிழவன் காதில் விழுந்தது. ஆமாம் ! ஆமாம் ! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தலை சாய்த்தப் படியே ஒரு தூக்கம் போட்டது குறட்டையோடு.

 

 

வாழ்க்கையில் எப்போதும் பிறரை விமர்ச்சிப்பது ஒரு வகை ஊனம். தூக்கத்தில் இருந்து உடல் விழித்தால் போதாது; மனதும் விழிக்க வேண்டும். வீட்டு ஜன்னலை விரியத் திறந்தால் போதாது மூளையின் சாளரங்களை நல்ல வார்த்தைகளால் திறக்க வேண்டும்

(சுகிசிவம்)

 

ஏளனம்

 

அடுத்தவ கதையென்றா மென்னுத் துப்புவா மேனகா நாலு பேர வச்சிக்கிட்டு அடுத்தவங்க கதன்னா வெல்லாம் தான் அவளுக்கு, அவள் வீட்ல கூட நிறைய கிடக்குது அத அவ மறந்து தான் போனாள். இவளே இப்படி இருந்தா இவப் பெத்தது எப்படி இருக்கும்? பணம் வரும்ண்ணு சொன்னா பிணத்துக்கு முன்னாடிக் கூட வம்புப் பேச தயங்கமாட்டான், செய்யறது எல்லாம் மொள்ள மாறித்தனம். பச்சை நீலம்ண்ணு வண்ண வண்ண படங்களில் கன்றாவியா நடிக்கக்கூட கூச்சப்பட்டதுக் கிடையாது. இந்த லட்சனத்துல இவ அம்மா மேனகா பொழுதுக்கு நாலுக் கதையை ஊர் வம்புப் பேசத் தேடுவா....

 

ஏன் இந்தக் கூட்டமுன்னு எட்டிப்பார்த்தா செல்போனைக் காட்டி, காட்டி தெருவே குசுகுசுண்ணு பேசிட்டு இருக்கிறாங்க, விசயம் முழுசும் தெரியாமலேயே மேனகா தொட்டுக்க ஊறுகா கிடைச்ச மாதிரி இதுக எல்லாம் ஏன் தான் துணியப்போட்டுக்கிட்டு திரியுதுங்களோ நல்ல ஆத்தா அப்பன் வயித்துல பொறந்திருந்தா நல்ல புத்தி வரும் என்று கூட்டத்துக்கு மெல்லுவதற்கெனவே அவல அவ சொந்தக் கதைண்ணு தெரியாமலேயே மெள்ளத் தந்தாள். இதற்க்கிடையே அவ மகள் மல்லிகா அவளருகே வந்து அம்மா நீ பாட்டுக்குப் பேசாதே அவங்க செல்போனில் காட்டி, காட்டி பேசுறது நம்ம ரவியோட படம்தான், அசிங்கமா வேற பொண்ணோட அவன் இருக்கிற காட்சியக் காட்டித்தர்ன் இவங்க எல்லாருமே ஏளனமா பேசுறாங்க அது தெரியம நீ வேற சாம்பிராணி புகை போடுற, வா இந்த இடத்தை விட்டு போயிடலாம் என கையைப் பிடித்து இழுத்தப்படியே நர்கிறாள். தன் மகள் கையில் இருந்தச் செல்போனை வாங்கி பார்க்கிறாள் மேனகா அது இவளைப் பார்த்து கண்சிமிட்டியபடியே ஏளனமாய் இருட்டானது

 

இளமைப்பருவம் என்பது வெறும் அசட்டுடீத் தனத்தின் அரங்கேற்ற மண்டபம் அல்ல, அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் ஆரம்பப்பருவம்.

 

இயலாமையோ, வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல; தவறான எண்ணங்களும், செயல்களும் தான் வெட்கத்திற்குரியது!

 

(சுகிசிவம்)

அசிங்கமானவன்

     சோமு கண்டக் கண்ட படங்களப் பார்க்காமல் இருக்க மாட்டான். வீடெல்லாம் அந்த மாதிரியன கேசட்டுதான். மது பாட்டிலும், சிகரெட் துண்டுகளும்தான், தண்ணி தெளிச்ச விட்டவன் தான் இவன். காமம் இவன் மூளையில் ஆட்சி செய்து வருகிறதுப்போலும், தன் குடும்பத்தை விட்டு விட்டான். அடுத்த வீட்டு கிழவியாக இருந்தால் கூட பார்க்காமல் இருக்க மாட்டான்; அவன் கண்ணு அளவு எடுக்காமல் இருக்காது.

 

     நேற்றையப் போதையில் வெறித் தூக்கம், தூங்கியவனைப் பக்கத்து வீட்டு கூச்சல் எழுப்பியது. மெதுவாக என்ன நடக்கிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தவன் காதில் யாரோ நம்ம தெரு ஓரத்துல படத்துககிடக்குற பைத்தியத்தை கெடுத்திட்டானாம் பாவி, அவன் நல்லா இருப்பானா, என்றச் செய்தி விழுந்தது. தூக்கம் களைய, விடுக்கென! தெரு முனைக்கு வந்தான். அய்யய்யோ துணியக் கூட விட்டு வைக்கலடா அந்த பாவி ச்சீ நிர்வாணத்தோடு சுற்றி வருதே இந்த பைத்தியம் தனக்கு என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் என எல்லோரும் கண்களை மூடிக்கொண்டே உள்ளே ஓடினர். ஒரு சிலர் ஏய் போ! போ என தூர விரட்டினர்.

 

     எல்லோரையும் தள்ளிவிட்டு, பைத்தியம் சோமு முன்பு வந்து நின்றது நிர்வானமாய் ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் உள்ளே ஓடி, கதவைச் சாத்திக் கொண்டான். அவன் மனசாட்சி சொன்னது முதன்முறையாய்.... அவனைப்பார்த்து ச்சீ நீ அசிங்கமானவன் என்று!.....

 

     உழைப்புக்குத் தயாராக இருப்பவர்கள் ஒரு போதும் தோற்பதில்லை.

 

     வாழ்க்கை ஒரு புத்தகம். அதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். ஆனால் எதையும் சொல்லித் தரமுடியாது.

(சுகிசிவம்)

பசி

 

     பசியாரை விட்டது; சோம்பேறிக்குச் சொந்தமானது நோயாளிக்கு வராது என்பது என்ன நிச்சயம்? முனியப்பன் ஒரு மாதமாகவே நலிவோடு படுத்துக் கிடந்தான். கடுமையான உழைப்பாளி தான், திடீரென வந்தக் காய்ச்சல் நலிவை ஏற்படுத்தி அவனை படுத்தப்படுக்கையாய் ஆக்கிவிட்டது.

 

     இந்த நிலையில் அவள் பெண்டாட்டி ராமாயி தான் அந்தக் குடும்பத்தை எடுத்து நடத்துவதற்கு தன்னைத் தயார் செய்துக் கொண்டு புறப்பட்டாள். துணி ஏற்றுமதி செய்யும் ஆடை நிறுவனத்திற்கு பணிபுரிய, தன் கணவனின் நிலை, வயிறு ஒட்டிய தன் குழந்தையின் பசி, இதனைத் தீர்ப்பது தன் தார்மீக கடமையெனத் துணிந்துப் புறப்பட்டாள். இரண்டு குழந்தையின் எதிர்காலம், தன் கணவனுக்கு மருந்துச் செலவு என சூழல்கள் அவளது வேலைக்கு அதிகம் தீணிப்போட்டது. அளவுக்கு அதிகமாகவே உழைத்தாள். பேருந்துல ஏறியது முதல் இறங்கும் வரை அவ அனுபவிக்கிறதைச் சொல்லி மாள முடியாது. கிழக்கெட்டைங்கதான் அதிகமாகவே உரசுதுண்ணு மனசுக்குள்ள சொல்லிக் கொண்டே நடந்தாள்.

 

     படாதடபாடுபட்டு வேலைக்குப் போனாள். அந்த மேனேஜர் கண்ணிலேயே அளவெடுப்பான் அங்கங்களை, அவன் கண்ணில் இருந்து தப்புவதே கஷ்டம். இதன் நடுவே ஆடைகளைத் தயார் பண்ணும் கடையில் டேப்போடு அலையும் தையல் காரன் மறுபக்கம், அளவெடுப்பான்; பற்றாக்குறைக்கு ஃபேக் பண்ணுறேன் என்று கையைத் தடவித்டவி உரசிப்பார்ப்பான், வாட்ச்மேன் என்னடா உலகம் இரு ஒரு பொம்பளப்புள்ள வெளிய வந்து நின்னுட்டா இத்தனை கம்பளி பூச்சுகள் அவளை உரசிப் பார்க்க உடனே தயார் ஆகுது. இத்தனையும் மீறி வேலைக்கு போயீட்டு வந்தா தான் குழந்தைங்க வயித்த நிரப்ப முடியும். தன் குழந்தைக்கு சுடச்சுட சமைச்சிப் போடலாம் என்று சமையல் வேலையில் கவனம் செலுத்த ராமாயி தயார் ஆனாள்.

 

     பசியென்று தன் கழுத்தை வளைக்கும் குழந்தையை மடியில் கிடத்தி கொஞ்ச முற்படும்போது திடீரென அவள் கண்முன் வந்து காட்சி தந்துவிட்டு போகிறான். அவள் வேலை செய்யும் இடத்தின் முதலாளி கூனிக் குருகி எழுந்து செல்கிறாள். இந்தப் பாழாய் போன பசி யாருக்கெல்லாம் எப்படியெல்லாம் ஏற்படுகிறது என்று முனகியவடியே;

 

     இவனுங்களுக்கெல்லாம் ஆத்தா, அக்கா இருக்க மாட்டாங்களா, இவனையும் ஒருத்தி மதிச்சி எப்படித்தான் குடும்பம் நடத்துறாளோ? இவன் பொண்ணையும் இப்படித்தான் பார்ப்பானோ? என மன உளைச்சலில் கையைத் தலைக்கு வைத்தவாறு தூங்கமுடியாமல் கண்களை வெறுமனவே மூடினாள்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5

More Profiles