HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

பச்சைக்கல் கடுக்கன்

   

   முருகேசன் தபால்களை எடுத்துக கொண்டு போஸ்டாபீஸை விடடு வெளியே வந்தபோது மழை தூற ஆரம்பித்தது. போச்சு, இன்றைய பிழைப்பு கோவிந்தா தான் என்று நினைத்துக கொண்டான்.

     சாதரணமாய் ஒன்பது மணிக்கு இறங்கினால் கடிதங்களை டெலிவரி பண்ணிவிட்டு பன்னிரண்டிற்கெல்லாம் வீட்டிற்கு போய் விடலாம். மழைபெய்வதால் அது முடியாது. என்னதான் குடைபிடித்துக் கொண்டு சைக்கிள் மிதித்தாலும் ஒன்று அவன் நனைய வேண்டும். இல்லையென்றால் கடிதங்கள்!

     மழை விடட்டும் என்று பக்கத்து பில்டிங்கில் ஒதுங்கின போது மனைவி காமாட்சி காது கடுக்கனுடன் பக்கத்து மளிகைக் கடையில் சாமான் வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

   அவளைவிட அந்தக் கடுக்கனே அவனுடைய கவனத்தை ஈர்த்தது. அதை பார்க்கப் பார்க்க அவனது மனது கனக்க ஆரம்பித்தது. அவள் ரொம்ப நாட்களாகவே அந்தப் பச்சைகல் பதித்த கடுக்கன் வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

     ஒரு போஸ்ட்மேனின் சம்பளத்தில் வீட்டு செலவை கவனிப்பதா, குழந்தைகளின் படிப்பா, துணிமணிகளா...? எந்தச் செலவை என்று கவனிப்பது, வீட்டு வாடகை வேறு. இவற்றுக்கிடையில் அவனால் பச்சை கல் கடுக்கனைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

     அவளும் விடுவதாக இல்லை. அவள் நச்சரிப்பதற்கும் கூட காரணமிருந்தது. கல்யாணம் பண்ணி வந்த போது அவளக்குப் பிறந்த வீட்டில் அதுமாதிரி கடுக்கன் போட்டு அனுப்பியிருந்தார்க்ள்.

     அந்தச் சயமத்தில் முருகேசனுக்குச் சீட்டாட்டப் பழக்கமிருந்தது. அவள் ஊருக்குப் போன தருணம் பார்த்து அவற்றை விற்று சீட்டாடித் தொலைத்து விட்டாள்.

     அன்றைக்கு பிடித்தது சனி!

     அதன்பிறகு அவன் சூதாட்டத்தையே மறந்துவிட்டாலும் கூட அவள் கடுக்கனை மறப்பதாக இல்லை. தினம் நான்கு முறையாவது கடுக்கனைச் சொல்லி காமாட்சி இடிப்பாள். அவளுடைய இடிதாங்காமல், என்ன செய்யலாம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் தபால் ஒன்றின் மூலம் வழி பிறந்தது. ஒருவாரம் முன்பு.

     மழைநாள் ஒன்றில் வழக்கம்போல தபால்களை அடுக்கி வைத்த போது கவர் ஒன்று நனைந்து, அதற்குள் பணநோட்டு இருப்பது தெரிந்தது. பணத்தைப் பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது. அவசரமாய் எடுத்து எண்ணி பார்த்தான். மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்!

     பணத்தை கவருக்குள் வைத்து அனுப்புவது சட்டப்படி குற்றம்! இப்படி அனுப்பும் பணத்திற்கு காரென்டியும் இல்லை. யாரும என் பணம் களவு போயிற்று என்று கம்ப்ளெயின்ட் பண்ணவும் முடியாது. பணம் சரியாய் போய் சேர்ந்தால் பிழைத்தார்கள். இல்லாவிட்டால் திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாமல் இருக்க வேண்டியதுதான்!

     முருகேசனுக்கு அதை பார்க்கப் பார்க்க கடுட்கன் ஆசை எழுந்தது. பேசாமல் இதை எடுத்து கடுக்கன் வாங்கிக் கொடுத்து விட்டால் என்ன? பெண்டாட்டி எனும் ராட்சஷியின் நச்சரிப்பிலிருநது தப்பிக்கலாமே!

     கவரில் இருந்த விலாசத்தைப் பார்த்தான். ராஜம்மாள், குழிவளை, குமரி மாவட்டம் என்றிருந்தது. ஃப்ரம் அட்ரஸில் ராஜேந்திரன், பாம்பே !

     முருகேசனுக்கு  அந்த ராஜம்மாளையும் தெரியும். ராஜேந்திரனையும் தெரியும். ஆனால் நெருக்கமேல்லாமில்லை. ஓகோ.... மணியார்டர் சார்ஜை எப்போப் பார்த்தாலும் எனக்கு கவர் வந்திருக்கா தம்பி...? என்று கேட்கிறாளா...?

     இன்று கவர் வந்திருக்கிறது. யாருக்கு தெரியப் போகிறது...? அமுக்கு! அப்படிச் செய்வது தவறு என்று உள் மனது எச்சரித்தாலும் கூட, பச்சைக் கல் கடுக்கன் அவனை உசுப்பிற்று.

     பணத்தை எடுத்து வைத்துக கொண்டு, அன்புள்ள அம்மாவிற்கு இத்துடன் நீ கேட்டபடி பணம் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொண்டு கடிதம் போடவும் என்று எழுதப்பட்டிருநத கையளவு பேப்பரைக் கிழித்து எறிந்தான்.

     பிறகு அத்தோடு கொஞ்சம் பணம் புரட்டி கடுக்கன் வாங்கிப் போன போது காமாட்சி வாயிறென மலர்ந்தாள். பற்பசைக்குப் போஸ் கொடுத்தாள்.

     ஏதுங்க பணம்...?

     அதை பற்றி உனக்கேன்! ஒரு வருஷமா சீட்டு கட்டினேன் என்று கதை கட்டினேன்.

     நல்லாயிருக்கா.

     பிராமாதங்க! என்று அகமும் தடித்த புறமும் குளிர்ந்தாள். அப்பாடா... நச்சரிப்பு விட்டது என்று அவனும் சந்தோஷப்பட்டான். ஆனால் அந்த ராஜம்மாளைப் பார்க்கும் போதெல்லாம் உறுத்தல் எழும். நாலு வீடு தாண்டினால் எல்லாம் மறந்து போகும்.

     இப்போதும் கூட அப்படிதான். காமாட்சி போனதும் கடுக்கன் நினைவுகளும் மறந்து போயின. அதற்கள் மழை விட்டிருக்க அவன் சைக்கிளில் ஏறி கிளம்பினான்.

     மேலத்தெருவின் கோடிவீடு.

     ராஜம்மாள் கொல்... கொல்லென இருமிக் கொண்டு. கர்ர்... கர்ரென இழுத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவளுடைய உடலெல்லாம் தளர்ந்து போய், தோட்ல சுருங்கியிருந்தது. பார்வை மங்கிக் கொண்டு வந்தது.

     அவளுக்கு அறுபது வயதிற்கு மேலாகிறது. வயதிற்கேற்ற முதிர்ச்சியும் தளர்ச்சியும் அவளைப் பலகீன படுத்தியிருந்தது. வீட்டில் கவனிக்க ஆளில்லை சரியான ஆகாரமும் இல்லை. போதும் போதாததிற்கு கொஞ்சநாட்களாய் ஆஸ்துமா தொந்திரவு வேறு.

     இழுப்பும் இருமலும் ஆரும்பித்த சமயத்திலேயே டாக்டரிடம் போயிருந்தால் ஓரளவிற்கு கண்ட்ரோல் பண்ணியிருக்கலாம். இருமல் என்ன செய்துவிடும் என்று அவள் அலட்சியமாயிருந்து விட்டதில் நோய் முற்றிவிட்டது. அதன்பிறகு அக்கம்பக்கத்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் காட்டினர்.

     நோய் முற்றிவிட்டது. தீவிர சிகிச்சையளிக்க வேண்டும் என் பெட்டில் இருக்க வேண்டும் என்றும் அதற்கக் குறைந்தது ஆயிரம் ரூபாய் ஆகும் என்றும் டவுனில் சொல்லிவிட்டார்கள்.

     அக்கம் பக்கத்தவர்கள் நாங்கள் பணம் தருகிறோம். நீ போய் பெட்டில் சேர்ந்து விடு என்று சொன்னதைக் கூட அவள் கேட்கவில்லை. பிடிவாதம் பிடித்தாள்.

     ஆஸ்பத்திரியில் போய் யாரால் இருக்க முடியும்... என்னை விடுங்க!

     கிழவி! நோயோட இங்கிருந்தால் உன்னை யார் கவனிச்சுக்குவா...? பேசாமல் சொல்றதைக் கேள்!

     அவள் கேட்பதாக இல்லை. பெட்டில் அட்மிட்டாகணும்னா அதை நான் பார்த்துக கொள்கிறேன். என்னை கவனிக்கவும் எனக்குப் பணம் அனுப்பவும் என் மகன் இருக்கான் என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.

 

 

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles