HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

இன்றே கடைசி

     

   அங்கே கதவின் நடுமத்தியில் பூனைக்கு பயந்து கொண்டு பை ஒன்று தொங்கிற்று.

     அதில் பால் பாக்கட்! ஜில்லென அதன் வெளிபக்கம் நீர்த்திவலைகள். இப்போதுதான் போட்டிருக்கான். ரொம்ப வசதி. ரிஸ்க்கில்லாமல் காரியத்தை முடீக்கலாம். யாரும் பார்க்கவில்லை.

     பெருமாள் யோசனையுடன் அந்த பாக்கட்டை எடுத்தான்.

     பையிலிருந்து சிரிஞ்ச்.

     அதற்குள் சயனைட்.

 

      சிரிஞ்சை பாக்கட்டின் விளிம்பில் செலுத்தி வெளியே எடுத்தான். மறுபடியும் பாக்கட்டை பையில் போட்டுவீட்டு வேகமாய்த் திரும்பி நடக்க ஆரம்பித்தான். காம்பவுண்ட்! ஜம்ப்!

     பைக்!

     இத்தனை எளிதாய்க் காரியம் முடீயும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

     பால்பூத்தில் அந்த இருட்டிலும், அத்தனை தூரலிலும கூட்டம் குழுமியிருந்தது. எனக்கு உனக்கு என்று அடித்துக கொண்டது.

     கணேசும் வேண்டாவெறுப்புடன் கியூவில் நின்றிருந்தான். அவனுக்குத் தூக்கம் தூக்கமாய் வந்தது.

     கொட்டாவி. தூக்கத்தை கெடுத்த தாயின் மேல் வெறுப்பு! அதிகாலையில் எத்தனை ஆனந்தமான தூக்கம்!

     பால் கவுண்டரில் கிட்டே போனதும், பாத்திரத்தை நீட்டும் போது பாக்கட்டில் பணம் எடுக்க கைவிட்டவனுக்கு அதிர்ச்சி.

     அங்கே தாய் கொடுதத பத்து ரூபாயைக் காணவில்லை. அதற்குப் பதில் விரல்தான் பாக்கட் ஓட்டை வழியே வெளியே போயிற்று! சே! எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது.

  அம்மாவிற்குத் தெரிந்தால் முகுது பழுக்கும்.

   பால் இல்லாமல் போனால் தொலைத்து விடுவாள். கடவிளே. என்ன இது சோதனை! தூக்கம் போனதுமில்லாமல்... அம்மாவை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்! அவன் யோசனையுடனும். தயக்கத்துடனும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

  பெருமாள் மிகுந்த உற்சாகத்துடுன் பைக்கிலிருந்து இறங்கினான். பெண்டாட்டி வீட்டின் பின் பக்கம் என்னவோ செய்து கொண்டிருக்க, தன் அறைக்குப் போய் லுங்கிக்கு மாறினான்.

     இன்னும் ஐந்து மணி நேரத்தில் அருண் காலி. அவன் இந்நேரம் பால்பாக்கெட்டை எடுததிருபபான். பெட் காபி! அதுவே அவனது கடைசிக் காப்பி! ஹாஹ்ஹா!

 சந்தோஷத்தில் தூகம் வரமறுத்தது. சும்மான்னாலும இழுத்து போர்த்திக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.

   அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்திருந்த கணேசு மிகவும் உற்சாகமாயிருந்தான்.

     இந்தாம்மா பால்! என்று பாக்கெட்டை நீட்டினான். இனி என் தூக்கத்தை கெடுக்காதே என்று அவனும் படுக்கையில் விழுந்தான்.

     பால் வாங்காமல் திரும்பினால் அம்மா அடிப்பாள் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசனையுடன் வந்து கொண்டிருக்கும்போது அருண் வீட்டில் தொங்கின பால் கண்ணில் படஇ சத்தமில்லாமல் போய் அதை அபகரித்து வந்தது பற்றி அவன் மூச்சேவிடவில்லை.

     அது அறியாத பெருமாள் படுக்கையிலிருநதபடியே, சீக்கிரம் காபி போட்டு எடுத்து வாடி! என்று பெண்டாட்டியை அதட்டினான்.

 

 

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles