HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

ஏழை வயிறு

     

     பார்வதி வியர்த்து வியர்வையில் குளித்துப போயிருந்தாள். உடல் தளரத் தளர சினிமா ஆசை போயிற்று. சூட்டிங் என்றால் இதுதான்... இப்படியா இழுத்தடிப்பார்கள் என்கிற சலிப்பு வந்தது.

     அவளுடைய நிலமை அவனைக் கவலை கொள்ளச் செய்தது. நீ வீட்டுக்கு போ புள்ள. போய் இளைப்பாறு.

     வேணாய்யா. நானும் போயிட்டா நீ தனியாய் என்ன பண்ணுவாய்... எப்படிச் சமாளிப்பாய்...?

     பரவாயில்லை. நான் சமாளிச்சுகிறேன். புள்ளைத்தாய்ச்சி நீ கஷ்டப்படக்கூடாது. இம்முறையாவது குழந்தை நிலைக்கணும். ரிக்ஷா புடிச்சு நீ முதல்ல கிளம்பு!

     என்னய்ய அங்கே பேச்சு... தொழிலை கவனி! இங்கே நாலுகிளாஸ் கொடு!

 

     எனக்கு ரெண்டு!

     இங்கே மூணு!

     இதோ ஆச்சுங்க என்று கிளாஸ்களை எடுத்துக கொண்டு பக்கத்து பைப்படிக்கு கழுவப் போனவள் அப்படியே சரிந்து விழ மெய்யன் பதறிப் போனான்.

     கரும்புகளைப் போட்டுவிட்டு பார்வதி என்று ஓடி அணைத்துக கொண்டான். பார்வதி.. உனக்கு என்னாச்சு... சொல்லு புள்ள! என்ன பண்ணுது?

     அவள் லேசாய் கண் திறந்து. எனக்கு ஒண்ணுமில்லைய்யா. சும்மா மயக்கம். அவ்ளோதான்! நீ போய் தொழிலைக் கவனி!

     யோவ்! ஜுஸ் தரமுடீயுமா முடியாதா?

     கூப்பிடறாங்க போய்யா!

     உன்னை இந்த நிலமைல விட்டுட்டு... நான் எப்படி..?

     அதற்குள் புரடக்ஷன் மானேஜர் ஆவேசத்துடன் ஓடிவந்து, ஏய்! இங்கே என்ன பண்றே...? உன்னால அங்கே படப்பிடிப்பு லேட்டாகுது. வா!

     ஐயா.. என் பெண்டாட்டி... !

     அவளைப் பார்த்தால் ஷாட் என்னாகறது! கழுத்தறுக்காம வா! ஹீரோ வெயிட் பண்றார்.

     ஐயா.. உங்க கால்ல விபந்து கேக்கறேன்.. அவ பிள்ளைத் தாய்ச்சியா..

     ஆமா... பிள்ளை தாய்ச்சி! கை நீட்டி அட்வான்ஸ் வாங்கும் போது அதைபத்தி யோசிக்சிருக்கணும்! என்று இழுத்துப் போய் மெஷினிடம் நிறுத்தினார்.

     அவனுடைய கைகள் கரும்பில் இருந்தாலும் கண்களும் நினைப்பும்! பார்வதியின் மேலேதானிருந்தன. பாவிப் பெண்! சினிமா சூட்டிங்குன்னு அலைஞ்சாள். ஆசைபட்டாள்! ஆனால் அதை பார்க்கக்கூட குடுதது வைக்கலியே... ! சூட்டிங்க பார்க்காட்டியும் போகுது. உடம்பு நோகாமலிந்தாலாவது போதுமே! வெயிலில் கிடக்கிறாளே! கடவுளே... குழந்தை.. !

     அரைமணி நேரம்தான் அவனால் பொறுக்க முடிந்தது. தரையில் விழுந்து கிடக்கும் பார்வதியைப் பார்க்கப் பார்க்க, சூட்டிங்காவது கீட்டிங்காவது. எனக்கு பெண்டாட்டிதான் முக்கியம் என்று எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.

     ரிக்ஷா பிடித்து குடிசைக்குள் கிடத்தி முகத்தில் தண்ணீர் தெளித்து அவள் கண் திறக்கவும்தான் மெய்யனுக்குச் சமாதானமாயிற்று.

     இந்தா புள்ளே! கஞ்சி குடி! தெம்பா இருக்கும்.

     குடித்ததும அவள் எழுந்து அமர்ந்தாள். தலைசுற்றலெல்லாம் இப்போது குறைந்திருந்தது. கண்கள் தெளிவு பெற்றிருந்தன.

     எப்படி புள்ளே இருக்கு..?

     பரவாயில்லைய்யா. வாப் போவோம்.

     எங்கே?

     கரும்பு பிழியத்தான். கைநீட்டி காசு வாங்கிட்டோமே?

     வேணாம். நீ படுத்திரு. நான் போறேன்.

     சரி கிளம்புய்யா. உனக்குச் சோறு ஆக்கி எடுத்து வரேன்!

     மெய்யன் தன் மனதைத் தேற்றிக் கொண்டு கடைவீதிக்கு வர, அங்கே கண்ட காட்சி அவனைத் திகிலடையச் செய்தது.

     அப்போது சண்டை காட்சி எடுத்தார்கள் போலும். ஹீரோவின் டூப் தாவி வில்லன் மேல் பாய்ந்தார். ஏழைகள் வயிற்றில் அடிக்கும் பாவியே... நீ ஒழிந்து போ என்று சொல்லிச் சொல்லி அடிக்க, காமிரா அவர்களை பின் தொடர்ந்தது. கூட்டம் கெக்கலித்தது. ஹீரோயின் விசிலடித்தாள். கூட்டம் கைதட்டிற்று அங்கிருந்த பாத்திரக் கடைகளெல்லாம் நசுங்கின. காய்கள் சொதம்பின. கலர் பவுடர்கள் புகை கிளப்பின. பிளாஸ்டிக் சாமான்கள் தெறித்து விழுந்தன. வில்லன் ஓடிக் கொண்டேயிருந்தான். சைக்கிள் வண்டியைப் பிடித்து தள்ளினான்.

     பாட்டில்களை உடைத்தான். அப்பயே ஓடி ஓடி... கரும்புச் சாறு மெஷினிடம் வந்தவன் இந்த பக்கமும் அந்த பக்கமும் நகர, ஹீரோ விடவில்லை.

     காமிராவிற்குப் பின்னாலிருந்து டைரக்டர் சைகைகாட்ட, வில்லன் சட்டென மெஷினை தூக்டக தள்ளி விட மெய்யனுக்கு பக்கென்றாயிற்று. படபிடிப்பிற்கு வேண்டி அவர்கள் முன்பே அதன் போல்ட்டு நட்டுகளைக் கழற்றி வைத்திருக்க வேண்டும்.

     தள்ளின வேகத்தில் மெஷின் பார்ட் பார்ட்டாய் தரையில் சிதறிற்று. ஐயா.. என்று மெய்யன் அலறிக் கொண்டு சீனுக்குள் நுழைய, இரண்டு முரட்டுகரங்கள் அவனை பிடித்து இழுத்தன.

     அதற்குள் மெஷினின் இரும்பு ராடுகள் துவசம் செய்யப்பட்டன. வில்லன் அவற்றை அடித்து நொறுக்க, உருளைகள் நசுங்கி ஓடின.

     ஐயா... என்னோட மெஷின்!

     அட சும்மாயிருய்யா!

     ஐயோ! வண்டியை உடைக்கிறாங்களே கேட்பாரில்லையா...?

     கொஞ்சம் பொறுத்துக்கய்யா. சீன் இப்போ முடிஞ்சிரும்!

     ஐயோ... என்னை விடுங்க! அது என் உயில்! என் தெய்வம்! பாங்க் லோட் போட்டு வாங்கினதுய்யா. உடைக்காதீங்கய்யா.. உடைக்காதீங்கய்யா! என் வயிற்று பிழைப்பை கெடுக்காதீங்கய்யா..

     மெய்யன் ஓடி ஹீரோவிடம் கெஞ்ச கட். கட்

     யார்ய்யா இவனை உள்ளே விட்டது? எனக்கு டயமாச்சு! இழுத்துப போங்கய்யா

     ஹீரோ கத்தவும் நான்கு தடியர்கள் அவன் மேல் பாய்ந்து குண்டுக் கட்டாய் தூக்கிப் போயினர். அவன் முரண்டுபிடிக்க ஏய்.. என்ன வம்பு பண்ணுகிறாயா... பணம் பத்தாயிரம் வாங்கிட்டு இப்போ தகறார் பண்ணினால் என்ன அர்த்தம்?

     பணமா... பத்தாயிரமா... என்னங்கய்யா சொல்றீங்க..?

     ஏய்... ! ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறாயா? புரடக்ஷன் மானேஜர் உன்னிடம் பத்தாயிரம் தரலை?

     இல்லைங்கய்யா

     பொய் சொல்றான். ஃப்ராடு! சினிமாகாரன்தானே கூப்பாடு போட்டு பணம் புடுங்கலாம்னு திட்டம் போடறான். விடாதீங்க! என்று ஆளுக்காள் அவனை அடித்துத துவசம் பண்ண ---

     ஹீரோ மறுபடியும் ஏழைகளோட வயித்துல அடிக்காதே! என்று டயலாக் பேசிக்கொண்டு வில்லன் மேல் பாய்ந்து சண்டை போடுவதும் காட்சி பிரமாதம் என்று டைரக்டர் பாராட்டுவதும்

     அடிதாங்காமல் நொந்து போய் குற்றுயிரும் குலையியுருமாய்க் கிடந்த மெய்யனின் காதுகளிலும விழவே செய்தது.

 

 

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles