HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

சொகுசு

       

    பொன்னம்மா, அப்போ நான் கிளம்பட்டுமாம்மா..? என்றார் ஈரக்கையை கொசவத்தில் துடைத்தபடி.

     டிபன் ரெடி பண்ணிட்டாயா...?

     பண்ணி அந்த ஆட்பெட்டியில் (ஹாட்பேக்) வச்சிருக்கேன். பார்த்திரங்கள் கழுவிட்டேன். வீடு பெருக்கியாச்சு.

     பூச்செடிகளுக்குத் தண்ணீர். கனகாம்பாள் விடாப்பிடி விடித்தாள்.

     ஊத்திட்டேம்மா.

     கனகம், கடிகாரத்தை எட்டி பார்த்து மணி ஏழுதானே ஆகறது.. ஐயா வந்ததும் காபி போட்டு கொடுத்துட்டுப் போகக்கூடாதா?

     இருட்டி போக்சும்மா. குடிசைல எம்மவன் தனியா இருப்பான்.

     தினம் தினம் அவனை சொல்லிதான் ஓடிப்போகிறாய்! வீட்டுல எல்லோரும் சாப்பிட்டு முடிச்சதும் பத்து பாத்திரமெல்லாம் குமிஞ்சு போறது!

     பரவாயில்லைம்மா. நாளை காலைல வந்து கழுகி வச்சுக்கிறேன்!

     நான் அதுக்காக சொல்லலே பொன்னம்மா. இங்கே வசதியில்லையா? இல்லை இடமில்லையா? எதுக்காக நீ குப்பத்துல போய் தங்கணும்? பேசாம இங்கே அவுட்ஹவுஸிலேயே தங்கிகிட்டால் அலைச்சலும் மிச்சம் உனக்கு பாதுகாப்பவும் இருக்குமில்லே...?

      பொன்னம்மா அதற்குப் பதில் சொல்லாமல் கிளம்பினாள்.

     எட்டி நடை போட்டு வியர்க்க விறுவிறுத்து குடிசைக்கு வந்த போது ல்ட் கம்பத்தின் கீழ் முத்து அமர்ந்திருபபது தெரிந்தது. மடியில் ஸ்கூல் புத்தகம் விரிந்துவிடக்க, வாய் பிளந்தபடி அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

      அவனைச் சுற்றிலும் கொசுக்கள் வளையமிட்டிருந்தன. ஈசல்கள் லைட்டை தாக்கி தோற்றுப் போய் தரையில் மொய்த்திருந்தன.

     எலே முத்து.

     அவன் திடுக்கிட்டு விழிததான். வாயிலிருநது ஒழுகின எச்சிலை துடைத்துக் கொண்டு சோர்வுடன் எழுந்தான்.

     தூக்கம் வந்தால் உள்ளே போகலாமில்லே.

     டீச்சர் நிறைய வீட்டு பாடம் கொடுத்திருக்காங்கம்மா என்று தாயின் பின்னாலேயே நடந்தான். எனக்கு திங்கறதுக்கு என்ன கொண்டு வந்தாய்..?  என்றான் ஆவலுடன். அவன் சரியான தீனிப் பிரியன்.

     திங்கறதுக்கு தினம் படைப்பாங்களா...? முதலாளி வீட்டுல இன்னைக்கு ஒண்ணும் செய்யலே.

     பட்டானியாவது   வாங்கி வந்திருக்கலாமில்லே...? எனக்கு பசிக்கிது

     இதோ இப்போ கஞ்சி வச்சுடறேன் என்று அடுப்பை மூட்டினாள்.

     படிச்சுட்டுரு. இதோ ஆச்சு!

     குடிசையின் மேல் பாகம் கரிபிடித்திருந்தது. வெளியே மழைச் சாரல் ஒழுகிற்று அவனது புத்தகத்தின் மேல் சொட்டிற்று.

     நாம எப்போம்மா மாளிகைக்குப் போவோம்...?

     மாளிகையா...? கனகம் சிரித்து சமாளித்து நீ படிச்சு வேலைக்குப் போனதும் என்றாள்.

     அதுவரை இருட்டிலேயே படிக்கணுமா...? இந்த பல்பு பீஸாகி எத்தனை நாளாச்சு... !

     கவர்மெண்ட்டுல கரண்ட்தான் இலவசமா தராங்க. பல்பு தரலியேப்பா!

     சாப்பிடும் போது முத்து நமக்கு விமோசனமே கிடையாதாம்மா...?

     குளிருது. ஒழுகுது. கொசு கடிச்சு புடுங்குது.

     சாப்பிட்டு பேசாம தூங்குடா!

     அவனை அதட்டி படுக்க வைத்தாளே தவிர அவளக்குத் தூக்கம் வரவில்லை. செத்துப் போன புருஷன் மேல் கோபம் கோபமாய் வந்தது. ஒரு குடிகாரனுக்கு வாக்கப்பட்டிருக்கக் கூடாது. அப்படியே வாக்கப்பட்டிருந்தாலும் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது. அவனுக்கென்ன சீக்கிரம் நிம்மதியாய்ப் போய் சேர்ந்துவிட்டான்.

     கஷ்டமோ நஷ்டமோ நாம் மட்டும் என்றால் அனுபவித்துக கொள்ளலாம். இவனுக்கு வருத்தம் தெரிகிறதா...? மாளிகை வேண்டுமாம். மாளிகை! அப்போது அவளுக்கு மூளையில் ஒரு பளிச். எஜமானியம்மா சொன்னாங்களே அவுட்ஹவுஸில் தங்கிக் கொண்டால் இத்தனை தூரம் வந்துப் போக வேண்டியதில்லை அங்கே லைட் இருக்கிறது. காத்தாடி  இருக்கிறது. ஒழுகாது கொசுக் கிட்டே வராது.

     மறுநாள்.

      வீடு துடைக்கும் போது கனகம், என்ன முடிவு பண்ணினாய்..? என்றாள்.

     எதுக்கும்மா....?

     அவுட்ஹவுஸிற்குதான். ஐயாகூட சஜஸ்ட் பண்ணினார். என்ன சொல்கிறாய்...

     உங்க இஷ்டம்மா.

    

      அடுத்த வாரத்திலேயே அவர்கள் அவுட்ஹவுஸிற்கு மாறினர்கள். முத்துவிற்கு சந்தோஷம் பிடிபடிவில்லை. லைட்டைப் போட்டுப் போட்டு நிறுத்திப் பார்த்தான். ஃபேனை இம்சை பண்ணினான்.

     அய்.. ! பளிங்குத் தரை! என்று கால்களால் வழுக்கினான். அய்... ஷவரு! அய்... டேபிள்! சோபா! அய்.... சுவத்துல கண்ணாடி!

     பொன்னம்மாவிற்கும் பெருமிதம் பிடிபடவில்லை. எஜமானர் நல்லவர். அவருக்குதான் எத்தனை பரந்த மனசு! இல்லாவிட்டால் இப்படி ஒரு பளிங்கு வீட்டை நமக்கு ஒசியில் விடுவார்களா?

     ஏய்... முத்து! லைட் லைட்டுன்னாயே இனி ஒழுங்காய் படிக்கணும் என்ன...

     சரிம்மா... என்றானே ஓழிய அவனால் படிக்க முடியவில்லை. சொகுசு வந்ததும் கவனம் பிசகிற்று. மனது பூக்களின் மேல் போயிற்று. உல்லாசத்தில் பறந்தது.

     முதலாளியின் மகன்கள் பேட்மிட்டன விளையாட, அவர்கள் பின்னால் ஒடிற்று. புத்தகத்தைப் போட்டுவிட்டு வெளியே வந்தான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும அடிபடும பந்தை ஆவமுடன் பார்த்தான்.

     பந்து கோபித்துக் கொண்டு காம்பவுண்டின் கண்ணாடிச் சிதறலில் குத்திக் கொண்டு நிற்க, அவர்கள் குதித்துக் குதித்துப் பார்த்தார்கள். பந்து எட்டவில்லை. பிறகு இவன் பக்கம் ஏக்கத்துடன் திரும்பினர். முத்துவிற்கு கைகள் பரபரத்தன. என்னால எடுக்க முடியும் நான் எடுத்து தரட்டா...? நான்?

     அவன் கேட்கவில்லை மெல்ல நகர்ந்தான். காம்பவுண்டின் உயரத்தைக் கண்களால் அளந்து பார்த்தான். எட்டாது. நிச்சயமாய் ஏறவும் முடியாது. என்ன செய்யலாம்...? எப்படியாவது இவர்களுக்கு உதவ வேண்டும.

     நாம் ஒரு உதவி பண்ணினால் பதிலுக்கு தின்பத்திற்கு ஏதாவது தருவார்கள். காசு தருவார்கள். கடலை மிட்டாய் வாங்கி திண்ணலாம். சட்டென மூளையில் ஒரு யோசனை உதித்தது.

     இரும்பு கேட்டிடம் ஓடினான். அதன் மேல் ஏறி அப்படியே காம்பவுண்டிற்க தாவி வித்தைக்காரன் கம்பியின் மேல் நடப்பது போல நடந்து பந்தை எடுத்து போட்ட போது அவர்கள் நன்றியுடன் பார்த்தனர்.

     தாங்க்ஸ்டா.

     அந்தக் பெருமிதப்பில் திரும்பின போது பாதத்தில் கண்ணடிகுத்தி ரத்தம் ஒழுகிற்று. நமநமத்தது. அதை மறைக்க முயன்றும் முடியவில்லை. காயம் வெளியே தெரியக்கூடாது! வீரசெயலுக்கு அது ஒரு இழுக்கு.

     ஆனாலும் கூட அவர்கள் பார்த்து விட்டனர்.

     அச்சச்சோ ரத்தம். கண்ணாடி குத்திருச்சா...?

     இல்லை...

     பொய் சொல்லாதே. வா மருந்து போட்டு விடறோம் என்று வீட்டிற்குள் அழைத்துப் போயினர். அம்மா! இவன் கால்ல கண்ணாடி வெட்டிருச்சு!

     முத்து தயங்கித் தயங்கி நிற்க, கனகம் அவனை அருவருப்பாய் பார்த்து மருந்து எடுததுக் கொடுத்தான். ஹாலில் டைனிங்டேபிளும் அதன் மேலிருந்த பழவகைகளும் பதார்த்தங்களம் அவனை ஈர்த்தன. நாக்கு சுரந்தது.

     கட்டுப்போட்டதும் மூத்தவனான அருண், இந்த பிரட் ஜாம்! என்று நீட்டினான். சாப்பிடு.

     அந்தச் சமயம் பொன்னம்மாள் கிட்டசனிலிருந்து முறைக்க எனக்கு வேண்டாம் என்றான் பயத்துடன்.

 

 

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles