HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

கூடாது

   

     ஏய்.. குடா.

     முடியாது!

     இப்போ கொடுக்க போறியா இல்லியா நீ..? குளித்துவிட்டு முடியை ஒதுக்கிக் கொண்டிருந்த கன்யா சீப்பை தன் உச்சி தலையில் உட்கார வைத்துவிட்டு திரும்பினாள். மரியாதையாய் கொடுத்திரு!

     போடி! உகனக்கென்ன மரியதை! அவளது தம்பியும் எட்டாங்கிளாஸ் படிப்பவனுமாகிய விஷ்ணு வைக்கிள் சாவியை கண்ணுக்கு நேரே ஜாலம் காட்டி இடுப்பை வளைத்து ஆட்டம் போட்டான்.

     அந்த ஆடடத்தில் ஒரு இறுமாப்பிருந்தது. உன்னால் என்ன செய்ய முடியும் என்கிற எகத்தாளம். போதும் போதாதிற்கு விசில் வேறு!

     கன்யாவிற்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. உட்கார்ந்திருந்த ஸ்டூலை ஒதே தள்ளாய்க் தள்ளிவிட்டு எழுந்தாள். முடியை அள்ளி முதுகில் பரப்பிட்டுவிட்டு நாலே தப்படியில் தம்பியைப் பிடிக்க முனைய. அதற்குள் அவன் ஹாலை விட்டு வாசலுக்குள் போயிருந்தான்.

     அவள் வாசலுக்கு ஒட, அந்தப்பாக்கம் போக்கு காட்டிவிட்டு அறைக்குள் ஒடிவந்து கொடிக் கயிற்றிலிருந்து சட்டையை எடுத்துத் திணிப்பதிற்குள்ளேயே பிடித்துக் கொண்டாள்.

     விஷ்ணு விளையாடாதே!

     உன்கிட்ட எனக்கென்ன விளையாட்டு என்று சாவியை உள்ளங்கையில் வைத்து கெட்டியாய் மூடிக் கொண்டான்.

     அவளுக்கு அவனது விரல்களை விடுவிக்கவே முடியவில்லை. சரியான காட்டான்! கையை இது மரக்கட்டை!

     நா மரக்கட்டைன்னா நீ மரவட்டை! என்று உதறிக் கொண்டு ஓடினவனை வீட்டிற்குள்ளேயே துரத்தினாள். ஒரு மூலையில் மாட்டிட்க கொண்டவள் இனியும் அக்காவிடமிருந்து தப்பிக்க முடியாது என்று தோன்றவே தந்திர்றேன் நகரு.

     தா! என்று மார்பு விம்ம மூச்சு வாங்டகனாள். கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டாள்.

     முதலில் நகரு!

    சீக்கிரம் கொடுடா ரிகார்ட் எழுதணும்.

     இந்தா என்று நீட்டினான். அவள் கப்பென்று பிடுங்க முனையவே கையை உள்வாங்கிக் கொண்டு, ஏமாந்தியா! ஏமாந்தியா!

     விஷ்ணு! எனக்கு கெட்ட கோபம் வரும்.

     கெட்டவங்க்ளுக்கு கெட்ட கோபம்தான் வரும்.

     அப்பாட்ட சொல்வேண்டா!

     சொல்லேன். உனக்கு அப்பா சப்போர்ட்டுன்னா எனக்கு அம்மா!

     சீ! குடுடா!

     இந்தா. என்று திரும்ப நீட்டிவிட்டு, அவள் நெருங்கவே குனிந்து, நிமிர்ந்து. இடது, வலாது, மேலே, கீழே என போக்குக் காட்டி வெறுப்பேற்றினான். கடைசியில் பைக்கென வாயில் போட்டுக் கொண்டு இந்தா இந்தா என்று வெறும் கையை மூடிக்கொண்டு நீட்ட அவளுக்குக் கோபம் அதிகமாயிற்று.

     உனக்கு அவ்ளோ திமிரா? என்று பளாரென அறைந்தாள்.

     அவனும் சும்மாயிருக்காமல் அவளை அறைந்து, அவள் பதிலுக்கு அறைந்து, அவன் அவளது முடியைப் பிடித்து இழுக்க-

     ஆ.. அம்மா! என்று அவள் முழுங்கால் போட்டுக் கொண்டு குனிந்த நேரத்தில் அம்மா காய்கறிப் பையுடன்உள்ளே பிரவேசித்தாள்.

     ஏய் என்னடி இங்கே ரகளே!

     ரகளை நானா பண்றேன்? எல்லாம் உன் சீமந்திரபுத்திரன்தான்! என் முடியைப் பிடித்து இழுத்து என்று சொல்லி முடிப்பதிற்குள் கன்யாவின் கண்கள் கலங்கிப் போயின. தலையில் வின்வின்!

     விஷ்ணு!

     எங்கிட்ட வம்புக்கு வந்தால் அப்படித்தான் இழுப்பேன்!

     யாரா உங்கிட்ட வந்தது. நான் மரியாதையாய்த் தானே தானே கேட்டேன். தர வேண்டியதுதானே?

     கேட்டதும் உடனே தந்துவிட வேண்டுமா? சைக்கிள் உனக்கு மட்டும்தான் சொந்தமா...? எனக்கும்தான்! என்று பலிப்புக் காட்டிவிட்டு. எங்கிட்ட மோதாதே... என்று பாட ஆரம்பிக்க ஆத்திரம் தாங்காமல் பவுடர் டப்பாவையும் சீப்பையும் அவன் மேல் விட்டெறிந்தாள்.

     ..ம்கும்!. எம்மேல பட்டதா.. எம்மேல பட்டதா.. !

     பாரும்மா அவனை!

     அவன்தான் இனம் தெரியமல் நடந்துக்கிறான்னா, காலேஜ் போகிற உனக்கு கூடவாடி தெரியலே?

     ஆமா! ஆச் ஊச்சுன்னா உடனே காலேஜ் பொட்டைப் பிள்ளைன்னு எம்மேல தான் பாய்வீங்க!

     ஆமா பொட்டப்புள்ளை நீதான் அனுசரித்துப போகனும்!

     நான் எதுக்கு அனுசரிக்கணும்?

     அவன் உன் தம்பி இல்லையாடி!

     தம்பியா அவன். எமன். எனக்கு கெட்ட பெய்ர் வாங்கித் தரதுககுன்னே அவதரித்தவன்.

     அதற்குள் விஷ்ணு செருப்பை மாட்டிக் கொண்டு நான் வரேம்மா! வரேண்டி, உன்னை வந்து கவனிச்சுக்கிறேன் என்று சைக்கிளில் தொற்றினான்.

     அவனது திமிரைப் பார்த்தியாம்மா... எல்லாம் நீ கொடுக்கிற இடம்.

     சின்ன பையன்தானே போனாப் போகட்டுமே! உனக்கெதற்கு சைக்கிள்?

     லைப்ரரி போகணும். நோட்ஸ் எடுக்கணும்!

     இதுக்கா இத்தனை சண்டை தெருக்கோயில இருக்கிற லைப்ரரிக்கு நடந்து போகக்கூடாதா நீ?

     லைப்ரிக்கு நான் நடந்து போகணும். விளையாடப் போறவன் சைக்கிளில் போகணுமா? இது எந்த ஊர் நியாயம்.

     நியாயமெல்லாம் அப்புறம் கிடக்கட்டும. தலையைச் சீவிட்டு போய் தண்ணீர் எடுத்துவா.

     முடியாது.

     போடி அப்புறம் நின்னிரும்.

     உன் செல்லப் புத்திரனையே போய் எடுத்து வரச்சொல் என்று அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டான்.

     அவர்களுக்குள் நடக்கும் புத்தம் யுத்தம் ஒன்றும் புதிதில்லை. விபரம் தெரிந்த நாள் முதலே இருவருக்கும் ஆகாது.

    இரண்டு பேத்தையே சாமாளிக்க முடியல்லை. ஆறும் ஏழும் குழந்தைகள் உள்ளவர்கள் என்ன செய்வார்களோ? என்று தாய் சலித்துக கொள்வாள்.

     இன்ன விஷயத்திற்குதான் அவர்களிடம் போர் மூளும் என்று சொல்ல முடியாது.

     காலையில் எழுந்ததுமே டாய்லெட்டிற்கு போராட்டம். கன்யா பல்விளக்கிக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு ஓடிப்போய் கதவை மூடிக்கொள்வான் என்னப் பண்ணுவானோத் தெரியாது. அரைமணி நேரம் தபஸிற்குப் பிறகுதான் வெளியே வருவான்.

     ப்றகு பேனா, பென்சில் தகறார். சாப்பிடுவதில்! கிளம்புவதில் டிபன்பாக்ஸில்! செருப்பு! ராத்திரி டி.வியிலும் கூட பிரச்னை. கன்யா முதல் அலைவரிசை என்றால் அவன் இரண்டாவது அலைவரிசையை வேண்டுமென்று போடுவான்.

     ஏய் நியூஸ்டா... !

     சரியான நியூஸென்ஸ்! மெட்ரோ பார்க்கலாம்!

     பெரிய மெட்ரோ! சினிமா சினிமான்னு உயிரை எடுக்கறான்!

     நீ சினிமாவே பார்க்கமாட்டியாமே...?

     பார்ப்பேன் அதுக்காக இருபத்து நான்கு மணிநேரமும் அதேதானா?

     இரண்டு பேருமே விட்டுக்கொடுக்காமல், அப்பா கோபப்பட்டு டி.வி.யை நிறுத்த வேண்டிவரும். பெருமபாலான சமயங்களில் தவறு விஷ்ணு வினுடையதாய் தானிருக்கும். ஆனாலும் அவன் கடைகுட்டி விபரம் தெரியாதவன் என்கிற போர்வை போர்த்தி கன்யாவிற்கே திட்டு கிடைக்கும்.

     பெண்பிள்ளை அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும். விட்டுக்கொடுததுப் போகவேண்டும் என் உபதேசங்கள் கிளம்பும். கண்டிப்பும் தண்டிப்பும் அவளுக்கு மட்டும தான்.

     விஷ்ணுவிற்கு அதுவே லைசென்ஸ் கொடுததது போலாகி விடும். தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவளை சீட்டிக் கொண்டேயிருப்பான்.

     அன்று-

 

 

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles