HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

உணர்வுகள்

        

   ஏய்... ! இந்தச் சனியனை விரட்டப் போறாயா இல்லையா நீ... களைப்பில் கண்ணயர்ந்திருந்த முத்து, குரல் கேட்டுத் திடுககிட்டு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டு, என்னங்கம்மா!

     என்னன்னா கேட்கிறாய்! இந்த பிசாசு பண்ணி வெச்சிருக்கிற கூத்தைப் பார் என்று முதலாளியம்மாள் தோட்டத்தைக் காட்டினாள். அவள் பிசாசென்றது மணியை அதாவது அவனுடைய நாய்குட்டியை.

     மணி அங்கே செடிகொடிகளைக் கடித்துக குதறிக் கொண்டிருந்தது. பூக்களை துவம்சம் பண்ணியிருந்தது.

     ஏய்.. ராஜாமணி!

     அவன் ஓட. அது மண்ணைப் பிறாண்டிவிட்டு தாவிற்று. கொஞ்சம் போய் குதித்துத் திரும்பிப் பார்த்தது. வாலை ஆட்டிக் கீச்சு குரலில் முனகிற்று.

     ஏய்! நில்லு.. நில்லு! என் கோபத்தைக் கிளப்பாதே என்றதும் முதுகைச் சுருட்டிக் கொண்டு சரணம் என்று தரையில் கவிழ்ந்தது.

     அவனுடைய காலை மோந்து நக்கிற்று. வாலை ஆட்டிக்கொண்டு மேலே தாவ. ஓங்கி அறை கொடுத்தான்.

     மணி சுருண்டு கொண்டு போய் பலகீனமாய் விழுந்தது. உடன் கண்களிலிருந்து நீரும் பரிதாபமும் கசிய ஆரம்பித்தது. ஓடிப் போய் அதன் காதைப்பிடித்து இழுத்து வந்து ஷெட்டிலிருந்த சங்கிலியில் கட்டினான்.

     மெல்லிய குரலில் மணி கெஞ்ச, பட்டினியாய்க் கிட, அப்போதான் உனக்குப் புத்தி வரும்!

     வள்.. வள்.. !

     அதெல்லாம் முடியாது. உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்! முதலாளியம்மா எத்தனை உசிராய் பூச்செடிகளை வளக்கிறாங்க.. உனக்கென்ன வேலை அங்கே?

     மன்னிச்சுக்கோ!

     முடியாது! என்று வேலையைக் கவனிக்கச் சென்றான்.

     அவனுக்கு பதின்மூன்று வயது.

     சின்ன வயதிலிருந்தே முத்துவிற்கு நாய் என்றால் உயிர். வீட்டில் வறுமை. தாயும் தகப்பனும் கூலிக்குப் போய் கால் வயிறு அரைவயிறுக் கஞ்சி ஊற்றினால் அதிலும் பாதியைத் தெரு நாய்களுக்கு விதரனம் பண்ணி விடுவான்.

     பள்ளிக்கூடத்திலும கூட அப்படித்தான். சாப்பாட்டு மணியடித்தால் போதும். அங்கே நாய் படையே திரண்டு விடும் - சத்துணவிற்கு! நாய்களின் தொல்லை தாங்காமல் கடைசியில் ஸ்கூலிலிருந்து அவனுக்குக் கல்தா கொடுக்க வேண்டியதாயிற்று.

     அவன் ஒன்றும் படிப்பில் அத்தனை சமத்தோ கெட்டியோ இல்லை. ஏஙறகனவே வகுப்பிற்கு இரண்டு வருடம் என்றுதான் ஒப்பேற்றிக் கொண்டிருந்தான். பாடத்தை நினைத்தாலே மனது கசந்தது. மூளையில் பதிவேனாயென்றிருந்தது.

    வாத்தியாரின் அடிகள் படிப்பின் மேல் விரோதத்தையே கிளப்பின. ஏன் படிக்க வேண்டும்? படித்து என்ன கலைக்டராகவாப் போகிறோம்? எலிமென்ட்ரியையே தாண்டினால் பெரிது என்று நினைக்க வைத்தது.

     இந்த உலகம் பெரிது. வானம் பரந்து விரிந்திருக்கிறது. கவலையில்லாமல் காற்று கிடைக்கிறது. விளையாடலாம். ஓடியாடலாம். கூலி வேலைக்குப் போனாலாவது நான்கு காசு கிடைகும். கடலை மிட்டாய் வாங்கித் தின்னலாம். பீடி புகைக்கலாம், சினிமாப் போகலாம்.

     அதையெல்லாம் விட்டு விட்டு வகுப்பில் ஏன் அடைந்து கிடக்க வேண்டும்? ஸ்கூலே ஒரு நரகம். உபாத்தியாயர்களெல்லாம் உபத்திரவர்கள். அவர்களுக்குப் பசங்களின் அவஸ்தை புரியாது. புரிவதில்லை. படிப்பில் வெறுப்பும் சலிப்பும் வருவதிற்குப் பெருமபாலும அவர்கள்தான் காரணம்.

     முத்து ஸ்கூலை துவேஷிக்க, தாய் கோபமுற்றாள், அவனுடன் இரண்டு நாட்களுக்குப் பேசவில்லை. நாங்கதான் படிப்பில்லாம கஷ்டப்படறோம்னா உனக்கும் ஏண்டா தலையெழுத்து...?

     என்னால படிக்க முடியலைம்மா!

     ஏன்..

     அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. அக்ரஹார குட்டிச்சுவரில் நாலு நாய்க்குட்டி இருக்கும்மா என்றான்! எல்லாமே ஆண். நக்லியூண்டாக அழகாய் கரணை கரணையா இருக்கும்மா

     உன் நோக்கம் தான் என்னடா..?

     அதுல ரெண்டு குட்டியை எடுத்து வளர்ப்போம்மா

     ஆமா! இப்படி நாய் நாய்ன்னு நாயா அலைஞ்சிட்டுரு! உருப்பட்டிரலாம்!

     அம்மா! பத்து ரூபா காசு கொடு!

     எதுக்கு?

     நாய்க்குச் சங்கிலி வாங்கணும். பெல்ட்!

     தாய் ஓங்கி அறைந்தாள். நான்பாட்டிற்கு மாடாட்டம் கத்திகிட்டிருக்கேன். உன்னோட எதிர்காலத்துககாக கவலைபட்டுகிட்டிருக்கேன். நீ எபன்னடான்னா... மனசுல என்னதான்டா நினைச்சுகிட்டிருக்கே..?

     எனக்கு நாய்க் குட்டி வேணும்

     அப்போ நாங்கள் வேணாம்? உனக்கு நாங்கள் வேணாம்னா எனக்கும் நீ வேண்டாம்! எங்க முகத்திலேயே விழிக்காதே!

     அம்மா நான் போயிருவேன்!

     எங்காவது போய் ஒழி! அப்போதான் புத்தி வரும். கஷ்டபட்டு  குண்டி காய்ஞ்சால்தான் எங்களோட வார்தை புரியும்.

     அன்றே வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அக்ரஹாரத்திற்குப் போய் தேடினதில் இந்த ராஜாமணி மட்டும்தான் கண்கூடச் சரியாய் திறக்காமல் கிடந்தது. தாய் நாய் அசந்த நேரத்தில் தூக்கிக் கொண்டு டவுனிற்கு வந்துவிட்டான்.

     ஒரு மாதம் வேலை தேடிக் கடைசியில் இங்கே கிடைத்தது. முத்து, ராஜாமணியைச் சங்கியில் கட்டி காலைரயிலும் மாலையிலும் வாக் போவான். அதனுடன் விளையாடுவாட்ன, அச்சுவெல்லாம், பிஸ்கெட்டெல்லாம் வாங்கி தருவான்.

     அவன் எந்த அளவிற்கு அதனுடன் கொஞ்சுகின்றானோ அந்த அளவிற்கு முதலாளியம்மா ராஜாமணியை வெறுத்து வந்தாள். அவளுக்கு நாய் என்றாலே அலர்ஜி.

     பத்து வருடம் முன்பு அவருடைய கணவரை வெறிநாய் ஒன்று கடித்து நாற்பது நாட்கள் குலைத்துக் குலைத்து இறந்து போனாராம். அதிலிருந்து நாய் என்று கேட்டாலே எரிந்து விழுவாள்.

     முத்து கெஞ்சிக் குலாவ, காலில் விபந்து ராஜாமணியையும் தன் கூட வைத்துக் கொள்ளச் சம்மதம் பெற்றிருந்தான்.

     அப்படியிருக்கும்போது இப்படியெல்லாம் நடந்துக் கொண்டால் என்ன செய்வதாம்!

     இன்றென்றில்லை, அந்தம்மாள் தூங்கும்போது ராஜாமணி சும்மா இருப்பதில்லை. ஓணானையோ, வெட்டிக்கிளியையோ துரத்திக் கொண்டு குலைக்கும். அது அவர்கள் தூக்கத்தைக் கெடுக்கும்.

     உடனே ஒரு போர் மூளம்.

     நாய் என்றால் குரைக்கதான் செய்யும். அதன் வாயைக் கட்டிப் போடவா முடியும்? மனிதர்களைத்தான் சட்டம் என்றும். பணபலத்தைகக் காட்டியும் அடக்கி ஒடுக்கி மிரட்டி வைத்திருக்கிறோம். நாய்களுக்கு கூட சுதந்திரம் கொடுக்காவிட்டால் எப்படியாம்!

     அந்தச் சுதந்திரம் நாய்க்கு நாய் வேறுபடும்.

     ஏழை பணக்காரர் வித்தியாசம் மனிதர்களிடம் மட்டுமில்லை நாய்களிடமும் நிறையவே இருக்கின்றது.

     தெரு நாய்க்கு உண்ண உணவில்லை. உறங்க இடமில்லை. ஆகாயம்தான் கூரை. மழையில் நனைந்து வெயிலில் காயவேண்டும். எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

     ஆனால் கவனிப்பாரில்லை. எச்சிலைக்கு அடித்துக கொள்ள வேண்டும். சோறு கிடைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் நரகலை தேடிப் போக வேண்டும். சொறி, சிரங்கு என கஷ்டப்பட்டு கார்ப்பரேஷன்காரர்களுக்குப் பயந்து ஓடி ஓளிந்து கடைசியில் வெறிபிடித்து... பரிதாபமாய் முடிய வேண்டும்.

     பணக்கார நாய்களுக்கு அந்தப் பிரச்னையில்லை. பதவிசு. பரமசுகம், கார் பங்களா! மொசைக்கில் உறங்களலாம். சுதந்திரம் இல்லாவிட்டால் கூட வேளாவேளைக்கு சாப்பாடு! மட்டன் பிரியாணி.

     முதலாளியம்மாள் ராஜாமணியை மன்னிக்கத் தயாராயில்லை. கரிச்சுக் கொட்டிக் கொண்டேயிருந்தாள்.

    இந்தச் செடிகள் எத்தனை விலையுயர்ந்தது தெரியுமா? அநியாயமாய் இப்படி நாசம் பண்ணி விட்டதே என்று திட்ட ஆரம்பித்தாள்.

     முத்துவிற்கு எரிச்சலாய் வந்தது. ராஜாமணி தெரிந்தா செய்தது? ஏதோவிளையாட்டு ஜீவன்! வாயில்லாத பிராணி!

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles